சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

21.9.10

சேலம்ம்ம்ம்ம்டா.......

என்னடா டா போட்டு எழுதறான்னு தப்பா நெனச்சிறாதீங்க!!
பாஸ் (எ) பாஸ்கரன் படம் பாத்த எபக்ட்!!!

சேலம் தேவான்னு பேர மட்டும் வச்சிகிட்டு சேலத்துக்காக நாம
என்ன செஞ்சிருக்கோம்ன்னு நினைக்கிறப்ப மனசுக்கு ரொம்ப
கஷ்டமா இருந்திச்சுங்க!!(ஒண்ணும் செய்யாம இருந்தாவே நல்லதுதான்)

அதுவும் பாருங்க!! நாம பிரபலபதிவர் (!!??) வேற ஆயிட்டோம்...சந்தேகம்னா இண்ட்லியில போய் பாருங்க.. பிரபலமானவைல நம்ம பேரும் இருக்கும்.
(ஒரு 1000 PAGEVIEWS-க்கே இவனோட அலப்பறை தாங்க முடியல. இவனே ஒரு 500 முறை பாத்திருப்பான்)சேலத்தில இருக்கறவங்க வெளியூர்ல இருக்கற அவங்க சொந்தக்காரங்கள பாக்கப்போனா முதல்ல அவங்க பையத்தான் பாப்பாங்க...மாம்பழம் வாங்கிட்டு வந்திருக்காங்களான்னு!! அப்டி உலகஅளவில்(!!?? )சேலம் மாம்பழம் பேமஸ்.
மாம்பழமாம் மாம்பழமாம்!! மல்கோவா மாம்பழம்!! சேலத்து மாம்பழம்!!
இந்த பாட்டு தெரியாத சின்னப்பி்ள்ளைங்களே தமிழ்நாட்டுல 
கிடையாதுன்னா பாத்துக்கோங்களேன்!!தமிழ்நாடே தண்ணியில மூழ்கினாலும் (டாஸ்மாக் தண்ணி இல்லங்க) சேலம் மட்டும் மூழ்காது.(நல்ல எண்ணம்டா) எப்டின்னா,சேலத்த சுத்தி நிறைய மலைகள் இருக்கு. அந்த மலைகள் சேலத்துக்கு அரணா இருக்கு. சேலம்ங்கற பேயரே சைலம்(மலைகள்நிறைந்த) என்ற பெயரோட மரூஉதான்.

நானும் வேலைக்காக பல ஊருக்கு போயிருக்கேன்...
ஆனா,சேலம் மாதிரி ஒரு ஊரை பாத்ததே இல்லீங்க!!

மரியாதையான ஊருங்க இது!

எப்டின்னா,உதாரணத்துக்கு சென்னைத்தமிழை எடுத்துக்கிட்டீங்கன்னா சாதாரணமா பேசுறதே நம்மள கெட்டவார்த்தையில திட்ற மாதிரியே இருக்கும்.
முன்குறிப்பு : பின்னூட்டத்துல யாரும் சென்னைத்தமிழை
பயன்படுத்தி திட்டகூடாது.

மதுரைத்தமிழ் பயபுள்ளைங்க பாசமா பேசுற மாதிரி தெரிஞ்சாலும்
கொஞ்சம் பயமாத்தான்இருக்கும்.
முன்குறிப்பு : அழகிரி அண்ணன்ட்ட போட்டுக் குடுத்துறாதீங்க...

திருநெல்வேலி தமிழுக்கு ஒரு டிக்ஸ்னரிதான் போடணும்.
எது பேசுனாலும் ஒரு லே சேத்துக்குவாங்க.வாலே,போலே,ஷோலேன்னு

ஆனா,சேலத்தில பேசுறது நம்ம சொந்தகாரங்ககிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.யாரா இருந்தாலும் சொல்லுங்கண்ணே,சொல்லுங்கக்கான்னு மரியாதையா பேசுவாங்க பயபுள்ளைங்க...இளையதளபதி விஜய்
வாங்ண்ணா,போங்ண்ணா ன்னு பேசுறாரே அது எங்க ஊரு ஸ்டைல்தான்...

தவிச்சவாய்க்கு தண்ணி தரணும்ன்னு சொல்வாங்க...ஆனா,எங்க சேலத்து மேட்டூர் அணை பல ஊருக்கே தண்ணி கொடுத்துகிட்டுஇருக்கு.

