சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

25.8.10

GOOGLE சரியில்லங்க!!!

இந்த google காரங்க இப்பல்லாம் சரியா அப்டேட் பண்றது இல்லைங்க...

இப்டி இருந்தா எப்டி அவங்க முன்னணியில இருக்கமுடியும்ன்னு
கொஞ்சமாவது யோசிச்சாங்களா??

நாடோடிகள் படத்துல சொல்ற மாதிரி சரித்திரம் முக்கியமானது...
தெரிஞ்சிக்க வேண்டியது...

வருங்காலத்துல பிள்ளைங்க இந்த விஷயத்தபோய் சொல்லாம வுட்டுட்டாங்ளேன்னு google மேல கோபபடமாட்டாங்க??!!

என்ன ஒரு அலட்சியம்! பொறுப்பின்மை!!

அதுக்குன்னு நீங்க எல்லாம் சேந்து google  மேல கேசு கீசு போட்றாதீங்க!!

மன்னிக்கறவன் மனுசன்!!  மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுஷன்!!

எப்ப விஷயத்துக்கு(??!!)வருவான்னு யோசிக்கறீங்க!!

பின்ன என்னங்க!! காலையிலேயே எந்திரிச்சு குளிக்காம, பல்கூடவிளக்காம,
google -ல வந்து AUGUST 25 ன்னு கொடுத்து SEARCH பண்ணா
நம்ம வாயிலயே நுழையாத இங்கிலீஷ்காரங்க பொறந்தது, செத்தது,
ஏதோ 2வது உலகப்போரு, உருகுவே விடுதலையானது,
கலிலியோ தொலைநோக்கிய கண்டுபிடிச்சது,
இந்த மாதிரி நிறைய தேவையில்லாத விஷயமா இருக்குங்க!!

ஆனா பாருங்க!! இந்த பிரபலபதிவர்(அட நான்தாங்க!!)சேலம்தேவாவோட
பிறந்தநாள எப்டி மறந்தாங்கன்னு தெரியல!!

(பிறந்தநாள் அதுவுமா ஒருத்தன திட்டகூடாதுன்ற அடிப்படை நாகரீகம்
தெரியாதவர்கள் அல்ல நம் பதிவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
உலகத்துக்கு!!?? பின்னூட்டத்துல காட்டுங்க!!!
பரிசு தர முடியலயேன்னு வருத்தப்படாதீங்க!!!உங்க ஓட்டுகளை
நான் பெரியமனசு பண்ணி ஏத்துக்கறேன்!!!)

Post Comment

19.8.10

சொ(நொ)ந்த கதை!!!

இந்த டாக்டருங்களுக்கெல்லாம் காய்ச்சலே வராதா?

வந்தா அவங்களுக்கு யாரு ஊசி போடுவாங்க?

வேற எதாவது நல்ல ஆஸ்பிட்டல் போவாங்களோ?

ஆஸ்பிட்டல்ல உக்காந்து இருக்கறவங்க ஏன் உலகமே
இடிஞ்சி போன மாதிரி உக்காந்து இருக்காங்க?

ஐந்து நிமிச கேப்புல யாருக்காவது ஒரு தும்மல்
(அ) இருமல் வருதே அது எப்டி?

ஊசி பழசாஇருக்குமா? புதுசாஇருக்குமா?

ஊசிகுத்தும்போது உடைஞ்சிடுச்சுன்னா என்ன செய்வாங்க?

தெர்மாமீட்டர கடிச்சா என்னாவும்?

ஸ்டெதஸ்கோப்புல என்ன சவுண்ட் வரும்?

நாக்க நீட்டி பழிச்சி காட்ட சொல்றாங்களே அது ஏன்?

வாயில எதுக்கு டார்ச் அடிக்கறாங்க?

டாக்டருங்க எழுதறாங்களே அது என்ன மொழி?
மெடிக்கல்காரங்களுக்கு மட்டும் புரியுதே அது எப்படி?

