எங்க வீட்டுக்கு பக்கத்துல காவலர்கள் பயிற்சி செய்ற கவாத்து மைதானம் இருக்கு. ஓடறது, சுடறது, தாவறது, கயிறு ஏறுதல் இந்த மாதிரி பயிற்சி எல்லாம் செய்வாங்க..அதாவது பணி நிரந்தரம் ஆவதற்கு முன்னால செய்வாங்களே அத சொன்னேன்.நிரந்தரம் ஆன பிறகு எங்க பயிற்சி செய்றாங்க..?! ஒரு சில பேர் தவிர எல்லாரும் 3 மாசம் 6 மாசம் ஆன புள்ளதாச்சி பொண்ணுங்க மாதிரிதான் திரிவாங்க...ஹி.ஹி..ஹி.. அவங்க பயிற்சி செஞ்சிட்டு இருக்கறத பாக்கும்போது என் நினைவுக்கு ஆல்அவுட், குட்நைட் எல்லாம் வந்துச்சு.. (அட..அதாங்க பிளாஸ்பேக். கொசுவத்தி புகை எனக்கு ஆகாது.ஹி.ஹி..)
ஒண்ணாம் வகுப்புலருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் வீட்டுக்கு பின்னாலயே இருக்கற ஒரு பள்ளிக்கூடத்துல படிக்கவச்சாங்க.5வருஷம் படிச்சாலும் 5000ரூ.க்கு மேல செலவு ஆகியிருக்காது.இப்ப ஆகற செலவ நினைச்சா வயித்த கலக்குது.டெர்ம் பீஸ்,நோட் பீஸ்,புக் பீஸ்,யூனிபார்ம் பீஸ்,பஸ் பீஸ்,ஷீ பீஸ்,சாக்ஸ் பீஸ்,டை பீஸ் இப்டி விதவிதமா பீஸ் போட்டு நம்ம பீஸ புடுங்கிருவாங்க...இதுல இந்த ஸ்கூல்காரங்க பள்ளிக்கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கணும்ன்னு போராட்டம் வேற பண்ணப்போறாங்களாம்.எலக்சன் வரப்போறதால தினம் ஒரு போராட்டம் நடக்குது.(குழந்தைக்கு இப்பதான் 8 மாசம் ஆகுது.எல்.கே.ஜிக்கு இப்பவே அட்மிசன் புக் பண்ணி வச்சிரணும்.அட்வான்ஸா புக் பண்ணி வச்சா ஏதாவது ஆடி தள்ளுபடி மாதிரி பீஸ குறைப்பாங்கன்னு நினைக்கிறேன்.ஹி.ஹி..)
அதுவும் இப்ப State Board,Matriculation,CBSE,Anglo-Indian,சமச்சீர்கல்வின்னு என்னென்னமோ சொல்றாங்க...நான் படிச்ச ஸ்கூலுக்கு நம்ம இஷ்டத்துக்கு போலாம்... வரலாம். வாத்தியாருங்களுக்கு விசிறி விடறது,காலை அமுக்கி விடறது,போண்டா டீ வாங்கிட்டு வந்து தர்றதுன்னு அப்படியே ஓடிப்போச்சு...அதுவரைக்கும் வெளிஉலகத்தையே பாத்தது கிடையாது.ஆறாம் வகுப்புக்கு வீட்லருந்து ஒரு 5 கி.மீ தள்ளி இருக்கற பெரிய பள்ளிக்கூடத்துல சேத்தறதுக்காக கூட்டிட்டு போனாரு அப்பா.
இப்ப இருக்கற மாதிரி எல்.கே.ஜி அட்மிஷனுக்கே அப்பாஅம்மா படிச்சிருக்கணும்,பரிட்சை எழுதணும்ன்ற மாதிரி காமெடியான ரூல்ஸ் எல்லாம் அப்ப கிடையாது.ஐந்தாம் வகுப்பு வரைக்கும் வீடு மாதிரியே இருக்கற ஸ்கூல்ல படிச்சுட்டு திடீர்ன்னு அவ்ளோ பெரிய ஸ்கூல பாத்ததும் எவ்ளோ பெரிய்ய்ய்ய ஸ்கூலு....(பஞ்சதந்திரம் தேவயானி ஸ்டைலில் படிக்கவும்)அப்டின்னு வாய பொளந்து பாத்துட்டு இருந்தேன்.