மலைகளின் இளவரசி ''ஏற்காடு" சேலத்திலதான்இருக்கு.
நடுத்தரவர்க்கத்தினருக்கு அதிக செலவில்லாம சுத்திப்பாக்க
ஏற்காடு ஒரு நல்ல சுற்றுலாத்தலம்.

எங்க ஊரு மாடர்ன் தியேட்டர்ஸ் மட்டும் இருந்திருந்தா
சேலம் இன்னும் எங்கேயோ போயிருக்கும்.
ஏன்னா,சென்னை பிரபலமானதற்கு சினிமாவும் ஒரு முக்கியகாரணம்.
சேலத்திலதான் அப்ப நிறைய படம் எடுத்திட்டிருந்தாங்க...அந்தகால படம் அனைத்திலும் ஏற்காடோ,பனமரத்துப்பட்டி ஏரியோ வராம இருக்காது.
நம்ம முதலமைச்சரு கூட நிறைய படத்துக்கு கதைவசனம் ஏற்காட்டில உக்காந்து எழுதி ரசிகர்களை மகிழ்விச்சிருக்காரு(!!??) இன்னமும் விடாம மகிழ்விக்கிறாரு...அப்டியே தொடர்ந்திருந்தா சேலம் தமிழ்நாட்டோட தலைநகரமா கூட ஆயிருக்கலாம்...

அப்புறம் நிறையபடத்துல நீங்க பாத்திருக்கலாம்.இந்த கால் கொலுச
வச்சி நிறைய சென்டிமென்ட்டான சீன்,பாட்டு எல்லாம் வச்சிருப்பாங்க...
அந்த வெள்ளி கொலுசுக்கு பேமஸ் எங்க ஊருதாங்க...
வெளிநாட்டுக்கெல்லாம் கூட ஏற்றுமதி பண்றோம்.

சேலத்து மனுசங்க மட்டும் இரும்பு மாதிரியில்ல,
சேலம் ஸ்டீல்பிளாண்ட் இரும்பும் உறுதியானது.

அதே மாதிரி ஆடி மாசம் வந்துட்டா சேலம் ஜெகஜோதியா இருக்கும்...
ஹெட் ஆபிஸ் கோட்டை மாரியம்மன் கோவில்
மத்த கோயிலுங்க எல்லாம் பிரான்ச் ஆபிஸ் மாதிரி..
கோயிலுங்கன்னா சும்மா இல்ல...தெருவுக்கு ஒரு மாரியம்மன் கோவில்,காளியம்மன் கோவில்,விநாயகர் கோவில் மட்டும்தான் இருக்கும்.
தெருவ விட கோவிலுங்கதான் அதிகமா இருக்கும்(பக்தியான பயபுள்ளைங்க)
கோயிலுங்களுக்கு நன்கொடை தர்றதுக்கே எதாவது ஒரு லோன் போட்டு ஆவணும்.இல்லன்னா ஊரவிட்டு ஒரு மாசம் ஓடிப்போயிரணும்.
அரசுப்பொருட்காட்சி வேற போட்ருவாங்க...கூட்டம் பின்னும்..
அடாவடிபண்ற பிள்ளைங்கள பொருட்காட்சில தொலைக்கிறதுக்கே
கூட்டிட்டு வருவாங்க...

ஒருமனுசனுக்கு ரொம்ப முக்கியமானது உணவு,உடை,உறைவிடம்
இது மூணும்சேலத்துல இருக்கறமாதிரி வேற எங்கயும் இல்லீங்க!!

மத்த ஊர்ல நீங்க உணவுக்காக ஒருத்தருக்கு செலவு பண்ற காசுல
சேலத்துல ஒரு குடும்பமே சாப்பிடலாம்...அதுவும் சுவையா இருக்கும்.
மத்த ஊர்ல நான் சாப்பிடும் போது இதுக்கு பட்டினி கிடந்தே
செத்துரலாம்ன்னு தோணும்.அவ்ளோ டேஸ்ட்டா(!!??) இருக்கும்.
ஒருசில ஊர்ல குழம்புன்னு சொல்லிட்டு ஊத்துவானுங்க பாருங்க...
அது நம்ம இலையிலயே இருக்காது.
பக்கத்துல இருக்கறவரு இலைக்கு போயிடும்.
சேலத்துல நீங்க 10 ரூபா வச்சிருந்தா போதும்...
வயிறார டேஸ்ட்டா சாப்பிடலாம்ங்க!! உண்மைங்க!!