எப்பயும் பழைய கர்ணன் படத்தில வர்ற கண்ணன் மாதிரி 
புன்னகையாவே இருக்காங்களே இந்த டாக்டருங்க அது எப்படி?

துக்கவீட்ல புறப்படும்போது போயிட்டுவரேன் சொல்லக்கூடாதுன்னு
சொல்வாங்களே!!ஆஸ்பிட்டல்ல என்ன சொல்லணும்?

ஏற்கனவே பாதி லூசு மாதிரி உளறிட்டு இருந்தானே!!
இப்ப முழுசா ஆயிட்டானோ? அப்டின்னுதானே யோசிக்கறீங்க?

ஒருவாரமா காய்ச்சலுங்க!! விதவிதமா ஊசி!! விதவிதமா மாத்திரை!!
விதவிதமா டாக்டருங்க!!!அப்ப யோசிச்சது(!!??) இதெல்லாம்!!

உடனே நீங்கல்லாம் பதறி போய் ஈமெயில்,போன்,லட்டர்,தந்தி,sms,
இதெல்லாம் யூஸ் பண்ணி என்ன அழுக வச்சுரப்போறீங்க???

கலைஞர் காப்பீட்டு திட்டத்துல காய்ச்சலையும் சேக்கணும்ங்க!!!
அம்புட்டு செலவாவுதுங்க இப்பல்லாம்!!

வெளிநாட்டுகாரனே ஏதோ சூப்பர்பக்ன்னு ஒரு கிருமிய பரப்பி
அது நம்ம நாட்லஇருந்துதான் பரவுதுன்னு புரளிய கிளப்பிட்டு இருக்கான்!!

 "ஈ" படத்துல ஜனநாதன் சொல்வாரே !!
அது மாதிரி இவனுங்க நம்மள சோதனைக்களமா பயன்படுத்திட்டு இருக்காங்களோன்னு டவுட்டா இருக்கு!! பாத்து சூதானமா இருங்கப்பு!!

காய்ச்சலப்ப கூட இப்டிதான் ஸ்கார்ப் எல்லாம் கட்டிட்டு அழகா இருந்தேன்!!ஹி...ஹி...ஹி...

Post Comment

11.8.10

எந்திர்றா...(எந்திரன் இல்லை)

எப்படி தந்திரமா உள்ள வரவச்சேன் பாத்தீங்கள்ள...இதெல்லாம் எலிக்கு வக்கிற வடை...
எந்திரனும் இல்ல..சந்திரனும் இல்ல...வந்ததும் வந்தீங்க.. பாத்துட்டு போங்க....


பதிவுக்காக ரொம்ப யோசிச்சி..!!?? (இப்பவே சிரிக்காதீங்க) மண்டை காஞ்சு போச்சுங்க!!!
அதுவும் நீங்க போடற ஓட்டெல்லாம் எண்ணி முடிக்கறதுக்குள்ள..!!?? ஸ்ஸ்ஸ்...அப்பா....
அதனால இந்ததடவை போட்டோவ வச்சு ஓட்டிட்டேன்...பாத்து ரசிங்க...




   (இதுக்கு பேர் குப்புறாசனம் (!!??)நித்திகிட்ட எல்லாம் போகாதீங்க..நானே சொல்லிதர்றேன்..      யாராவது தனியா ட்ரை பண்ணி கழுத்து சுளுக்கிச்சின்னா நான் பொறுப்பில்ல...)






  (இந்த Mouse இல்லாம operate பண்றது ரொம்ப கஷ்டம்ப்பா!! இன்னைக்காச்சும் யாராவது
பின்னூட்டம் போட்ருக்காங்களா?)

                               
   (கால பரப்பிகிட்டு தூங்கறதில என்னா காத்தோட்டம்....என்னா சுகம்.....
   கைப்புள்ள....தூங்குகுகுகுககு....)






(மச்சான்.. எதையும் ப்ளான் பண்ணி பண்ணணும்...)




  (தம்பி..வட இன்னும் வரல...)




 (ரொம்ப சிவப்பா இருக்கறன் இல்ல..அதனால டாக்டர் காலையிலஆனா,
  sunboth எடுக்க சொல்லியிருக்காரு....)


