சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

11.10.10

பாட்டுப்பாடவா...

அய்யய்யோ வேணாம்..!!
இந்த பதிலைத்தான் வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க..!

சின்ன வயசுலருந்து பாடறதுன்னா ரொம்ப ஆசை.
ஆனா,அது கேக்கறவங்களுக்கும் இருக்கணுமே...

தயவு செஞ்சு பாடாதே..!! வேணாம்..!! விட்ரு...!!
கழுதை கத்தற மாதிரியே இருக்கு..!!


தூங்கிருவோம்...குழந்தை பயந்துக்கும்...


இப்டி எல்லாம் சொல்லியே ஒரு மைக்டைசனை ச்சீ...
மைக்கேல் ஜாக்ஸன முடக்கி வச்சுட்டாங்க...


நம்மளும் ஒரு SPB, யேசுதாஸ், ஹரிஹரன் மாதிரி
ஆகலாம்ன்னு பாத்தா யாராவது ஒருத்தர் மாதிரிதான்ப்பா
ஆக முடியும்ன்னு நக்கல் வேற...
SPB மாதிரி ஆகலாம்ன்னா, அவரு மாதிரி உடம்புதான்
வளருதே தவிர குரல் வந்த மாதிரி தெரியல...

அந்த மைக் மேல அப்டி ஒரு ஆசை..!!


மைக் மோகன்,மைக் முரளி படத்த எல்லாம் இதுக்காகவே
பலமுறை பாத்து இருக்கேன்.எங்க ஊரு பண்டிகை எல்லாத்துலயும்
ஆஸ்தான அறிவிப்பாளர் நான்தான்..!!
(பெரிய SUN TV, NDTV அறிவிப்பாளர் கூட இப்டி பந்தா பண்ண மாட்டான்)நம்ம பாடறத காசு கொடுத்து கேக்க வேணாம்..!!
காது கொடுத்து கேக்கலாம் இல்ல..!! கேக்க மாட்டாங்க..!!
பொறமை புடிச்ச பய புள்ளைங்க..!!


இப்பல்லாம் எந்த சேனல போட்டாலும் விதவிதமா
நிறையபாட்டு போட்டிங்க நடக்குது..!!
அதுல பாடறவங்களுக்கு முதல்விதிமுறையே
நல்லா பாட தெரியுதோ இல்லையோ..??!!
பாத்துட்ருக்கறவங்க எல்லாத்தையும் நல்லா
அழுவ வைக்க தெரியணும்.
நல்லா ஓஓஓஓ...ன்னு கதறி கதறி அழுவணும்.
அப்பதான் ஏதோ டிஆர்பி ரேட்டிங் ஏறுமாம்.
அதுவும் இந்த குழந்தைங்கள இவங்க பண்ற டார்ச்சர் இருக்குதே..!!
அந்த குழந்தை போட்டில இருந்து வெளிய போறதயே ஏதோ செவ்வாய்
கிரகத்துக்கு போற மாதிரி பில்டப் பண்ணுவாங்க..!!ரொம்ப கொடுமைங்க..


குழந்தைங்க பாடறதுக்கு ஏதோ அயோத்திவழக்குக்கு
தீர்ப்பு சொல்ற மாதிரி 3 நீதிபதிகள் வேற....

"குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் 
   மழலைச் சொல் கேளாதவர்"

அப்டின்னு வள்ளுவர் சொல்ற மாதிரி குழந்தைங்க எப்படி பாடினாலும் அழகுதான்... ஆனா,இந்த நீதிபதிங்க குடுப்பாங்க பாருங்க கமெண்ட்..!!
ரொம்ப கேவலமா இருக்கும்..!!


ஏழு கட்டை,எட்டு கட்டை -ன்னு சொல்றாங்களே நம்ம டிரை பண்ணி பாப்போம்ன்னு பாத்தா வீட்ல விறகு கட்டைய எடுத்து அடிக்க வர்றாங்க...


சாதகம்.. சாதகம்... அப்டின்னு சொல்றாங்களே..!!
நம்ம ஜாதகத்த பத்திதான் ஏதோ சொல்றாங்க போல இருக்கு அப்டின்னு ஜோசியக்காரங்ககிட்ட போனா அதுக்கு நீங்க இங்க வரக்கூடாதுங்க..!! கழுத்தளவு தண்ணியில நின்னு சரிகமபதநிச சொல்லணும்.
ஆனா,வந்ததுக்கு ஒண்ணு சொல்றேன்..
உங்களுக்கு தண்ணியில கண்டம் அப்டின்னு சொல்லி
நம்மள அடக்கிருவாங்க....


