சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

19.8.10

சொ(நொ)ந்த கதை!!!

இந்த டாக்டருங்களுக்கெல்லாம் காய்ச்சலே வராதா?

வந்தா அவங்களுக்கு யாரு ஊசி போடுவாங்க?

வேற எதாவது நல்ல ஆஸ்பிட்டல் போவாங்களோ?

ஆஸ்பிட்டல்ல உக்காந்து இருக்கறவங்க ஏன் உலகமே
இடிஞ்சி போன மாதிரி உக்காந்து இருக்காங்க?

ஐந்து நிமிச கேப்புல யாருக்காவது ஒரு தும்மல்
(அ) இருமல் வருதே அது எப்டி?

ஊசி பழசாஇருக்குமா? புதுசாஇருக்குமா?

ஊசிகுத்தும்போது உடைஞ்சிடுச்சுன்னா என்ன செய்வாங்க?

தெர்மாமீட்டர கடிச்சா என்னாவும்?

ஸ்டெதஸ்கோப்புல என்ன சவுண்ட் வரும்?

நாக்க நீட்டி பழிச்சி காட்ட சொல்றாங்களே அது ஏன்?

வாயில எதுக்கு டார்ச் அடிக்கறாங்க?

டாக்டருங்க எழுதறாங்களே அது என்ன மொழி?
மெடிக்கல்காரங்களுக்கு மட்டும் புரியுதே அது எப்படி?

எப்பயும் பழைய கர்ணன் படத்தில வர்ற கண்ணன் மாதிரி 
புன்னகையாவே இருக்காங்களே இந்த டாக்டருங்க அது எப்படி?

துக்கவீட்ல புறப்படும்போது போயிட்டுவரேன் சொல்லக்கூடாதுன்னு
சொல்வாங்களே!!ஆஸ்பிட்டல்ல என்ன சொல்லணும்?

ஏற்கனவே பாதி லூசு மாதிரி உளறிட்டு இருந்தானே!!
இப்ப முழுசா ஆயிட்டானோ? அப்டின்னுதானே யோசிக்கறீங்க?

ஒருவாரமா காய்ச்சலுங்க!! விதவிதமா ஊசி!! விதவிதமா மாத்திரை!!
விதவிதமா டாக்டருங்க!!!அப்ப யோசிச்சது(!!??) இதெல்லாம்!!

உடனே நீங்கல்லாம் பதறி போய் ஈமெயில்,போன்,லட்டர்,தந்தி,sms,
இதெல்லாம் யூஸ் பண்ணி என்ன அழுக வச்சுரப்போறீங்க???

கலைஞர் காப்பீட்டு திட்டத்துல காய்ச்சலையும் சேக்கணும்ங்க!!!
அம்புட்டு செலவாவுதுங்க இப்பல்லாம்!!

வெளிநாட்டுகாரனே ஏதோ சூப்பர்பக்ன்னு ஒரு கிருமிய பரப்பி
அது நம்ம நாட்லஇருந்துதான் பரவுதுன்னு புரளிய கிளப்பிட்டு இருக்கான்!!

 "ஈ" படத்துல ஜனநாதன் சொல்வாரே !!
அது மாதிரி இவனுங்க நம்மள சோதனைக்களமா பயன்படுத்திட்டு இருக்காங்களோன்னு டவுட்டா இருக்கு!! பாத்து சூதானமா இருங்கப்பு!!

காய்ச்சலப்ப கூட இப்டிதான் ஸ்கார்ப் எல்லாம் கட்டிட்டு அழகா இருந்தேன்!!ஹி...ஹி...ஹி...


Post Comment

13 comments:

 1. நல்லா இருக்கு நீங்க நொந்த கதை...அப்படியே இதையும் படிங்க காய்ச்சலுக்கு நல்லது...

  http://rameshspot.blogspot.com/2010/08/blog-post.html

  ReplyDelete
 2. ஆஹா.. சூப்பர்..
  சிரிப்பை அடக்க முடியலை..

  உங்ககிட்ட இது மாதிரி
  நிறைய எதிர்பார்க்குறேன்..

  ReplyDelete
 3. உடனே நீங்கல்லாம் பதறி போய் ஈமெயில்,போன்,லட்டர்,தந்தி,sms,
  இதெல்லாம் யூஸ் பண்ணி என்ன அழுக வச்சுரப்போறீங்க???

  remba than aasai padureenga--------------------------------------

  ReplyDelete
 4. இருந்தாலும் காய்ச்சல்னு சொல்லிக்கிட்டு இப்படி பொலம்பக் கூடாதுங்க. ரெஸ்ட் எடுங்க.

  ReplyDelete
 5. //கலைஞர் காப்பீட்டு திட்டத்துல காய்ச்சலையும் சேக்கணும்ங்க!!!
  அம்புட்டு செலவாவுதுங்க இப்பல்லாம்!!//

  ரெஸ்ட் எடுங்க.

  ReplyDelete
 6. @ ரமேஷ்

  இவரு காய்ச்சலுக்கு வழி சொல்றாருன்னு பாத்தா பைத்தியம் புடிக்க வழி சொல்றாருங்க...

  ReplyDelete
 7. @ வெங்கட்

  எனக்கு காய்ச்சல் வந்ததுக்கு வெங்கட் சாருக்கு சிரிப்பை அடக்க முடியலையாம்!! இன்னும் வேற எதிர்பாக்கறாராம்?? எது இந்த வாந்திபேதி,காலரா,யானைக்கால் வியாதி,எய்ட்ஸ் எல்லாம் போல இருக்கு!!

  ReplyDelete
 8. @ senthil 1426

  ஒரு பிரபலபதிவர் இதுக்கு கூட ஆசைப்படகூடாதா சார்??

  ReplyDelete
 9. @ DrPKandaswamyPhD,கலாநேசன்

  பெரியவங்க பெரியவங்கதான்!!
  என்ன அக்கறையா இருக்காங்க பாருங்க!!ரொம்ப நன்றிங்க!!

  ReplyDelete
 10. எதுக்குய்யா உடம்பு சரியில்லாதப்போ எடுத்த போட்டோவை போட்டிருக்க? பயமா இருக்கு இல்ல....

  ReplyDelete
 11. @ yeskha

  பாத்துக்குங்க!!
  உங்களுக்கு காய்ச்சல் வந்திரப்போவுது!!!

  ReplyDelete
 12. //துக்கவீட்ல புறப்படும்போது போயிட்டுவரேன் சொல்லக்கூடாதுன்னு
  சொல்வாங்களே!!ஆஸ்பிட்டல்ல என்ன சொல்லணும்?//

  ஹாஹா... எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்குறீங்க...

  ReplyDelete
 13. @ Yoganathan.N

  100 டிகிரிக்கு மேல காய்ச்சல்ல நல்லா யோசனை வருமுங்க...

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!