சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

12.11.12

ஹேப்பி தீவாளி..!!


போன வருஷம் போட்ட பதிவா இருந்தாலும் இந்த தீபாவளிக்கும் அப்படியே மேட்ச் ஆகுது.படிக்காத புது வாசகர்களுக்காகவும்,பழைய வாசகர்கள் மறுபடியும் ரீகால் பண்றதுக்காகவும் மறுபடியும் மீள் பதிவு  :)   (புதுசா எழுத சோம்பேறித்தனப்பட்டு சப்பைகட்டு கட்டுது பாரு...) பதிவு Open ஆனதும் ஒரு Music வரும் பயந்துராதீங்க...கீழ இருக்கற Flash File-ல Mute பண்ணிருங்க...  :)

தீபாவளி வரப்போவுது...எல்லாருக்கும் சந்தோஷம் தர்ற பண்டிகை.

இப்ப இருக்கற பசங்க தலையில எண்ணை வைக்கறதே இல்ல...காலையில தூக்கம் கலையறதுக்கு முன்னாடி எழுப்பி விட்டு தலையில சொத்சொத்துன்னு எண்ணைய அடிப்பாங்க பாருங்க...கண்ணெல்லாம் எரியும்.அதுவும் அந்த எண்ணை 5 எண்ணைகள் கலந்ததாம்.ஒரு எண்ணை இல்லைன்னா பசு மாட்டோட கோமியத்தையும் கலந்துப்பாங்க...உவ்வே...ன்னு வருதா..?!மருத்துவ குணம் நிறைந்ததுங்க...


அப்புறம் அந்த தீபாவளிக்குன்னே கண்டுபிடிச்ச இனிப்பு குலோப்ஜாமூன் செய்றதுக்கு நல்ல டேஸ்ட்டா,ஸ்மூத்தா வர்ற கம்பெனியோடது வாங்கணும்ன்னு நினைக்காம யாரு பெரிய பக்கெட்,பேசன் தர்றாங்ன்னு பாத்து வாங்கிட்டு வருவாங்க...ஓடாத கம்பெனிகாரன் இதை ப்ரீயா தந்து வருஷம் ஒருநாள் எல்லா சரக்கையும் ஓட்டிருவான்.கடைசில குலோப்ஜாமூன் உருண்டையா வராது.உதிரியாதான் வரும்.நமக்கு பிச்சுபிச்சு சாப்டறது பிடிக்காது.அப்டியே முழுசா முழுங்குனாதான் பிடிக்கும். இலவசங்கள் தர்றது தமிழ்நாட்டோட பொது மனநிலையாப் போச்சு...முறுக்கு வீட்ல சுடலாமான்னு கேட்டா புரட்சித்தலைவி கூட்டணி கட்சிக்காரங்கள பாக்கற மாதிரியே கேவலமா பாக்குறாங்க.ஸ்வீட் கடைக்காரங்களுக்கு கொண்டாட்டம்தான்.


பட்டாசு வெடிக்கற ஆர்வம் குழந்தைகளுக்கு குறைஞ்சுட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங்.பாப்பாவுக்கு கம்பிமத்தாப்பு,சங்குசக்கரம்,புஸ்வாணம் எல்லாம் வாங்கியாச்சு...அது என்னங்க MRP 700ரூபாய் போட்ருக்கு.ஆனா,கடையில 195ரூபாய்க்கு தந்தாங்க.அதுலயும் லாபம் இல்லாமலா தருவாங்க..?!உண்மையான ரேட் என்னன்னு தெரியல...மொத்தத்துல காசை கரியாக்குறோம். (வயசாயிடுச்சுன்னா இப்டிலாம் தோணும்)இந்த பட்டாசு வெடிச்சு விழுப்புண்கள் வாங்காதவங்களே இருக்க முடியாது.அதுலயும் போலிகள் இருந்து தொலைக்கும்.ஊசிப்பட்டாசு வெச்சா அது வெடிக்காம சங்குசக்கரம் மாதிரி சுத்தி நம்மள குழப்பும்.ராக்கெட் மேல போய் வெடிக்காம நம்ம வீட்லயோ,அக்கம்பக்கம்  இருக்கற நம்ம எதிரிங்க வீட்லயோ போய் வெடிக்கும்.புஸ்வாணம் வச்சா அது ரொம்ப நேரம் பொங்காது.என்ன ஆச்சுன்னு பக்கத்துல போய்ப்பாத்தா நம்ம மூஞ்சில பொங்கும்.அப்புறம் தீபாவளி இல்ல... தீபா"வலி"தான்... 

டிவியே வீட்ல இல்லைன்னா அந்த தீபாவளி எப்படி இருக்கும்ன்னு நெனச்சி பாருங்க...முன்னல்லாம் புதுப்படம் போட்டா ஆர்வமா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தோம்.இப்ப உலகத்தொலைக்காட்சிகளில முதன்முறையாகன்னு சொன்னாவே அடப்போங்கைய்யா...ன்னு இருக்குது. இந்த படத்த வந்த ஒரு மாசத்துலயே பாத்தாச்சு...(திருட்டு DVD புண்ணியத்துல)ஒரே பேட்டர்ன்தான் பல வருஷமா ஓடிகிட்டு இருக்கு.காலையில் மங்கள இசை,யாராவது சாமியாரோட ஆசி,அப்புறம் புதுப்பாடல்கள்,பட்டிமன்றம்,நடிகர்(அ)நடிகையோட பேட்டி,புதுப்படம், மறுபடியும் பேட்டி,படம்ன்னு ஒரே போர்ர்ர்ர்தான் போங்க...விஜய்டிவி கொஞ்சம் பரவால்ல...இருந்தாலும் அவங்க விளம்பரத்துக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே போடுவாங்க...அதுதான் பிரச்சினை.

