இந்தவார விகடனில் வலைமேயுதே...ச்சீ..சாரி..வலைபாயுதேவில் பிரபலபதிவர்"சேலத்துமாங்கனி""சேலத்துசிங்கம்,புலி,சிறுத்தை"etc..,(மொத்தத்துல மனுசன் இல்ல) சேலம்தேவாவின் ட்விட் ஒன்று வந்து ஆனந்தவிகடன் அதன் வரலாற்று பெருமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உடனே அகிலம் முழுவதும் உள்ள என் பல்லாயிரக்கணக்கான(!?) ரசிககண்மணிகள் விகடன் விற்பனையை உயர்த்தி என்னைக் ஆனந்தகண்ணீர் விட வைக்காதீர்கள்.ஹி.ஹி..ஹி...
அடுத்ததாக நம்ம அட்ராசக்க சி.பி.செந்தில்குமார் ஸ்டைலில் சன் டிவியிலோ,விஜய் டிவியிலோ நம் முகம் தெரிய என் செய்ய வேண்டும்..?! தினத்தந்தியிலோ,தினமலரிலோ முன் பக்கத்தில் நம் பதிவுகள் வர என்ன செய்ய வேண்டும்..? குமுதம் குங்குமம் பத்திரிக்கைகளில் நாம் எப்படி கும்முவது..?! மூஞ்சி புத்தகத்தில்(அதாங்க பேஸ்புக்) நம்ம மூஞ்சி பிரபலமாக என்ன செய்ய வேண்டும்..? என்பது போன்ற பதிவுகளை வரிசையாக இடக்கூடிய ஒர் நிலையை நான் அடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.
இந்த உயரியநிலையை நான் அடைந்தது எப்படி என்று பல தொலைபேசி விசாரிப்புகள்,மின்னஞ்சல்கள்..எனவே,பதிவுலக நண்பர்களுக்கு விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
வலையை மேய்ந்து கொண்டிருக்கும்போது எங்கு சைன்இன்,சைன்அப்,ரிஜிஸ்டர் என்று பார்த்தாலும் வேறு யாராவது நமது பெயரை உபயோகிப்பதற்கு முன் உடனே நமது பெயரை பதித்துவிடவேண்டும்.ட்விட்டரில் சேர்ந்த 2 நாட்களில் என்னை பின்தொடர்பவர்கள் 20 பேர்மட்டுமே.ஆனால்,நான் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையோ 300-ஐத் தாண்டும்.தீயாக வேலை செய்ய வேண்டும்.ஹி.ஹி..ஹி...
ஆளில்லாத டீக்கடையாக இருந்த என் மின்னஞ்சல் முகவரி இது போன்ற செய்கைகளால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால்,இதில் இலவசமாக நமது பெயரை பரப்புவர்களிடம் மட்டும்தான் நமது முத்திரையை பதிக்க வேண்டும்.ஒருசில தளங்களில் பேபால்,பேகாப்பி, பேடீ(அதாங்க... PAYPAL) என்று இருப்பதை பார்த்தால் வாயுவேகத்தில் திரும்பிவிடவேண்டும்.ஹி.ஹி..ஹி...
நமக்கு வரும் மின்னஞ்சல்கள்,குறுஞ்செய்திகள்,படிக்கும் பத்திரிக்கைகள்,பார்க்கும் செய்திகள் என்று எதைப்பார்த்தாலும் நமக்கு பதிவிடுவதற்கும்,ட்வீட்டுவதற்கும் ஏதேனும் செய்தி இருக்கிறதா என்ற கோணத்திலேயே பார்க்கவேண்டும்.(மொத்தத்தில் உருப்படியா எந்த வேலையும் செய்யக்கூடாது)
இந்த முறையில் எனக்கு வந்த நல்ல குறுஞ்செய்தியை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டைப்பியிருந்தேன்.அதுதான் இப்போது விகடனில் வந்து பெருமை படுத்தியுள்ளது.(காப்பி அடிச்சத எப்டி பெருமை அடிக்குது பாரு...)
இன்னும் இந்த சமூகத்திற்கு இதுபோன்ற பயனுள்ள விஷயங்களை என் உயிர்உள்ளவரை செய்வேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொல்கிறேன்..சாரி கொள்கிறேன்.ஹி.ஹி..ஹி...(உயிர எடுக்கிறானே)
ஸ்ஸ்ஸ்..அப்பா... எப்டியோ ஒரு பதிவு தேத்தியாச்சு...ஹி.ஹி..ஹி...
முதலில் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஆனா.......... ஒரு ட்வீட் வந்ததுக்கே இவ்வளவு அலப்பறை என்னா..... யப்பா!!! ( பொறாம... பொறாம.. ) விடுங்க பாஸு
@ அக்கரையூர் சானா
ReplyDeleteஉங்களுடைய பொறாமையோடு கூடிய வாழ்த்துக்கு நன்றி..!! :-))
ஆ ஆ வந்துட்டாரய்யா வந்துட்டாரு.. எங்காளு ஆனந்த விகடன்ல வந்துட்டாரு.. ( சேலம், ஈரோடு, கோவை,திருப்பூர் நு கொங்கு மண்டல ஆட்கள் படைப்பு வந்துட்டா இப்படித்தான் துள்ளி குதிப்பேன்)
ReplyDelete>>>நமக்கு வரும் மின்னஞ்சல்கள்,குறுஞ்செய்திகள்,படிக்கும் பத்திரிக்கைகள்,பார்க்கும் செய்திகள் என்று எதைப்பார்த்தாலும் நமக்கு பதிவிடுவதற்கும்,ட்வீட்டுவதற்கும் ஏதேனும் செய்தி இருக்கிறதா என்ற கோணத்திலேயே பார்க்கவேண்டும்.