தட்டுவடை செட்டுக்கு சேலத்த விட்டா எந்தஊரும் ஈக்வல் கிடையாது!!
அதுல நம்ம ஆளுங்க காட்டுவாங்க பாருங்க வித்தைங்க...
கலர்கலரா ஒரு 25 வகை சட்னிய வச்சு கலக்குவாங்க...
50ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு போய் 10ரூபாய்க்கு
தட்டுவடைசெட் வாங்கி திங்கற தின்னுகெட்டவங்க நாங்க...

ஞாயித்துகிழமை ஆனா ஆறறிவு மனுசன தவிர மத்த எல்லா
உயிரினத்தையும் சொர்க்கத்துக்கு அனுப்புற புண்ணியபூமி இது...
அப்டியே கறிகடைகள்ல கூட்டம் அலைமோதும்..வாழ்க்கையில கறியே திங்காதவங்க மாதிரியே க்யூ வரிசையில நிப்போம்...செல்வி மெஸ்,
மங்களம் ஹோட்டல்,ராமலிங்கம் ஹோட்டல்,கேவீஸ்,ரசிகாஸ்ன்னு
ஏரியா வாரியாபேமஸ் ஆன ஹோட்டல்ங்க நிறையா இருக்கு!!

சேலத்த சுத்தி நிறைய கைத்தறிங்க,விசைத்தறிங்க ஓடுது.அதனால,இங்க எல்லா வகையான துணிங்களையும்,விலை குறைவா வாங்கலாம்.சேலம் பழையபஸ்ஸ்டாண்ட சுத்தி நிறைய துணிக்கடைங்க இருக்கு.ஒரிஜினல் பட்டுப்புடவை வாங்க வசதியில்லாதவங்களுக்கு அபூர்வா பட்டுன்னு ஒரு வகை இருக்கு.அது சேலம் மாவட்டத்துலதான் அதிகமா தயார் பண்றாங்க.

அப்புறம் சென்னை மாதிரி சாப்ட்வேர் நிறுவனங்கள் இன்னும் இங்க
வராததால வீட்டுவாடகை எல்லாம் ஒரளவு நம்ம
பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகற அளவுக்குதான் இருக்கும்.


எங்க ஊரு பெருமைய இன்னும் 50 பதிவு போடலாம்...
ஆனா,நீங்க இவன் சரியான பெருமைபீத்தகளையன்னு திட்டுவிங்க...
(வார்த்தைக்கு அர்த்தம் புரியலன்னா வம்சம் படம் பாருங்க)
அதனால இதோட நிறுத்திக்கறேன்....


மொத்தத்துல இளையராஜா பாடின மாதிரி சொர்க்கமே 
என்றாலும் அது எங்க ஊரு போல வராதுங்க!!!


Post Comment

25 comments:

 1. திருநெல்வேலி தமிழுக்கு ஒரு டிக்ஸ்னரிதான் போடணும்.
  எது பேசுனாலும் ஒரு லே சேத்துக்குவாங்க.வாலே,போலே,ஷோலேன்னு

  .....அப்படியாண்ணே ..... சேலத்துல அப்படித்தான் நெல்லைத் தமிழ் பற்றி சொல்றாங்களாண்ணே ......

  ReplyDelete
 2. @ chitra

  நெல்லைத்தமிழை பத்தி தப்பா எழுதிட்டோமோ?சின்னப்பையன கூட அண்ணான்ணு கேள்வி கேக்கறாங்க!!ஒரு வார்த்தைக்கு ரெண்டு அண்ணா போட்ருக்காங்க!!
  எல்லாம் இந்த தமிழ் சினிமாகாரனுங்களால வந்தது!!
  படத்தில அப்டி காட்டி காட்டி இப்டி நினைக்க வேண்டியதாப்போச்சு!!

  ReplyDelete
 3. நல்ல சொல்லிட்டிக உங்க ஊரு பெருமையா
  நானும் பக்கம்தான் (நாமக்கல் மாவட்டம் )

  ReplyDelete
 4. @பிரியமுடன் பிரபு

  வாங்கண்ணே!!வாங்கண்ணே!!நம்ம ஊரு பெருமைய நாமதான்னே சொல்லணும்.

  ReplyDelete
 5. 100% CORRECT.I am salem.I am very happy in live in salem.