ஒகே..நம்ம கதை போதும்.குழந்தைகளை பாதுகாப்பா வச்சிகிட்டு வெடி வெடிங்க...கண்ல பட்ற போவுது.ஹேப்பி தீவாளி...(ஹி..ஹி..இப்டி சொன்னாதான் தமிழன்னு ஒத்துக்குவாங்க)

பட்டாசு படங்கள் பற்றிய பதிவுக்கு இங்கு செல்லவும். Take Diversion. அய்யா ஜாலி..ஒரே க்ளிக்குல இரண்டு பதிவுக்கு ஹிட்ஸ்.  :) அப்டியே கீழ இருக்கற Flash File-ஐயும் Play பண்ணிப்பாருங்க....

Post Comment

6.9.12

என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்..?!

காலம் காலமாக பகுத்தறிவு இல்லாமல் வாழும் மக்களுக்காக பயங்கர அறிவுடன் எழுதும் என்னைப் போன்ற இணைய எழுத்தாளர்களை எப்படி மதிக்க வேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று கூட இந்த மக்களுக்கு தெரிய வில்லையே..?! இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல..?! இதையே நான் ஆப்கானிஸ்தானில்  ஆரம்பித்து ஜிம்பாப்வே வரை உள்ள 196 வெளிநாடுகளில் (அவ்ளோ நாடுகள்தான் இருக்காம்.நெட்ல பாத்துட்டேன்) எழுதியிருந்தால் கிடைக்கும் மரியாதை அளப்பற்கரியது. 

கோடிக்கணக்கான பேர் படிக்கும்,தமிழர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும், என்றும் இளமையான, இளைஞர்களுக்கும்,பெரியவர்களுக்கும் பிடித்த ஆயிரம் வார இதழ்கள் வந்தாலும் மக்கள் மனதில் என்றும் நெ.1 வார இதழான ஆனந்த விகடனுக்கு(அப்பா..செமையா பாராட்டியாச்சு...இன்னும் ஒரு வாரத்துக்கு என் பகுதியை தூக்க மாட்டாங்க) தெரிந்தது இந்த மக்களுக்கு தெரியவில்லையே... என் செய்வேன்..?!

இந்நேரம் ஒரு ஆயிரம் பேராவது நேரிலோ,போனிலோ,மின்னஞ்சல் வழியாகவோ வாழ்த்தியிருக்க வேண்டாமா..?! நூறு பேராவது நேரில் வந்து சால்வை போர்த்தியிருக்க வேண்டாமா..?! அல்லது பார்சலாவது அனுப்பியிருக்க வேண்டாமா..?! குறைந்தது 10 பாராட்டு கூட்டங்களுக்காவது அழைப்பு வந்திருக்க வேண்டாமா..?! பொற்கழுகு (ஹி..ஹி...பொற்கிழி(ளி) சின்னதா இருக்கும்)  பரிசளித்திருக்க வேண்டாமா..?!

ஒருவன் தன் புகழை தானாகவே எவ்வளவு நாளைக்குதான் கூவிக் கொண்டிருப்பது..?! "தானே கூவிய தானைத்தலைவன்" என்ற பட்டம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டால் என் செய்வது..?!என்னமோ பொங்கல்..ச்சீ... போங்கள்.

இவ்வளவு கூவிய பிறகும் எதற்கு கூவுகிறான் என்று கேட்டு வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டாம். (சொன்னாதாண்டா தெரியும்.மேட்டருக்கு வா...) இந்த வார விகடன் இணையத்தளத்தில் என் விகடன் பகுதியில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவனான என்னையும் மதித்து வலையோசை பகுதியில் கௌரவித்துள்ளார்கள். இப்பவாவது போய்ப் பாத்துட்டு ஒரு அற்புத எழுத்தாளர் வெளிநாட்டுக்கு போய்டாம ஏதாவது ஒண்ணு  உடனடியா செய்ங்க....அப்புறம் உங்களுக்குதான் நஷ்டம்.  :)

Post Comment

5.9.12

இதுவும் கடந்து போகும்...நம்ம அரசு இயந்திரத்தோட தாரக மந்திரம் இதுதான்...துயரம் ஏற்படுவதை தடுக்காமல் அது நடந்த பிறகு அரசு நடந்து கொள்வது இந்த வார்த்தையின் அடிப்படையில்தான்....

இன்னும் ஒரு வாரத்துக்கு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் முழுவதையும் கடமையே கண்ணாக சோதனை செய்வார்கள். அடுத்த மாதமே பழைய கதைதான்...சென்ற மாதங்களில் நடந்த குழந்தைகள் விபத்துகளின்  சோதனைகள் போன்றுதான் இதுவும் இருக்கும். பரபரப்பு பசியோடு திரியும் ஊடகங்கள் மீண்டும் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அரசு என்னென்ன தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து மக்களுக்கு தெரியப்படுத்தலாம். ம்ஹீம்...அதெல்லாம் நம் நாட்டில் நடக்கவே நடக்காது.

