சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

31.12.10

சபதம் ஏற்போம்..!! சாதம் தவிர்ப்போம்..!!

"மாற்றம் ஒன்றே மாறாதது" (நோட் பண்ணுங்கப்பா)
புது வருஷம் வரப்போவுது..!!
என் மகள் பிறந்த வருடமா இருக்கறதால 2010 வருடம்
எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.  கூகிளாரோட புண்ணியத்துல
என்னோட பிளாக்க ஆரம்பிச்சி உங்களயெல்லாம்
இம்சை பண்றதுலயும் இந்த வருடம் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.

எனக்கு ஒரு டவுட்டுங்க..?! தமிழ்நாட்ல இருக்கற மாதிரி எல்லா நாட்லயும் ஆங்கில வருடப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்புன்னு (கூடுதலா தெலுங்கு வருடப்பிறப்பு வேற ) தனித்தனியா இருக்குமா..?!





ஒவ்வொரு வருஷ ஆரம்பத்திலயும் இந்த வருஷமாவது
ஒரு சில விஷயத்த தவறாம செய்யணும்ன்னு தீர்மானம் போடுவேன்.
ஆனா பாருங்க, முத நாளே அத செய்ய முடியாது.


1.காலையில் 5 மணிக்கு எழுந்து சூரியோதயத்தை பார்க்க வேண்டும்.
இந்த டிவி காரனுங்களாலதான் என்னோட தீர்மானம் எல்லாம் சொதப்பிடுது.புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு போடற நிகழ்ச்சிகள்
எல்லாம் பாத்துட்டு படுத்தா சூரியன்தான் என்னை வந்து பாக்கணும்.
கெரகம் காலையில 8 மணி ஆயிருக்கும்.இந்த செல்போன் அலாரத்துக்கு மட்டும் வாய் இருந்திச்சின்னா நாம வெட்கப்படற அளவுக்கு திட்டும்.ரொம்ப பொறுப்பா அலாரம் வச்சிட்டு காலையில் அது அடிக்கும்போது ஆப் பண்ணிட்டு கீழே போட்டு அதுக்கு மேலேயே படுத்தா அதுக்கு கோபம் வராது..?!







2.ஒரு மணிநேரம் வாக்கிங் போக வேண்டும்.
"10 கிலோ லட்சியம் 2 கிலோ நிச்சயம்" 
ஏதோ அண்ணாவோட அறிக்கைன்னு நினைக்காதீங்க..!!
இப்படிதான் வருஷாவருஷம் புது வருஷத்துல உடம்ப 
குறைக்கிறேன்னுட்டு சபதம் எடுப்பேன்..!!
சிங்கிள்பேக்கா இருக்கற வயித்த சிக்ஸ்பேக்கா 
மாத்தலாம்ன்னு பத்து வருஷமா தீர்மானம் போடறேன்..!!
வீட்ல வடிச்சி கொட்ற சாதத்துல என் சபதம் சப்தம் இல்லாம போயிரும்.
அரசியல்வாதிங்க வாக்குறுதி மாதிரி
இது வரைக்கும் நிறைவேறினதே இல்ல..!!

3.கோபம் கொள்ளக்கூடாது.
முத நாளே போட்ட தீர்மானத்தில இருந்து காலையில எந்திரிக்கறதும்,
வாக்கிங் போறதும் நிறைவேத்த முடியலயேன்னு கோபம்கோபமா வரும்..!!
டென்சன் ஆகி சொறிநாய் கடிச்ச வெறிநாய் மாதிரி ஆகி பாக்கறவங்கள எல்லாம் கடிச்சி வைக்க வேண்டியதுதான்..!!

4.திட்டமிட்ட நேரத்தில் செய்ய வேண்டும்.
திட்டு வாங்கியே பழக்கப்பட்ட எனக்கு
எங்க போய் திட்டமிட்ட நேரத்தில் செய்றது..?!
எல்லாம் லேட்தான்..!! இனிமே பிளான் பண்ணி பண்ணனும்..!!




எனக்கு இந்த தண்ணி அடிக்கறது,தம் அடிக்கறது-ன்ற மாதிரி உலகின் பேரின்பங்கள் மேல பற்று இல்லாததால அதைப்பத்தி எழுதல..!!
நிறைய பேரு புது வருஷத்துல இருந்து தண்ணி அடிக்ககூடாதுன்னு முடிவெடுத்து முத நாளே ஒரு வாரத்துக்கு சேத்து அடிச்சி
ரெண்டு நாளைக்கி மட்டையாயிருவாங்க..!!

நீங்களும் இதுமாதிரி ஏதாவது தீர்மானம் போட்டு இருப்பீங்க..!!
அதை பின்னூட்டத்தில எழுதினிங்கன்னா அதையும்
என் லிஸ்ட்ல சேத்துக்குவேன்..!!  ஹி.ஹி..ஹி...
கோபத்துல இவன் பிளாக்குக்கு இனிமே வரக்கூடாதுன்னு
தீர்மானம் போட்றாதீங்க..!!

பதிவுலக நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் 
உளம்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
என்றும் அன்புடன்....

Post Comment

20.12.10

பக்தி சிகாமணி..!!

ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு..!!
நீங்கல்லாம் வருத்தத்துல இருக்கறது தெரியுது..!!
(நாங்க எப்ப சொன்னோம்ன்னு கேட்டு என்ன அழ வைக்க கூடாது)

ஒரு நல்ல விஷயத்தோடஆரம்பிக்கலாம்..!!
எப்பயும் நம்ம பலபேருக்கு உத்வேகத்தை கொடுக்கறவங்களா இருக்கணும்.
எப்படி..?  பதிவுலகத்தில இணையணும்ன்னு ஆசைப்படறவங்க
நம்ம "அமீரகச் சிங்கம்"தேவா அவர்களோட பதிவுகளை
படிச்சாங்கன்னா இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு
படிக்கறதோட நிறுத்திக்குவாங்க..!!
ஆனா,இந்த சேலம் "சிங்கம்" (!?)உயர்திரு.தேவா அவர்களோட பதிவுகள படிச்சாங்கன்னா உடனே ஒரு பிளாக் ஆரம்பிச்சிருவாங்க..!!
எப்படி..?! இவனெல்லாம் எழுதறப்போ நாம இன்னும்
நல்லாவே எழுதலாம்ன்னு நினைப்பாங்க..!!
இப்படிதான் உத்வேகம் தரணும்.ஹி.ஹி..ஹி...

நகரம் எல்லாம் நரகம் ஆயிட்டு வருது..!!
(சத்தியமா சுந்தர்.சி படத்த சொல்லலீங்க)
கார்த்திகை மார்கழி மாசம் வந்தாலே நம்மாளுங்களுக்கு
பக்தி கரை புரண்டு ஓடும்..!!

திருப்பாவையும்,திருவெம்பாவையும்இயற்றியஆழ்வார்களும்,
நாயன்மார்களும் பயப்படற அளவுக்கு நம்மாளுங்க 
எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு எல்லாம் போடுவாங்க..!!

சாமிய காலங்காத்தால எழுப்புகிறேன் பேர்வழின்னுட்டு 
இந்த பாட்டு எல்லாம் போடறாங்களாம்.
சாமி எந்திரிக்கறாரோ இல்லையோ நம்மள எழுப்பிருவானுங்க..!!
கோயில்ல அவனும் தூங்காம, நல்லா தூக்கம் வர்றவனையும்
தூங்க விடாம , காலையில 4 மணிக்கே அந்த கிழிஞ்சு போன ஸ்பீக்கர்ல அரதப்பழசான பக்தி பாடல்களை போடுவானுங்க பாருங்க..!!
பக்தி வரும்ன்னு நினைக்கறீங்க..!! கோபம் கோபமா வரும்..!!

வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாள் கோவில் போனீங்களா..?!
வருஷாவருஷம் பக்தி அதிகமாயிட்டே வருது..!!
பெருமாளுக்கும்(?!)  வருமானம் அதிகமாயிட்டே இருக்கு..!!
சொர்க்கவாசல் திறந்தா ஏன் இந்த அரசியல்வியாதிங்க
முதல்ல போறாங்க தெரியுமா..?!
அவங்கல்லாம் இப்டிதான் சொர்க்கத்துக்கு போகமுடியும்..!!
உண்மையில நரகத்துக்குதான் போவாங்க..!!

