சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

19.8.12

மதுபானக்கடை

தமிழகம் போற்றும்  வரலாற்று சிறப்பு வாய்ந்த காவியத்தை நேற்று பார்த்து விட்டேன்.சினிமாவை இயக்குனர்கள் அவர்களுடைய கருத்துகளை சொல்வதற்கான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதை பொழுதுபோக்கிற்காக தியேட்டருக்கு வரும் சாமான்யர்கள் யாரும் விரும்புவதில்லை.அந்தப்படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று ஓடுவதும் இல்லை.

குழந்தைகளுக்கு மருந்தில் தேன் தடவி கொடுப்பதை போல தமிழக அரசின் பொருளாதாரத்திற்கு துணை நிற்பவர்களுக்கான(?!) பெரும் குடி மகன்களின் ஒரு நாள் பார் வாழ்க்கையை களமாக வைத்து அதில் தற்போதைய சமூக நிலையையும்,மனிதர்களின் பல்வேறு முகங்களையும் யதார்த்தத்தை அதிகம் மீறாமல் காட்டிய விதம் பாராட்டுதலுக்குரியது.

பிறமொழி படங்களிலிருந்து காப்பி அடிக்கிறோம் என்ற கூச்சம் இல்லாமல் இயங்கும் இயக்குனர்கள் மத்தியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின்  உண்ணற்க கள்ளை கதையை அடிப்படையாக கொண்டது என்று குறிப்பிட்ட விதமும் பாராட்டத்தக்கது.

இதுவரை மருந்தில் தேன் என்ற கொள்கையை வைத்து படங்களை கொடுத்த எனக்குப்பிடித்த இயக்குனர்களான சிம்புதேவன்,ஜனநாதன் அவர்கள் வரிசையில் கமலக்கண்ணனும் சேர்ந்து விட்டார்.வாழ்த்துகள்...



பெட்டிசன் மணியாக நடித்த என்.டி.ராஜ்குமார் அவர்கள்தான் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார்.நடிப்பிலும்.பாடல்களிலும் கலக்கி எடுத்திருக்கிறார்.


வாய்ப்பிருந்தால் பார்த்து உணருங்கள்.

Post Comment

1 comment:

No Bad Words... தேவா பாவம்!!!