நமது குழந்தைகளின் ஆசைக்காக பட்டாசு வெடித்து நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்காக வருடம் தோறும் சிவகாசியில் சில குடும்பங்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது. சட்டங்களை மதிக்காமல் அதில் உள்ள ஓட்டைகளை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சில பட்டாசு தொழிற்சாலை முத(லை)லாளிகளுக்கும் ,அவர்கள் கொடுக்கும் லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு இது போன்ற பாதுகாப்பற்ற ஆலைகளை நடத்த அனுமதி தரும் அதிகாரிகளும் இருக்கும் வரை இந்த துயரம் வாடிக்கையாகத்தான் இருக்கும். அமீரக நாடுகளைப்போல் இங்கும் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும். இவர்கள் தரும் நிவாரணப் பணம் போன உயிர்களை திருப்பித்தருமா..?! என்னமோ போங்க...  :(

Post Comment

27.8.12

ஆண்ட்ராய்டும்,பதிவர் திருவிழாவும்..

சாதாரண வசதிகள் கொண்ட மொபைலைக் கண்டாலே ஐய்ய்..போனுன்னு சிட்டிகாரங்க சிறுத்தைய பாக்கறமாதிரி பாப்பேன். (ஹி..ஹி...ஒரு சேஞ்சுக்கு....எவ்ளோ நாளைக்கு பட்டிக்காட்டான் முட்டாயின்னு சொல்றது)இதுல ஐ-போன் எல்லாம் நான் இதுவரைக்கும் பாத்தது கூட இல்லைன்றதுதான் நெசம். 

முந்தாநாள் என் பிறந்தநாள்.(ஹி..ஹி...மறந்து போனவங்க இதுக்கு மேலயும் கிப்டோ, கேக்கோ அனுப்பினாலும் பெருந்தன்மையா ஏத்துக்கற மனசு என்னுது) எங்க டாடி எனக்கு சர்ப்ரைஸா 8400 ஓவா போட்டு  சேம்சங் கேலக்ஸி ஒய் டூயல் சிம் வசதி கொண்ட, இரண்டு பெட்ரூம் வசதி கொண்ட ச்சே.. ஒரு ஃப்ளோவுல வந்திருச்சு.. ஒரு மொபைல் வாங்கித் தந்தாரு...அதுல இருக்கற ஆன்ட்ராய்ட் வசதிய மூணுநாளா நோண்டி நோண்டி வியக்கேன். இந்த கூகிள்காரனுக்குதான் என்னா மூளை.எதிர்காலத்துல இணையமே மொபைல்லதான்றத மனசுல வச்சி செமையா ரெடி பண்ணிருக்காங்க...அதுலயும் லட்சக்கணக்கான அந்த பயன்பாடுகளை (APPS) பாக்கும் போது உண்மையிலேயே பிரம்மிப்பா இருக்கு.நம்ம பிரபல தொழில்நுட்ப பதிவர்கள்  பிளாக்கர் நண்பன், பிரபு கிருஷ்ணாவின் கற்போம்,சசிகுமாரின்  வந்தேமாதரம் தளங்களுக்கு போய் ஆண்ட்ராய்டு பதிவுகளா படிச்சிட்டு இருக்கேன்.நீங்களும் இதுவரைக்கும் வாங்கலைன்னா ட்ரை பண்ணுங்க...

நேற்று நடந்த பதிவர் சந்திப்புக்கு வேலையின் நிமித்தம் போகமுடியாம நானே நொந்து போயிருக்கேன். போயிட்டு வந்த பதிவர்கள் போடற பதிவுகள பாக்கும் போது தீயற வாடை வருது. (ஸ்டமக் பர்னிங்) இதுநாள் வரைக்கும் யூத்துன்னு நெனச்சி படிச்சிட்டு இருந்த அண்ணன்..தப்புதப்பு...பெரியவர் சேட்டைக்காரன் அவர்களும் கலந்துகிட்டத படிச்சபோது நொந்துட்டேன். அவரோட சந்திப்ப மிஸ் பண்ணிட்டமேன்னு...போட்டோவ பாத்தவுடனே படையப்பா வசனத்த நெனச்சுகிட்டேன். :) 

வயதில்தான் பெரியவர்.எழுத்தில் என்றும் யூத்  சேட்டைக்காரன் என்னும்
திரு.ராஜாராமன் அவர்களின் புகைப்படம்


மொத்தத்துல ஹிட்ஸ் வாங்கற பதிவர்களோட விழா ஹிட் ஆனதுல மகிழ்ச்சி.

Post Comment

19.8.12

மதுபானக்கடை

தமிழகம் போற்றும்  வரலாற்று சிறப்பு வாய்ந்த காவியத்தை நேற்று பார்த்து விட்டேன்.சினிமாவை இயக்குனர்கள் அவர்களுடைய கருத்துகளை சொல்வதற்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதை பொழுதுபோக்கிற்காக தியேட்டருக்கு வரும் சாமான்யர்கள் யாரும் விரும்புவதில்லை.அந்தப்படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று ஓடுவதும் இல்லை.

குழந்தைகளுக்கு மருந்தில் தேன் தடவி கொடுப்பதை போல தமிழக அரசின் பொருளாதாரத்திற்கு துணை நிற்பவர்களுக்கான(?!) பெரும் குடி மகன்களின் ஒரு நாள் பார் வாழ்க்கையை களமாக வைத்து அதில் தற்போதைய சமூக நிலையையும்,மனிதர்களின் பல்வேறு முகங்களையும் யதார்த்தத்தை அதிகம் மீறாமல் காட்டிய விதம் பாராட்டுதலுக்குரியது.