பல வருஷமா சபரிமலைக்கு போயிட்டு இருந்த நம்பியார் சாமி கூட
அவர குருசாமின்னு சொல்லிகிட்டதில்ல..!!
 ஆனா இங்க லோக்கல் சாமிங்க இருக்கும் பாருங்க நேத்து வரைக்கும் டாஸ்மாக்கே கதின்னு கிடந்தவங்க மாலை போட்டுகிட்டு ஊர் பூரா
நோட்டீஸ்ல குருசாமின்னு அவங்களே போட்டுக்குவாங்க..!!
அய்யப்ப சாமிக்கே ரூல்ஸ் சொல்லித் தருவாங்க இவங்க..!!

கடவுள் முன்னால எல்லாரும் சமம்ன்னு சொல்லுவாங்க..!!
ஆனா பாருங்க..!!
இந்த மனுச பயபுள்ளைங்க சிறப்பு தரிசனம்ன்ற பேர்ல
300 கொடுத்தா முன்னால பாக்கலாம்.
100 கொடுத்தா பின்னால பாக்கலாம்ன்னு
சாமிய வச்சு பிஸினஸ் பண்ணுதுங்க..!!
பக்தி எப்ப வியாபாரமாச்சோ அப்பவே நான் கோவிலுக்கு போறத விட்டுட்டேன்ன்னு நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில சொல்லியிருப்பாரு.அவரோட கருத்தைதான் நான் வழிமொழிகிறேன்.

"கணவனே கண்கண்ட தெய்வம்"
"மணாளனே மங்கையின் பாக்கியம்"
"கல்லானாலும் கணவன்
புல் அடிச்சாலும் (ச்சீ..நாக்கு குளறிடிச்சி) புல்லானாலும் புருஷன்"
 பழமொழி எல்லாம் கேக்கறப்ப ஓரே சிரிப்புசிரிப்பா வரும் எனக்கு..!!
இவ்ளோ சொல்றாங்களே என்னையே தினமும் கும்புட்டுக்கம்மான்னு சொன்னா கேக்க மாட்டாங்க எங்க வீட்டு தங்கமணி..!!
கோயிலுக்குதான் போவேன்னு அடம் பிடிப்பாங்க..!!
இதுக்கப்புறம் பூஜை நடக்கும் பாருங்க..!! சாமிக்கு இல்லீங்க எனக்கு..!!

நான் மனசையே கோவிலா வச்சுருக்கறதால(?!) கோவிலுக்கு போறதே பொங்கலுக்கும் புளியோதரைக்கும்தான். அதுலயும் இந்த ஆஞ்சனேயர் கோவில் வடை அவ்ளோ திவ்யமா இருக்கும்.எங்கயும் இந்த டேஸ்ட் வரமாட்டேங்குது .ஹி.ஹி..ஹி...

கோவிலுக்கு போனா அமைதி தானா வரணும்.
ஆனா,இப்பல்லாம் அங்க நடக்கறத பாத்தா கோபம்தான் வருது..!!
போன வாரம் வேண்டுதலுக்காக ஒரு கோவிலுக்கு போயிருந்தோம். உண்மையிலேயே மனசு ரொம்ப அமைதியா இருந்துச்சு.நகரத்தோட(நரகத்தோட..) பாதிப்புகள் இன்னும் அங்க வரல ஒரு அழகிய கிராமம். ஒரு அழகிய கோவில்.படங்கள் கீழே...










கரூர்ல இருந்து ஒரு 15 KM தள்ளி வெஞ்சமாங்கூடலூர்
(வெண்சாமரக்கூடலூர்)என்கிற ஊர்ல இருக்கு இந்த கோவில்.





Post Comment

25.11.10

மாதா. .பிதா... கூகிள்....!!

இன்னும் கொஞ்சகாலத்தில இப்டிதான் சொல்லுவாங்க போல இருக்கு..!!




இணையத்தை தொடக்க காலத்தில் உபயோகிக்கும் போது எதப் பத்தி கேட்டாலும் இந்த கூகிளார் சொல்றாரேன்னுட்டு
ஒரே ஆச்சரியமா இருக்கும்..!!

என்னோட ஸ்கூல் வாத்தியாருங்க எல்லாம் நினைவுக்கு வர்றாங்க..!!




எங்க ஸ்கூல்ல பாடம் நடத்திட்டுருக்கற ஒரு சில 
வாத்தியாருங்ககிட்ட சார்..! ஒரு சந்தேகம்ன்னு எந்திரிச்சாலே கன்னாபின்னான்னு திட்டுவாங்க..!!
சாக்பீஸ கொண்டு அடிப்பாங்க..!!
டஸ்டரை நம்ம மூஞ்சில எறிவாங்க..!!
ஏண்ணா..?? அவருக்கே தெரியாது..?!



ஒரு சப்ஜெக்ட் நடத்திட்டு இருக்கற வாத்தியாருகிட்ட
வேற சப்ஜெக்ட் பத்தி கேட்டு பாருங்க..!!
உங்கள தீவிரவாதி மாதிரியே பாப்பாங்க..!!
நமக்கு மட்டும் ஆறு சப்ஜெக்ட் கொடுத்து கொல்றாங்களே..!?
இவரு ஒரு சப்ஜெக்ட் மட்டும் படிச்சி எப்டி வாத்தியாரு
ஆகியிருப்பாருன்னு ரொம்ப புத்திசாலித்தனமா யோசிப்பேன்..!!

பாடம் ரொம்ப போரடிச்சதுன்னா எந்திரிச்சி
எசகுபிசகா சந்தேகம் கேட்டா வாத்தியாரே
நம்மள வெளிய அனுப்பிருவாரு..!!



நவீனயுகத்துல எட்டப்பன்கள் யாருங்கன்னா கிளாஸ் லீடருங்கதான்..!!
தூங்கறதுக்குண்னே ஸ்கூலுக்கு வர்ற ஆசிரியர்கள் கூட இருக்காங்க..!!




அவங்க தூங்கிட்டு இருக்கும்போது அவனவன் என்ன பண்ணான்னு
போட்டுக் கொடுக்கறதுக்குண்ணே ஒரு கிளாஸ் லீடருன்னு ஒருத்தன் இருப்பான். நான் முதல்ல இவனதான் தாஜா பண்ணி வச்சுக்குவேன்.
ஹி.ஹி..ஹி...டீ,காப்பி,போண்டா,வடை வாங்கி தர்றதுக்குண்ணே
சில பேர் இருப்பானுவ அவனுங்கதான் லீடர் வராதப்ப உதவி லீடருங்க..!!

வீட்டுக்காரம்மா திட்னா அந்த எரிச்சலை நம்மகிட்ட வந்து காட்றது..!! வாத்தியாரு பிள்ள மக்குன்னு சொல்ற மாதிரி அவரு புள்ளைங்க பெயிலா போனா அந்த காண்டுல நம்மள வந்து அடி பின்றது..!!
இவரு ஸ்கூல்ல ஒழுங்கா சொல்லித்தராம அவரு நடத்தற
 டீயூசனுக்கு வர சொல்றது..!! எத்த்த்தததன..!!

இதுக்கு மேலயும் இவங்க பண்ற அலப்பறை எல்லாம் அப்பப்ப
நாளிதழ்கள்ல நீங்களே பாத்திருப்பீங்க...

ஆனா நம்ப கூகிளார் எதைக் கேட்டாலும் தர்றாரு..!!
எப்படி கேட்டாலும் தர்றாரு..!! (யாருப்பா அங்க கடன் கேக்கறது..?)
அதனால நான் இனிமே மேல சொன்ன தலைப்புக்கு
மாறிடலாம்ன்னு இருக்கேன்.அப்ப நீங்க..?!

மனசாட்சியோடு பிளாக்கர் உபயோகிக்கறவங்க
எல்லாம் ஓட்டு போடுங்க சொல்லிபுட்டேன்..!!

Post Comment

14.11.10

இது என்னோட தினம்..!!



