சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

30.1.11

தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...

இந்த ரைமிங் எல்லாம் கேக்க நல்லாதான் இருக்கு..!!
ஆனா,நிஜத்தில் நம்ம தமிழக மீனவனோட தலையை
பாத்தாவே சுட்டுர்றானுங்க சிங்கள வெறியனுங்க...

அன்பை மட்டுமே போதிக்கற புத்தர் இவனுங்களுக்கு
இதைதான் சொல்லிக் குடுத்தாரா..?!
இவ்வளவு உயிர்களையும் கொன்னுட்டு புத்த பிட்சுகளிடம்
ஆசிர்வாதம் வேற...நல்லா இருக்குடா உங்கள் போதிசத்துவம்.

இப்படியே பண்ணிட்டு இருங்கடா...நம்ம இந்திய அரசாங்கம் ஏதும் பண்ணலேன்னாலும், இயற்கை என்னும் சக்தியும், இறந்த மீனவர்களின் குடும்பத்தோட சாபமும் உங்கள இன்னொரு
சுனாமியா வந்து காலி பண்ணப் போவுது.

கச்சத்தீவை தாரைவார்த்த இவங்களோட வெளியுறவுக்கொள்கையையும், ராஜதந்திரத்தையும் நினைச்சா பத்திகிட்டு வருது.

நம் அரசியல் கட்சிகளுக்கு வரப்போற தேர்தல் வேலையே நிறைய
இருக்கும் போது இந்த மாதிரி மீனவர்கள் சுடப்படற நிகழ்வுகள் வேற வந்து
தொல்லை பண்ணுது.செத்துப் போனவன் வீட்டுக்குப் போயும் கேவலமா
அரசியல் நடத்துறாங்க...

ஜனநாயகம் ஜனநாயகம்ன்னு கூவறாங்களே தவிர ஜனங்களுக்கு ஒண்ணு நடக்கும் போது அதை எதிர்க்க கூட மாட்றாங்க....ஓட்டு போட்டு எப்படி நாம் தேர்ந்தெடுக்கிறோமோ அதே போல் திரும்பபெறும் உரிமையையும் நமக்கு கொடுத்தாதான் இந்த அரசியல்வியாதிங்களுக்கு பயம் இருக்கும்.

நம்ம முதல்வர் நிறைய கடுதாசி போட்டு கண்டுக்காத பிரதமரு நம்ம  பெட்டிசனையா கண்டுக்க போறாரு...செவிடன் காதில ஊதின சங்கு மாதிரிதான்..இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில நம்ம எதிர்ப்பை  தெரிவிக்கலாம்.

நம்ம கருத்தை மத்திய அரசாங்கத்துக்கு தெரிவிக்க இந்த இணைப்பு






Save TN Fisherman

Post Comment

22.1.11

ஆனந்தம்.. பரமானந்தம்..!!



இந்தவார விகடனில் வலைமேயுதே...ச்சீ..சாரி..வலைபாயுதேவில் பிரபலபதிவர்"சேலத்துமாங்கனி""சேலத்துசிங்கம்,புலி,சிறுத்தை"etc..,(மொத்தத்துல மனுசன் இல்ல) சேலம்தேவாவின் ட்விட் ஒன்று வந்து ஆனந்தவிகடன் அதன் வரலாற்று பெருமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உடனே அகிலம் முழுவதும் உள்ள என் பல்லாயிரக்கணக்கான(!?) ரசிககண்மணிகள் விகடன் விற்பனையை உயர்த்தி  என்னைக் ஆனந்தகண்ணீர் விட வைக்காதீர்கள்.ஹி.ஹி..ஹி...

அடுத்ததாக நம்ம அட்ராசக்க சி.பி.செந்தில்குமார் ஸ்டைலில் சன் டிவியிலோ,விஜய் டிவியிலோ நம் முகம் தெரிய என் செய்ய  வேண்டும்..?! தினத்தந்தியிலோ,தினமலரிலோ முன் பக்கத்தில் நம் பதிவுகள் வர என்ன செய்ய வேண்டும்..? குமுதம் குங்குமம் பத்திரிக்கைகளில் நாம் எப்படி கும்முவது..?! மூஞ்சி புத்தகத்தில்(அதாங்க பேஸ்புக்) நம்ம மூஞ்சி பிரபலமாக என்ன செய்ய வேண்டும்..? என்பது போன்ற பதிவுகளை வரிசையாக இடக்கூடிய ஒர் நிலையை நான் அடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.

