சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

23.3.12

அம்புலி 3D

ஒரு படத்துக்கு என்ன மாதிரி இவ்ளோ சீக்கிரம் விமர்சனம் எழுதி பாத்திருக்க மாட்டிங்க...இருந்தாலும் வந்ததுக்கு படிச்சிட்டு போய்டுங்க...நமக்கு அட்ராசக்க சிபி அண்ணன் மாதிரி தியேட்டர்ல படம் பாத்துகிட்டே விமர்சனம் எழுதற திறமை இன்னும் வரல...(டேய்..அவரு நெ.1 பதிவர்டா)


திருட்டு டிவிடி பிரச்சினைக்கு சரியான மாற்றா 3D படங்களும் இருக்கும்ன்றது என்னோட நம்பிக்கை. (சொல்லிட்டாரு நாட்டாமை) ரொம்ப நாளைக்கு பிறகு 3D படம் வந்தத கேள்விப்பட்ட பின் மனம் மகிழ்ச்சியில் குதித்தது. (பாத்து ஓடிரப்போவுது) கடைசியா மை டியர் குட்டிச்சாத்தான் தியேட்டரில் கண்ணாடியோடு பார்த்த ஞாபகம். இப்ப புது முயற்சியா அம்புலி படம் 3D கேமராவுலயே எடுத்து வெளியிடறதால இன்னும் நல்ல அனுபவமா இருக்கும் குழந்தைகளுக்கு...என்னதான் புது டெக்னாலஜி வந்திருந்தாலும் இன்னும் அந்த 3D கண்ணாடிய மாத்தல பாருங்க.அப்ப சிகப்பு கலர் ஒரு பக்கம், நீலக்கலர் ஒரு பக்கம் இருக்கற கண்ணாடிய குடுத்தாங்க...இப்ப சிவாஜி,எம்.ஜி.ஆர் காலத்து பிரேம் வச்ச கருப்புக்கண்ணாடிதான் கொடுத்தாங்க...


படத்துல வர்ற காமெடிய விட கூட்டிட்டுப்போன தங்கமணிய இந்தக்கண்ணாடியோட பாக்கறதுதான் பெரிய காமெடி. பாப்பா வேற என்ன இந்தக் கண்ணாடியோட பாத்து பயந்துகிச்சு.கூட்டிட்டுப்போய் மந்திரிக்க வேண்டியதாப்போச்சு.(உன்ன எல்லாம் கண்ணாடி இல்லாம பாத்தாலும் பயமாதான் இருக்கும்)

புது முயற்சியா கதைச்சுருக்கத்தை டைட்டில்லயே சொல்லி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து திரில்லர் படம் எடுத்திருந்தாலும் பாடல்கள் படத்தோட வேகத்துக்கு தடையா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். ஒரு நல்ல மெலடி பாட்டு இருந்தாலும் அது படத்தோ ஒட்டல. நாங்க போன வார நாள்லயே வந்திருந்த கூட்டத்த பாத்தா படத்துக்கு போட்ட காச எடுத்திருப்பாங்கன்னுதான் தோணுது. அந்த உற்சாகத்துல அடுத்த பாகத்த இன்னும் சுவாரஸ்யமா எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.


செல்வராகவனோட "ஆயிரத்தில் ஒருவன்" பட கெட்டப்ல பார்த்திபன் கூட நடிச்சிருக்காரு.ஒரு படம் அப்டி நடிச்சிட்டா அதே மாதிரி கெட்டப் கொடுத்து கொல்லுவாங்க.

படத்துல வர்ற அம்புலிய விட இவங்க நடிப்ப பாக்கறப்பதான் எனக்கு பயமா இருந்துச்சு.10ரூவாய்க்கு நடிங்கன்னு சொன்னாக்கூட 100ரூவாய்க்கு நடிப்பாங்க...


படம் பாத்த நிறையபேர் அம்புலி வர்றப்ப பயங்கரமா கத்தி கூச்சல் போட்டாங்க...நான் கத்தவே இல்லயே...அம்புலி கூடவே வாழ்றவங்கடா நாங்க...(தங்கமணி ப்ளாக் படிக்காம இருக்கறது எவ்ளோ நல்லது நமக்கு) ஹி.ஹி..ஹி...

குழந்தைங்க பரீட்சை லீவு வரைக்கும் கூட ஓடும்ன்னு நெனைக்கிறேன்.மிஸ் பண்ணாம போய்ப்பாருங்க...(அம்புலி மட்டும் கிங்காங் படத்துல வர்ற குரங்கு  மாதிரியே இருக்கும்ன்னு குழந்தைகள முன்னாடியே தயார் படுத்திருங்க)

Post Comment