ஹி.ஹி..ஹி... குழந்தைகள் தினத்த சொன்னேங்க..!
எனக்கு ஒரு குழந்த இருந்தாலும் நானும் இன்னும்
ஒரு குழந்த மாதிரிதான்..!! நம்புங்கப்பா..!!

குழந்தைகள் உலகமே ஒரு சொர்க்கமுங்க..!!
உங்களுக்கு எவ்ளோ கவலைகள் இருந்தாலும்
அவங்கள கொஞ்ச நேரம் பாத்துட்டு இருங்க..!!
 எல்லாத்தையும் மறக்கடிச்சுடும் அவங்க குறும்புகள்..!!












குழந்தைகளாட்டத்தின் கனவையெல்லாம்
அந்தக் கோலநாட்டிடைக் காண்பீரே..!!
இழந்த நல்லின்பங்கள் மீட்குறலாம்..!!
நீர் ஏகுதிர் கற்பனை நகருக்கே..!!

எல்லாத்தையும் பாடின பாரதி குழந்தைகளை பத்தியும் பாடியிருக்காரு..!!

அப்படிப்பட்ட குழந்தைங்களையும் கடத்தி 
கொல்றானுங்கன்னா அவனுங்க மனுசனுங்களே இல்ல..!!

"பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"

குழந்தைங்கள பாதுகாக்கறத விட்டுட்டு அரசு ''குழந்தைகள் தினம்''ன்னு கொண்டாடுறதுல அர்த்தமே இல்ல..!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..!!


மனுசனுக்கு இருக்கற எந்த கெட்ட குணமும் குழந்தைகளுக்கு கிடையாது..!! நாமதான் அவங்களுக்கு கத்துத் தர்றோம்..!!

நல்லதை சொல்லி தருவோம்..!!
குழந்தைங்கள கொண்டாடுவோம்..!!



குட்டிஸ்ங்க எல்லாத்துக்கும் ஹேப்பி சில்ரன்ஸ் டே..!!
( இப்பல்லாம் தமிழ்ல வாழ்த்து சொன்னா குழந்தைங்களுக்கு 
புரியறதுல்ல..!! தமிழை கத்துக்கொடுங்கப்பா..!!)

Post Comment

2.11.10

தீபாவளி ஸ்பெஷல்..!!

தீபாவளி வரப் போவுது..!!
பலகாரம்,பட்டாசு, துணி மணியெல்லாம் வாங்கியாச்சா..?!
(Money இருந்தாதான் துணி எடுக்க முடியும்)

குழந்தைங்களா இருக்கற வரைக்கும் புடிக்கற பட்டாசு
இப்பல்லாம் புடிக்க மாட்டேங்குது..!! வயசாயிடுச்சோ..?!
ஸ்வீட் சாப்பிடவும் பயமா இருக்கு..!!
சக்கரவியாதி சளித்தொந்தரவு பயம்தான்..!!

கேப்பு டுப்பாக்கி,ஊசிவெடி, ஓலைவெடி, லட்சுமிவெடி, சரஸ்வதி வெடி,
வெங்காய வெடி,புஸ்வாணம் கம்பி மத்தாப்பு, சங்குசக்கரம்,
இந்த மாதிரி தமிழ் பேருங்க வச்சதெல்லாம் அந்தக்காலம்..!!

Bloom,Golden Dawn,Blue Wonder,Jasmine Drops,Jewel of India,Mystical Night,Canon Balls,Speed 200 ஏதோ இங்கிலீஷ் பட பேருங்க மாதிரியே இருக்குல்ல..!!
 இதெல்லாம் புதுசா வந்திருக்கற பட்டாசுங்களாம்..!!

 பட்டாசு கடைக்கு போனா டிசைன் டிசைனா பேர் எல்லாம் சொல்வாங்க..!!
நம்ம பயபுள்ளைங்கள கூப்ட்டு போனா எது இருக்கறதுலயே பெரிசா இருக்குமோ அதைதான் வேணும்ன்னு கேக்குமுங்க..!!


 விலைய கேட்டா நமக்குள்ள அணுகுண்டெல்லாம் வெடிக்கும்..!!

வெங்காயவெடின்னு ஒண்ணு இருக்குங்க..!! செம சவுண்ட்டா இருக்கும்..!! தேங்காய கீழ அடிக்கற மாதிரி அத செவுத்துல அடிக்கனும்.
அது விக்கறது சட்டப்படி குற்றம்.அதனால,ஈஸியா கிடைக்காது.
அத வாங்கறதுக்கு ஒசாமாபின்லேடன் ஏதோ அணுகுண்டு வாங்கறதுக்கு போடற மாதிரி பிளான் எல்லாம் போடுவானுங்க நம்ம ஊரு பசங்க...

நாங்க பட்டாசு வெடிக்கறத பாத்து ஊரே கதிகலங்கும்..!!


உடனே இவரு பண்ற மாதிரி பில்டப்பா நெனச்சராதீங்க..!!
சரவெடிய தோள்ல போட்டு வெடிப்பான்..!!
அணுகுண்ட கேட்ச் புடிச்சு வெடிப்பான்ன்னு
கனவு எல்லாம் காணக் கூடாது..!!

ஊசி பட்டாசு வெடிக்கறதுக்கே, இந்த சிலம்பாட்டம் ஆடுவாங்களே..!!
அந்த நீளத்துக்கு ஊதுவத்தி கேப்பேன்னா பாத்துக்கோங்களேன்..!!
இந்த புஸ்வாணம் இருக்கே நம்ம பத்தவெக்கும்போது வெடிக்காது..!!
என்னாச்சுன்னு டெஸ்ட் பண்ணப்போகும்போது
நம்ம மூஞ்சிலதான் வெடிக்கும்..!!

டிவியில இந்திய தொலைக்காட்சியில முதன்முதலா
எத்தன படங்கள் வரப்போவுதுன்னு தெரியல..!!


சரி போகட்டும் நம்ம விஷயத்துக்கு வரேன்
 (அப்ப இதுவரைக்கும் வரவே இல்லியா..??!!)
நம்ம பதிவர்கள் எல்லார் வீட்டுக்கும் வந்து
பட்டாசு தரணும்ன்னுதான் ஆசை..!!
ஆனா பாருங்க நான் கொஞ்சம் பிஸி..!!
அதனால  இந்த லிங்க கிளிக் பண்ணி உங்க
வாண்டுங்களுக்கெல்லாம் பட்டாசு கொடுத்துருங்க..!!
சின்னபுள்ளத்தனமா நீங்க வெடிக்ககூடாது சொல்லிபுட்டேன்..!!
பாத்துபுட்டு கஞ்சப்பயல்,எச்சில் கையால் காக்கை ஓட்டாதவர் அப்டின்னு மரியாதையாக பின்னூட்டம் எல்லாம் போடக்கூடாது..!! ஓகே..!!

அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

Post Comment

27.10.10

புண்ணியம் தேடி...

காசிக்கு எல்லாம் போக வேணாம்...
நம்ம கணினியிலேயே அதை தேடிக்கலாம்.

எப்படி?

மனநலம் பாதிக்கபட்டவங்களை தாயுள்ளத்துடன்
ஆதரிக்கற நம்ம மதுரை இளைஞர் "நேசம் கிருஷ்ணனுக்கு"
 உங்களால் உதவி பண்ணமுடியும்.

இவர பத்தி விகடன்ல கூட ஒரு கட்டுரை வந்திருக்கு.

அப்பப்ப இந்த வெளிநாட்டுக்காரங்க நல்லதெல்லாம் கூட பண்ணுவாங்க...
" CNN HERO OF THE YEAR "
அப்டின்னு ஒரு வாக்கெடுப்பு நடக்குது.
இதுல ஜெயிச்சா அந்த இளைஞர் இன்னும் அவங்களுக்கு உதவலாம்.

நீங்க ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவருக்கு இந்த LINK ல போய்
அவருக்கு ஒரு ஓட்டு மட்டும் போடுங்க.உங்களுக்கு புண்ணியமா போகும்.


இவரைப்பற்றி வேறுசில பதிவுகள்...
ஜாக்கிசேகர்
வந்தேமாதரம்
எஸ்கா

படிச்சிட்டு எனக்கு ஓட்டு போடாம போறமாதிரி இதுக்கும் பண்ணிடாதீங்க...

எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்.. 
ஒரு நாலஞ்சு கள்ள ஓட்டு போடுங்களேன்...
அரசியல்வியாதிகளுக்கு ஓட்டு போடறத விட இவருக்கு போடலாம்.

Post Comment

11.10.10

பாட்டுப்பாடவா...

அய்யய்யோ வேணாம்..!!
இந்த பதிலைத்தான் வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க..!

சின்ன வயசுலருந்து பாடறதுன்னா ரொம்ப ஆசை.
ஆனா,அது கேக்கறவங்களுக்கும் இருக்கணுமே...

தயவு செஞ்சு பாடாதே..!! வேணாம்..!! விட்ரு...!!
கழுதை கத்தற மாதிரியே இருக்கு..!!


தூங்கிருவோம்...குழந்தை பயந்துக்கும்...


இப்டி எல்லாம் சொல்லியே ஒரு மைக்டைசனை ச்சீ...
மைக்கேல் ஜாக்ஸன முடக்கி வச்சுட்டாங்க...


நம்மளும் ஒரு SPB, யேசுதாஸ், ஹரிஹரன் மாதிரி
ஆகலாம்ன்னு பாத்தா யாராவது ஒருத்தர் மாதிரிதான்ப்பா
ஆக முடியும்ன்னு நக்கல் வேற...
SPB மாதிரி ஆகலாம்ன்னா, அவரு மாதிரி உடம்புதான்
வளருதே தவிர குரல் வந்த மாதிரி தெரியல...

அந்த மைக் மேல அப்டி ஒரு ஆசை..!!


மைக் மோகன்,மைக் முரளி படத்த எல்லாம் இதுக்காகவே
பலமுறை பாத்து இருக்கேன்.எங்க ஊரு பண்டிகை எல்லாத்துலயும்
ஆஸ்தான அறிவிப்பாளர் நான்தான்..!!
(பெரிய SUN TV, NDTV அறிவிப்பாளர் கூட இப்டி பந்தா பண்ண மாட்டான்)



நம்ம பாடறத காசு கொடுத்து கேக்க வேணாம்..!!
காது கொடுத்து கேக்கலாம் இல்ல..!! கேக்க மாட்டாங்க..!!
பொறமை புடிச்ச பய புள்ளைங்க..!!


இப்பல்லாம் எந்த சேனல போட்டாலும் விதவிதமா
நிறையபாட்டு போட்டிங்க நடக்குது..!!
அதுல பாடறவங்களுக்கு முதல்விதிமுறையே
நல்லா பாட தெரியுதோ இல்லையோ..??!!
பாத்துட்ருக்கறவங்க எல்லாத்தையும் நல்லா
அழுவ வைக்க தெரியணும்.
நல்லா ஓஓஓஓ...ன்னு கதறி கதறி அழுவணும்.
அப்பதான் ஏதோ டிஆர்பி ரேட்டிங் ஏறுமாம்.
அதுவும் இந்த குழந்தைங்கள இவங்க பண்ற டார்ச்சர் இருக்குதே..!!
அந்த குழந்தை போட்டில இருந்து வெளிய போறதயே ஏதோ செவ்வாய்
கிரகத்துக்கு போற மாதிரி பில்டப் பண்ணுவாங்க..!!ரொம்ப கொடுமைங்க..


குழந்தைங்க பாடறதுக்கு ஏதோ அயோத்திவழக்குக்கு
தீர்ப்பு சொல்ற மாதிரி 3 நீதிபதிகள் வேற....

"குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் 
   மழலைச் சொல் கேளாதவர்"

அப்டின்னு வள்ளுவர் சொல்ற மாதிரி குழந்தைங்க எப்படி பாடினாலும் அழகுதான்... ஆனா,இந்த நீதிபதிங்க குடுப்பாங்க பாருங்க கமெண்ட்..!!
ரொம்ப கேவலமா இருக்கும்..!!


ஏழு கட்டை,எட்டு கட்டை -ன்னு சொல்றாங்களே நம்ம டிரை பண்ணி பாப்போம்ன்னு பாத்தா வீட்ல விறகு கட்டைய எடுத்து அடிக்க வர்றாங்க...


சாதகம்.. சாதகம்... அப்டின்னு சொல்றாங்களே..!!
நம்ம ஜாதகத்த பத்திதான் ஏதோ சொல்றாங்க போல இருக்கு அப்டின்னு ஜோசியக்காரங்ககிட்ட போனா அதுக்கு நீங்க இங்க வரக்கூடாதுங்க..!! கழுத்தளவு தண்ணியில நின்னு சரிகமபதநிச சொல்லணும்.
ஆனா,வந்ததுக்கு ஒண்ணு சொல்றேன்..
உங்களுக்கு தண்ணியில கண்டம் அப்டின்னு சொல்லி
நம்மள அடக்கிருவாங்க....


இப்டிதாங்க நிறைய பேரோட திறமை வீட்டுக்குள்ளேயே முடங்கி போச்சு..!!
நீங்கனாச்சும் உங்க பிள்ளைங்க திறமைய கண்டுபிடிச்சு அத பாராட்டுங்க..!!
அப்பா..!! எப்டியோ வெட்டியா பதிவு போடாம மெஸேஜ் சொல்லியாச்சு..!!


Post Comment

4.10.10

காமன்வெல்த் 2010 (இது என் நண்பரின் கற்பனை)

2003-ம் ஆண்டில் 2010-க்கான காமன்வெல்த் போட்டிகள்
நடத்த இந்தியாவும் கனடாவும் போட்டிபோட்டன.

கனடா ஒட்டு போடும் நாடுகளுக்கு தலா 36லட்சம் ரூபாய் தருவதாகசொன்னது.
ஆனால்,இந்தியாவோ,தலா 72 லட்சம் ரூபாய் கொடுத்து
போட்டி நடத்த உரிமை பெற்றது.

2007-ம் ஆண்டு போட்டிக்காக முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதிகள் எல்லாமே அட்வான்ஸ் கமிஷனாக
சேரவேண்டியவர்களுக்கு போய் சேர்ந்தது.

உருப்படியாக நடந்த முதல் காரியம் டெல்லி விமான நிலையத்தில்
மூணாவது டெர்மினல் திறக்கப்பட்டது.
உருப்படியில்லாமல் போக முதல் காரணம் சுரேஷ்கல்மாடி நியமிக்கப்பட்டது.

2010 ஜீன் வரை மைதானங்கள் தயார் நிலையில் இல்லை.
அதற்கு மைதானங்களை சரியான நேரத்தில் எங்களிடம்
ஒப்படைக்கவில்லை என்று சுரேஷ்கல்மாடி கூறினார்.
பிறகு மீடியாக்கள் தயவால் ஊழல் வெட்டவெளிச்சமானது.


நிலைமை மோசமானதால் வேறு வழியில்லாமல் 
மன்மோகன் களத்தில் இறங்கினார்.
மன்மோகனும் காமன்வெல்த் பொறுப்பாளர்களும் போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது நடந்த உரையாடல் ஒரு கற்பனை.


மன்மோகன்சிங் :   இன்னிக்கு நான் லீவ்..!! அதனால் போட்டி நடைபெறும் இடங்களை சுற்றி பார்க்கலாம்.

கில் :  ஒகே சார்!!

சுரேஷ்கல்மாடி : (கில் காதில்) அவசரப்பட்டு ஓகே சொல்லாதீங்க..!!
 PM வரும்போது கான்கீரிட் இடிஞ்சு போச்சுன்னா என்னா பண்றது??

கில் :  என்ன பண்றது நாமதான் தள்ளி நிக்கணும்.

மன்மோகன்சிங் :  நிறைய இடத்தில ஒழுவுதுன்னு சொன்னாங்களே..!!
 அதுக்கு என்ன பண்ணியிருக்கிங்க?

கல்மாடி :  தினசரி 300ரூ. வாடகைக்கு 4000  வாளி ஆர்டர் பண்ணியிருக்கோம் சார்..!! ஒழுவுற இடத்தில எல்லாம் அதை வைப்போம்.

கில் :  நல்ல ஐடியா..!!

மன்மோகன்சிங் :  மண்ணாங்கட்டி!! உடனே அந்த ஆர்டரை கேன்சல் பண்ணுங்க!! பக்கெட் விலையே 100 ரூபாதான்!! 300 ரூ வாடகையா??

