சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

27.8.12

ஆண்ட்ராய்டும்,பதிவர் திருவிழாவும்..

சாதாரண வசதிகள் கொண்ட மொபைலைக் கண்டாலே ஐய்ய்..போனுன்னு சிட்டிகாரங்க சிறுத்தைய பாக்கறமாதிரி பாப்பேன். (ஹி..ஹி...ஒரு சேஞ்சுக்கு....எவ்ளோ நாளைக்கு பட்டிக்காட்டான் முட்டாயின்னு சொல்றது)இதுல ஐ-போன் எல்லாம் நான் இதுவரைக்கும் பாத்தது கூட இல்லைன்றதுதான் நெசம். 

முந்தாநாள் என் பிறந்தநாள்.(ஹி..ஹி...மறந்து போனவங்க இதுக்கு மேலயும் கிப்டோ, கேக்கோ அனுப்பினாலும் பெருந்தன்மையா ஏத்துக்கற மனசு என்னுது) எங்க டாடி எனக்கு சர்ப்ரைஸா 8400 ஓவா போட்டு  சேம்சங் கேலக்ஸி ஒய் டூயல் சிம் வசதி கொண்ட, இரண்டு பெட்ரூம் வசதி கொண்ட ச்சே.. ஒரு ஃப்ளோவுல வந்திருச்சு.. ஒரு மொபைல் வாங்கித் தந்தாரு...அதுல இருக்கற ஆன்ட்ராய்ட் வசதிய மூணுநாளா நோண்டி நோண்டி வியக்கேன். இந்த கூகிள்காரனுக்குதான் என்னா மூளை.எதிர்காலத்துல இணையமே மொபைல்லதான்றத மனசுல வச்சி செமையா ரெடி பண்ணிருக்காங்க...அதுலயும் லட்சக்கணக்கான அந்த பயன்பாடுகளை (APPS) பாக்கும் போது உண்மையிலேயே பிரம்மிப்பா இருக்கு.நம்ம பிரபல தொழில்நுட்ப பதிவர்கள்  பிளாக்கர் நண்பன், பிரபு கிருஷ்ணாவின் கற்போம்,சசிகுமாரின்  வந்தேமாதரம் தளங்களுக்கு போய் ஆண்ட்ராய்டு பதிவுகளா படிச்சிட்டு இருக்கேன்.நீங்களும் இதுவரைக்கும் வாங்கலைன்னா ட்ரை பண்ணுங்க...

நேற்று நடந்த பதிவர் சந்திப்புக்கு வேலையின் நிமித்தம் போகமுடியாம நானே நொந்து போயிருக்கேன். போயிட்டு வந்த பதிவர்கள் போடற பதிவுகள பாக்கும் போது தீயற வாடை வருது. (ஸ்டமக் பர்னிங்) இதுநாள் வரைக்கும் யூத்துன்னு நெனச்சி படிச்சிட்டு இருந்த அண்ணன்..தப்புதப்பு...பெரியவர் சேட்டைக்காரன் அவர்களும் கலந்துகிட்டத படிச்சபோது நொந்துட்டேன். அவரோட சந்திப்ப மிஸ் பண்ணிட்டமேன்னு...போட்டோவ பாத்தவுடனே படையப்பா வசனத்த நெனச்சுகிட்டேன். :) 

வயதில்தான் பெரியவர்.எழுத்தில் என்றும் யூத்  சேட்டைக்காரன் என்னும்
திரு.ராஜாராமன் அவர்களின் புகைப்படம்


மொத்தத்துல ஹிட்ஸ் வாங்கற பதிவர்களோட விழா ஹிட் ஆனதுல மகிழ்ச்சி.

Post Comment

19.8.12

மதுபானக்கடை

தமிழகம் போற்றும்  வரலாற்று சிறப்பு வாய்ந்த காவியத்தை நேற்று பார்த்து விட்டேன்.சினிமாவை இயக்குனர்கள் அவர்களுடைய கருத்துகளை சொல்வதற்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதை பொழுதுபோக்கிற்காக தியேட்டருக்கு வரும் சாமான்யர்கள் யாரும் விரும்புவதில்லை.அந்தப்படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று ஓடுவதும் இல்லை.

குழந்தைகளுக்கு மருந்தில் தேன் தடவி கொடுப்பதை போல தமிழக அரசின் பொருளாதாரத்திற்கு துணை நிற்பவர்களுக்கான(?!) பெரும் குடி மகன்களின் ஒரு நாள் பார் வாழ்க்கையை களமாக வைத்து அதில் தற்போதைய சமூக நிலையையும்,மனிதர்களின் பல்வேறு முகங்களையும் யதார்த்தத்தை அதிகம் மீறாமல் காட்டிய விதம் பாராட்டுதலுக்குரியது.

பிறமொழி படங்களிலிருந்து காப்பி அடிக்கிறோம் என்ற கூச்சம் இல்லாமல் இயங்கும் இயக்குனர்கள் மத்தியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின்  உண்ணற்க கள்ளை கதையை அடிப்படையாக கொண்டது என்று குறிப்பிட்ட விதமும் பாராட்டத்தக்கது.

இதுவரை மருந்தில் தேன் என்ற கொள்கையை வைத்து படங்களை கொடுத்த எனக்குப்பிடித்த இயக்குனர்களான சிம்புதேவன்,ஜனநாதன் அவர்கள் வரிசையில் கமலக்கண்ணனும் சேர்ந்து விட்டார்.வாழ்த்துகள்...



பெட்டிசன் மணியாக நடித்த என்.டி.ராஜ்குமார் அவர்கள்தான் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார்.நடிப்பிலும்.பாடல்களிலும் கலக்கி எடுத்திருக்கிறார்.


வாய்ப்பிருந்தால் பார்த்து உணருங்கள்.

Post Comment