                     
 (அப்பவே சொன்னேன்...அவங்கிட்ட வச்சுக்காதன்னு....பாரு! 
 காத கடிச்சி வச்சிட்டான்)




                                        (போதும்..நிறுத்திக்குவோம்...நன்றி..வணக்கம்...)  


நீங்களும் வெட்டியா (என்னமாதிரியே) இருந்தீங்கன்னா...இந்த படத்துக்கெல்லாம் comment
போடுங்க...இல்லைன்னா வந்ததுக்கு ஓட்டாவது போடுங்க...)                      

Post Comment

9.8.10

டை another day!!!

எல்லாத்துக்கும் அவங்க அழக காப்பாத்துறதுல
ஒரு ஆர்வம் இருந்துகிட்டேயிருக்கும்.

தலையில ஒரு நரைமுடி வந்துட்டா ஊர்ல இருக்கிற எல்லாரும்
துக்கவீட்ல விசாரிக்கற மாதிரியே நம்மள விசாரிப்பானுவ!!
நமக்கு இருக்கற கவலையில இந்த கவலை வேறு சேந்திரும்!!

உடனே ஊருல விக்கற எல்லா சாயத்தையும் வாங்கி தலையில
போட்டு அதுக்கப்புறம் ஆகும் பாருங்க நம்ம தலை!!!???
ரொம்ப கண்றாவியா இருக்கும்!!

இந்த சாயத்துக்கு எல்லாம் நடிக்கறாங்க பாருங்க அவங்கள சொல்லனும்!!
அவங்களுக்கு தலையில ஒண்ணுமே இருக்காது (முடிய சொன்னங்க)
ஆனா.சாய விளம்பரத்துல எல்லாம் விக் வச்சு நடிப்பாங்க!!
நம்மாளுகளும் அதை நம்ம்ம்பி வாங்கி யூஸ் பண்ணபிறகு, இந்தவாரபத்திரிக்கைங்க எல்லாமே நியூஸ் இல்லாததுக்கு எதாவது
ஒரு ஆராய்ச்சிய போடுறன்னுட்டு நம்ம தலையில கல்ல போடுவாங்க!!
 இந்த சாயம் எல்லாம் உபயோகித்தால் காலப்போக்கில் கேன்சர் வரும்,
அல்சர் வரும்ன்னு சொல்வாங்க பாருங்க!! படிக்கறப்பயே நமக்கு பயம் வரும்,
அப்புறம் அந்த பயத்திலயே BP,Sugar, இன்னும் ஊர்ல இருக்கற
எல்லா வியாதியும் வரிசையா வரும்!!!

உன் கைரேகைய பார்த்து எதிர்காலத்தை நம்பி விடாதே!!
ஏனென்றால் கை இல்லாதவர்க்கும் எதிர்காலம் உண்டு!!
அப்டின்னு நான் சொல்லல!! அப்துல்கலாம் ஐயா சொல்லியிருக்காரு...

அதனால நரைமுடிய நெனச்சி கவலபடறதவிட
முடியே இல்லாதவனபாத்து சந்தோஷப்படுங்க!!!
(மொட்ட தல காரங்களும்,சொட்ட தல காரங்களும் 
பின்னூட்டம் போட அனுமதி இல்லை) ஹி...ஹி...ஹி...

இது என்னோட அனுபவம் இல்லன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?

நாங்க எல்லாம் எப்டின்னா
வாழ்க்கையே இது பொய்யடா....
நம்ம தலையில எதுக்கு மைய்யிடா.....ன்னு வாழ்றவங்க!!??

என்ன ஒரு எதுகை மோனையா கவிதை எல்லாம் வருது...
ஒட்டு போடலன்னா இது மாதிரி கவிதையா எழுதித் தள்ளுவன்!!!தெரிஞ்சிக்கோங்க!!!

Post Comment

8.8.10

வாங்க குளிக்கலாம்!!!

குளிக்கறது ஒரு கலைங்க!!