கில் :  வேற என்ன சார் பண்றது ?

மன்மோகன்சிங் :  உடனே தார்ப்பாய் வாங்கி எல்லா இடத்திலயும் மேல போட்டு கவர் பண்ணுங்க..!!

கல்மாடி :  உடனே செஞ்சுர்றேன் சார்..!!

மன்மோகன்சிங் :  கருமம்! கருமம்!! உங்கள எல்லாம் வச்சி வேல வாங்கறதுக்குள்ள பேசாம வாத்தியாராவே இருந்திருக்கலாம்.
நரசிம்மராவ் சார டெய்லி நினச்சி பாக்க வேண்டியதா இருக்கு.
அவராலதானே மந்திரியாகி இவ்ளோ கஷ்டம்..!!


மன்மோகன்சிங் :  (ஷீலா தீட்சித்திடம்)    
வயசான காலத்தில ஏம்மா உங்களுக்கு இந்த வேலை..!! 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நிதி சுமார் 800 கோடி இதுல ஏம்மா போட்டீங்க?

ஷீலா தீட்சித் :  எவ்ளோ பணம் குடுத்தாலும் பத்தலன்னு சொல்றாங்க..!! அதனால சும்மா ஒரு ரொடேசன்தான் சார்!! 
இவ்ளோ பிரச்சினைக்கும் மணிசங்கர் ஐயர்தான் சார் காரணம்!!
 மனசுல வச்சிருக்கறது எல்லாம் மீடியாவுல கொட்டிட்டாரு!! 





                                                                                        
மன்மோகன்சிங் :   3 வருஷம் விளையாட்டுத்துறை அமைச்சரா இருந்து என்னதான் செஞ்சாரு??
2009 எலக்சன்ல தோத்த விரக்தியில இப்படியா பண்றது?

ஷீலாதீட்சித் :  கவலைபடாதீங்க சார்..!! அணு ஆயுத ஒப்பந்தத்தையே சமாளிச்சுட்டோம்..!!இதையும் எப்படியாவது சமாளிச்சுடலாம்..!!



ஷீலாதீட்சித் :  பண்றதெல்லாம் பண்ணிட்டு தலையில கைய வச்சிகிட்டா எப்படி?காங்கிரஸ்காரரா இருக்கறதால எதுவும் பண்ண முடியல..!!


மன்மோகன்சிங் :  (மீடியாவிடம்) எவ்வளவோ பிரச்சினைகள சகிச்சுகிட்டு இருக்கீங்க..!! உங்கள கையெடுத்து கும்படறேன் 
தயவு செய்து இதை பெரிசு பண்ணாம நாட்டோட மானத்தை காப்பாத்துங்க..!! உங்களுக்கு புண்ணியமா போகும்..!!







Post Comment

21.9.10

சேலம்ம்ம்ம்ம்டா.......

என்னடா டா போட்டு எழுதறான்னு தப்பா நெனச்சிறாதீங்க!!
பாஸ் (எ) பாஸ்கரன் படம் பாத்த எபக்ட்!!!

சேலம் தேவான்னு பேர மட்டும் வச்சிகிட்டு சேலத்துக்காக நாம
என்ன செஞ்சிருக்கோம்ன்னு நினைக்கிறப்ப மனசுக்கு ரொம்ப
கஷ்டமா இருந்திச்சுங்க!!(ஒண்ணும் செய்யாம இருந்தாவே நல்லதுதான்)

அதுவும் பாருங்க!! நாம பிரபலபதிவர் (!!??) வேற ஆயிட்டோம்...சந்தேகம்னா இண்ட்லியில போய் பாருங்க.. பிரபலமானவைல நம்ம பேரும் இருக்கும்.
(ஒரு 1000 PAGEVIEWS-க்கே இவனோட அலப்பறை தாங்க முடியல. இவனே ஒரு 500 முறை பாத்திருப்பான்)



சேலத்தில இருக்கறவங்க வெளியூர்ல இருக்கற அவங்க சொந்தக்காரங்கள பாக்கப்போனா முதல்ல அவங்க பையத்தான் பாப்பாங்க...மாம்பழம் வாங்கிட்டு வந்திருக்காங்களான்னு!! அப்டி உலகஅளவில்(!!?? )சேலம் மாம்பழம் பேமஸ்.
மாம்பழமாம் மாம்பழமாம்!! மல்கோவா மாம்பழம்!! சேலத்து மாம்பழம்!!
இந்த பாட்டு தெரியாத சின்னப்பி்ள்ளைங்களே தமிழ்நாட்டுல 
கிடையாதுன்னா பாத்துக்கோங்களேன்!!



தமிழ்நாடே தண்ணியில மூழ்கினாலும் (டாஸ்மாக் தண்ணி இல்லங்க) சேலம் மட்டும் மூழ்காது.(நல்ல எண்ணம்டா) எப்டின்னா,சேலத்த சுத்தி நிறைய மலைகள் இருக்கு. அந்த மலைகள் சேலத்துக்கு அரணா இருக்கு. சேலம்ங்கற பேயரே சைலம்(மலைகள்நிறைந்த) என்ற பெயரோட மரூஉதான்.

நானும் வேலைக்காக பல ஊருக்கு போயிருக்கேன்...
ஆனா,சேலம் மாதிரி ஒரு ஊரை பாத்ததே இல்லீங்க!!

மரியாதையான ஊருங்க இது!

எப்டின்னா,உதாரணத்துக்கு சென்னைத்தமிழை எடுத்துக்கிட்டீங்கன்னா சாதாரணமா பேசுறதே நம்மள கெட்டவார்த்தையில திட்ற மாதிரியே இருக்கும்.
முன்குறிப்பு : பின்னூட்டத்துல யாரும் சென்னைத்தமிழை
பயன்படுத்தி திட்டகூடாது.

மதுரைத்தமிழ் பயபுள்ளைங்க பாசமா பேசுற மாதிரி தெரிஞ்சாலும்
கொஞ்சம் பயமாத்தான்இருக்கும்.
முன்குறிப்பு : அழகிரி அண்ணன்ட்ட போட்டுக் குடுத்துறாதீங்க...

திருநெல்வேலி தமிழுக்கு ஒரு டிக்ஸ்னரிதான் போடணும்.
எது பேசுனாலும் ஒரு லே சேத்துக்குவாங்க.வாலே,போலே,ஷோலேன்னு

ஆனா,சேலத்தில பேசுறது நம்ம சொந்தகாரங்ககிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.யாரா இருந்தாலும் சொல்லுங்கண்ணே,சொல்லுங்கக்கான்னு மரியாதையா பேசுவாங்க பயபுள்ளைங்க...இளையதளபதி விஜய்
வாங்ண்ணா,போங்ண்ணா ன்னு பேசுறாரே அது எங்க ஊரு ஸ்டைல்தான்...

தவிச்சவாய்க்கு தண்ணி தரணும்ன்னு சொல்வாங்க...ஆனா,எங்க சேலத்து மேட்டூர் அணை பல ஊருக்கே தண்ணி கொடுத்துகிட்டுஇருக்கு.

மலைகளின் இளவரசி ''ஏற்காடு" சேலத்திலதான்இருக்கு.
நடுத்தரவர்க்கத்தினருக்கு அதிக செலவில்லாம சுத்திப்பாக்க
ஏற்காடு ஒரு நல்ல சுற்றுலாத்தலம்.

எங்க ஊரு மாடர்ன் தியேட்டர்ஸ் மட்டும் இருந்திருந்தா
சேலம் இன்னும் எங்கேயோ போயிருக்கும்.
ஏன்னா,சென்னை பிரபலமானதற்கு சினிமாவும் ஒரு முக்கியகாரணம்.
சேலத்திலதான் அப்ப நிறைய படம் எடுத்திட்டிருந்தாங்க...அந்தகால படம் அனைத்திலும் ஏற்காடோ,பனமரத்துப்பட்டி ஏரியோ வராம இருக்காது.
நம்ம முதலமைச்சரு கூட நிறைய படத்துக்கு கதைவசனம் ஏற்காட்டில உக்காந்து எழுதி ரசிகர்களை மகிழ்விச்சிருக்காரு(!!??) இன்னமும் விடாம மகிழ்விக்கிறாரு...அப்டியே தொடர்ந்திருந்தா சேலம் தமிழ்நாட்டோட தலைநகரமா கூட ஆயிருக்கலாம்...