இந்த உயரியநிலையை நான் அடைந்தது எப்படி என்று பல தொலைபேசி விசாரிப்புகள்,மின்னஞ்சல்கள்..எனவே,பதிவுலக நண்பர்களுக்கு விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

வலையை மேய்ந்து கொண்டிருக்கும்போது எங்கு சைன்இன்,சைன்அப்,ரிஜிஸ்டர் என்று பார்த்தாலும் வேறு யாராவது நமது பெயரை உபயோகிப்பதற்கு முன் உடனே நமது பெயரை பதித்துவிடவேண்டும்.ட்விட்டரில் சேர்ந்த 2 நாட்களில் என்னை பின்தொடர்பவர்கள் 20 பேர்மட்டுமே.ஆனால்,நான் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையோ 300-ஐத் தாண்டும்.தீயாக வேலை செய்ய வேண்டும்.ஹி.ஹி..ஹி...

ஆளில்லாத டீக்கடையாக இருந்த என் மின்னஞ்சல் முகவரி இது போன்ற செய்கைகளால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால்,இதில் இலவசமாக நமது பெயரை பரப்புவர்களிடம் மட்டும்தான் நமது முத்திரையை பதிக்க வேண்டும்.ஒருசில தளங்களில் பேபால்,பேகாப்பி, பேடீ(அதாங்க... PAYPAL) என்று இருப்பதை பார்த்தால் வாயுவேகத்தில் திரும்பிவிடவேண்டும்.ஹி.ஹி..ஹி... 

நமக்கு வரும் மின்னஞ்சல்கள்,குறுஞ்செய்திகள்,படிக்கும் பத்திரிக்கைகள்,பார்க்கும் செய்திகள் என்று எதைப்பார்த்தாலும் நமக்கு பதிவிடுவதற்கும்,ட்வீட்டுவதற்கும் ஏதேனும் செய்தி இருக்கிறதா என்ற கோணத்திலேயே பார்க்கவேண்டும்.(மொத்தத்தில் உருப்படியா எந்த வேலையும் செய்யக்கூடாது)

இந்த முறையில் எனக்கு வந்த நல்ல குறுஞ்செய்தியை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டைப்பியிருந்தேன்.அதுதான் இப்போது விகடனில் வந்து பெருமை படுத்தியுள்ளது.(காப்பி அடிச்சத எப்டி பெருமை அடிக்குது பாரு...

இன்னும் இந்த சமூகத்திற்கு இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை என் உயிர்உள்ளவரை செய்வேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொல்கிறேன்..சாரி கொள்கிறேன்.ஹி.ஹி..ஹி...(உயிர எடுக்கிறானே)

ஸ்ஸ்ஸ்..அப்பா... எப்டியோ ஒரு பதிவு தேத்தியாச்சு...ஹி.ஹி..ஹி...

Post Comment

14.1.11

பொங்கலோ பொங்கல்..!!

காணும்பொங்கல்,மாட்டுப்பொங்கல்,உழவர் திருநாள்,தமிழர் திருநாள்
இப்படி பலபெயர்களில் பொங்கலை கேள்விப்பட்ருப்பீங்க..!!
ஆனா,சந்துப்பொங்கல் பத்தி தெரியுமா..?!
சேலத்தில் உள்ள அனைத்து சந்துபொந்துகளிலும்
நடக்கும் பொங்கல்தான் அது.
ஒரு கட்டில் மூணு கல்(கிரைண்டர் இல்லீங்க)உம்மாச்சி.
இத வச்சு ஒரு தற்காலிக கோவில்.
இதை நடத்தினால்தான் அந்த சந்தும்(அ) தெருவும்,தெருவுல இருக்கறவங்களும் நல்லா இருப்பாங்களாம்..!!
ஆனா,ஒரு ஆடு மட்டும் நல்லா இருக்காது.
ஏன்னா...அததான் பலி கொடுக்கறதுக்கு கொன்றுவாங்களே..!!