ReplyDeleteஆஹா ஐடியா.. ஃபாலோ பண்ணிடறேன்
thamizதமிழ்மணத்துல உங்க ஓட்டையே நீங்க இன்னும் போட்டுக்கலையா?
ReplyDelete@ சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteபாஸ்.. அது என்னோட படைப்பு அல்ல.நான் ரசித்தது மட்டுமே.எல்லா பத்திரிக்கை,புத்தகங்களிலும் உங்களுடைய ஜோக்,சிறுகதைகள் பார்த்திருக்கிறேன்.நீங்கள் மலை.நான் மடு.இருந்தாலும் சக பதிவரை ஊக்குவிக்கும் உங்கள் மனதை கண்டு வியக்கிறேன்.தொடரட்டும் உங்கள் கற்பனைகள்.விரைவில் உங்களை திரைப்பட இயக்குனராக பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். (அஸிஸ்டண்டா சேத்துக்கொங்க...ஹி.ஹி..ஹி... இப்பயே அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்கணும்.)
இந்த முறையில் எனக்கு வந்த நல்ல குறுஞ்செய்தியை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டைப்பியிருந்தேன்.அதுதான் இப்போது விகடனில் வந்து பெருமை படுத்தியுள்ளது.(காப்பி அடிச்சத எப்டி பெருமை அடிக்குது பாரு...)
ReplyDelete......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... வாழ்த்துக்கள்!
@ Chitra
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க... சித்ரா அக்கா..!! :-))
தன்னைத்தானே நக்கல் செய்துகொள்ளுவதற்கு நிறைய நகைச்சுவை உணர்வும், பக்குவமும் வேண்டும். அது உங்ககிட்டே இருக்கு! கவலைப்படாதீங்க! சீக்கிரம் ஜனரஞ்சகப்பத்திரிகையிலே ஒரு ரவுண்டு வருவீங்க! வாழ்த்துகள்!
ReplyDelete@ சேட்டைக்காரன்
ReplyDeleteஉள்ளபடியே விகடனில் வந்ததை விட உங்கள் வாழ்த்தை பெரிதாக எண்ணுகிறேன்.நன்றி. :-)
வாழ்த்துக்கள் தேவா.........
ReplyDelete" உடனே அகிலம் முழுவதும் உள்ள என் பல்லாயிரக்கணக்கான(!?) ரசிககண்மணிகள் விகடன் விற்பனையை உயர்த்தி என்னைக் ஆனந்தகண்ணீர் விட வைக்காதீர்கள்.ஹி.ஹி..ஹி...
மூஞ்சி புத்தகத்தில்(அதாங்க பேஸ்புக்) நம்ம மூஞ்சி பிரபலமாக என்ன செய்ய வேண்டும்..?
ஆளில்லாத டீக்கடையாக இருந்த என் மின்னஞ்சல் முகவரி இது போன்ற செய்கைகளால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது"
புதுசு புதுசா சொல்றீக ரெம்ப நல்லா இருக்கு :)
இப்படி அழகா எழுத கத்துக்கிட்டீங்க....... இதுக்காகவே உங்களுக்கு விகடனில் விருது கொடுக்கலாம் :)
அன்புடன்: கான்
@ கான்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.கான்..!!
டேய்.............. பத்திரிகைகள்ல் உன் பேரும் வரும்.... (நான் வீட்டுக்கு வரேன். எல்லா பத்திரிகளையும் எடுத்து வச்சி உன் பேரை எழுதித்தள்றோம்) தீயா வேலை செய்யணும்டா.......
ReplyDeleteநீயும் கண்டிப்பா ஃபேமஸ் ஆயிருவ (வடிவோலு - நீ ஐய்யேயஸ் ஆயிருவ.... ஆயிருவ.... ஆயிருவ.... )
உன்னைப்பத்தி ஒரு பதிவு போட்ருக்கேன்.. வந்து பாரு..
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDelete@ yeskha
ReplyDeleteஐ..இது கூட நல்ல ஐடியாவா இருக்கே..!!ஜெயிக்கிறோம்..!!ஹி.ஹி..ஹி...
@ கலாநேசன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிண்ணே..!!
ஆஹா.. அற்புதம்..
ReplyDeleteசேலத்து புகழை பார் எங்கும்
பரப்ப வந்த சேலத்து இளவரசே..
உன் பணி தொடர்கவே..
இப்படிக்கு
சேலம் தேவா தலைமை ரசிகர்
மன்றம் ( பதி எண் : 00001 )
கொண்டலாம்பட்டி.
ஹலோ பாஸ்... அம்மாபேட்டை ரசிகர் மன்றம் சார்பா அந்த நம்பர் எனக்கு வேணும்.. எவ்வளவு?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாப்பியா இருந்தாழும் இன்ஸ்பிரேசனா இருந்தாழும் கவலைபடாமல் உன் பணியை செய் விடா முயற்ச்சி விஸ்பரூப வெற்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் தேவா - குறுஞ்செய்தி - அன்கேந்து கீச்சு ( ட்விட்டர் ) - அப்புறம் பிளாக் -இதுக்கு அப்புறம் என்ன ? இப்படி எல்லாம் நடத்தலாமா ? தெரியாமப் போச்செ ! ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துக்ள் தேவா = நட்புடன் சீனா
ReplyDelete