பிறமொழி படங்களிலிருந்து காப்பி அடிக்கிறோம் என்ற கூச்சம் இல்லாமல் இயங்கும் இயக்குனர்கள் மத்தியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின்  உண்ணற்க கள்ளை கதையை அடிப்படையாக கொண்டது என்று குறிப்பிட்ட விதமும் பாராட்டத்தக்கது.

இதுவரை மருந்தில் தேன் என்ற கொள்கையை வைத்து படங்களை கொடுத்த எனக்குப்பிடித்த இயக்குனர்களான சிம்புதேவன்,ஜனநாதன் அவர்கள் வரிசையில் கமலக்கண்ணனும் சேர்ந்து விட்டார்.வாழ்த்துகள்...பெட்டிசன் மணியாக நடித்த என்.டி.ராஜ்குமார் அவர்கள்தான் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார்.நடிப்பிலும்.பாடல்களிலும் கலக்கி எடுத்திருக்கிறார்.


வாய்ப்பிருந்தால் பார்த்து உணருங்கள்.

Post Comment

24.7.12

வாழ்த்துகள் உயர்திரு.பிரணாப் முகர்ஜி அவர்களே...


நான் முன்பே கணித்தது போல் (இவரு பெரிய காழியூர் நாராயணன் பாரு...கணிக்கிறாராம்) பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்தியத்திருநாட்டின் முதல் குடிமனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.இதுகாறும் பாராளுமன்றத்தில் ஒரு பெரியவர் வயது முதிர்ச்சியின் காரணமாக தூங்குவதை கூட ஜூம் செய்து பெரிது படுத்தி காட்டிய செய்தி நிறுவனங்களுக்கு சவுக்கடியாக அமைந்தது இந்த முடிவு என்றால் அது மிகையில்லை.இனிமேல் மக்கள் நலத்திட்டங்கள்,விவாதங்கள் என்ற பெயரில் வாசிக்கப்படும தூக்கம் வரவழைக்ககூடிய உரைகளைக் கேட்கத் தேவையில்லை.சுதந்திரமாக தூங்கலாம்.வெளிநாடுகளுக்கு ராஜமரியாதையுடன் சென்று வரலாம்.(என்ன இருந்தாலும் நமது முன்னாள் குடியரசுத்தலைவர் போல் வெளிநாட்டுப்பயண சாதனையை இனி எந்த இந்திய குடியரசுத்தலைவராலும் முறியடிக்க முடியாது)மத்திய அரசின் முன்முடிவெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு அவ்வப்போது கையெழுத்திடலாம்.

இங்க இப்டி...ஈரான் நாட்ல ஒரு தலைவர் இருக்காராம்.பிழைக்கத் தெரியாத மனுசனா இருப்பார் போல...1. அவருடைய மாத வருமானம் 1200 டாலர். இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது.

2. அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில்தான்...

3. இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4. படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல்.
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5. இவரது வங்கி நிலுவை 0

6. இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும். தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்.

7. அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8. பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9. பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படை பட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10. தன் காரியாலயத்திலும், வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைச்சீலைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்.

11. நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம் ..

Post Comment

14.7.12

சொந்தக்கதையும்,புகைப்படக்கலையும்...

யாரும் தலைப்பு சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.பின்தொடர்பவர்கள் பின்வாங்காதது ஆறுதல் அளிக்கிறது.

இதுவரை வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் கானல் கொடுமையை அனுபவித்து கொண்டிருந்த நான் நேற்றுதான் அதற்கு மேல் தென்னங்கீற்றை வேய்ந்தேன்.நேற்றிரவிலிருந்து  மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. :) இயற்கைக்கும் என்னைக்கண்டால் சிரிப்பாக இருக்கும் போல...

இந்த வாரத்தில் ஒரு பயனுள்ள புகைப்படக்கலை பயிற்சி வகுப்புக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.வெளிப்புற புகைப்படக்கலை (அதாவது அவுட்டோர் போட்டோஃகிராபி.தமிழ்..தமிழ்...)வகுப்பை பிரபல புகைப்பட நிபுணர் திரு.ஜீவா சுப்ரமணியம்  அவர்கள் கற்றுக்கொடுத்தார். எங்களுக்கு தோரணை காட்ட(அதாவது போஸ் கொடுக்க...தமிழாக்க உபயம் கூகிள் ட்ரான்ஸ்லேட்)பிரபல மாடல் ரீத்தி மங்கள் வந்திருந்தார். சிறப்பாகவும், சிரிப்பாகவும் (மாடலை பார்த்து அல்ல) அமைந்தது வகுப்பு. அங்கு நான் எடுத்த புகைப்படங்களை இங்கு சென்று பார்த்து மகிழுங்கள். அப்படியே அந்த பேஜை லைக்குங்கள் (ஹி..ஹி...ஒரு வௌம்பரம்)

                                 

                                   

அரசியல்,அனுபவம்,ஆதரவு இவைகளை தவிர்த்து குடியரசுத்தலைவர் பதவிக்கென்று ஒரு முகம் தேவைப்படுகிறது.(நீ அதுக்கு சரிப்பட மாட்ட..வடிவேல் சோக்கு ஞாபகத்துக்கு வருது.) அந்த முகம் திரு.சங்மா அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.நம்மூர் படங்கள்ல வர்ற வட்டிக்கடை சேட்டு மாதிரியே இருக்காரு. அதிசயம் நடக்குமா..?! நீங்க என்ன நினைக்கறீங்க..?!