அப்புறம் நிறையபடத்துல நீங்க பாத்திருக்கலாம்.இந்த கால் கொலுச
வச்சி நிறைய சென்டிமென்ட்டான சீன்,பாட்டு எல்லாம் வச்சிருப்பாங்க...
அந்த வெள்ளி கொலுசுக்கு பேமஸ் எங்க ஊருதாங்க...
வெளிநாட்டுக்கெல்லாம் கூட ஏற்றுமதி பண்றோம்.

சேலத்து மனுசங்க மட்டும் இரும்பு மாதிரியில்ல,
சேலம் ஸ்டீல்பிளாண்ட் இரும்பும் உறுதியானது.

அதே மாதிரி ஆடி மாசம் வந்துட்டா சேலம் ஜெகஜோதியா இருக்கும்...
ஹெட் ஆபிஸ் கோட்டை மாரியம்மன் கோவில்
மத்த கோயிலுங்க எல்லாம் பிரான்ச் ஆபிஸ் மாதிரி..
கோயிலுங்கன்னா சும்மா இல்ல...தெருவுக்கு ஒரு மாரியம்மன் கோவில்,காளியம்மன் கோவில்,விநாயகர் கோவில் மட்டும்தான் இருக்கும்.
தெருவ விட கோவிலுங்கதான் அதிகமா இருக்கும்(பக்தியான பயபுள்ளைங்க)
கோயிலுங்களுக்கு நன்கொடை தர்றதுக்கே எதாவது ஒரு லோன் போட்டு ஆவணும்.இல்லன்னா ஊரவிட்டு ஒரு மாசம் ஓடிப்போயிரணும்.
அரசுப்பொருட்காட்சி வேற போட்ருவாங்க...கூட்டம் பின்னும்..
அடாவடிபண்ற பிள்ளைங்கள பொருட்காட்சில தொலைக்கிறதுக்கே
கூட்டிட்டு வருவாங்க...

ஒருமனுசனுக்கு ரொம்ப முக்கியமானது உணவு,உடை,உறைவிடம்
இது மூணும்சேலத்துல இருக்கறமாதிரி வேற எங்கயும் இல்லீங்க!!

மத்த ஊர்ல நீங்க உணவுக்காக ஒருத்தருக்கு செலவு பண்ற காசுல
சேலத்துல ஒரு குடும்பமே சாப்பிடலாம்...அதுவும் சுவையா இருக்கும்.
மத்த ஊர்ல நான் சாப்பிடும் போது இதுக்கு பட்டினி கிடந்தே
செத்துரலாம்ன்னு தோணும்.அவ்ளோ டேஸ்ட்டா(!!??) இருக்கும்.
ஒருசில ஊர்ல குழம்புன்னு சொல்லிட்டு ஊத்துவானுங்க பாருங்க...
அது நம்ம இலையிலயே இருக்காது.
பக்கத்துல இருக்கறவரு இலைக்கு போயிடும்.
சேலத்துல நீங்க 10 ரூபா வச்சிருந்தா போதும்...
வயிறார டேஸ்ட்டா சாப்பிடலாம்ங்க!! உண்மைங்க!!

தட்டுவடை செட்டுக்கு சேலத்த விட்டா எந்தஊரும் ஈக்வல் கிடையாது!!
அதுல நம்ம ஆளுங்க காட்டுவாங்க பாருங்க வித்தைங்க...
கலர்கலரா ஒரு 25 வகை சட்னிய வச்சு கலக்குவாங்க...
50ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு போய் 10ரூபாய்க்கு
தட்டுவடைசெட் வாங்கி திங்கற தின்னுகெட்டவங்க நாங்க...

ஞாயித்துகிழமை ஆனா ஆறறிவு மனுசன தவிர மத்த எல்லா
உயிரினத்தையும் சொர்க்கத்துக்கு அனுப்புற புண்ணியபூமி இது...
அப்டியே கறிகடைகள்ல கூட்டம் அலைமோதும்..வாழ்க்கையில கறியே திங்காதவங்க மாதிரியே க்யூ வரிசையில நிப்போம்...செல்வி மெஸ்,
மங்களம் ஹோட்டல்,ராமலிங்கம் ஹோட்டல்,கேவீஸ்,ரசிகாஸ்ன்னு
ஏரியா வாரியாபேமஸ் ஆன ஹோட்டல்ங்க நிறையா இருக்கு!!

சேலத்த சுத்தி நிறைய கைத்தறிங்க,விசைத்தறிங்க ஓடுது.அதனால,இங்க எல்லா வகையான துணிங்களையும்,விலை குறைவா வாங்கலாம்.சேலம் பழையபஸ்ஸ்டாண்ட சுத்தி நிறைய துணிக்கடைங்க இருக்கு.ஒரிஜினல் பட்டுப்புடவை வாங்க வசதியில்லாதவங்களுக்கு அபூர்வா பட்டுன்னு ஒரு வகை இருக்கு.அது சேலம் மாவட்டத்துலதான் அதிகமா தயார் பண்றாங்க.

அப்புறம் சென்னை மாதிரி சாப்ட்வேர் நிறுவனங்கள் இன்னும் இங்க
வராததால வீட்டுவாடகை எல்லாம் ஒரளவு நம்ம
பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகற அளவுக்குதான் இருக்கும்.


எங்க ஊரு பெருமைய இன்னும் 50 பதிவு போடலாம்...
ஆனா,நீங்க இவன் சரியான பெருமைபீத்தகளையன்னு திட்டுவிங்க...
(வார்த்தைக்கு அர்த்தம் புரியலன்னா வம்சம் படம் பாருங்க)
அதனால இதோட நிறுத்திக்கறேன்....


மொத்தத்துல இளையராஜா பாடின மாதிரி சொர்க்கமே 
என்றாலும் அது எங்க ஊரு போல வராதுங்க!!!





Post Comment

19.9.10

எல்லாம் இந்த மார்ட்டின் கூப்பரால வந்தது....

அவருதான் செல்போனோட தந்தையாம்!!!
நிம்மதியா இருக்க முடியுதா இந்த இம்சையால
இது பண்ற இம்சை இருக்கே!!
அய்யய்யய்யய்யய்யய்யய்யோயோயோ!!!
(சொற்குறிப்பு: பாஸ்(எ)பாஸ்கரன் படத்தில சந்தானம் 
சொன்னதை நினைத்துக்கொள்ளவும்)
காலையிலயே ஆரம்பிச்சிரும் இதோட தொல்லை...
அலாரம்ன்னு ஒரு வசதி (!!??) கொடுத்திருக்காங்க!!
தூங்கும் போது இடியே விழுந்தாலும் ஏதோ ஊசிபட்டாசு
வெடிக்கற எபக்ட்ல தூங்கறவங்க நாம!!
இதுல இந்த அலாரம்ல்லாம் ஜூஜூபி!!
5 மணிக்கு அலாரம் வச்சி படுத்தா
கரெக்ட்டா 8 மணிக்கு எந்திருச்சிருவோம்...
நம்மள தவிர வீட்ல இருக்கற எல்லாரும்
இந்த சத்தத்தில எந்திருச்சிருவாங்க!!!
அப்புறம் எல்லாரும் சேந்து நாய் கையில மாட்ன தேங்கா மாதிரி
இவனும் தூங்க மாட்டான்!!மத்தவங்களையும் தூங்க விடமாட்டான்!!அப்டின்னு பாராட்டுவாங்க(??!!)