நம்ம ஊரு ஏரி,குளம் எல்லாம் எப்பவோ ப்ளாட் ஆயிடுச்சி!

போதாதுக்கு ஆத்தில இருக்கற மணலை எல்லாம் மானாவாரியா
அள்ளிஅள்ளி வருங்காலத்துல நம்ம பயபுள்ளைகளுக்கு ஆறு எல்லாம்
மேப்பிலதான் காட்ட வேண்டி வரும்.

வீட்டுல ஒரே ஒரு பக்கெட் தண்ணியில
குளிக்கறது எல்லாம் ஒரு குளியலாங்க?

குளியல்னா அனுபவிச்சி குளிக்கனும்ங்க!

இதைப்பாருங்க!! நம்மள கிண்டல் பண்ற மாதிரியே இருக்கு!!




இப்பயே புள்ளைங்கள எங்கேயாவது ஆறு,குளம்,அருவின்னு
கூட்டிட்டு போய் காட்டிடுங்க!!!

அப்புறம் இதெல்லாம் அனுபவிக்கமுடியாம போய்டும்!!

Post Comment

6.8.10

சிங்கம்ம்ம்ல்ல!!!


சத்தியமா சிங்கம் பட விமர்சனம் இல்லை!!!

காட்டுக்கு ராஜாவா சிங்கமே ரொம்பநாளா இருக்கே?

அப்டின்னு என்னிக்காவது யோசிச்சிருக்கிங்களா?

ஏன் இந்த புலி,சிறுத்தை,யானை இதுமாதிரி யாராவது இருக்க கூடாதா?

அது ஏன்னு இப்ப தெரிஞ்சிக்கோங்க!!!




























தலைவரா இருக்கறதுக்காக எவ்வளவு மெனக்கெடறாங்க பாருங்க!!!

இவங்க ஒன்னும் ஒருசில இந்தியஅரசியல்வாதிகள்
மாதிரி எந்த தகுதியும் இல்லாம தலைவன் ஆகல!!

முயற்சி செய்றாங்க!!!   பயிற்சி செய்றாங்க!!!  தெரிஞ்சிக்கோங்க!!!


கொஞ்சம் இந்த ஓட்டும்,பின்னூட்டமும் போட்டிங்கன்னா இதுமாதுரி
எழுதறதுக்கு!!??  கொஞ்சம் ஊக்கமா இருக்கும்! (ஹி..ஹி...ஹி....)
எல்லாம் ஒரு விளம்பரம்!!!

Post Comment

5.8.10

கடவுளுக்கும் கட்டாயம் வேண்டும்!!

"அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால்"

         கடவுளுக்கும் கட்டாயம் வேண்டும்

                   "குடும்ப கட்டுப்பாடு"

இன்னிக்கு என்னோட வேலயா ஒரு மனவளர்ச்சி குன்றிய
        குழந்தைகள் இல்லத்துக்கு போனேங்க!!!

நமக்கு கூட கோபம்,சந்தோஷம்,சந்தேகம்,அழுகை அப்டின்னு
பல உணர்ச்சிகள் மாறி மாறி வருது!!!

ஆனா,இந்த புள்ளைங்களுக்கு ஒரே உணர்ச்சிதான்!!!
எப்பவும் சந்தோஷத்தோட இருக்காங்க!!


ஆனா,நமக்குதான் அவங்கள பாத்தா கடவுள் மேல கோபம் கோபமா வருது!!!
மேல சொன்னது சரிதானுங்களே!!!

உங்களால முடிஞ்சா இவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்க!!!
anbu_natta@yahoo.co.in

Post Comment

4.8.10

வாக்கிங்தான் பெஸ்ட்!!!

அன்லிமிடெட் மீல்ஸ லிமிட்டே இல்லாம சாப்ட்டு சாப்ட்டு 
 உடம்பு அகலவாக்கில போயிட்டே இருக்கு?!

அப்புறம் இவரமாதிரி ஆயிட்டா எந்திரிக்கவே முடியாது?!!



