இப்படி பலபெயர்களில் பொங்கலை கேள்விப்பட்ருப்பீங்க..!!
ஆனா,சந்துப்பொங்கல் பத்தி தெரியுமா..?!
சேலத்தில் உள்ள அனைத்து சந்துபொந்துகளிலும்
நடக்கும் பொங்கல்தான் அது.
ஒரு கட்டில் மூணு கல்(கிரைண்டர் இல்லீங்க)உம்மாச்சி.
இத வச்சு ஒரு தற்காலிக கோவில்.
இதை நடத்தினால்தான் அந்த சந்தும்(அ) தெருவும்,தெருவுல இருக்கறவங்களும் நல்லா இருப்பாங்களாம்..!!
ஆனா,ஒரு ஆடு மட்டும் நல்லா இருக்காது.
ஏன்னா...அததான் பலி கொடுக்கறதுக்கு கொன்றுவாங்களே..!!
தமிழ்ப்புத்தாண்டு கூட இந்த நாள்ல கலைஞர்
கொண்டாடசொல்லியிருக்காரு..!!
அவங்க கட்சிகாரங்களைத் தவிர எந்த தமிழனும் அவரு
பேச்ச கேக்க மாட்டாங்க..!!
நரகத்தில.. சாரி நகரத்தில இருக்கறவங்களுக்கு இது
மற்றுமொரு விடுமுறை நாள் மட்டுமே..!!
மூணுநாளும் முக்கிமுக்கி டிவியில சிறப்புநிகழ்ச்சி போடுவாங்க..!!
அதைப் பாத்துகிட்டே ஓட்டிருவாங்க..!!
முக்கியமா பட்டிமன்றம்..!!
பொங்கலில் சிறந்தது சர்க்கரைப் பொங்கலா..?! வெண் பொங்கலா..?!
பொங்கலுக்கு சிறந்தது சர்க்கரையா..?! வெல்லமா ..?!
கரும்பில் சிறந்தது வெள்ளைக்கரும்பா..?! கருப்பு கறும்பா ..?!
கணவனா..? மனைவியா ..?
பழைய பாடலா..? புதிய பாடலா ..?
வளர்கிறதா..? தேய்கிறதா..?
இந்த மாதிரி பட்டிமன்றம் பாத்தே பொங்கலை ஓட்டிருவாங்க..!!
கிராமங்களில்தான் பொங்கலை சிறப்பா கொண்டாடுறாங்க..!!
ஒரு ஊரே சாப்பிடற அளவுக்கு பானை வச்சு மூணு கரும்ப அத
சுத்தி வச்சு அலங்காரம் எல்லாம் பண்ணி அசத்துவாங்க..!!
அவங்க மேக்கப் பண்ணிக்கறாங்களோ இல்லையோ
மாட்டுக்கு நல்லா மேக்கப் பண்ணிருப்பாங்க..!!
பொங்கல் பொங்கும்போது குலவைசத்தம் போடுவாங்க..!!
நீங்க வேணா முயற்சி பண்ணிபாருங்க..!! நாக்கு சுளுக்கிக்கும்..!!
மக்கள் டிவிய தவிர மத்த எல்லா டிவியில இருக்கற தொகுப்பாளர்களும் தமிழை கொல்லுவாங்க... இவங்களுக்கு இந்த குலவைசத்தம் டிரைனிங் கொடுத்தா நல்லா இருக்கும்..!!
அப்புறம் இந்த ஜல்லிக்கட்டு.
வாழ்க்கையில ஒருநாளாவது இதுல கலந்து ஏதாவது ஒரு மாட்டையாவது அடக்கிடணும்ன்னு டிரை பண்றேன். முடிய மாட்டேங்குது.
டிவியில பாக்கும்போதே லேசா வயித்த கலக்கும்.
அப்புறம் ஒரு முக்கிய விஷயம் மகரசங்கராந்தியான இன்னிக்கு கொஞ்சூண்டு மொச்சைக்கொட்டை சாப்பிடலேன்னா கழுதை ஆயிடுவாங்களாம்.உடனே போய் கொஞ்சம் வாயில போட்டுக்குங்க... சந்தேகம்ன்னா, உங்க பாட்டிங்ககிட்ட கேட்டுப்பாருங்க...
சமயத்தில் உதவியதற்கு நன்றின்னு பின்னூட்டம் எல்லாம் போடவேணாம்.இது என் கடமை.ஹி.ஹி..ஹி...
பதிவுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்க்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.
பொங்கலோ பொங்கல்... உங்கள் வாழ்வில் இன்பம் தங்கலோ தங்கல்... (உபயம்: "குறட்டை" புலி)
ReplyDeleteபொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! :-)
ReplyDelete@ Philosophy Prabhakaran
ReplyDeleteவாழ்த்து சொல்றதுக்கு கூட காப்பிரைட் பிரச்சினையா..?! :-)))
@ சேட்டைக்காரன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சேட்டை அவர்களே..!!
மொச்சை கொட்டை மேட்டர் உங்க சொந்த அனுபவமே.... போங்க போய் சாப்புடுங்க
ReplyDelete@ அருண் பிரசாத்
ReplyDeleteஎன்ன அருண்.. இப்டி சொல்லிட்டிங்க... உங்க மேல சத்தியமா எங்க பாட்டிதான் சொன்னாங்க... நம்புங்க..!! :)
ஹாப்பி பர்த்டேடா........ ஐ மீன் ஹாப்பி மாட்டுப்பொங்கல்... பொங்கலுக்கெல்லாம் பதிவு போடுறான் பாருங்க.. கொஞ்சம் விட்டா சாம்பாருக்கு தனி பதிவு போடுவான் போலருக்கு...
ReplyDelete\\அவங்க கட்சிகாரங்களைத் தவிர எந்த தமிழனும் அவரு
ReplyDeleteபேச்ச கேக்க மாட்டாங்க..!!//
இப்ப அவங்களும் கேக்குரதில்லைங்க
\\அவங்க கட்சிகாரங்களைத் தவிர எந்த தமிழனும் அவரு
ReplyDeleteபேச்ச கேக்க மாட்டாங்க..!///
காளை அடக்கும் படம் அருமையான தெரிவு...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
m m ஒரு வாரமா பதிவு போடாம ஃபிகர் பின்னால சுத்திட்டு இருக்கீங்களா?
ReplyDelete