நம்ம முக்கியமா யார்கிட்டயாவது பேசும்போது மட்டும் டவர் கிடைக்காது,
பேட்டரி இருக்காது,பேலன்ஸ் இருக்காது.
(இந்த பாயிண்ட் மட்டும்தான் உண்மை)
அதே ராங்கால் வந்தா மட்டும் மிஸ் ஆகாம கரெக்ட்டா வேலை செய்யும்.
வண்டில அவசரமா போயிட்டு இருப்போம்.அப்பதான் போன் பண்ணி இன்சூரன்ஸ் கம்பெனிலருந்துபேசுறோம்,லோன் கம்பேனிலருந்து பேசுறோம்ன்னு டார்ச்சர் பண்ணுவாய்ங்க...நம்மளும் கடுப்புல வண்டிய ஓட்டிட்டு போய் அப்புறம் இன்சூரன்ஸ்ஸே எடுக்கமுடியாமபோயிரும்...
ஏன்னா,நம்ம உயிரோட இருந்தாதானே...நம்மதான் செல்போன் பேசிட்டே வண்டிய ஓட்டிட்டு போய் லாரிக்கு அடியில மோட்சம் அடைஞ்சிருப்போமே!!
நம்ம நாட்டு நிதி அமைச்சரு பாராளுமன்றத்துல பேசிட்டுஇருக்கும்போது
கூட இந்த கடன்கொடுக்கற பயலுவ விடலயே!!
அவருக்கே கடன் தரேன்னு சொல்லியிருக்கானுவ!!

நொந்துட்டாரு பாவம்!!என்னா டார்ச்சரு!!


இதெல்லாம் கூட பரவாயில்ல இந்த SMS-ன்னு ஒரு இம்சை இருக்கே!!
அய்யய்யய்யய்யய்யய்யய்யோயோயோ!!!
( மெதுவா நடக்கணும்..ரொம்ப வெயிட் தூக்க கூடாது..
ஜாக்கிரதையா இருக்கோணும்...சரியா சாப்பிடணும்...
இதை படிச்சா உங்களுக்கு என்ன தோணுது? ஏதோ கர்ப்பிணி பொண்ணுக்கு அட்வைஸ் பண்ற மாதிரியே இருக்குமே!! அதான் இல்ல!! )
ஏனென்றால், இது 9-வது மாசமாம்.டேக் கேர்.ஹேப்பி செப்டம்பர்.
அப்டின்னு SMS அனுப்பி நம்மள கொலையா கொல்லுவானுங்க ராஸ்கல்ஸ்!!


கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்ன்னு ஒண்ணு வைப்பாங்க...
இரண்டுக்கும் நடுவுல ரொம்ப கேப் விட்டிங்கன்னா அவ்ளோதான்!! ஏன்னா,மாப்பிள்ளைக்கோ,பொண்ணுக்கோ காது கேக்காம போயிடும்.
காதுல புகை வர்றவரைக்கும்,பேட்டரி பொசுங்கற வரைக்கும்
பேசுவாங்க!! பேசுவாங்க!! பேசிட்டே இருப்பாங்க!! ம்ம்ம்..அப்புறம்...வேற...சொல்லுங்க...இந்த வார்த்தைங்களைத்தான்
மூணு மணிநேரம் விடாம பேசுவாங்க...(அப்புறம்தான் போன் ஆப்பாயிடுமே)




இன்னும் இந்தமாதிரியெல்லாம் நம்ம ஊருக்கு வரலியேன்னு
கொஞ்சம் சந்தோஷமா இருக்கு!!ஆனா,கூடிய சீக்கிரம் வந்துரும். 

சரி இருங்க!! ரொம்பநேரமா போனேவரல!!பாத்துட்டு வரேன்!!

Post Comment

17.9.10

ஏடாகூடம் பார்ட்- 2

பெண்புத்தி பின் புத்தி.
வீட்ல சொல்லிபாருங்க...தெரியும்!!

பிச்சை எடுத்தானாம் பெருமாளு...
அதை புடுங்கி தின்னானாம் அனுமாரு...
ஏங்க பெருமாளுக்கும் அனுமாருக்கும் சண்டை மூட்டி வுடறீங்க?

கழுத கெட்டா குட்டி சுவரு
நல்ல சுவத்து பக்கம் நிக்காதா?

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்
எலக்ட்ரிக் குக்கர்ல கைய வச்சா கை பதமாயிடும்.

கந்தையானாலும் கசக்கி கட்டு
ஏற்கனவே கந்தல் இன்னும் கசக்குனா கிழிஞ்சிடாது!!

கோழி குருடானாலும் குழம்பு ருசியாயிருக்கும்.
எவனோ தின்னு கெட்டவன் சொல்லியிருப்பான் போல!!

பந்திக்கு முந்து படைக்கு பிந்து.
பந்தியில தொந்திய ரொப்பிட்டு அப்புறம் சண்டைக்கு 
போக சொல்லியிருக்காங்க போல

சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது.
சின்னபிள்ளைங்களுக்கு வேலை வச்சா உள்ள தூக்கி போட்ருவாங்க!!

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் உக்காந்து கொல்லாதா?

கூற மேல ஏறி கோழி புடிக்காதவன்
வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
ஹைவேஸ்ல வேகமா லாரி வரும்போது குறுக்க போனா 
ஆட்டோமேடிக்கா வைகுண்டம் போயிட்டு போறான்!!


இன்னும் தொடரும்...



Post Comment

16.9.10

ஏடாகூடம்

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்.ஆராயக்கூடாதுன்னு சொல்வாங்க!!
ஆனா,நாம அப்டி எல்லாம் இருக்க முடியுமா?
என்னைக்கி பெரியவங்க சொல்றத கேட்ருக்கோம்??
ஏன்? எதற்கு?? எப்படி???   இப்டியெல்லாம் கேக்கணும்ன்னு
திருவள்ளுவர் சொல்லியிருக்காரு!!!
( அவரு எப்ப சொன்னாருன்னு உடனே என்கிட்டயே ஆரம்பிச்சிட கூடாது )


ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
(அப்ப பொறுமையா இருக்கறவங்க எல்லாம் அறிவாளிங்களா?)

ஆழம் தெரியாம காலை விடாதே.
(ஆழம்ன்னு தெரிஞ்சா அந்தப்பக்கமே போக மாட்டோம்)

யானை வரும் பின்னே!

மணியோசை வரும் முன்னே!!
( யானைக்கு மணியே கட்டலன்னா என்ன வரும்?? )

புலி பசித்தாலும் புல்லை திங்காது.
( நீங்க எப்ப புலி கூடசேந்து சாப்டிங்க? )

கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.
(கற்பூரவாசனை கழுதைக்கு ஏன் தெரியணும்??
பேப்பர் வாசனை தெரிஞ்சா போதுமே!!)

ஆத்தில கொட்டினாலும் அளந்து கொட்டணும்.
( கொட்றதுன்னு முடிவாயிடுச்சு.அதை எதுக்கு அளக்கனும்? )

சுத்தம் சோறு போடும்.
( பிரைடு ரைஸ் போடுமா? லெமன் ரைஸ் போடுமா? )

சுவர் இருந்தால்தான் சித்திரம்.
( அப்ப வரையறதுக்கு பிரஸ் வேணாமா? )

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
( அப்ப எதுக்கு டாக்டருங்க? )


கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?
( கோழி எதுக்கு அதோட குஞ்ச மிதிக்கணும்? )

தாயை பழிச்சாலும் தண்ணிய பழிக்க கூடாது.
( அப்ப Aquaguard,Pureit எல்லாம் எதுக்கு விக்கறாங்க?
அப்டியே குடிக்க வேண்டியதுதானே? )


இப்டி நிறைய பழமொழி சொல்வாங்க...இன்னும் தொடரும்...
உங்களுக்கு தெரிஞ்ச பழமொழியையும் எழுதுங்க!!







Post Comment

3.9.10

சும்மா விளையாடாதீங்க ....

பாதுகாப்பா விளையாடுங்க ....
டிஸ்கி : ரோஸ் கலர்ல இருக்கறது நீங்க நினைப்பீங்கன்னு நான்நினைச்சது...


விளையாட்டுக்கும் நமக்கும் கொஞ்சம் தூரமுங்க...( ஒரு 500 மீட்டர் இருக்குமா?)

விளையாட்ல விளையாட்டு இருக்கலாம்....ஆனா,வாழ்க்கையில விளையாட்டு இருக்ககூடாதுங்க...( உளற ஆரம்பிச்சிட்டானே!!
மறுபடியும் காய்ச்சல் வந்துருச்சோ? )

அப்படியே விளையாண்டாலும் ரொம்ப கஷ்டப்பட்டு விளையாடற கேரம்போர்டு,செஸ்,சீட்டுக்கட்டு,கண்ணாமூச்சி,வீடியோகேம்ஸ் இந்த மாதிரிதான் விளையாடுவேன்.(சோம்பேறி பய புள்ள... கஷ்டப்படுதாம்...)