தமிழ்ப்புத்தாண்டு கூட இந்த நாள்ல கலைஞர்
கொண்டாடசொல்லியிருக்காரு..!!
அவங்க கட்சிகாரங்களைத் தவிர எந்த தமிழனும் அவரு
பேச்ச கேக்க மாட்டாங்க..!!

நரகத்தில.. சாரி நகரத்தில இருக்கறவங்களுக்கு இது
மற்றுமொரு விடுமுறை நாள் மட்டுமே..!!
மூணுநாளும் முக்கிமுக்கி டிவியில சிறப்புநிகழ்ச்சி போடுவாங்க..!!
அதைப் பாத்துகிட்டே ஓட்டிருவாங்க..!!
முக்கியமா பட்டிமன்றம்..!!
பொங்கலில் சிறந்தது சர்க்கரைப் பொங்கலா..?! வெண் பொங்கலா..?!
பொங்கலுக்கு சிறந்தது சர்க்கரையா..?! வெல்லமா ..?!
கரும்பில் சிறந்தது வெள்ளைக்கரும்பா..?! கருப்பு கறும்பா ..?!
கணவனா..? மனைவியா ..?
பழைய பாடலா..? புதிய பாடலா ..?
வளர்கிறதா..? தேய்கிறதா..?
இந்த மாதிரி பட்டிமன்றம் பாத்தே பொங்கலை ஓட்டிருவாங்க..!!

கிராமங்களில்தான் பொங்கலை சிறப்பா கொண்டாடுறாங்க..!!
ஒரு ஊரே சாப்பிடற அளவுக்கு பானை வச்சு மூணு கரும்ப அத
சுத்தி வச்சு அலங்காரம் எல்லாம் பண்ணி அசத்துவாங்க..!!



அவங்க மேக்கப் பண்ணிக்கறாங்களோ இல்லையோ
மாட்டுக்கு நல்லா மேக்கப் பண்ணிருப்பாங்க..!!



பொங்கல் பொங்கும்போது குலவைசத்தம் போடுவாங்க..!!
நீங்க வேணா முயற்சி பண்ணிபாருங்க..!! நாக்கு சுளுக்கிக்கும்..!!
மக்கள் டிவிய தவிர மத்த எல்லா டிவியில இருக்கற தொகுப்பாளர்களும் தமிழை கொல்லுவாங்க... இவங்களுக்கு இந்த குலவைசத்தம் டிரைனிங் கொடுத்தா நல்லா இருக்கும்..!!


அப்புறம் இந்த ஜல்லிக்கட்டு.



வாழ்க்கையில ஒருநாளாவது இதுல கலந்து ஏதாவது ஒரு மாட்டையாவது அடக்கிடணும்ன்னு டிரை பண்றேன். முடிய மாட்டேங்குது.
டிவியில பாக்கும்போதே லேசா வயித்த கலக்கும்.



நம்ம பசுநேசன் ராமராஜன் சார் ஸ்டைல்ல பாட்டுப்பாடியாவது என்னைக்காவது ஒருநாள் அடக்கணும்..!!ஹி.ஹி..ஹி..


அப்புறம் ஒரு முக்கிய விஷயம் மகரசங்கராந்தியான இன்னிக்கு கொஞ்சூண்டு மொச்சைக்கொட்டை சாப்பிடலேன்னா கழுதை ஆயிடுவாங்களாம்.உடனே போய் கொஞ்சம் வாயில போட்டுக்குங்க... சந்தேகம்ன்னா, உங்க பாட்டிங்ககிட்ட கேட்டுப்பாருங்க...

சமயத்தில் உதவியதற்கு நன்றின்னு பின்னூட்டம் எல்லாம் போடவேணாம்.இது என் கடமை.ஹி.ஹி..ஹி...


பதிவுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்க்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.

Post Comment

10.1.11

ஏமாற்றி விட்டார் கேப்டன்...!!

முதலிலேயே கூறிவிடுகிறேன்.இது எப்போதும் என் தளத்தில் வரும் அரிய கருத்துகள்(?!) அன்று.என்னுடைய அரசியல் பார்வை.



