சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

3.9.10

சும்மா விளையாடாதீங்க ....

பாதுகாப்பா விளையாடுங்க ....
டிஸ்கி : ரோஸ் கலர்ல இருக்கறது நீங்க நினைப்பீங்கன்னு நான்நினைச்சது...


விளையாட்டுக்கும் நமக்கும் கொஞ்சம் தூரமுங்க...( ஒரு 500 மீட்டர் இருக்குமா?)

விளையாட்ல விளையாட்டு இருக்கலாம்....ஆனா,வாழ்க்கையில விளையாட்டு இருக்ககூடாதுங்க...( உளற ஆரம்பிச்சிட்டானே!!
மறுபடியும் காய்ச்சல் வந்துருச்சோ? )

அப்படியே விளையாண்டாலும் ரொம்ப கஷ்டப்பட்டு விளையாடற கேரம்போர்டு,செஸ்,சீட்டுக்கட்டு,கண்ணாமூச்சி,வீடியோகேம்ஸ் இந்த மாதிரிதான் விளையாடுவேன்.(சோம்பேறி பய புள்ள... கஷ்டப்படுதாம்...)

ஒவ்வொரு ஸ்கூல்ல விளையாட்டு மைதானமே இருக்காது...
ஆனா,எங்க ஸ்கூல் பக்கத்துல ஸ்டேடியமே இருந்தது.

ஸ்கூல்ல படிக்கும் போது (!!??) எனக்கு ரொம்ப பிடிச்ச பீரியட்
விளையாட்டு பீரியட்தான்....
அதுவும் சாயங்காலமா கடைசி பீரியட்ல வைப்பாங்க...
ஸ்டேடியத்துக்கு கூட்டிட்டு போகும்போதே பாதி பசங்க
வீட்டுக்கு ஒடிப்போயிடுவானுங்க..( அதுல நீயும் ஒருத்தன்தானே... )

மீதிப்பேர் இருக்கானுங்களே...அவனுங்க ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல
கலெக்டர் ஆகியே தீரணும்ன்னு வெறித்தனமா விளையாடுவானுங்க...


நான் ஸ்டேடியத்துல நல்ல குத்தாத புல் வளந்துருக்கற இடமா பாத்து
PT மாஸ்டர்ட்ட யோகாசனம் பண்றேன் சார் அப்டின்னு சொல்லிட்டு
நல்லா தூங்குவேன்...ஹி.ஹி..ஹி...

(எதாவது ஸ்டேடியத்துல போய் கொஞ்சநேரம் வேடிக்கை
பாத்தீங்கன்னா ரொம்ப காமெடியா இருக்கும்.
நல்லா ஆறு நாளும வீட்ல புல் கட்டு கட்டிட்டு தொந்திய
கரைக்கறேன்னுட்டு நடக்கவே முடியாம வாக்கிங் போறவங்க..
பார்க்குக்கு போனா துரத்தி வுடறாங்கன்னு 
ஸ்டேடியத்துல கடலை சாகுபடி பண்றவங்க...
ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு வந்து ஸ்டேடியத்துல தூங்கறவங்க..
அப்டின்னு ஸ்டேடியத்துல விளையாட்ட தவிர எல்லாம் செய்வாங்க... 
sunday தவிர) 


அப்பயும் இந்த விதி நம்மள தூங்கவுடாது. எனக்கு விளையாட்டு
வராதுன்னு சொன்னாலும் நீதான் அம்பயர்ன்னு சொல்லி பந்து பொறுக்கி போடவுட்றுவானுங்க...அம்பயர் பந்து பொறுக்க தேவையில்லன்னு கூட எனக்கு தெரியாதுன்னா பாத்துக்குங்களேன்...அவ்ளோ வெகுளி பயபுள்ள..
(வெளயாட தெரியாதத கூட எப்புடி சமாளிக்குது பாரு....)

நான் வேற கேட்ச் பிடிக்கறதல ஜான்டிரோட்ஸ்,கைப் மாதிரி...
(ம்கூம்...அதனாலதான் அவங்க  கிரிக்கெட்ட விட்ட போய்ட்டாங்க )
பந்தே போகாத பக்கமா பாத்து நம்மள நிறுத்துவானுங்க...
அப்பயும் பாத்தா அந்த கருமம் புடிச்ச பந்து நம்ம பக்கமேதான் வரும்.
எப்பயும் போல கரெக்ட்டா கேட்ச்ச மிஸ் பண்ணிருவேன்.

ஸ்டேடியத்துக்கு வெளிய சேமியா ஜீஸ், இந்த ஐஸ் கட்டிய உரசி பந்து
மாதிரி புடிச்சி அதுல கலர் கலரா தண்ணிய ஊத்தி குச்சி ஐஸ் அப்டின்னு
விப்பாங்க...அதுக்காகதான் நான் ஸ்டேடியமே போவேன்.
( இப்பதான் உண்மைய சொல்லியிருக்கான் )

