சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

23.3.11

ஒன் மேன் ஆர்மி..!!
எவன் எப்டி போனா எனக்கென்ன..?! இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். ஏன் இவன் பிளாக்குக்கு வந்ததுக்கு நம்மள இப்டி திட்றான்னு தப்பா நெனச்சிக்காதீங்க....ஹி.ஹி..ஹி... இப்படிதான் சுயநலமா மாறிகிட்டு வருது நம்ம உலகம். எத்தனையோ போர்கள்,இயற்கை பேரழிவுகள் வந்து மனுசங்க கஷ்டப்படறாங்க.. ஜப்பான் சுனாமியெல்லாம் பாத்தா ரொம்ப பாவமா இருக்குங்க...அறிவு அதிகமா இருக்கற மக்களான அவங்க அதை எதிர்கொண்ட விதத்தை பாத்தா சிலிர்ப்பா இருக்கு.நம்ம ஊர்ல இந்தமாதிரி ஏதாவது நடந்திருந்து இந்த மாதிரி நிவாரணம் கொடுக்கறதுக்கு ஏதாவது முகாம் போட்டாங்கண்ணா பத்து பேர் செத்து போற அளவுக்கு நெரிசல் உண்டாக்கிருவாங்க...ஆனா,அந்த பயபுள்ளைங்க இவ்ளோ நடந்தும் கட்டுப்பாட்டோட எப்டி இருக்காங்கன்னு தெரியல...இதெல்லாம் ஜீன்லயே வரணும் போலருக்கு.சீக்கிரமா இந்த அழிவிலிருந்து மீண்டு வருவாங்க...உயர்திரு.டிராபிக் ராமசாமி அவர்களை பத்தி பத்திரிக்கைகள்ல கேள்விப்பட்ருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.பொதுநலம் பொதுநலம்ன்னு இந்த அரசியல்வியாதிங்க கூவறாங்க பாருங்க... அதெல்லாம் டூப்.உண்மையிலயே இவர் செய்றதுதாங்க பொதுநலம்.நம்பல்லாம் ப்ளாக்ல ப்ரொபைலை மறைச்சி அரசியல்வாதிகள கன்னாபின்னான்னு திட்டி எழுதறோம்.ஆனா,இவரு வெளிப்படையா செஞ்ச பொதுநல காரியங்களால் இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடற அளவுக்கு ஆகிப்போச்சு. நம்மல்லாம் டிராபிக்ல மாட்டிக்கிட்டோம்ண்ணா நமக்கு BP எகிர்ற அளவுக்கு மத்தவங்கள திட்டுவோம்.ஆனா இவரு 75 வயசிலயும் சாலையில இறங்கி டிராபிக்க சரிபண்ண ஆரம்பிச்சிடுவாரு.பெயர்க்காரணம் இதுதான்.தனியாளா யாருக்கும் பயப்படமா பல சமூகநல வழக்குகளையும் வக்கீல்களே இல்லாமல் இவரே வாதாடி ஜெயிச்சிருக்காரு.ஏற்கனவே ஏதோ ஒரு தேர்தல்ல வேட்பாளரா நின்னு தோத்துப்போயிட்டாரு.இப்ப பரபரப்பான ஏரியாவான தியாகராயநகரில் சுயேட்சையாக நிக்கறாரு.அவரோட தைரியத்த நினைச்சு பெருமையாவும் ஆச்சர்யமாவும் இருக்கு.எப்படியும் தி.நகர்ல இருக்கற வணிகப்பெருந்தலைகள் இவர ஜெயிக்க விட மாட்டாங்க.சாதாரண பொதுஜனமா இருக்கும்போதே இவரோட குடைச்சல் தாங்கல...இன்னும் MLA ஆயிட்டாருண்ணா சொல்லவே வேண்டாம்.எனக்கு சேலத்திலதான் ஓட்டு.இவருக்காக எப்படியாவது போய் கள்ள ஓட்டாவது போடணும்ன்னு ஆசைப்படறேன்.

தேர்தல் சீஸன் களைகட்டுது.நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு வடிவேல் பண்ற காமெடி சிறப்பா இருக்கு.சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் தேர்தல் சம்பந்தமான (கீழே இருக்கற சுட்டியை கிளிக் பண்ணி) கவிதைய படிச்சி பாருங்க...செம நக்கல் பண்ணியிருப்பாரு அரசியல்வியாதிகளை.
அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்


Post Comment

4.3.11

கனா காணும் காலங்கள்..!!

எங்க வீட்டுக்கு பக்கத்துல காவலர்கள் பயிற்சி செய்ற கவாத்து மைதானம் இருக்கு. ஓடறது, சுடறது, தாவறது, கயிறு ஏறுதல் இந்த மாதிரி பயிற்சி எல்லாம் செய்வாங்க..அதாவது பணி நிரந்தரம் ஆவதற்கு முன்னால செய்வாங்களே அத சொன்னேன்.நிரந்தரம் ஆன பிறகு எங்க பயிற்சி செய்றாங்க..?! ஒரு சில பேர் தவிர எல்லாரும் 3 மாசம் 6 மாசம் ஆன புள்ளதாச்சி பொண்ணுங்க மாதிரிதான் திரிவாங்க...ஹி.ஹி..ஹி..     அவங்க பயிற்சி செஞ்சிட்டு இருக்கறத பாக்கும்போது என் நினைவுக்கு ஆல்அவுட், குட்நைட் எல்லாம் வந்துச்சு.. (அட..அதாங்க பிளாஸ்பேக். கொசுவத்தி புகை எனக்கு ஆகாது.ஹி.ஹி..)


