சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

27.2.11

முருகா ஏன் இப்டி எங்கள சோதிக்கற..?!

சீடன் படத்த விட்டு வெளிய வந்த மக்கள் இப்டிதான்  பேசிக்கிட்டாங்க... எதுக்கு தனுஷ் இந்த படத்த ஒத்துகிட்டாருன்னு தெரியல...டைரக்டரு சுப்ரமணியசிவா அவருக்கு முருகன் மேல இருக்கற பக்திய காட்றதுக்கு நம்மள காய வச்சிட்டாரு...நமக்காச்சும் 200ரூபாவோட போச்சு..பாவம் தயாரிப்பாளர்.

நேத்து எங்க ஏரியாவில முழு மின்வெட்டு.தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு இருக்கறப்ப பண்ணாத பராமரிப்ப மாசம் ஒருநாள் பண்ணுவாங்கலாம்.குழந்தையையும் தங்கமணியையும் கூப்டுகிட்டு மொழி,அபியும் நானும் படத்தோட இயக்குனர் இயக்கிய பயணம் படத்துக்கு போலாம்ன்னு பயணப்பட்டோம்.சேலத்து டிராபிக் வர வர சென்னை,பெங்களூரு மாதிரி ஆகிட்டிருக்கு.2.30 மணு படத்துக்கு 1.30 மணிக்கே கிளம்பிடணும்.அப்பதான் வெண்திரையிலிருந்து வீக்கோ டர்மரிக் விளம்பரம் ஆரம்பிச்சு முழுசா படத்த பாக்கலாம்.இப்டி பாத்தாதான் திருப்தி.ஒரு சீன் மிஸ் ஆகிட்டாலும் கடுப்பா இருக்கும்.தியேட்டருக்கு போனா மாலை காட்சியும் இரவுக்காட்சியும் மட்டும்தான் பயணம் படம் போடுவாங்களாம்.

வேற ஏதாவது நல்ல படம் ஓடுதான்னு பாத்தா நடுநிசி நாய்கள் படம் போஸ்டர் இருந்துச்சு.இந்த படத்துக்கு போனா நமக்கு இருக்கற கொஞ்சநஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரும்.ஏங்க வரவர உங்க புத்தி இப்டி எல்லாம் போவுது..?ன்னு தங்கமணி அட்வைஸ் பண்ற நினைப்பெல்லாம் வந்துச்சு.இந்தமாதிரி படங்கள அடையாளம் காண உதவுற பதிவுலகத்துக்கு நன்றி.

ஆடுபுலிஆட்டம்,தூங்காநகரம்.சீடன் மட்டும் சாய்ஸா இருந்தது.நான்தான் தனுஷ நம்பி போலாம்ன்னு முடிவு எடுத்தேன்.நம்ப முடிவு எப்ப நம்பள காப்பாத்தியிருக்கு..?போனா முதல் பாட்டு ஓடிட்டிருந்தது.அப்பயே மூடு அப்செட்.வசனமெல்லாம் நல்லாதான் இருந்தது.விவேக் வேற அப்பப்ப வந்து சாமியாருங்கள கலாய்ச்சிட்டு இருந்தாரு.நம்ப மொக்கைய விட பயங்கரமா மொக்கை போடறாரு.முடியல..

இடைவேளை அப்பதான் தனுஷ் வர்றாரு.கதையோட ஒன்லைன் தன்னோட பக்தையின் காதலுக்காக கடவுளே மனிதரூபத்தில் சமையல்காரரா வந்து உதவி செய்றாராம்.பெரியார் கட்சிக்காரங்க ஏன் திட்ட மாட்டாங்க..? இப்டியெல்லாம் படம் எடுத்தா முருகனுக்கே பிடிக்காது.சிவக்குமார் மாதிரி மழுமழுன்னு ஷேவ் பண்ணிய  நடிகர்கள முருனா பாத்துட்டு தனுஷ ட்ரிம் பண்ண தாடியோட முருகனா ஏத்துக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.

நல்லா பளிச்சுன்னு இருந்துச்சு ஒளிப்பதிவு.இந்த மாதிரி படத்துக்கு ஒளிப்பதிவாளர் என்னதான் விழுந்து விழுந்து வேலை செஞ்சாலும் பாவம் அது வெளிய தெரியப்போறதில்ல...நல்ல கதைய வேகமான திரைக்கதையா மாத்தி வித்தியாசமான சீன்கள் அதிகம் வச்சு இசை ஒளிப்பதிவு எல்லாம் சேந்தாதான் இப்பல்லாம் ஹிட் அடிக்க முடியும்.ஒண்ணு முழுக்க பக்தி படமா எடுக்கணும்.இல்ல காதல் படமா எடுக்கணும்.ரெண்டும் கலந்து எடுத்தா இப்டி பப்படமாதான் போகும்.படத்தோட வசனங்கள விட தியேட்டர்ல வர்ற வசனங்கள் நல்லா காமெடியா இருந்துச்சு.(அட்ராசக்க சிபி அளவுக்கு வசனமெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல...)அடுத்த வாரம் சன் டிவியில இந்த படத்த போட்ருவாங்கடா...அப்டின்னு பின்னாடி யாரோ சொன்னப்ப குலுங்கி குலுங்கி சிரிச்சேன்.5 பாட்டு வச்சே ஆகணும்ன்னு ஏதாவது கட்டாயம் இருக்கா என்ன..?தேவையில்லாத இடத்துல பாடல்கள் வச்சு தியேட்டர்ல பாதிப்பேர் ஓடிப்போயிட்டாங்க...கடைசி பாட்டு வர்றப்ப தியேட்டர் முழுவதும் ஒரே அழுகைதான்.முருகா ஏண்டா இப்டி எங்கள சோதிக்கற..?

டிஸ்கி to சிபி செந்தில்குமார்  ஐய்யய்யோ... சினிமா விமர்சனத்துக்கு போட்டியா... என்று பயப்பட வேண்டாம்.ஹி.ஹி..ஹி. சும்மா டமாசு.
6  மாசத்துக்கு ஒரு தடவைதான் சினிமாவுக்கு போவேன்.மாசத்துக்கு ஒரு தடவைதான் பதிவு போடுவேன்.

இந்த படம் படப்பிடிப்பு நடந்த பழனியில் கூட 10 நாள் ஓடறது டவுட்டுதான்.                                                         

Post Comment