  ReplyDelete
 6. ஏங்க எங்க கோயம்புத்தூரிலயும், திருப்பூர்லயும் கூட அப்படித்தான் பேசுவாங்க.

  ReplyDelete
 7. @இரவு வானம்

  அதனாலதாங்ண்ணா உங்கள பதிவில சேக்கல!!
  உங்க ஊருகாரங்க மரியாதையில சேலத்தையே மிஞ்சிருவீங்க!!

  ReplyDelete
 8. ஏண்ணா ...!!எல்லாம் சொல்ற...?! நம்ம மாம்பழத்த விட்டு புட்டியேண்ணா..
  // ஞாயித்துகிழமை ஆனா ஆறறிவு மனுசன தவிர மத்த எல்லா
  உயிரினத்தையும் சொர்க்கத்துக்கு அனுப்புற புண்ணியபூமி இது...//

  அந்த புண்ணியபூமி குகையில (இது ஒரு ஏரியா பேருங்கண்ணா) 30 வருசமா இருந்து புண்ணியபூமி பெருமைய காப்பாத்துறேன்

  ReplyDelete
 9. @ கெட்டவன்
  அண்ணே நான் உங்களவிட சின்னவன். என்னை அண்ணான்ணு எல்லாம் கூப்டாதீங்க...
  மறுபடியும் வந்து படிச்சிப்பாருங்க..
  முதல்ல மாம்பழத்தில இருந்துதான் ஆரம்பிச்சிருக்கேன்.அத போய் விடுவனாண்ணே?(ஹைய்யா ஜாலி இன்னும் ஒரு PAGE VIEWS கிடைச்சிருச்சி)

  ReplyDelete
 10. i realy enjoyed the salem life,first calass city,

  ReplyDelete
 11. ஊர் பெருமைய சொல்லாம் விட்டுட்டிங்களே தேவா?? நானும் சேலம்தான்.. மக்க குடிகாரப்பசங்க.. அமாவாசையானா தறிபட்டறைக்கு லீவ் விட்றுவாங்க எல்லோரும் சித்தர்கோவில் போயிட்டு சரக்கடிக்கீறதுதான் வேலையே.. இது வேலைக்கு போறவங்களுக்கு சில பேருக்கு சரக்கடிக்கிறது மட்டும்தான் வேலையே.. எல்லோரும் சேலம்ல கடை நடத்தனும்ன அந்த பேர் சொல்ல கூடாதவருக்கு கப்பம் கட்டணும்.. அப்புரம் என்ன தேவா நம்ம ஊர் சினிமா தியேட்டரை சொல்லாம எப்படி.. எனக்கு தெரிஞ்சு ஒரே காம்ப்ளக்ஸ்ல 3 தியேட்டர் இருக்கும்னு தெரிஞ்சது சப்னா தியேட்டர் பார்த்துதான்.. அப்புறம் போஸ் மைதானம்..செவ்வாய் பேட்டை.. இதெல்லாம் நான் பிரமிச்ச இடங்கள், கலெக்டர் ஆபீஸ் முன்னாடி இருக்கும் பழைய புத்தக கடைகள் தான் நான் காலேஜ் நாட்களில் தவம் கிடந்த நாட்கள்.. விவசாயமே பண்ண முடியாத ஊர்.. ஊருக்கே குடிக்க தண்ணிகொடுத்தாலும் சேலத்துல விவசாயத்துக்கு உதவாத மேட்டூர் அணை இருக்க ஊர்.

  ReplyDelete
 12. @மதன் செந்தில்

  எல்லா ஊர்லயும் நல்லது,கெட்டது கலந்து இருக்கும் மதன் செந்தில் சார்!! நம்ம நல்லத மட்டும் எடுத்துக்கலாமே!!!
  ஆனா,இந்த ரியல் எஸ்டேட்காரங்களால விவசாயம் அழியறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.

