சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

27.10.10

புண்ணியம் தேடி...

காசிக்கு எல்லாம் போக வேணாம்...
நம்ம கணினியிலேயே அதை தேடிக்கலாம்.

எப்படி?

மனநலம் பாதிக்கபட்டவங்களை தாயுள்ளத்துடன்
ஆதரிக்கற நம்ம மதுரை இளைஞர் "நேசம் கிருஷ்ணனுக்கு"
 உங்களால் உதவி பண்ணமுடியும்.

இவர பத்தி விகடன்ல கூட ஒரு கட்டுரை வந்திருக்கு.

அப்பப்ப இந்த வெளிநாட்டுக்காரங்க நல்லதெல்லாம் கூட பண்ணுவாங்க...
" CNN HERO OF THE YEAR "
அப்டின்னு ஒரு வாக்கெடுப்பு நடக்குது.
இதுல ஜெயிச்சா அந்த இளைஞர் இன்னும் அவங்களுக்கு உதவலாம்.

நீங்க ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அவருக்கு இந்த LINK ல போய்
அவருக்கு ஒரு ஓட்டு மட்டும் போடுங்க.உங்களுக்கு புண்ணியமா போகும்.


இவரைப்பற்றி வேறுசில பதிவுகள்...
ஜாக்கிசேகர்
வந்தேமாதரம்
எஸ்கா

படிச்சிட்டு எனக்கு ஓட்டு போடாம போறமாதிரி இதுக்கும் பண்ணிடாதீங்க...

எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்.. 
ஒரு நாலஞ்சு கள்ள ஓட்டு போடுங்களேன்...
அரசியல்வியாதிகளுக்கு ஓட்டு போடறத விட இவருக்கு போடலாம்.

Post Comment

11.10.10

பாட்டுப்பாடவா...

அய்யய்யோ வேணாம்..!!
இந்த பதிலைத்தான் வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க..!

சின்ன வயசுலருந்து பாடறதுன்னா ரொம்ப ஆசை.
ஆனா,அது கேக்கறவங்களுக்கும் இருக்கணுமே...

தயவு செஞ்சு பாடாதே..!! வேணாம்..!! விட்ரு...!!
கழுதை கத்தற மாதிரியே இருக்கு..!!


தூங்கிருவோம்...குழந்தை பயந்துக்கும்...


இப்டி எல்லாம் சொல்லியே ஒரு மைக்டைசனை ச்சீ...
மைக்கேல் ஜாக்ஸன முடக்கி வச்சுட்டாங்க...


நம்மளும் ஒரு SPB, யேசுதாஸ், ஹரிஹரன் மாதிரி
ஆகலாம்ன்னு பாத்தா யாராவது ஒருத்தர் மாதிரிதான்ப்பா
ஆக முடியும்ன்னு நக்கல் வேற...
SPB மாதிரி ஆகலாம்ன்னா, அவரு மாதிரி உடம்புதான்
வளருதே தவிர குரல் வந்த மாதிரி தெரியல...

அந்த மைக் மேல அப்டி ஒரு ஆசை..!!


மைக் மோகன்,மைக் முரளி படத்த எல்லாம் இதுக்காகவே
பலமுறை பாத்து இருக்கேன்.எங்க ஊரு பண்டிகை எல்லாத்துலயும்
ஆஸ்தான அறிவிப்பாளர் நான்தான்..!!
(பெரிய SUN TV, NDTV அறிவிப்பாளர் கூட இப்டி பந்தா பண்ண மாட்டான்)நம்ம பாடறத காசு கொடுத்து கேக்க வேணாம்..!!
காது கொடுத்து கேக்கலாம் இல்ல..!! கேக்க மாட்டாங்க..!!
பொறமை புடிச்ச பய புள்ளைங்க..!!