இதுல எங்க போய் blog எல்லாம் எழுதறது??!!

so, நாமளும் உடற்பயிற்சி எல்லாம் பண்ணி 



இவரமாதிரி ஆகலாம்னு பாத்தா அதுக்கு நம்ம ஊர்ல இருக்கற 
உயரமான பில்டிங்ல இருந்து எசகுபிசகா குதிச்சாதான் 
உடனே இந்தமாதிரி ஆகமுடியும்???!!!

வேற வேல எதுவும் செய்யாம ஜிம்லயே வேலைக்கு 
சேந்தாதான் இதுமாதிரி எல்லாம் ஆக முடியும்!!??

சரி போய்த்தான் பார்ப்போம் அப்டின்னு போனா அங்க இருக்கற பயலுவ
நம்மள புழு பூச்சிய பாக்கற மாதிரியே பாக்கறானுவ!!! இங்க பாருங்க...



இந்த மாதிரி ஜிம்ல இருக்கற பொருள யூஸ் பண்ண சொன்னா.... 




இவங்க நம்மளயே பொருளா யூஸ் பண்றாங்க....
என்ன கொடுமைங்க இது!!!

நாம எல்லாம் எப்ப அயன் சூர்யா மாதிரி ஆவறது??
அதெல்லாம் ஒரு கனவாவே போயிடும் போல இருக்கே!!!

Post Comment

பொறுமை வேணுங்க!!!

"பொறுமையால் நீ ஆயிரம் முறை கூட தோற்று இருக்கலாம்"

"ஆனால்,அவசரத்தால்,நீ ஒருமுறை கூட ஜெயித்திருக்க முடியாது"

அதனால,எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்.இல்லைன்னா?

















நம்ம தலையில நாமளே மண் அள்ளி போட்டுக்குவோம்....அப்புறம் feel பண்ணக்கூடாது.

Post Comment

2.8.10

குழந்தையின் சிரிப்பு


உங்கள் குழந்தையின் சிரிப்பை தூக்கத்தில் பார்த்துள்ளீர்களா?

உலகின் மிக மகிழ்ச்சியான,உண்மையான சிரிப்பென்றால் அதுதான்!!

வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையாவது
ஒன்றை தேடி ஒடிக்கொண்டே இருக்கிறோம்.

அதில் இது போன்ற தெய்வீக தருணங்களை இழந்துவிடக்கூடாது.

எந்த ஒரு தியானமும் உங்களுக்கு
இந்த அமைதியை தரப்போவதில்லை.

தூங்கும்போது குழந்தை சிரித்தால் கடவுள்
அதனுடன் விளையாடிக்கொண்டு இருப்பாராம்!!!

நாம் தூங்கும் போது இறந்தகாலத்தின் இழப்புகளையும்,
எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளுமே
 நம் கனவை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளை கொண்டாடுங்கள்!!!

இந்த அனுபவம் உங்களுக்கு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post Comment

தேச ஒற்றுமை



வீரப்பன் செத்துபோனாலும் போனாரு..இந்த கர்நாடகாகாரய்ங்க தண்ணிவிடமாட்றாய்ங்க...நம்ம மேட்டூர் அணைதான் இது..இன்னுங் கொஞ்சநாள்ல விளையாட்டுமைதானம் ஆயிடும் போலயே!!!அப்புறம் தேசஒத்துமை அதுஇதுன்னு யாராவது சொன்னிங்க!!கண்டபடி கோபம் வந்துரும் சொல்லிபுட்டேன் ஆமா!!

Post Comment

1.8.10

நட்பு



                                                   "நீரின்றி அமையாது உலகு"

                                               "நட்பின்றி அமையாது வாழ்வு"

                                                  அன்பு + நம்பிக்கை =  அம்மா

                                                        பயம் + பாசம் = அப்பா

                                விளையாட்டு + உதவி = சகோதர,சகோதரிகள்

                                                     கஷ்டம் + இஷ்டம் = காதல்

                                          இவை எல்லாம் + வாழ்க்கை = நட்பு


             அனைத்து நல்ல நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Post Comment