அப்டி ஒருநாள் அந்த ஜீஸ் கடைய பராக்கு பாத்துட்டே
நான் பீல்டிங் பண்ணிட்டு இருந்தேன்.
அப்ப எவனோ ஒருத்தன் சிக்ஸர் அடிக்க ட்ரை பண்ணிருக்கான்.
அந்த பால் என் கிட்னில பட்டு கிட்னி சட்னி ஆயிருச்சி.
ஒரு நிமிஷம் எங்க செத்துப்போனமுன்னோர்கள் எல்லாம்
வரிசையா என் கண்ணுக்கு தெரியறாங்க...
சிக்ஸர் அடிக்க ட்ரை பண்ணவன் கொலை கேசுல மாட்டிரக்கூடாதேன்னு
எனக்கு சேமியா ஜீஸ் வாங்கி என் மூஞ்சில  தெளிச்சு கொஞ்சம் வாயில ஊத்தி  மேல்லோகத்துக்கு  போக போனவன பூலோகத்துக்கு  கூட்டிட்டு வந்தான்.
(தப்பு பண்ணிட்டானே)

டாக்டர்கிட்ட போனா இந்த சினிமாவில வரமாதிரி மூளை புற்றுநோய்,இரத்த புற்றுநோய், வந்தவங்ககிட்ட சொல்வாரே அதே மாதிரி இனிமே நீ ஸ்டேடியம் பக்கம் போனா முடிவு என் கையில இல்லைன்னு சொல்லிட்டாரு...

அப்பதான் முடிவு பண்ணேன்!!!
டிவில விளையாட்ட பாத்தா கூட சேப்டிகார்ட் இல்லாம பாக்க கூடாதுன்னு ...
விளையாட்ல விளையாட்டு இருக்கலாம்.
ஆனா,வாழ்க்கையில விளையாட்டு இருக்க கூடாதுன்னு...

இப்ப விளையாடிட்டு இருக்கறவங்கள பாருங்க..
நான் சொல்றது எவ்ளோ உண்மைன்னு...





என்னோட பேட்டிங் ஸ்டைல் இப்படிதான் இருக்கும்!!??
                                    
                                       ஆதாரத்துக்கே சேதாரம் வந்துரப்போவுது....



பாருங்க..விதிய ஹெல்மேட் போட்டா கூட பால் ரூபத்துல வருது....
எப்படியும் ரெண்டு பல் போயிருக்கும்.

                    
                    ஜெயிக்கற வெறி இருக்கணும்ன்றத தப்பா புரிஞ்சிக்கிட்டாரு...
                                                பால எப்டி கடிக்கிறார் பாருங்க ...


                                            
                        இதுவும் தெரிஞ்சே போய் குழியில வுழுவற மாதிரிதான்...


                                          
                                 வேடிக்கை பாக்க வந்தது ஒரு தப்பாடா???




நல்ல பைக்கா பாத்து எடுத்துட்டு போயிருக்கணும.காயலான் கடையில போட வேண்டியத எடுத்துட்டு போய் உனக்கு ரேஸ் தேவையா???

                                      
                                 இவரு லைப் புல்லா கோமா ஸ்டேஜ்தான்....


                         
                          நம்மள மாதிரி ஒரு சோம்பேறி பயபுள்ள போலஇருக்கு...
                                எது கூட போய் சண்டைக்கு போவுது பாருங்க....



     வாழ்க்கையில கேமராவையே பாத்ததில்ல போலஇருக்கு....



                             எத்தன நாளைக்குதான் குதிர பொறுத்துக்கும்...
                                             அது மேல உக்காந்து இருக்கு .



டேபிள் டென்னிஸ்ன்றத தப்பா புரிஞ்சிட்டு குசும்பு புடிச்ச பயபுள்ளைக
மேல ஏறி உட்காந்து விளையாடுதுங்க....


இப்படி நீங்க சைக்கிள் ஓட்டியே ஆவணுமா??

                             இனிமே விளையாட்ட இது மாதிரி பாதுகாப்பா 
                                      உக்காந்து பாருங்க....ஹி... ஹி... ஹி... 


விளையாட்ட சீரியஸா எடுத்துக்காம ஓட்ட போட்டுட்டு போங்க ... 
(இதுல மட்டும் கரெக்டா இரு.... )

Post Comment

11 comments:

  1. படங்களும் கமெண்டும் நல்லா இருக்கு....

    ReplyDelete
  2. @கலாநேசன்

    அடிக்கடி வாங்கண்ணே !!

    ReplyDelete
  3. படங்களும் கமெண்டும் நல்லா இருக்கு....

    ReplyDelete
  4. ஹா., ஹா., ஹா..
    படங்களும்., கமெண்டும் அருமை.

    ReplyDelete
  5. awesome photos! especially the cycle one. :-)

    ReplyDelete
  6. விளையாட்டு நல்ல இருந்துச்சுங்க....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. @வெங்கட்,வெறும்பய

    பதிவு நல்லா இல்லைன்றத இப்டிதான் டீசெண்டா சொல்லணும்....

    ReplyDelete
  8. @ chitra

    சித்ரா அக்கா!! தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை இங்கிலீஷ். so,neenga ethu sonnalum tamillathaan sollanum.unga blogla mattum tamilla alaga eluthareenga!!

    ReplyDelete
  9. @ dheva

    எந்த விளையாட்டண்ணே சொல்றீங்க !!
    நான்தான் விளையாடவே இல்லையே!!

    ReplyDelete
  10. @வழிப்போக்கன்

    ரொம்ப தேங்க்ஸ் அண்ணே!!

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!