ஒரு வழியாய் எதிர்பார்க்கப்பட்டது போல் நடந்து முடிந்தது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மாநாடு.10லட்சம்பேர்,50லட்சம்பேர்,1கோடிபேர் வருவார்கள் என்று கூவிக் கொண்டிருந்தார்கள்.கடைசியில் அவரே எதிர்பார்க்காத கூட்டம் வந்திருக்கும் போலத்தான் தெரிகிறது.

இதுக்கு ரஜினியே பரவாயில்லை என்று அவரின் ரசிகர்களே சொல்லியிருப்பார்கள்.அவராவது,இருந்த இடத்தில் இருந்து கொண்டு வருவேன்,வரலாம், வந்து கொண்டு இருக்கலாம் என்று வானிலை அறிக்கை போல் கூறிக் கொண்டிருப்பார்.

இவர் மாநாடு என்ற பெயரில் அனைத்து ரசிகர்களையும் மதியத்திலிருந்து இரவு வரை வெயிலில் தேவுடு காக்க வைத்துவிட்டு கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன்.நீங்கள் வீட்டுக்கு ஓழுங்காய் போய்ச் சேருங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.பத்திரிக்கையாளர்கள் வேறு மிகுந்த எதிரி்பார்ப்புடன் அவர் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தனர்.கடைசியில் அவர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே.

ஆனால் எப்போதும் கலைஞர் ,அம்மா இருவரையும் விமர்சிப்பவர் கடைசிவரை மறந்து கூட ஜெயலலிதாவைப் பற்றி கூறாதது அவர் அ.தி.மு.க- வை நோக்கி நகர்வதையே காட்டுகிறது.சீட்டுக்கணக்கோ,பேரமோ படியவில்லை போல இருக்கிறது.அவர் கட்சியை அடகு வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.விற்றுவிடுவாரா.?! என்று தெரியவில்லை.

இவர்கள் என்னமோ செய்துவிட்டுப் போகட்டும்.காமராஜரையும்,கக்கனையும் போன்ற நல்ல தலைவர்களை இவர்களோடு ஓப்பிடும் போது வருத்தம் அளிக்கிறது.இது போன்று பிரம்மாண்டமான மாநாடுகள் காமராஜர் காலத்தில் நடந்திருக்குமா..? பாதுகாப்புக்காக வரும் காவல்துறை வாகனத்தையே வேண்டாம் என்று கூறுபவர் காமராஜர் என்று படித்திருக்கிறேன்.
கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து மறைந்த கக்கன் போன்ற தலைவர்களோடு இவர்களை தயவு செய்து ஓப்பிடாமல் இவர்களுடைய தீர்மானங்களை பற்றி மட்டும் பேசினால் நன்று.

1500 கி.மீட்டருக்கு பேனர்கள் வைத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்களாம்.எந்த கட்சியும் இது போன்று சாதனையை நிகழ்த்தியதில்லை.முடிந்தால் இதுபோல் செய்து காட்டுங்கள் என்று மற்ற கட்சியினரை உசுப்பேற்றியிருக்கிறார்.ஏற்கனவே நன்றாக (?!)இருக்கும் ரோடுகளை இன்னும் கொத்த போகிறார்கள்.

இலங்கைத்தமிழர்க்கு நீதியையும்,கச்சத்தீவையும், முல்லைப்பெரியாற்று நீரையும்,காவிரி ஆற்றுத் தண்ணீரையும் வாங்கித்தராமல் ஓயப்போவதில்லை போல இருக்கிறது இந்த உரிமைமீட்பு மாநாடு.

குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று கேப்டன் கட்சியினர் அனைவரும் கலைஞரை ஏசிவிட்டு கேப்டன் அவர்களின் மனைவியையும்,மைத்துனரையும் ,"அண்ணியார்"" இளைஞர்களின் எழுச்சி நாயகன்" என்று கூறியது நகைச்சுவைக்குரியது.


