சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

25.8.10

GOOGLE சரியில்லங்க!!!

இந்த google காரங்க இப்பல்லாம் சரியா அப்டேட் பண்றது இல்லைங்க...

இப்டி இருந்தா எப்டி அவங்க முன்னணியில இருக்கமுடியும்ன்னு
கொஞ்சமாவது யோசிச்சாங்களா??

நாடோடிகள் படத்துல சொல்ற மாதிரி சரித்திரம் முக்கியமானது...
தெரிஞ்சிக்க வேண்டியது...

வருங்காலத்துல பிள்ளைங்க இந்த விஷயத்தபோய் சொல்லாம வுட்டுட்டாங்ளேன்னு google மேல கோபபடமாட்டாங்க??!!

என்ன ஒரு அலட்சியம்! பொறுப்பின்மை!!

அதுக்குன்னு நீங்க எல்லாம் சேந்து google  மேல கேசு கீசு போட்றாதீங்க!!

மன்னிக்கறவன் மனுசன்!!  மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுஷன்!!

எப்ப விஷயத்துக்கு(??!!)வருவான்னு யோசிக்கறீங்க!!

பின்ன என்னங்க!! காலையிலேயே எந்திரிச்சு குளிக்காம, பல்கூடவிளக்காம,
google -ல வந்து AUGUST 25 ன்னு கொடுத்து SEARCH பண்ணா
நம்ம வாயிலயே நுழையாத இங்கிலீஷ்காரங்க பொறந்தது, செத்தது,
ஏதோ 2வது உலகப்போரு, உருகுவே விடுதலையானது,
கலிலியோ தொலைநோக்கிய கண்டுபிடிச்சது,
இந்த மாதிரி நிறைய தேவையில்லாத விஷயமா இருக்குங்க!!

ஆனா பாருங்க!! இந்த பிரபலபதிவர்(அட நான்தாங்க!!)சேலம்தேவாவோட
பிறந்தநாள எப்டி மறந்தாங்கன்னு தெரியல!!

(பிறந்தநாள் அதுவுமா ஒருத்தன திட்டகூடாதுன்ற அடிப்படை நாகரீகம்
தெரியாதவர்கள் அல்ல நம் பதிவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
உலகத்துக்கு!!?? பின்னூட்டத்துல காட்டுங்க!!!
பரிசு தர முடியலயேன்னு வருத்தப்படாதீங்க!!!உங்க ஓட்டுகளை
நான் பெரியமனசு பண்ணி ஏத்துக்கறேன்!!!)

Post Comment

15 comments:

 1. :)

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தேவா..

  ReplyDelete
 2. என்ன கொடுமைடா இது? இதையெல்லாம் படிக்கணும்னு எனக்கு தலையெழுத்து போல!

  ReplyDelete
 3. நன்றி சென்ஷி சார்!!!

  ReplyDelete
 4. @ anonymous

  மொக்கைன்னு முடிவாயிடுச்சு!!
  அப்புறம் இந்த பாவ புண்ணியம் எல்லாம் பாக்க கூடாது..விதி வலியது...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா.

  Google கெடக்கிறான் உடுங்க, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கறம். சரி பார்ட்டி எங்க, எப்ப, எப்படி?

  ReplyDelete
 7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா !!!

  ReplyDelete
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இன்றைய நாளும் இனிவரும் நாட்களும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. // பிறந்தநாள் அதுவுமா ஒருத்தன திட்டகூடாதுன்ற
  அடிப்படை நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல
  நம் பதிவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
  உலகத்துக்கு!!?? பின்னூட்டத்துல காட்டுங்க!!! //

  இப்படி ஒரு பிட் போட்டதுக்கு
  அப்புறம் வேற என்ன செய்ய முடியும்..???

  ம்ம்... Happy Birthday..

  ReplyDelete
 10. தேவா,

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 11. Happy Birthday bro

  ReplyDelete
 12. HAPPY BIRTHDAY, FRIEND!!!
  Have a wonderful day!

  ReplyDelete
 13. @ எட்வின்,DrPKandaswamyPhD,யாசவி,
  எஸ்.கே,வெங்கட்,ஸ்ரீ,anonymous,chitra

  தமிழர்கள் நாகரீகமானவங்கன்னு காட்டிடீங்க...ஹி..ஹி..ஹி...
  வாழ்த்தியதற்கு நன்றி.நன்றி..நன்றி...

  ReplyDelete
 14. Google எல்லேன்னா, Yahoo-ல தேட வேண்டியதுதானே... ஹிஹி

  Anyway, Belated Birthday Wishes... :)

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!