  ReplyDelete
 13. எல்லா ஊரிலும் ஏகப்பட்ட ஜாதி இருக்கும்,ஆனால் எங்க சேலம் ஜில்லா வில் ஒரே ஜாதி என்ற உயரிய கோட்பாடு உடையவர்கள்,ஆம் எங்க ஊரில் திண்ணுகெட்ட ஜாதி என்ற ஒரு ஜாதி தான் உண்டு.இந்திய அரசியல் சட்டத்தில் மனுஷன் கறி தின்பது சட்டவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது, அதனால் நாங்க அதை சாப்பிடுவது இல்லை,நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள்.சைவம்,அசைவம் எதிலும் செய்வதிலும் சாப்பிடுவதிலும் எங்களை பீட் அடிக்க இனிமே தான் யாரும் பொறக்கணும்.ராஜாஜி,சேலம்.விஜயராகவாச்சாரியார் ,DR .சுப்பராயன்,மோகன் குமாரமங்கலம்,போன்ற தேசிய தலைவர்களும்,A .P .நாகராஜன்,கருணாநிதி,கண்ணதாசன்,M .A .வேணு,கவி.கா.மு.ஷெரிப், முக்த்தா சீனிவாசன் போன்ற கலையுலக புள்ளிகளும் வேர்விட்டது இங்குதான்.சேலத்தில் சினிமா ஓடினால் எல்லா ஊரிலும் அந்த படம் ஓடும்,இது தமிழ் திரையுலகின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

  ReplyDelete
 14. @vijayan

  சூப்பர்ண்ணே!! சேலத்த பத்தி நீங்க எழுதியிருக்கறத படிச்சா புல்லரிக்குதுண்ணே!!

  ReplyDelete
 15. வயசுல சின்னவனா இருந்தாலும் அண்ணா போட்டு பேசறது நம்ம ஊரு பழக்கம்ன்னா ...குடல் கறி சமாச்சாரம் இல்லைன்னு சொல்ல வந்துட்டு மாம்பழம் இல்லைன்னு சொல்லிட்டேன் மன்னிசுக்கொபா...ஓட்டு கூட போட்டுட்டேன்

  ReplyDelete
 16. Hai all,

  Actually I am not living in salem. I am in Tirupur now. But I love Salem.
  I came to Salem 2 weeks before after a long gap.
  I was shocked to see my home city ugly, dirty. The town bus stand (old bus stand) was so much condaminated with slush and urinal smell. The way our corporation kept the city was very much untoleratable to me. Thank god. I suppose to come Salem with my colleagues. The whole city was filled with mud. I agree there are some developments. But in another had the infrastructure plan is very poor in our city. Just check with Madurai and coimbatore. Every projects are get redirected to either Madurai or Trichy or Coimbatore or Tirunelveli. The politicians are using us to get all the benefits to them. We are just forgetting the issues and forgiving them. I want everyone has to be aware about this. After coming back to my work place, I want to make a group that that will make proud the people live in salem . saw We all united, some how have to make our city beautiful and to be prouded. Appreciate if anyone comment.

  ReplyDelete
 17. @கெட்டவன்

  என்ன இருந்தாலும் உங்க எக்ஸ்பீரியன்ஸ நீங்க காட்டிட்டிங்கண்ணே!! குடல் கறிய விட்டுட்டேன் பாருங்க!!

  ReplyDelete
 18. @ noushadh

  கண்டிப்பா சேலம் ஒருநாள் கனடா மாதிரி சுத்தமான ஊராயிடும் சார்!! வருத்தப்படாதீங்க!!(அப்துல்கலாம் ஐயா கனவு காணச்சொல்லியிருக்காரு)

  ReplyDelete
 19. Dear Salem Deva,

  Tks. I too wish to the same.

  ReplyDelete
 20. நண்பா நானும் சேலத்துக் காரன் தான்...சூப்பர்...அடிச்சு கலக்கிருக்கீங்க..நம்ம ஊர் பெருமைய...நம்ம ஊற நெனச்சி நானும் பெருமைப் படுறேன்.நினைவுக் கூர்ந்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 21. @ padaipali

  வாங்க நண்பரே..!! உண்மையிலயே நீங்க ஒரு படைப்பாளி..!! உங்க வலைப்பூ அருமையா டிசைன் பண்ணியிருக்கீங்க..!! சேலத்து சிங்கங்கள் அனைவருக்கும் நன்றி..!!

  ReplyDelete
 22. பங்காளி , நம்ம வீடு பக்கம் வந்து பாருங்க. நம்ம ஊரை பத்தி எழுதி இருக்கேன்

  ReplyDelete
 23. @ LK

  அண்ணே..!!வந்துகிட்டே இருக்கேன்..!!வீட்ல எதாவது ஸ்பெஷலா பண்ணுங்க..!!

  ReplyDelete
 24. @ மகேஷ் : ரசிகன்

  ஊரு மேல எவ்ளோ பாசம் பாருங்க..!! என்னையெல்லாம் தல(!!??)ன்னு சொல்றாரு..!!

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!