இந்த பதிவ எழுதிட்டு இருக்கும்போது வந்த குறுஞ்செய்தி.லேப்டாப் விலையில்லாம (அ) இலவசமா (ரெண்டும் ஒண்ணுதான்.ஆனா,அவங்க மாத்தி சொல்வாங்க....)தர்ற அரசாங்கம் உயிர் காக்கும் ஹெல்மேட்டை ஏன் ஃப்ரீயா தரக்கூடாது..?! நியாயமான கேள்விக்கு பதில் சொல்லுங்க...
பேஸ்புக்ல இந்த படத்த பாத்ததிலிருந்து வாந்தி வாந்தியா வருது. நம்மூரு கறிக்கடைகள்ல ஞாயிற்றுக்கிழமை ஆட்ட தொங்க விடற மாதிரி சைனாவுல நாய்களை தொங்க விட்ருக்காங்க...பாம்பையே திங்கறவங்களுக்கு இது எம்மாத்திரம்..?! ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு டேஸ்ட்...உவ்வே...  :)Post Comment

6.7.12

வந்துட்டமுல்ல...

அப்பப்ப நம்ம பிளாக்கர் நண்பன் கூகிள் அந்த சேவையை நிறுத்தப்போகிறது. இந்த சேவையை நிறுத்தப்போகிறதுன்னு பதிவெழுதி பீதிய கிளப்பறாரு.... தொடர்ச்சியாக 3,4 மாதங்கள் பிளாக்கரில் பதிவுகள் எழுதாமல் இருந்தால் அவங்க பீஸ் புடுங்கப்படும்ன்னு சொல்லிட்டா இவ்ளோ வருஷம் கஷ்டப்பட்டு(?!) எழுதிய பதிவுகளையும், இஷ்டப்பட்டு சேர்ந்த பின்தொடர்பவர்களையும் இழக்க நேரிடும்ன்றதால நிறையப்பதிவர்கள் கடைபிடிக்கும் ஒரு சிறந்த வழியான கொத்துபுரோட்டா, கூட்டாஞ்சோறு, கலவைசாதம், மினீ மீல்ஸ், சாப்பாட்டுக்கடை, நொறுக்கல், கலக்கல், கலைடாஸ்கோப் மாதிரி நம்ம வலைப்பூவிலும் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.இதைப்பாராட்டியோ,மகிழ்ச்சி தெரிவித்தோ பின்னூட்டம் போடலைன்னா கூட பரவால்ல...இருக்கற நூத்தி சொச்சம் பின்தொடர்பவர்கள் யாராவது விலகி பஞ்சுல தண்ணிய ஊத்திராதீங்க...(எவ்ளோ நாளைக்கி நெஞ்சுல நெருப்ப அள்ளி போட்றாதீங்கன்னு பழைய பழமொழிய சொல்றது...அதான் வித்தியாசமா...ஹி..ஹி...)

இப்ப பதிவுக்கு வருவோம். பத்பநாபசாமி கோயில் 5வது ரகசிய அறைய(அதான் தொறந்துட்டாங்கல்ல...அப்புறம் என்ன ரகசியம்) திறந்துட்டாங்களாம்.அந்த அறையில 10 இலட்சம் கோடி அளவுல தங்கம்,வைரம் எல்லாம் இருக்குதாம்...இனிமே நம்ம மக்கள் அங்க இருக்கற செல்வம் பத்தாதுன்னு இவங்க பங்குக்கு போய் இன்னும் கொட்டப்போறாங்க...மனுசங்கள்ல பணக்காரங்களுக்கு மதிப்பு தர்ற மாதிரி சாமியில் கூட பணக்காரசாமிக்குதான் மவுசு. இனிமே திருப்பதி அளவுக்கு கூட்டம் கூட ஆரம்பிச்சுரும்...இவங்களையெல்லாம் எத்தன பெரியார்....சரி வேணாம் விடுங்க....

அப்புறம் எனக்கு ஒரு டவுட்டுங்க...விஞ்ஞானம் இன்டர்நெட், இமெயில், வீடியோகாலிங்ன்னு எவ்ளோ வளந்துட்டாலும் இன்னும் இந்த மாநில முதல்வர்கள்லாம் ஏன் பிரதமருக்கு கடிதமே எழுதிட்டு இருக்காங்க...?! சரி முன்ன கலைஞர் அய்யாதான் எவ்ளோ படுகொலைகள் நடந்தாலும் உடனே ஆற அமர கண்டனக்கடிதம் எழுதுவாரு...இப்ப புரட்சித்தலைவியாவது அதிரடி பண்ணுவாங்கன்னு பாத்தா எதுக்கெடுத்தாலும் கடிதம் எழுதிகிட்டு....என்னத்த சொல்ல....?!


அப்புறம் பேஸ்புக்ல மேஞ்சிகிட்டு இருந்தப்ப மேல இருக்கற படத்த பாத்து வருத்தமா இருந்தது. இவ்ளோ பெரியவரு இந்த குடிமகன்கள் கால்ல விழுந்து கெஞ்சறத பாத்தா பாவமா இருக்கு...செவிடன் காதில் ஊதிய சங்கு போலன்னு சொல்வாங்களே...அது மாதிரி குடிமகன்கள் அவங்க வீட்ல இருக்கறவங்க எத்தனையோ தடவை கால்ல விழுந்து கெஞ்சி கேட்டும் திருந்தாதவங்க இவரு சொல்லி திருந்துவாங்கன்னு நம்பிக்கை இல்ல...காந்தி பிறந்த ஊரான குஜராத் மாதிரி மதுவிலக்கு கொண்டுவந்தா தமிழ்நாட்டு தாய்மார்கள் பலரோட வயிறும் நிறையும். மனசும் குளிரும். இந்த ஒரு விஷயத்துக்காகவே மோடி பிரதமர் ஆகணும்ன்னு ஆசைப்படறேன்.(உடனே இந்துத்வா முத்திரை குத்திராதீங்க...பொதுவா சொன்னேன்.)சட்டம் ஒழுங்கையும் அரசே கவனிக்கும்.மதுவையும் அரசே விற்கும்.சரியான காமெடிங்க....