அட்மிசனுக்கு பிரின்சிபல் ரூமூக்கு கூட்டிட்டு போனாரு அப்பா...பிரின்சிபல் ஒரு திருக்குறள் சொல்லுன்னு சொன்னாரு...பயத்துல நாக்கு படுத்துகிச்சு.பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்ன்ற மாதிரி காலெல்லாம் நடுங்குது.ஈவில்டெட் சினிமாவ இருட்டுல தனியா பாக்கற எபக்ட்ல பேந்த பேந்த முழிச்சிகிட்டு இருக்கேன்.ஊமையான்னு கேட்டாரு பிரின்சிபல்.ச்சே..ச்சே... நல்லா பேசுவான் சார்... அப்டின்னு அப்பா பக்கத்துல நின்னுகிட்டு துப்பு கொடுக்கறேன்ற பேர்ல அகர அகர ன்னு திருக்குறளோட முதல் வார்த்தைய சொல்லியும் நாக்கு நகர மாட்டேங்குது.துப்பார்க்கு துப்பார்க்கு-ன்னு சொன்னா நிஜாம் பாக்கு,ரோஜா பாக்குதான் நெனப்புக்கு வருது.கெரகம்...பத்து நாள் மனப்பாடம் பண்ணிட்டு போன அந்த குறள் மட்டும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது.பிரின்சிபல் அவரு விதிய நொந்துகிட்டே அட்மிசன் கொடுத்தாரு..வேற வழி...
கனா காணுவோம்...
..(பஞ்சதந்திரம் தேவயானி ஸ்டைலில் படிக்கவும்)..
ReplyDeleteபாவங்க தேவயானி...
2வது வெட்டு
ReplyDeleteதேவா.. 2 பதிவுகளுக்கிடையே போதிய இடைவெளி வேணும்கறதுதான் உங்க பாலிஸியா?
ReplyDeleteஅப்பா பக்கத்துல நின்னுகிட்டு துப்பு கொடுக்கறேன்ற பேர்ல அகர அகர ன்னு திருக்குறளோட முதல் வார்த்தைய சொல்லியும் நாக்கு நகர மாட்டேங்குது.துப்பார்க்கு துப்பார்க்கு-ன்னு சொன்னா நிஜாம் பாக்கு,ரோஜா பாக்குதான் நெனப்புக்கு வருது.கெரகம்...பத்து நாள் மனப்பாடம் பண்ணிட்டு போன அந்த குறள் மட்டும் ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது.பிரின்சிபல் அவரு விதிய நொந்துகிட்டே அட்மிசன் கொடுத்தாரு..வேற வழி...
ReplyDelete......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அது ஒரு கனா காலம்தான்!
சரி சரி...உங்க பாப்பா அட்மிசன் க்கு இப்பவே க்யூ ல நின்னா தான் சரியா வரும்...கிளம்புங்க..கிளம்புங்க..:))
ReplyDeleteவாக்களித்து வருகையை பதிவு செய்து கொள்கிறேன்
ReplyDelete@ சங்கவி
ReplyDeleteநீங்க தேவயானி ரசிகரா பாஸ்..?!
@ சி.பி.செந்தில்குமார்
அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாஸ் நீங்கதான் பதிவு குடோன் ஆச்சே..!!
@ Chitra
உங்களுக்கு இதுமாதிரி நடந்திருக்காதுன்னு நினைக்கிறேன்..!! :)
@ ஆனந்தி..
டாங்ஸ் மேடம்..!! :)
@ ரஹீம் கஸாலி
ReplyDeleteவாங்க கஸாலி.. நன்றிங்க.. :)
//துப்பார்க்கு-ன்னு சொன்னா நிஜாம் பாக்கு,ரோஜா பாக்குதான் நெனப்புக்கு வருது //
ReplyDeleteஹா ஹா.. :)
yenga indha blogukkum andha police trainingukkum yenna sammandham ...
ReplyDeleteyenga indha blogukkum andha police trainingukkum yenna sammandham ...
ReplyDelete@ Balaji saravana
ReplyDeleteசிரிங்க சார்... சிரிங்க... :(
நல்ல அனுபவம்!:-)
ReplyDeleteஒரு திருக்குறள் கூட சொல்லத் தெரியல--- நியெல்லாம் 1999 பரிட்சையிலே எப்படிடா First Mark எடுத்தே??? How it Possible???
ReplyDeleteவந்தேண்டா ப்ளாக்காரன் அடடா உங்க இடுகையை இப்போ படிக்க போறேன்
ReplyDelete