நான் செய்வதை காப்பி அடிப்பதே கலைஞருக்கு வேலையாகப்போய்விட்டது என்று பலதடவை கூறினார்.எப்போதும் ஐந்து விரல்களை காட்டும் கலைஞர்



 நான் இந்த வெற்றியைக் குறிக்கும் முத்திரையைக் காட்ட ஆரம்பித்தவுடன்



அரசுசார்பில் தரும் பொங்கல்பைகளில் அவரும் அதைக் காப்பி அடிக்கிறார் என்று மிகவும் வருத்தப்பட்டார்

கலைஞரையையும் காவல்துறையையும் காய்ச்சி எடுத்தார்.அவர் படங்களில் வரும் காவல்துறையினரைப் போன்று எதிர்பார்க்கிறார் போல இருக்கிறது.உண்மையிலேயே விருதகிரி படத்தில் வருவதைப் போன்று காவல்துறையினரின் நிலைமை கவலைக்குரியது.ஸ்காட்லாண்ட் யார்டுக்கே நுணுக்கங்கள் கற்றுத்தரும் என் படங்களைப் பார்த்தாவது காவல் துறையினர் மேலும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல் போனாரே..?!

இவ்வளவு கூட்டம் கூடிய மாநாட்டின் செய்திகள் எந்தப்பத்திரிக்கைகளிலும் பெரிய அளவில் வராதது கலைஞர் குடும்பத்தின் பத்திரிக்கை ஆக்ரமிப்பையே காட்டுகிறது.தி.மு.க வின் மாநாடாக இருந்திருந்தால் தினகரனில் பெரிய அளவில் வந்திருக்கும்.இதைப்பற்றி ஒரு சிறுபக்கம் கூட இல்லை.


இன்னும் தேர்தல் வருவதற்குள் இது போன்று மாநாடுகளையும்,வாக்குறுதிகளையும்,கட்சி மாறுதலையும்,அரசியல் தந்திரங்களையும் பார்க்கத்தானே போகிறோம்..!!

Post Comment

5.1.11

விலை நில(கல)வரம்..!!

வெங்காயம் விலை வெள்ளியை,சூரியனை தொடுகிறது.
(எவ்ளோ நாளைக்குதான் விண்ணை தொடுகிறதுன்னு சொல்றது)
பூண்டு விலை நம்மை போண்டியாக்குகிறது.
தக்காளி விலை தவிக்க வைக்கிறது.

ஆனாலும்,
இந்தியாவில் எல்லா உணவு வகைகளும் மிகவும் 
விலைகுறைவாக கிடைக்கும் ஒரு இடம் உள்ளது.

விலை நிலவரம் 
டீ - 1.ரூ 
சூப் - 2.50.ரூ
சுண்டல் - 1.50.ரூ
சாப்பாடு - 2.00.ரூ
சப்பாத்தி - 1.00.ரூ
சிக்கன் - 24.50.ரூ
தோசை - 4.00.ரூ
வெஜ்.பிரியாணி - 8.00.ரூ
மீன் - 13.00.ரூ

விலைவாசி நாட்ல எவ்வளவு ஏறினாலும் இங்க
இருக்கற ரேட் மட்டும் ஏறவே ஏறாது..!!

இருங்க..!! இருங்க..!!
எங்க பேக் பண்ண கிளம்பிட்டிங்க..?!
நாமல்லாம் அங்க போகமுடியாது.

ஏன் தெரியுமா..?!

இது எல்லாம் ரொம்ப குறைவா சம்பளம் 
வாங்குற ஏழைங்களுக்கு மட்டும்தான்.
அந்த ஏழைங்களை நாமதான் அனுப்பி வைக்கிறோம்.
அது எந்த இடம் தெரியுமா..?!

 நம்ம பார்லிமென்ட்தான்...

அந்த ஏழைகளின் சம்பளம் மட்டும் (Note this point your honour)
80,000.ரூ
அட... வருஷத்துக்கு இல்லீங்க..!! மாசத்திற்கு..!!
அதுக்கு மேல ஸ்பெக்ட்ரம்,காமன்வெல்த்,கான்ட்ராக்ட் தனி..!!

உடனே போய் ரெண்டு ஜெலுசில் மாத்திர வாங்கி சாப்ட்ருங்க..!!
ஓவர் வயித்தெரிச்சல் உடம்புக்கு ஆகாதுங்க..!!
நாம எப்பயும் போல புள்ளைங்கள படிக்க வைக்கலாம்..!!

இது எனக்கு SMS-ல வந்தது.
அதுல கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்து போட்ருக்கேன்.
ஹி.ஹி..ஹி...

Post Comment