சரி இன்னக்கி இது போதும். நம்ம மிக்ஸிங் பதிவுக்கு எதாவது நல்ல டைட்டிலா சொல்லுங்க...சிறப்பு பரிசு காத்திருக்கு. (இந்தியா மறைமுகமா 100ரூ புடிங்கிகிட்டு 10 ரூ பரிசு கொடுத்தா நம்ம மக்கள் சிரிச்சுகிட்டே போட்டில கலந்துக்குவாங்க...சரி கோடி..ச்சீ ரெடியா..?!) :)Post Comment

23.3.12

அம்புலி 3D

ஒரு படத்துக்கு என்ன மாதிரி இவ்ளோ சீக்கிரம் விமர்சனம் எழுதி பாத்திருக்க மாட்டிங்க...இருந்தாலும் வந்ததுக்கு படிச்சிட்டு போய்டுங்க...நமக்கு அட்ராசக்க சிபி அண்ணன் மாதிரி தியேட்டர்ல படம் பாத்துகிட்டே விமர்சனம் எழுதற திறமை இன்னும் வரல...(டேய்..அவரு நெ.1 பதிவர்டா)


திருட்டு டிவிடி பிரச்சினைக்கு சரியான மாற்றா 3D படங்களும் இருக்கும்ன்றது என்னோட நம்பிக்கை. (சொல்லிட்டாரு நாட்டாமை) ரொம்ப நாளைக்கு பிறகு 3D படம் வந்தத கேள்விப்பட்ட பின் மனம் மகிழ்ச்சியில் குதித்தது. (பாத்து ஓடிரப்போவுது) கடைசியா மை டியர் குட்டிச்சாத்தான் தியேட்டரில் கண்ணாடியோடு பார்த்த ஞாபகம். இப்ப புது முயற்சியா அம்புலி படம் 3D கேமராவுலயே எடுத்து வெளியிடறதால இன்னும் நல்ல அனுபவமா இருக்கும் குழந்தைகளுக்கு...என்னதான் புது டெக்னாலஜி வந்திருந்தாலும் இன்னும் அந்த 3D கண்ணாடிய மாத்தல பாருங்க.அப்ப சிகப்பு கலர் ஒரு பக்கம், நீலக்கலர் ஒரு பக்கம் இருக்கற கண்ணாடிய குடுத்தாங்க...இப்ப சிவாஜி,எம்.ஜி.ஆர் காலத்து பிரேம் வச்ச கருப்புக்கண்ணாடிதான் கொடுத்தாங்க...


படத்துல வர்ற காமெடிய விட கூட்டிட்டுப்போன தங்கமணிய இந்தக்கண்ணாடியோட பாக்கறதுதான் பெரிய காமெடி. பாப்பா வேற என்ன இந்தக் கண்ணாடியோட பாத்து பயந்துகிச்சு.கூட்டிட்டுப்போய் மந்திரிக்க வேண்டியதாப்போச்சு.(உன்ன எல்லாம் கண்ணாடி இல்லாம பாத்தாலும் பயமாதான் இருக்கும்)

புது முயற்சியா கதைச்சுருக்கத்தை டைட்டில்லயே சொல்லி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து திரில்லர் படம் எடுத்திருந்தாலும் பாடல்கள் படத்தோட வேகத்துக்கு தடையா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். ஒரு நல்ல மெலடி பாட்டு இருந்தாலும் அது படத்தோ ஒட்டல. நாங்க போன வார நாள்லயே வந்திருந்த கூட்டத்த பாத்தா படத்துக்கு போட்ட காச எடுத்திருப்பாங்கன்னுதான் தோணுது. அந்த உற்சாகத்துல அடுத்த பாகத்த இன்னும் சுவாரஸ்யமா எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.


செல்வராகவனோட "ஆயிரத்தில் ஒருவன்" பட கெட்டப்ல பார்த்திபன் கூட நடிச்சிருக்காரு.ஒரு படம் அப்டி நடிச்சிட்டா அதே மாதிரி கெட்டப் கொடுத்து கொல்லுவாங்க.

படத்துல வர்ற அம்புலிய விட இவங்க நடிப்ப பாக்கறப்பதான் எனக்கு பயமா இருந்துச்சு.10ரூவாய்க்கு நடிங்கன்னு சொன்னாக்கூட 100ரூவாய்க்கு நடிப்பாங்க...


படம் பாத்த நிறையபேர் அம்புலி வர்றப்ப பயங்கரமா கத்தி கூச்சல் போட்டாங்க...நான் கத்தவே இல்லயே...அம்புலி கூடவே வாழ்றவங்கடா நாங்க...(தங்கமணி ப்ளாக் படிக்காம இருக்கறது எவ்ளோ நல்லது நமக்கு) ஹி.ஹி..ஹி...