இப்பல்லாம் எந்த சேனல போட்டாலும் விதவிதமா
நிறையபாட்டு போட்டிங்க நடக்குது..!!
அதுல பாடறவங்களுக்கு முதல்விதிமுறையே
நல்லா பாட தெரியுதோ இல்லையோ..??!!
பாத்துட்ருக்கறவங்க எல்லாத்தையும் நல்லா
அழுவ வைக்க தெரியணும்.
நல்லா ஓஓஓஓ...ன்னு கதறி கதறி அழுவணும்.
அப்பதான் ஏதோ டிஆர்பி ரேட்டிங் ஏறுமாம்.
அதுவும் இந்த குழந்தைங்கள இவங்க பண்ற டார்ச்சர் இருக்குதே..!!
அந்த குழந்தை போட்டில இருந்து வெளிய போறதயே ஏதோ செவ்வாய்
கிரகத்துக்கு போற மாதிரி பில்டப் பண்ணுவாங்க..!!ரொம்ப கொடுமைங்க..


குழந்தைங்க பாடறதுக்கு ஏதோ அயோத்திவழக்குக்கு
தீர்ப்பு சொல்ற மாதிரி 3 நீதிபதிகள் வேற....

"குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் 
   மழலைச் சொல் கேளாதவர்"

அப்டின்னு வள்ளுவர் சொல்ற மாதிரி குழந்தைங்க எப்படி பாடினாலும் அழகுதான்... ஆனா,இந்த நீதிபதிங்க குடுப்பாங்க பாருங்க கமெண்ட்..!!
ரொம்ப கேவலமா இருக்கும்..!!


ஏழு கட்டை,எட்டு கட்டை -ன்னு சொல்றாங்களே நம்ம டிரை பண்ணி பாப்போம்ன்னு பாத்தா வீட்ல விறகு கட்டைய எடுத்து அடிக்க வர்றாங்க...


சாதகம்.. சாதகம்... அப்டின்னு சொல்றாங்களே..!!
நம்ம ஜாதகத்த பத்திதான் ஏதோ சொல்றாங்க போல இருக்கு அப்டின்னு ஜோசியக்காரங்ககிட்ட போனா அதுக்கு நீங்க இங்க வரக்கூடாதுங்க..!! கழுத்தளவு தண்ணியில நின்னு சரிகமபதநிச சொல்லணும்.
ஆனா,வந்ததுக்கு ஒண்ணு சொல்றேன்..
உங்களுக்கு தண்ணியில கண்டம் அப்டின்னு சொல்லி
நம்மள அடக்கிருவாங்க....


இப்டிதாங்க நிறைய பேரோட திறமை வீட்டுக்குள்ளேயே முடங்கி போச்சு..!!
நீங்கனாச்சும் உங்க பிள்ளைங்க திறமைய கண்டுபிடிச்சு அத பாராட்டுங்க..!!
அப்பா..!! எப்டியோ வெட்டியா பதிவு போடாம மெஸேஜ் சொல்லியாச்சு..!!


Post Comment

4.10.10

காமன்வெல்த் 2010 (இது என் நண்பரின் கற்பனை)

2003-ம் ஆண்டில் 2010-க்கான காமன்வெல்த் போட்டிகள்
நடத்த இந்தியாவும் கனடாவும் போட்டிபோட்டன.

கனடா ஒட்டு போடும் நாடுகளுக்கு தலா 36லட்சம் ரூபாய் தருவதாகசொன்னது.
ஆனால்,இந்தியாவோ,தலா 72 லட்சம் ரூபாய் கொடுத்து
போட்டி நடத்த உரிமை பெற்றது.

2007-ம் ஆண்டு போட்டிக்காக முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதிகள் எல்லாமே அட்வான்ஸ் கமிஷனாக
சேரவேண்டியவர்களுக்கு போய் சேர்ந்தது.

உருப்படியாக நடந்த முதல் காரியம் டெல்லி விமான நிலையத்தில்
மூணாவது டெர்மினல் திறக்கப்பட்டது.
உருப்படியில்லாமல் போக முதல் காரணம் சுரேஷ்கல்மாடி நியமிக்கப்பட்டது.

2010 ஜீன் வரை மைதானங்கள் தயார் நிலையில் இல்லை.
அதற்கு மைதானங்களை சரியான நேரத்தில் எங்களிடம்
ஒப்படைக்கவில்லை என்று சுரேஷ்கல்மாடி கூறினார்.
பிறகு மீடியாக்கள் தயவால் ஊழல் வெட்டவெளிச்சமானது.