ஒண்ணாம் வகுப்புலருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் வீட்டுக்கு பின்னாலயே இருக்கற ஒரு பள்ளிக்கூடத்துல படிக்கவச்சாங்க.5வருஷம் படிச்சாலும் 5000ரூ.க்கு மேல செலவு ஆகியிருக்காது.இப்ப ஆகற செலவ நினைச்சா வயித்த கலக்குது.டெர்ம் பீஸ்,நோட் பீஸ்,புக் பீஸ்,யூனிபார்ம் பீஸ்,பஸ் பீஸ்,ஷீ பீஸ்,சாக்ஸ் பீஸ்,டை பீஸ் இப்டி விதவிதமா பீஸ் போட்டு நம்ம பீஸ புடுங்கிருவாங்க...இதுல இந்த ஸ்கூல்காரங்க பள்ளிக்கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கணும்ன்னு போராட்டம் வேற பண்ணப்போறாங்களாம்.எலக்சன் வரப்போறதால தினம் ஒரு போராட்டம் நடக்குது.(குழந்தைக்கு இப்பதான் 8 மாசம் ஆகுது.எல்.கே.ஜிக்கு இப்பவே அட்மிசன் புக் பண்ணி வச்சிரணும்.அட்வான்ஸா புக் பண்ணி வச்சா ஏதாவது ஆடி தள்ளுபடி மாதிரி பீஸ குறைப்பாங்கன்னு நினைக்கிறேன்.ஹி.ஹி..)

அதுவும் இப்ப State Board,Matriculation,CBSE,Anglo-Indian,சமச்சீர்கல்வின்னு என்னென்னமோ சொல்றாங்க...நான் படிச்ச ஸ்கூலுக்கு நம்ம இஷ்டத்துக்கு போலாம்... வரலாம். வாத்தியாருங்களுக்கு விசிறி விடறது,காலை அமுக்கி விடறது,போண்டா டீ வாங்கிட்டு வந்து தர்றதுன்னு அப்படியே ஓடிப்போச்சு...அதுவரைக்கும் வெளிஉலகத்தையே பாத்தது கிடையாது.ஆறாம் வகுப்புக்கு வீட்லருந்து ஒரு 5 கி.மீ தள்ளி இருக்கற பெரிய பள்ளிக்கூடத்துல சேத்தறதுக்காக கூட்டிட்டு போனாரு அப்பா.

இப்ப இருக்கற மாதிரி எல்.கே.ஜி அட்மிஷனுக்கே அப்பாஅம்மா படிச்சிருக்கணும்,பரிட்சை எழுதணும்ன்ற மாதிரி காமெடியான ரூல்ஸ் எல்லாம் அப்ப கிடையாது.ஐந்தாம் வகுப்பு வரைக்கும் வீடு மாதிரியே இருக்கற ஸ்கூல்ல படிச்சுட்டு திடீர்ன்னு அவ்ளோ பெரிய ஸ்கூல பாத்ததும் எவ்ளோ பெரிய்ய்ய்ய ஸ்கூலு....(பஞ்சதந்திரம் தேவயானி ஸ்டைலில் படிக்கவும்)அப்டின்னு வாய பொளந்து பாத்துட்டு இருந்தேன்.

அட்மிசனுக்கு பிரின்சிபல் ரூமூக்கு கூட்டிட்டு போனாரு அப்பா...பிரின்சிபல் ஒரு திருக்குறள் சொல்லுன்னு சொன்னாரு...பயத்துல நாக்கு படுத்துகிச்சு.பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்ன்ற மாதிரி காலெல்லாம் நடுங்குது.ஈவில்டெட் சினிமாவ இருட்டுல தனியா பாக்கற எபக்ட்ல பேந்த பேந்த முழிச்சிகிட்டு இருக்கேன்.ஊமையான்னு கேட்டாரு பிரின்சிபல்.ச்சே..ச்சே... நல்லா பேசுவான் சார்... அப்டின்னு அப்பா பக்கத்துல நின்னுகிட்டு துப்பு கொடுக்கறேன்ற பேர்ல அகர அகர ன்னு திருக்குறளோட முதல் வார்த்தைய சொல்லியும் நாக்கு நகர மாட்டேங்குது.துப்பார்க்கு துப்பார்க்கு-ன்னு சொன்னா நிஜாம் பாக்கு,ரோஜா பாக்குதான் நெனப்புக்கு வருது.கெரகம்...பத்து நாள் மனப்பாடம் பண்ணிட்டு போன அந்த குறள் மட்டும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது.பிரின்சிபல் அவரு விதிய நொந்துகிட்டே அட்மிசன் கொடுத்தாரு..வேற வழி...

கனா காணுவோம்...

Post Comment