குழந்தைங்க பரீட்சை லீவு வரைக்கும் கூட ஓடும்ன்னு நெனைக்கிறேன்.மிஸ் பண்ணாம போய்ப்பாருங்க...(அம்புலி மட்டும் கிங்காங் படத்துல வர்ற குரங்கு  மாதிரியே இருக்கும்ன்னு குழந்தைகள முன்னாடியே தயார் படுத்திருங்க)

Post Comment

25.2.12

நானும் விகடனும்

இல்லல்ல...அது சரியா வராது.விகடனும் நானும்-ன்னுதான் சொல்லணும். அவங்கதான் சீனியர். இப்டியே போனா சீக்கிரமா அந்த பகுதிய என்னையும் எழுதச்சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.(எதுக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கறான்)

உலகப்பத்திரிக்கை வரலாற்றில் இரண்டாவது முறையாக விகடன் பெருமைப்பட்டுவிட்டது. (எப்படி..?) சமூகவலைத்தளங்களில் வரும் ஈர்க்கக்கூடிய கருத்துகளை ஆனந்தவிகடன் வலைபாயுதே என்ற தொடராக வெளியிட்டு வருவது உங்களுக்கு தெரிந்ததே...

ஒரு சமூக வலைத் தளங்களை கூட விடாமல் பங்களித்து சேவை செய்து வரும் (வெட்டிவேலை செய்யும்ன்னு சொல்றா டேய்) சேலம்தேவா அவர்களையும் (நான்தான்.. நான்தான்..) நீங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள். இல்லைன்னாலும் இப்ப தெரிஞ்சிக்கோங்க...

அத்திப்பூ பூப்பது போல் நான் சில தத்துவ முத்துகளை அவ்வப்போது உதிர்ப்பதுண்டு. போனவருடவாக்கில் முதல்முறையாக என் ட்விட் ஒன்று விகடனில் வந்து அதை நீங்கள் விழாவாக கொண்டாட நினைத்து அதை நான் வேண்டாமென்று மறுத்தது நினைவிருக்கிறதா..?! (இல்லை.அதுக்கு என்ன இப்ப..?) சரி..அதை விடுங்கள்.

இந்த வருடமும் விகடனுக்கு தோன்றியுள்ளது நாம் இந்த மேதையை (நான்தான்..நான்தான்) கவுரவித்து ஒரு வருடமாகி விட்டதே என்று இந்த வார இதழில் வலைபாயுதேவில் என்னுடைய அனுபவத்தில் விளைந்த ஒரு நல்முத்தை ஏற்றியுள்ளார்கள். படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விகடன் புத்தகத்தை வாங்கி படித்துக்கொள்ளுங்கள். (ஹி..ஹி...விகடன் விற்பனைக்கு ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு உதவி) (டேய்..இதெல்லாம் ரொம்ப ஓவர்.உன் ட்விட்ட போய் போட்டாங்க பாரு...அவங்களுக்கு இதுவும் வேணும்.இன்னமும் வேணும்)


இந்த ட்விட் என் சிந்தனையில் தோன்றிய விதத்தை தெரிந்து கொள்ள என் வாசகர்களாகிய நீங்கள் ஆவலாயிருப்பீர்கள். (நாங்க எப்படா சொன்னோம்..?!) உங்கள் விருப்பத்திற்கிணங்க அந்தப்பதிவு அடுத்த வாரத்திற்குள் உங்கள் பார்வைக்கு பதிவாக வரும். (ஹி..ஹி...டிரைலர்)

ஸ்வீட்(நீங்களே காசு கொடுத்து வாங்கி) எடுங்க...கொண்டாடுங்க... ஹி..ஹி...Post Comment

18.1.12

சர்க்கஸ்

இந்தமுறை பொங்கல் விடுமுறை நீண்ண்ண்ண்ட நாட்கள் இருந்ததுபோல் ஒரு உணர்வு.பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சியை விட்டால் வேறு போக்கிடம் இல்லாமல் போய்விட்டது.

காணும் பொங்கல் அன்று பெரியவர்கள், நண்பர்களை கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளாமல் தொலைக்காட்சியை கண்டு கொண்டு இருக்கிறோம்.

புதிதாக வந்த திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கலாம் என்றால் திரையரங்கத்தினர் ஒரு வாரத்திற்குள் போட்ட பணத்தை எடுக்கும் பொருட்டு விலையை அவர்கள் விருப்பத்திற்கு உயர்த்தி விடுவார்கள்..அதுவும் ரசிகர்கள் இடும் கூச்சலில் படம் பார்த்த திருப்தியே வராது.


இந்தமுறை பலவருடங்கள் கழித்து சர்க்கஸ் சென்றோம். சர்க்கஸின் கூரையில் உள்ள கிழிசல்களே அவர்களின் வறுமை நிலையை உணர்த்துகிறது. குழந்தைப்பருவத்திற்கு திரும்பிவிட்டாற்போன்று ஒரு உணர்வு. ஆனால், விலங்குகள் நலவாரியத்தின் புண்ணியத்தால் நான் சென்றபோது சர்க்கஸில் இருந்த விலங்குகள் இப்போது 10 சதவீதம் கூட இல்லை. 1 யானை,2 குதிரை,2 ஒட்டகம்,3 நாய்கள் இவை மட்டுமே காண முடிந்தது. இவைகளை விலங்குகள் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்களா தெரியவில்லை.அவைகளும் பார்க்க பரிதாபமான நிலையில்தான் இருந்தது.

