சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

14.11.10

இது என்னோட தினம்..!!ஹி.ஹி..ஹி... குழந்தைகள் தினத்த சொன்னேங்க..!
எனக்கு ஒரு குழந்த இருந்தாலும் நானும் இன்னும்
ஒரு குழந்த மாதிரிதான்..!! நம்புங்கப்பா..!!

குழந்தைகள் உலகமே ஒரு சொர்க்கமுங்க..!!
உங்களுக்கு எவ்ளோ கவலைகள் இருந்தாலும்
அவங்கள கொஞ்ச நேரம் பாத்துட்டு இருங்க..!!
 எல்லாத்தையும் மறக்கடிச்சுடும் அவங்க குறும்புகள்..!!
குழந்தைகளாட்டத்தின் கனவையெல்லாம்
அந்தக் கோலநாட்டிடைக் காண்பீரே..!!
இழந்த நல்லின்பங்கள் மீட்குறலாம்..!!
நீர் ஏகுதிர் கற்பனை நகருக்கே..!!

எல்லாத்தையும் பாடின பாரதி குழந்தைகளை பத்தியும் பாடியிருக்காரு..!!

அப்படிப்பட்ட குழந்தைங்களையும் கடத்தி 
கொல்றானுங்கன்னா அவனுங்க மனுசனுங்களே இல்ல..!!

"பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"

குழந்தைங்கள பாதுகாக்கறத விட்டுட்டு அரசு ''குழந்தைகள் தினம்''ன்னு கொண்டாடுறதுல அர்த்தமே இல்ல..!!

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..!!


மனுசனுக்கு இருக்கற எந்த கெட்ட குணமும் குழந்தைகளுக்கு கிடையாது..!! நாமதான் அவங்களுக்கு கத்துத் தர்றோம்..!!

நல்லதை சொல்லி தருவோம்..!!
குழந்தைங்கள கொண்டாடுவோம்..!!குட்டிஸ்ங்க எல்லாத்துக்கும் ஹேப்பி சில்ரன்ஸ் டே..!!
( இப்பல்லாம் தமிழ்ல வாழ்த்து சொன்னா குழந்தைங்களுக்கு 
புரியறதுல்ல..!! தமிழை கத்துக்கொடுங்கப்பா..!!)

Post Comment

19 comments:

 1. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நம் தின வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 3. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..!!

  போட்டோ எல்லாம் சூப்பரா இருக்கு..
  நாங்க தான் வேற வழி இல்லாம
  Net-ல இருந்து போட்டோ எடுத்து
  போட்றோம்..

  ஆனா நீங்க ஒரு Professional Photographer
  நீங்க எதுக்கு Net-ல இருந்து போட்டோ
  தேடி போடணும்..?

  சொந்தமா க்ளிக்கி இருக்கலாமே..!

  ReplyDelete
 4. @ வெங்கட்

  கல்யாண வேலைகளா சுத்திட்டு இந்த மாதிரி டிபரண்டா ட்ரை பண்ணமுடியல..!! இனிமே நான் எடுத்த படங்களையும் பதிவில உபயோகிக்கிறேன்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..!!

  ReplyDelete
 5. @ LK,கலாநேசன்

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..!!

  ReplyDelete
 6. @தேவா

  //எனக்கு ஒரு குழந்த இருந்தாலும் நானும் இன்னும்
  ஒரு குழந்த மாதிரிதான்..!! நம்புங்கப்பா..!!//

  டெய்லி ரோட்டு கடைல போய் குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, கமர்கட்டு எல்லாம் வாங்கி சாப்பிட்டா நீங்க குழந்தையா??

  ReplyDelete
 7. @தேவா

  //கல்யாண வேலைகளா சுத்திட்டு இந்த மாதிரி டிபரண்டா ட்ரை பண்ணமுடியல..!! இனிமே நான் எடுத்த படங்களையும் பதிவில உபயோகிக்கிறேன்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..!!//

  குழந்தை இருக்கு சொல்றிங்க அப்புறம் என்ன மறுபடி கல்யாண வேலை.. உங்க தங்கமணி நம்பர் ப்ளீஸ்...

  ReplyDelete
 8. //தமிழை கத்துக்கொடுங்கப்பா//

  அப் கோர்ஸ், வி மஸ்ட் டூ இட், ஐ வில் ட்ரை!
  :)

  ReplyDelete
 9. @ TERROR-PANDIYAN(VAS)
  "டெய்லி ரோட்டு கடைல போய் குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, கமர்கட்டு எல்லாம் வாங்கி சாப்பிட்டா நீங்க குழந்தையா??"

  வேற என்ன சாப்பிட்டா குழந்தைன்னு ஒத்துக்குவிங்க..?!

  ReplyDelete
 10. @ TERROR-PANDIYAN(VAS)
  "குழந்தை இருக்கு சொல்றிங்க அப்புறம் என்ன மறுபடி கல்யாண வேலை.. உங்க தங்கமணி நம்பர் ப்ளீஸ்..."

  என்ன கல்யாணத்துக்கு அனுப்பி வைக்கிறதே
  தங்கமணிதான்..!!ஏன்னா,என்னோட வேலை திருமண ஒளிப்பதிவாளர்..!!

  ReplyDelete
 11. @ பெயர் சொல்ல விருப்பமில்லை

  //அப் கோர்ஸ், வி மஸ்ட் டூ இட், ஐ வில் ட்ரை!
  :)//

  குட், கீப் இட் அப்..!! :))

  ReplyDelete
 12. பிரொபஷனல் போட்டோகிராப்பரா? - அப்போ முதல்ல வெங்கட்டை ஒரு லேட்டஸ்ட் போட்டோ எடுத்து அனுப்புங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோவையே போட்டு சீன் போட்டுட்டு இருக்கார்

  ReplyDelete
 13. எத்தனை நாளைக்குதான் குழந்தையாவே இருப்பீங்க.. ஹி ..ஹி ..

  ReplyDelete
 14. தேவா............ பிப்ரவரி 14 காதலர் தினம்..... நவம்பர் 14 குழந்தைகள் தினம்......... ரெண்டுக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு........ என்னன்னு சொல்லு பாப்போம்..............

  ReplyDelete
 15. @ அருண்பிரசாத்

  இப்பவும் ரஜினி மாதிரி(!!??) இளமையாதான் இருக்காரு..!!ஹா.ஹா..ஹா...!!

  ReplyDelete
 16. @ கே.ஆர்.பி செந்தில்

  யாராவது நம்மள தாத்தான்னு சொல்ற வரைக்கும் மட்டும்..!!OK-வா சார்..?

  ReplyDelete
 17. @ yeskha

  குழந்தைன்னு சொன்ன பிறகும் தப்பு தப்பா கேள்வி கேக்கறான் பாருங்க..!!

  ReplyDelete
 18. தேடல் தொடரட்டும்...

  ReplyDelete
 19. @ philosophy prabhakaran

  கண்டிப்பாக தொடரும் பிரபாகரன்..!!
  வருகைக்கு நன்றி..!! :-))

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!