சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

4.10.10

காமன்வெல்த் 2010 (இது என் நண்பரின் கற்பனை)

2003-ம் ஆண்டில் 2010-க்கான காமன்வெல்த் போட்டிகள்
நடத்த இந்தியாவும் கனடாவும் போட்டிபோட்டன.

கனடா ஒட்டு போடும் நாடுகளுக்கு தலா 36லட்சம் ரூபாய் தருவதாகசொன்னது.
ஆனால்,இந்தியாவோ,தலா 72 லட்சம் ரூபாய் கொடுத்து
போட்டி நடத்த உரிமை பெற்றது.

2007-ம் ஆண்டு போட்டிக்காக முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அந்த நிதிகள் எல்லாமே அட்வான்ஸ் கமிஷனாக
சேரவேண்டியவர்களுக்கு போய் சேர்ந்தது.

உருப்படியாக நடந்த முதல் காரியம் டெல்லி விமான நிலையத்தில்
மூணாவது டெர்மினல் திறக்கப்பட்டது.
உருப்படியில்லாமல் போக முதல் காரணம் சுரேஷ்கல்மாடி நியமிக்கப்பட்டது.

2010 ஜீன் வரை மைதானங்கள் தயார் நிலையில் இல்லை.
அதற்கு மைதானங்களை சரியான நேரத்தில் எங்களிடம்
ஒப்படைக்கவில்லை என்று சுரேஷ்கல்மாடி கூறினார்.
பிறகு மீடியாக்கள் தயவால் ஊழல் வெட்டவெளிச்சமானது.


நிலைமை மோசமானதால் வேறு வழியில்லாமல் 
மன்மோகன் களத்தில் இறங்கினார்.
மன்மோகனும் காமன்வெல்த் பொறுப்பாளர்களும் போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது நடந்த உரையாடல் ஒரு கற்பனை.


மன்மோகன்சிங் :   இன்னிக்கு நான் லீவ்..!! அதனால் போட்டி நடைபெறும் இடங்களை சுற்றி பார்க்கலாம்.

கில் :  ஒகே சார்!!

சுரேஷ்கல்மாடி : (கில் காதில்) அவசரப்பட்டு ஓகே சொல்லாதீங்க..!!
 PM வரும்போது கான்கீரிட் இடிஞ்சு போச்சுன்னா என்னா பண்றது??

கில் :  என்ன பண்றது நாமதான் தள்ளி நிக்கணும்.

மன்மோகன்சிங் :  நிறைய இடத்தில ஒழுவுதுன்னு சொன்னாங்களே..!!
 அதுக்கு என்ன பண்ணியிருக்கிங்க?

கல்மாடி :  தினசரி 300ரூ. வாடகைக்கு 4000  வாளி ஆர்டர் பண்ணியிருக்கோம் சார்..!! ஒழுவுற இடத்தில எல்லாம் அதை வைப்போம்.

கில் :  நல்ல ஐடியா..!!

மன்மோகன்சிங் :  மண்ணாங்கட்டி!! உடனே அந்த ஆர்டரை கேன்சல் பண்ணுங்க!! பக்கெட் விலையே 100 ரூபாதான்!! 300 ரூ வாடகையா??

கில் :  வேற என்ன சார் பண்றது ?

மன்மோகன்சிங் :  உடனே தார்ப்பாய் வாங்கி எல்லா இடத்திலயும் மேல போட்டு கவர் பண்ணுங்க..!!

கல்மாடி :  உடனே செஞ்சுர்றேன் சார்..!!

மன்மோகன்சிங் :  கருமம்! கருமம்!! உங்கள எல்லாம் வச்சி வேல வாங்கறதுக்குள்ள பேசாம வாத்தியாராவே இருந்திருக்கலாம்.
நரசிம்மராவ் சார டெய்லி நினச்சி பாக்க வேண்டியதா இருக்கு.
அவராலதானே மந்திரியாகி இவ்ளோ கஷ்டம்..!!


மன்மோகன்சிங் :  (ஷீலா தீட்சித்திடம்)    
வயசான காலத்தில ஏம்மா உங்களுக்கு இந்த வேலை..!! 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நிதி சுமார் 800 கோடி இதுல ஏம்மா போட்டீங்க?

ஷீலா தீட்சித் :  எவ்ளோ பணம் குடுத்தாலும் பத்தலன்னு சொல்றாங்க..!! அதனால சும்மா ஒரு ரொடேசன்தான் சார்!! 
இவ்ளோ பிரச்சினைக்கும் மணிசங்கர் ஐயர்தான் சார் காரணம்!!
 மனசுல வச்சிருக்கறது எல்லாம் மீடியாவுல கொட்டிட்டாரு!! 





                                                                                        
மன்மோகன்சிங் :   3 வருஷம் விளையாட்டுத்துறை அமைச்சரா இருந்து என்னதான் செஞ்சாரு??
2009 எலக்சன்ல தோத்த விரக்தியில இப்படியா பண்றது?

ஷீலாதீட்சித் :  கவலைபடாதீங்க சார்..!! அணு ஆயுத ஒப்பந்தத்தையே சமாளிச்சுட்டோம்..!!இதையும் எப்படியாவது சமாளிச்சுடலாம்..!!



ஷீலாதீட்சித் :  பண்றதெல்லாம் பண்ணிட்டு தலையில கைய வச்சிகிட்டா எப்படி?காங்கிரஸ்காரரா இருக்கறதால எதுவும் பண்ண முடியல..!!


மன்மோகன்சிங் :  (மீடியாவிடம்) எவ்வளவோ பிரச்சினைகள சகிச்சுகிட்டு இருக்கீங்க..!! உங்கள கையெடுத்து கும்படறேன் 
தயவு செய்து இதை பெரிசு பண்ணாம நாட்டோட மானத்தை காப்பாத்துங்க..!! உங்களுக்கு புண்ணியமா போகும்..!!








Post Comment

9 comments:

  1. மன்மோஹன்சிங்: மாடி நடைபாதை இடிஞ்சு போச்சே, எப்படி?
    கல்மாடி : அதான் (கருங்)கல்மாடிக்கு பதில் இரும்புமாடி கட்டிட்டேனே!

    சகாதேவன்

    ReplyDelete
  2. ரொம்ப சூப்பர்ங்க..
    கலக்குங்க..

    ReplyDelete
  3. நல்ல சிந்திக்கும் படியான பதிவு ............சிரிக்கும் படியும் இருந்தது

    ReplyDelete
  4. கலக்கல் தேவா! நல்ல கற்பனை

    ReplyDelete
  5. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post.html

    நன்றி

    ReplyDelete
  6. ரொம்ப சூப்பர்ங்க..

    ReplyDelete
  7. eppadi unagalaala mattum ippadieelma mudiyuthu

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!