பிழைப்புக்காக மனிதர்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தரத்தில் செய்யும் சாகச விளையாட்டுகளை காணும்போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. குள்ள மனிதர்களை பார்க்கும்போது அபூர்வசகோதரர்கள் கமல்தான் நினைவுக்கு வந்தார்.பரிகசிக்கும் இளைஞர்களை பொருட்படுத்தாமல் நிறைவாக சிரித்தமுகத்துடனும், குறைவான ஆடைகளுடனும் வந்த பெண்களின் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது. நீண்ட கத்தியை இருதயம் வரை சொருகுவது,கத்திப்படுக்கையின் மேல் படுப்பது.சைக்கிள் சாகசங்கள்,மரணகூண்டில்(அப்படிதான் அறிவித்தார்கள்) மோட்டார் சைக்கிள் சாகசம்,ஒரு சாகசக்காரர் 1 லிட்டர் தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் அதை வாய்வழியே அதை சிறிது சிறிதாக வெளியேற்றுகிறார்.இருவேறு வண்ணங்கள் கொண்ட தண்ணீரை குடித்து அதை தனித்தனியாக வெளியேற்றியது வியப்பூட்டுவதாக இருந்தது. (இந்தப்பயிற்சி யோகக்கலையின் மூலம் சாத்தியம் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் பகிரவும்)இப்படி இரண்டரை மணி நேரக்காட்சியை ஓட்டுவதற்கு பாடுபடுகிறார்கள்.

குழந்தைப்பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுறுத்துகிறது.என் மகளை யானை வரும் என்று சொல்லியே தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டேன்.உங்கள் ஊரில் சர்க்கஸ் நடைபெற்றால் நம்முடைய குழந்தைகளுக்காகவும்,சர்க்கஸில் உள்ள கலைஞர்களுக்காகவும் ஒருமுறை சென்று வாருங்கள். மகளுக்கு மகிழ்ச்சியுமாய்,மனதுக்கு நெகிழ்ச்சியுமாய் நேற்றைய பொழுது கழிந்தது.

குறிப்பு: பதிவில் இருக்கும் படங்கள் கூகிளின் வழியே எடுத்தது.சர்க்கஸ் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லையாம்.Post Comment

14.1.12

நண்பன்-அதிரடி விமர்சனம்

தேவாவின் தேடுதல் வலைப்பூவின் வாசகப்பெருமக்களுக்கும்(?!), ரசிககண்மணிகளுக்கும்(??!!)  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!!

குட் காம்பினேஷன்..!! :)
வருடம் பூராவும் திங்க புடிக்கற பொங்கல், பொங்கல் திருநாள் அன்னிக்கு மட்டும் புடிக்ககாது.ஏன்னா,அன்னிக்கே சாப்பாடே அதுதான்.(கொஞ்சமா தின்னா ஆகும்.) இதுவரை புரிபடாத ரகசியம் கோவில்ல கொடுக்கற பொங்கல் மட்டும் எப்டி அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு..?!

தீபாவளிக்கு ஒருமுறை,பொங்கலுக்கு ஒருமுறை பதிவு போடும்போது கூட என்னை விட்டு விலகாத ஃபாலோயர்ஸ்களை நினைத்தால் ரத்தக்கண்ணீர்.ச்சீ...ஆனந்தக்கண்ணீர் வருகிறது.(ரொம்ப பில்ட்அப் பண்ணி இருக்கறவங்களும் போய்டப்போறாங்கடா டேய்...)

ஜல்லிக்கட்டுக்கு இந்த தடவையும் 76 விதிமுறைகளை போட்டு தமிழர்களின் வீரத்தை உரசி பாக்கறாங்க..(டிவில ஜல்லிக்கட்டு பாக்கறதுக்கே இதுக்கு இவ்ளோ வீரமா..?!)
கொம்ப பாருங்க...குத்துனா டைரக்டா சொர்க்கம்தான்.  
7ம்அறிவு படத்துல சூர்யா க்ளைமாக்ஸ்ல அட்வைஸ் பண்றப்போ போகி பண்டிகையே நம்ம பழங்காலத்து பொக்கிஷங்களான ஓலைச்சுவடிகளை அழிக்கறதுக்கு வெள்ளைக்காரன் கண்டுபுடிச்சதுன்னு சொல்வாரே அதப்பத்தி என்ன நினைக்கறீங்க..?!(அப்பா..உருப்படியா ஒரு சந்தேகம் கேட்டாச்சு)


சட்டைய கழட்டுனா லைட்டா நான் கூட இப்டிதான் இருப்பேன். :)
சரி..4 பாரா தாண்டியும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லன்னு யோசிக்கிறிங்களா..?! (உன் பிளாக்ல அதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா..?!) இப்டி ஹாட்டாபிக் தலைப்பு வச்சாதான் உள்ள வருவீங்க அதுக்குதான்...கோச்சுக்காதிங்க... :) நண்பன் படம் நல்லா இருக்காம்ல...எல்லா விமர்சனங்களும் அததான் சொல்லுது. ஷங்கர் படம்ன்னா சும்மாவா..?! நான் எப்பயும் புதுப்படம் வந்தா தியேட்டரை விட்டு தூக்கறதுக்கு முதல் நாள்தான் பாப்பேன். முதல்நாள் போனா படம் பாக்கவே விட மாட்டானுங்க ரசிகர்கள். dts எபக்ட்ல விசில் அடிச்சே கொல்லுவானுங்க. So, நான் விமர்சனம் எழுதறதுக்குள்ள உலகத்தொலைக்காட்சியிலேயே போட்ருவாங்க... ALL IS LOL.  :)

Post Comment