நிலைமை மோசமானதால் வேறு வழியில்லாமல் 
மன்மோகன் களத்தில் இறங்கினார்.
மன்மோகனும் காமன்வெல்த் பொறுப்பாளர்களும் போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது நடந்த உரையாடல் ஒரு கற்பனை.


மன்மோகன்சிங் :   இன்னிக்கு நான் லீவ்..!! அதனால் போட்டி நடைபெறும் இடங்களை சுற்றி பார்க்கலாம்.

கில் :  ஒகே சார்!!

சுரேஷ்கல்மாடி : (கில் காதில்) அவசரப்பட்டு ஓகே சொல்லாதீங்க..!!
 PM வரும்போது கான்கீரிட் இடிஞ்சு போச்சுன்னா என்னா பண்றது??

கில் :  என்ன பண்றது நாமதான் தள்ளி நிக்கணும்.

மன்மோகன்சிங் :  நிறைய இடத்தில ஒழுவுதுன்னு சொன்னாங்களே..!!
 அதுக்கு என்ன பண்ணியிருக்கிங்க?

கல்மாடி :  தினசரி 300ரூ. வாடகைக்கு 4000  வாளி ஆர்டர் பண்ணியிருக்கோம் சார்..!! ஒழுவுற இடத்தில எல்லாம் அதை வைப்போம்.

கில் :  நல்ல ஐடியா..!!

மன்மோகன்சிங் :  மண்ணாங்கட்டி!! உடனே அந்த ஆர்டரை கேன்சல் பண்ணுங்க!! பக்கெட் விலையே 100 ரூபாதான்!! 300 ரூ வாடகையா??

கில் :  வேற என்ன சார் பண்றது ?

மன்மோகன்சிங் :  உடனே தார்ப்பாய் வாங்கி எல்லா இடத்திலயும் மேல போட்டு கவர் பண்ணுங்க..!!

கல்மாடி :  உடனே செஞ்சுர்றேன் சார்..!!

மன்மோகன்சிங் :  கருமம்! கருமம்!! உங்கள எல்லாம் வச்சி வேல வாங்கறதுக்குள்ள பேசாம வாத்தியாராவே இருந்திருக்கலாம்.
நரசிம்மராவ் சார டெய்லி நினச்சி பாக்க வேண்டியதா இருக்கு.
அவராலதானே மந்திரியாகி இவ்ளோ கஷ்டம்..!!


மன்மோகன்சிங் :  (ஷீலா தீட்சித்திடம்)    
வயசான காலத்தில ஏம்மா உங்களுக்கு இந்த வேலை..!! 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நிதி சுமார் 800 கோடி இதுல ஏம்மா போட்டீங்க?

ஷீலா தீட்சித் :  எவ்ளோ பணம் குடுத்தாலும் பத்தலன்னு சொல்றாங்க..!! அதனால சும்மா ஒரு ரொடேசன்தான் சார்!! 
இவ்ளோ பிரச்சினைக்கும் மணிசங்கர் ஐயர்தான் சார் காரணம்!!
 மனசுல வச்சிருக்கறது எல்லாம் மீடியாவுல கொட்டிட்டாரு!! 

                                                                                        
மன்மோகன்சிங் :   3 வருஷம் விளையாட்டுத்துறை அமைச்சரா இருந்து என்னதான் செஞ்சாரு??
2009 எலக்சன்ல தோத்த விரக்தியில இப்படியா பண்றது?

ஷீலாதீட்சித் :  கவலைபடாதீங்க சார்..!! அணு ஆயுத ஒப்பந்தத்தையே சமாளிச்சுட்டோம்..!!இதையும் எப்படியாவது சமாளிச்சுடலாம்..!!ஷீலாதீட்சித் :  பண்றதெல்லாம் பண்ணிட்டு தலையில கைய வச்சிகிட்டா எப்படி?காங்கிரஸ்காரரா இருக்கறதால எதுவும் பண்ண முடியல..!!


மன்மோகன்சிங் :  (மீடியாவிடம்) எவ்வளவோ பிரச்சினைகள சகிச்சுகிட்டு இருக்கீங்க..!! உங்கள கையெடுத்து கும்படறேன் 
தயவு செய்து இதை பெரிசு பண்ணாம நாட்டோட மானத்தை காப்பாத்துங்க..!! உங்களுக்கு புண்ணியமா போகும்..!!Post Comment