சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

2.11.10

தீபாவளி ஸ்பெஷல்..!!

தீபாவளி வரப் போவுது..!!
பலகாரம்,பட்டாசு, துணி மணியெல்லாம் வாங்கியாச்சா..?!
(Money இருந்தாதான் துணி எடுக்க முடியும்)

குழந்தைங்களா இருக்கற வரைக்கும் புடிக்கற பட்டாசு
இப்பல்லாம் புடிக்க மாட்டேங்குது..!! வயசாயிடுச்சோ..?!
ஸ்வீட் சாப்பிடவும் பயமா இருக்கு..!!
சக்கரவியாதி சளித்தொந்தரவு பயம்தான்..!!

கேப்பு டுப்பாக்கி,ஊசிவெடி, ஓலைவெடி, லட்சுமிவெடி, சரஸ்வதி வெடி,
வெங்காய வெடி,புஸ்வாணம் கம்பி மத்தாப்பு, சங்குசக்கரம்,
இந்த மாதிரி தமிழ் பேருங்க வச்சதெல்லாம் அந்தக்காலம்..!!

Bloom,Golden Dawn,Blue Wonder,Jasmine Drops,Jewel of India,Mystical Night,Canon Balls,Speed 200 ஏதோ இங்கிலீஷ் பட பேருங்க மாதிரியே இருக்குல்ல..!!
 இதெல்லாம் புதுசா வந்திருக்கற பட்டாசுங்களாம்..!!

 பட்டாசு கடைக்கு போனா டிசைன் டிசைனா பேர் எல்லாம் சொல்வாங்க..!!
நம்ம பயபுள்ளைங்கள கூப்ட்டு போனா எது இருக்கறதுலயே பெரிசா இருக்குமோ அதைதான் வேணும்ன்னு கேக்குமுங்க..!!


 விலைய கேட்டா நமக்குள்ள அணுகுண்டெல்லாம் வெடிக்கும்..!!

வெங்காயவெடின்னு ஒண்ணு இருக்குங்க..!! செம சவுண்ட்டா இருக்கும்..!! தேங்காய கீழ அடிக்கற மாதிரி அத செவுத்துல அடிக்கனும்.
அது விக்கறது சட்டப்படி குற்றம்.அதனால,ஈஸியா கிடைக்காது.
அத வாங்கறதுக்கு ஒசாமாபின்லேடன் ஏதோ அணுகுண்டு வாங்கறதுக்கு போடற மாதிரி பிளான் எல்லாம் போடுவானுங்க நம்ம ஊரு பசங்க...

நாங்க பட்டாசு வெடிக்கறத பாத்து ஊரே கதிகலங்கும்..!!


உடனே இவரு பண்ற மாதிரி பில்டப்பா நெனச்சராதீங்க..!!
சரவெடிய தோள்ல போட்டு வெடிப்பான்..!!
அணுகுண்ட கேட்ச் புடிச்சு வெடிப்பான்ன்னு
கனவு எல்லாம் காணக் கூடாது..!!

ஊசி பட்டாசு வெடிக்கறதுக்கே, இந்த சிலம்பாட்டம் ஆடுவாங்களே..!!
அந்த நீளத்துக்கு ஊதுவத்தி கேப்பேன்னா பாத்துக்கோங்களேன்..!!
இந்த புஸ்வாணம் இருக்கே நம்ம பத்தவெக்கும்போது வெடிக்காது..!!
என்னாச்சுன்னு டெஸ்ட் பண்ணப்போகும்போது
நம்ம மூஞ்சிலதான் வெடிக்கும்..!!

டிவியில இந்திய தொலைக்காட்சியில முதன்முதலா
எத்தன படங்கள் வரப்போவுதுன்னு தெரியல..!!


சரி போகட்டும் நம்ம விஷயத்துக்கு வரேன்
 (அப்ப இதுவரைக்கும் வரவே இல்லியா..??!!)
நம்ம பதிவர்கள் எல்லார் வீட்டுக்கும் வந்து
பட்டாசு தரணும்ன்னுதான் ஆசை..!!
ஆனா பாருங்க நான் கொஞ்சம் பிஸி..!!
அதனால  இந்த லிங்க கிளிக் பண்ணி உங்க
வாண்டுங்களுக்கெல்லாம் பட்டாசு கொடுத்துருங்க..!!
சின்னபுள்ளத்தனமா நீங்க வெடிக்ககூடாது சொல்லிபுட்டேன்..!!
பாத்துபுட்டு கஞ்சப்பயல்,எச்சில் கையால் காக்கை ஓட்டாதவர் அப்டின்னு மரியாதையாக பின்னூட்டம் எல்லாம் போடக்கூடாது..!! ஓகே..!!

அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

Post Comment

8 comments:

 1. நீங்கள் தந்த பட்டாசுக்கு நன்றி

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தேவா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. @ அருண்பிரசாத்,chitra,TERROR-PANDIYAN(VAS)

  நன்றி..!! பட்டாசு சவுண்ட் கம்மியா வச்சு வெடிங்க..!ஹி.ஹி..ஹி...

  ReplyDelete
 4. இன்ட்லி ஓட்டுப்பட்டையை காணோம். அந்த வெப்சைட்டும் ஓப்பன் ஆக மாட்டேங்குது...

  ReplyDelete
 5. @ தமிழ்த்தோட்டம்

  வருகைக்கு நன்றி..!!

  ReplyDelete
 6. @ yeskha

  இந்த இண்ட்லி காரங்களுக்கு நம்ம கூட வெளாடறதே வேலையாப் போச்சு..!!

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!