இப்டிதாங்க நிறைய பேரோட திறமை வீட்டுக்குள்ளேயே முடங்கி போச்சு..!!
நீங்கனாச்சும் உங்க பிள்ளைங்க திறமைய கண்டுபிடிச்சு அத பாராட்டுங்க..!!
அப்பா..!! எப்டியோ வெட்டியா பதிவு போடாம மெஸேஜ் சொல்லியாச்சு..!!Post Comment

23 comments:

 1. புகைப்படங்களுக்குத் தகுந்த வர்ணனைகள் . ஒவ்வொன்றும் சிரிப்பை அள்ளித் தெளிக்கிறது . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 2. சிரிக்க வைத்து இறுதியில் சிந்திக்க வைத்துள்ளீர்கள். நம்ம ஊர் பேரை காப்பாத்துங்க

  ReplyDelete
 3. நல்ல பதிவு! கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம் தேவா.

  ReplyDelete
 4. @ பனித்துளி சங்கர்

  நன்றி..!! அடிக்கடி வாங்க..!!

  ReplyDelete
 5. @ LK

  வாங்கண்ணே..!! காப்பாத்திருவோம்..!!

  ReplyDelete
 6. @ அருண்பிரசாத்

  வருகைக்கும்,விமர்சனத்திற்கு நன்றி..!!திருத்திக்கொள்கிறேன்..!!

  ReplyDelete
 7. கலக்கல் பதிவு.... அசத்திட்டீங்க!

  ReplyDelete
 8. நகைச்சுவையான நடை அருமை.

  ReplyDelete
 9. @ Chitra

  வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி..!!

  ReplyDelete
 10. @ கலாநேசன்

  நன்றிண்ணே..!!

  ReplyDelete
 11. நல்லா இருக்கு .........பாட்டு பாடவா ன்னு கேட்டுகிட்டு கடைசி வரைக்கும் படவே இல்லை ..........

  ReplyDelete
 12. சூப்பர் தேவா..,

  இதே மாதிரி பல கலகல
  உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்..

  ReplyDelete
 13. @ இம்சை அரசன் பாபு

  நம்ம பாடறத கேக்கறதுக்கு கூட ஒருத்தர் இருக்காருன்னு நினைச்சா ஒரே அழுவாச்சியா வருது...
  உங்க போன் நம்பர் குடுங்க சார்..!!மிஸ்டு கால் விடுவேனாம்..!!நீங்க போன் பண்ணுவிங்களாம்..!!நான் விடிய விடிய பாடுவேன்..!!OK வா??!!

  ReplyDelete
 14. // ஏழு கட்டை,எட்டு கட்டை -ன்னு சொல்றாங்களே
  நம்ம டிரை பண்ணி பாப்போம்ன்னு பாத்தா வீட்ல
  விறகு கட்டைய எடுத்து அடிக்க வர்றாங்க... //

  சே.. அடிக்காம விட்டுடாங்களோ..

  நாலு சாத்து சாத்தியிருந்தா
  பாட முடியலையேன்னு இவ்ளோ
  Feeling-ஆ ஒரு பதிவு எழுதுவீங்களா..??

  :-)

  ReplyDelete
 15. @ வெங்கட்

  எல்லாம் உங்க ஆசிதான் சார்..!! VAS Member-ஆ இருந்திட்டு இது கூட பண்ணலன்னா எப்டி?

  வெங்கட் சாருக்குதான் நம்ம மேல எவ்ளோ பாசம்!!??

  ReplyDelete
 16. வசனங்கள் மிக அருமை.

  ReplyDelete
 17. படம், வசனம், பதிவு எல்லாமே அருமை அருமை!

  ReplyDelete
 18. @ சசிகுமார் & எஸ்.கே

  வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி..!!

  ReplyDelete
 19. Nice...பாடுரி பாடுரி பாடுரி .....எங்க பாடு ..பங்காளி கடைசி வரைக்கும் படவே இல்லையே ... cool !!! nice pics..

  ReplyDelete
 20. @ GSV

  பாட விட மாட்றாங்கன்னுதான் இந்த பதிவே போட்ருக்கேன்..!! இதுல நீங்க வேற கடுப்ப கிளப்பிகிட்டு..!!

  ReplyDelete
 21. சிரிக்க வைத்து இறுதியில் சிந்திக்க வைத்துள்ளீர்கள். அருமை.
  L.K கார்த்திகின் ஊரா அப்போ கலக்குங்க நீங்களும். வாழ்த்துக்கள்..

  http://niroodai.blogspot.com/

  ReplyDelete
 22. ம்...நல்லா இருக்கே உங்க நகைசுவை....தொடரட்டும்....வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 23. @ அன்புடன் மலிக்கா & Kousalya

  வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி..!!

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!