ஒவ்வொரு ஸ்கூல்ல விளையாட்டு மைதானமே இருக்காது...
ஆனா,எங்க ஸ்கூல் பக்கத்துல ஸ்டேடியமே இருந்தது.

ஸ்கூல்ல படிக்கும் போது (!!??) எனக்கு ரொம்ப பிடிச்ச பீரியட்
விளையாட்டு பீரியட்தான்....
அதுவும் சாயங்காலமா கடைசி பீரியட்ல வைப்பாங்க...
ஸ்டேடியத்துக்கு கூட்டிட்டு போகும்போதே பாதி பசங்க
வீட்டுக்கு ஒடிப்போயிடுவானுங்க..( அதுல நீயும் ஒருத்தன்தானே... )

மீதிப்பேர் இருக்கானுங்களே...அவனுங்க ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல
கலெக்டர் ஆகியே தீரணும்ன்னு வெறித்தனமா விளையாடுவானுங்க...


நான் ஸ்டேடியத்துல நல்ல குத்தாத புல் வளந்துருக்கற இடமா பாத்து
PT மாஸ்டர்ட்ட யோகாசனம் பண்றேன் சார் அப்டின்னு சொல்லிட்டு
நல்லா தூங்குவேன்...ஹி.ஹி..ஹி...

(எதாவது ஸ்டேடியத்துல போய் கொஞ்சநேரம் வேடிக்கை
பாத்தீங்கன்னா ரொம்ப காமெடியா இருக்கும்.
நல்லா ஆறு நாளும வீட்ல புல் கட்டு கட்டிட்டு தொந்திய
கரைக்கறேன்னுட்டு நடக்கவே முடியாம வாக்கிங் போறவங்க..
பார்க்குக்கு போனா துரத்தி வுடறாங்கன்னு 
ஸ்டேடியத்துல கடலை சாகுபடி பண்றவங்க...
ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு வந்து ஸ்டேடியத்துல தூங்கறவங்க..
அப்டின்னு ஸ்டேடியத்துல விளையாட்ட தவிர எல்லாம் செய்வாங்க... 
sunday தவிர) 


அப்பயும் இந்த விதி நம்மள தூங்கவுடாது. எனக்கு விளையாட்டு
வராதுன்னு சொன்னாலும் நீதான் அம்பயர்ன்னு சொல்லி பந்து பொறுக்கி போடவுட்றுவானுங்க...அம்பயர் பந்து பொறுக்க தேவையில்லன்னு கூட எனக்கு தெரியாதுன்னா பாத்துக்குங்களேன்...அவ்ளோ வெகுளி பயபுள்ள..
(வெளயாட தெரியாதத கூட எப்புடி சமாளிக்குது பாரு....)

நான் வேற கேட்ச் பிடிக்கறதல ஜான்டிரோட்ஸ்,கைப் மாதிரி...
(ம்கூம்...அதனாலதான் அவங்க  கிரிக்கெட்ட விட்ட போய்ட்டாங்க )
பந்தே போகாத பக்கமா பாத்து நம்மள நிறுத்துவானுங்க...
அப்பயும் பாத்தா அந்த கருமம் புடிச்ச பந்து நம்ம பக்கமேதான் வரும்.
எப்பயும் போல கரெக்ட்டா கேட்ச்ச மிஸ் பண்ணிருவேன்.

ஸ்டேடியத்துக்கு வெளிய சேமியா ஜீஸ், இந்த ஐஸ் கட்டிய உரசி பந்து
மாதிரி புடிச்சி அதுல கலர் கலரா தண்ணிய ஊத்தி குச்சி ஐஸ் அப்டின்னு
விப்பாங்க...அதுக்காகதான் நான் ஸ்டேடியமே போவேன்.
( இப்பதான் உண்மைய சொல்லியிருக்கான் )

அப்டி ஒருநாள் அந்த ஜீஸ் கடைய பராக்கு பாத்துட்டே
நான் பீல்டிங் பண்ணிட்டு இருந்தேன்.
அப்ப எவனோ ஒருத்தன் சிக்ஸர் அடிக்க ட்ரை பண்ணிருக்கான்.
அந்த பால் என் கிட்னில பட்டு கிட்னி சட்னி ஆயிருச்சி.
ஒரு நிமிஷம் எங்க செத்துப்போனமுன்னோர்கள் எல்லாம்
வரிசையா என் கண்ணுக்கு தெரியறாங்க...
சிக்ஸர் அடிக்க ட்ரை பண்ணவன் கொலை கேசுல மாட்டிரக்கூடாதேன்னு
எனக்கு சேமியா ஜீஸ் வாங்கி என் மூஞ்சில  தெளிச்சு கொஞ்சம் வாயில ஊத்தி  மேல்லோகத்துக்கு  போக போனவன பூலோகத்துக்கு  கூட்டிட்டு வந்தான்.
(தப்பு பண்ணிட்டானே)

டாக்டர்கிட்ட போனா இந்த சினிமாவில வரமாதிரி மூளை புற்றுநோய்,இரத்த புற்றுநோய், வந்தவங்ககிட்ட சொல்வாரே அதே மாதிரி இனிமே நீ ஸ்டேடியம் பக்கம் போனா முடிவு என் கையில இல்லைன்னு சொல்லிட்டாரு...

அப்பதான் முடிவு பண்ணேன்!!!
டிவில விளையாட்ட பாத்தா கூட சேப்டிகார்ட் இல்லாம பாக்க கூடாதுன்னு ...
விளையாட்ல விளையாட்டு இருக்கலாம்.
ஆனா,வாழ்க்கையில விளையாட்டு இருக்க கூடாதுன்னு...

இப்ப விளையாடிட்டு இருக்கறவங்கள பாருங்க..
நான் சொல்றது எவ்ளோ உண்மைன்னு...





என்னோட பேட்டிங் ஸ்டைல் இப்படிதான் இருக்கும்!!??
                                    
                                       ஆதாரத்துக்கே சேதாரம் வந்துரப்போவுது....



பாருங்க..விதிய ஹெல்மேட் போட்டா கூட பால் ரூபத்துல வருது....
எப்படியும் ரெண்டு பல் போயிருக்கும்.

                    
                    ஜெயிக்கற வெறி இருக்கணும்ன்றத தப்பா புரிஞ்சிக்கிட்டாரு...
                                                பால எப்டி கடிக்கிறார் பாருங்க ...


                                            
                        இதுவும் தெரிஞ்சே போய் குழியில வுழுவற மாதிரிதான்...


                                          
                                 வேடிக்கை பாக்க வந்தது ஒரு தப்பாடா???




நல்ல பைக்கா பாத்து எடுத்துட்டு போயிருக்கணும.காயலான் கடையில போட வேண்டியத எடுத்துட்டு போய் உனக்கு ரேஸ் தேவையா???

                                      
                                 இவரு லைப் புல்லா கோமா ஸ்டேஜ்தான்....


                         
                          நம்மள மாதிரி ஒரு சோம்பேறி பயபுள்ள போலஇருக்கு...
                                எது கூட போய் சண்டைக்கு போவுது பாருங்க....



     வாழ்க்கையில கேமராவையே பாத்ததில்ல போலஇருக்கு....



                             எத்தன நாளைக்குதான் குதிர பொறுத்துக்கும்...
                                             அது மேல உக்காந்து இருக்கு .



டேபிள் டென்னிஸ்ன்றத தப்பா புரிஞ்சிட்டு குசும்பு புடிச்ச பயபுள்ளைக
மேல ஏறி உட்காந்து விளையாடுதுங்க....


இப்படி நீங்க சைக்கிள் ஓட்டியே ஆவணுமா??

                             இனிமே விளையாட்ட இது மாதிரி பாதுகாப்பா 
                                      உக்காந்து பாருங்க....ஹி... ஹி... ஹி... 


விளையாட்ட சீரியஸா எடுத்துக்காம ஓட்ட போட்டுட்டு போங்க ... 
(இதுல மட்டும் கரெக்டா இரு.... )

Post Comment