சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

25.11.10

மாதா. .பிதா... கூகிள்....!!

இன்னும் கொஞ்சகாலத்தில இப்டிதான் சொல்லுவாங்க போல இருக்கு..!!
இணையத்தை தொடக்க காலத்தில் உபயோகிக்கும் போது எதப் பத்தி கேட்டாலும் இந்த கூகிளார் சொல்றாரேன்னுட்டு
ஒரே ஆச்சரியமா இருக்கும்..!!

என்னோட ஸ்கூல் வாத்தியாருங்க எல்லாம் நினைவுக்கு வர்றாங்க..!!
எங்க ஸ்கூல்ல பாடம் நடத்திட்டுருக்கற ஒரு சில 
வாத்தியாருங்ககிட்ட சார்..! ஒரு சந்தேகம்ன்னு எந்திரிச்சாலே கன்னாபின்னான்னு திட்டுவாங்க..!!
சாக்பீஸ கொண்டு அடிப்பாங்க..!!
டஸ்டரை நம்ம மூஞ்சில எறிவாங்க..!!
ஏண்ணா..?? அவருக்கே தெரியாது..?!ஒரு சப்ஜெக்ட் நடத்திட்டு இருக்கற வாத்தியாருகிட்ட
வேற சப்ஜெக்ட் பத்தி கேட்டு பாருங்க..!!
உங்கள தீவிரவாதி மாதிரியே பாப்பாங்க..!!
நமக்கு மட்டும் ஆறு சப்ஜெக்ட் கொடுத்து கொல்றாங்களே..!?
இவரு ஒரு சப்ஜெக்ட் மட்டும் படிச்சி எப்டி வாத்தியாரு
ஆகியிருப்பாருன்னு ரொம்ப புத்திசாலித்தனமா யோசிப்பேன்..!!

பாடம் ரொம்ப போரடிச்சதுன்னா எந்திரிச்சி
எசகுபிசகா சந்தேகம் கேட்டா வாத்தியாரே
நம்மள வெளிய அனுப்பிருவாரு..!!நவீனயுகத்துல எட்டப்பன்கள் யாருங்கன்னா கிளாஸ் லீடருங்கதான்..!!
தூங்கறதுக்குண்னே ஸ்கூலுக்கு வர்ற ஆசிரியர்கள் கூட இருக்காங்க..!!
அவங்க தூங்கிட்டு இருக்கும்போது அவனவன் என்ன பண்ணான்னு
போட்டுக் கொடுக்கறதுக்குண்ணே ஒரு கிளாஸ் லீடருன்னு ஒருத்தன் இருப்பான். நான் முதல்ல இவனதான் தாஜா பண்ணி வச்சுக்குவேன்.
ஹி.ஹி..ஹி...டீ,காப்பி,போண்டா,வடை வாங்கி தர்றதுக்குண்ணே
சில பேர் இருப்பானுவ அவனுங்கதான் லீடர் வராதப்ப உதவி லீடருங்க..!!

வீட்டுக்காரம்மா திட்னா அந்த எரிச்சலை நம்மகிட்ட வந்து காட்றது..!! வாத்தியாரு பிள்ள மக்குன்னு சொல்ற மாதிரி அவரு புள்ளைங்க பெயிலா போனா அந்த காண்டுல நம்மள வந்து அடி பின்றது..!!
இவரு ஸ்கூல்ல ஒழுங்கா சொல்லித்தராம அவரு நடத்தற
 டீயூசனுக்கு வர சொல்றது..!! எத்த்த்தததன..!!

இதுக்கு மேலயும் இவங்க பண்ற அலப்பறை எல்லாம் அப்பப்ப
நாளிதழ்கள்ல நீங்களே பாத்திருப்பீங்க...

ஆனா நம்ப கூகிளார் எதைக் கேட்டாலும் தர்றாரு..!!
எப்படி கேட்டாலும் தர்றாரு..!! (யாருப்பா அங்க கடன் கேக்கறது..?)
அதனால நான் இனிமே மேல சொன்ன தலைப்புக்கு
மாறிடலாம்ன்னு இருக்கேன்.அப்ப நீங்க..?!

மனசாட்சியோடு பிளாக்கர் உபயோகிக்கறவங்க
எல்லாம் ஓட்டு போடுங்க சொல்லிபுட்டேன்..!!

Post Comment

20 comments:

 1. என்ன சொன்னாலும் குருவிற்கு உள்ள இடம் மாறாது

  ReplyDelete
 2. @ LK

  அண்ணே அந்த //ஒருசில// மட்டும் பெருசா போட்ருக்கேன் பாருங்க..!!

  ReplyDelete
 3. டேய்.......... நம்ம காமர்ஸ் சாரத்தானே சொல்ற........

  (அண்ணே..... கண்டு புடிச்சிட்டனே...... அக்கா....... கண்டு புடிச்சிட்டனே......)

  ReplyDelete
 4. //சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...//

  அதே

  ReplyDelete
 5. உங்கள் எழுத்து நடை அருமை...

  ReplyDelete
 6. மனசாட்சியோடு பிளாக்கர் உபயோகிக்கறவங்க
  எல்லாம் ஓட்டு போடுங்க சொல்லிபுட்டேன்..!!


  ..... YES SIR!

  ReplyDelete
 7. உண்மைதான் சார்....

  ReplyDelete
 8. //மனசாட்சியோடு பிளாக்கர் உபயோகிக்கறவங்க
  எல்லாம் ஓட்டு போடுங்க சொல்லிபுட்டேன்..!! //

  போட்டாச்சு போட்டாச்சு ...

  ReplyDelete
 9. @ yeskha

  டேய்..!! நான் பத்தாவதே தாண்டல..!! என்கிட்ட வந்து காமர்ஸ் போபர்ஸ்ன்னுட்டு கடுப்ப கிளப்பாத..!! :-))

  ReplyDelete
 10. @ வார்த்தை

  வார்த்தைன்னு போட்டுட்டு ஒரு வார்த்தையில முடிச்சிட்டீங்க ..!! :-D

  ReplyDelete
 11. @ philosophy prabhakaran

  இப்டி எல்லாம் சொல்லி என்ன கூச்சப்பட வைக்காதீங்க..!! :-))))

  ReplyDelete
 12. @ Chitra

  வருகைக்கு நன்றி..!!

  ReplyDelete
 13. @ Thomas Ruban

  தாமஸீம் நம்மள மாதிரி அனுபவிச்சிருப்பாரு போல..!! :-))

  ReplyDelete
 14. @ வெங்கட்

  வாங்க தல..!!

  ReplyDelete
 15. @ எஸ்.கே

  நன்றிங்க..!! :-))

  ReplyDelete
 16. @ கலாநேசன்

  அண்ணே ஏதோ கோபத்துல போடற மாதிரி இருக்கு..!! :-)))

  ReplyDelete
 17. >>>
  மனசாட்சியோடு பிளாக்கர் உபயோகிக்கறவங்க
  எல்லாம் ஓட்டு போடுங்க சொல்லிபுட்டேன்..!!

  I HAVE NO MANASAATCHI. HI HI HI

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!