சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

20.12.10

பக்தி சிகாமணி..!!

ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு..!!
நீங்கல்லாம் வருத்தத்துல இருக்கறது தெரியுது..!!
(நாங்க எப்ப சொன்னோம்ன்னு கேட்டு என்ன அழ வைக்க கூடாது)

ஒரு நல்ல விஷயத்தோடஆரம்பிக்கலாம்..!!
எப்பயும் நம்ம பலபேருக்கு உத்வேகத்தை கொடுக்கறவங்களா இருக்கணும்.
எப்படி..?  பதிவுலகத்தில இணையணும்ன்னு ஆசைப்படறவங்க
நம்ம "அமீரகச் சிங்கம்"தேவா அவர்களோட பதிவுகளை
படிச்சாங்கன்னா இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு
படிக்கறதோட நிறுத்திக்குவாங்க..!!
ஆனா,இந்த சேலம் "சிங்கம்" (!?)உயர்திரு.தேவா அவர்களோட பதிவுகள படிச்சாங்கன்னா உடனே ஒரு பிளாக் ஆரம்பிச்சிருவாங்க..!!
எப்படி..?! இவனெல்லாம் எழுதறப்போ நாம இன்னும்
நல்லாவே எழுதலாம்ன்னு நினைப்பாங்க..!!
இப்படிதான் உத்வேகம் தரணும்.ஹி.ஹி..ஹி...

நகரம் எல்லாம் நரகம் ஆயிட்டு வருது..!!
(சத்தியமா சுந்தர்.சி படத்த சொல்லலீங்க)
கார்த்திகை மார்கழி மாசம் வந்தாலே நம்மாளுங்களுக்கு
பக்தி கரை புரண்டு ஓடும்..!!

திருப்பாவையும்,திருவெம்பாவையும்இயற்றியஆழ்வார்களும்,
நாயன்மார்களும் பயப்படற அளவுக்கு நம்மாளுங்க 
எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு எல்லாம் போடுவாங்க..!!

சாமிய காலங்காத்தால எழுப்புகிறேன் பேர்வழின்னுட்டு 
இந்த பாட்டு எல்லாம் போடறாங்களாம்.
சாமி எந்திரிக்கறாரோ இல்லையோ நம்மள எழுப்பிருவானுங்க..!!
கோயில்ல அவனும் தூங்காம, நல்லா தூக்கம் வர்றவனையும்
தூங்க விடாம , காலையில 4 மணிக்கே அந்த கிழிஞ்சு போன ஸ்பீக்கர்ல அரதப்பழசான பக்தி பாடல்களை போடுவானுங்க பாருங்க..!!
பக்தி வரும்ன்னு நினைக்கறீங்க..!! கோபம் கோபமா வரும்..!!

வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாள் கோவில் போனீங்களா..?!
வருஷாவருஷம் பக்தி அதிகமாயிட்டே வருது..!!
பெருமாளுக்கும்(?!)  வருமானம் அதிகமாயிட்டே இருக்கு..!!
சொர்க்கவாசல் திறந்தா ஏன் இந்த அரசியல்வியாதிங்க
முதல்ல போறாங்க தெரியுமா..?!
அவங்கல்லாம் இப்டிதான் சொர்க்கத்துக்கு போகமுடியும்..!!
உண்மையில நரகத்துக்குதான் போவாங்க..!!

பல வருஷமா சபரிமலைக்கு போயிட்டு இருந்த நம்பியார் சாமி கூட
அவர குருசாமின்னு சொல்லிகிட்டதில்ல..!!
 ஆனா இங்க லோக்கல் சாமிங்க இருக்கும் பாருங்க நேத்து வரைக்கும் டாஸ்மாக்கே கதின்னு கிடந்தவங்க மாலை போட்டுகிட்டு ஊர் பூரா
நோட்டீஸ்ல குருசாமின்னு அவங்களே போட்டுக்குவாங்க..!!
அய்யப்ப சாமிக்கே ரூல்ஸ் சொல்லித் தருவாங்க இவங்க..!!

கடவுள் முன்னால எல்லாரும் சமம்ன்னு சொல்லுவாங்க..!!
ஆனா பாருங்க..!!
இந்த மனுச பயபுள்ளைங்க சிறப்பு தரிசனம்ன்ற பேர்ல
300 கொடுத்தா முன்னால பாக்கலாம்.
100 கொடுத்தா பின்னால பாக்கலாம்ன்னு
சாமிய வச்சு பிஸினஸ் பண்ணுதுங்க..!!
பக்தி எப்ப வியாபாரமாச்சோ அப்பவே நான் கோவிலுக்கு போறத விட்டுட்டேன்ன்னு நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில சொல்லியிருப்பாரு.அவரோட கருத்தைதான் நான் வழிமொழிகிறேன்.

"கணவனே கண்கண்ட தெய்வம்"
"மணாளனே மங்கையின் பாக்கியம்"
"கல்லானாலும் கணவன்
புல் அடிச்சாலும் (ச்சீ..நாக்கு குளறிடிச்சி) புல்லானாலும் புருஷன்"
 பழமொழி எல்லாம் கேக்கறப்ப ஓரே சிரிப்புசிரிப்பா வரும் எனக்கு..!!
இவ்ளோ சொல்றாங்களே என்னையே தினமும் கும்புட்டுக்கம்மான்னு சொன்னா கேக்க மாட்டாங்க எங்க வீட்டு தங்கமணி..!!
கோயிலுக்குதான் போவேன்னு அடம் பிடிப்பாங்க..!!
இதுக்கப்புறம் பூஜை நடக்கும் பாருங்க..!! சாமிக்கு இல்லீங்க எனக்கு..!!

நான் மனசையே கோவிலா வச்சுருக்கறதால(?!) கோவிலுக்கு போறதே பொங்கலுக்கும் புளியோதரைக்கும்தான். அதுலயும் இந்த ஆஞ்சனேயர் கோவில் வடை அவ்ளோ திவ்யமா இருக்கும்.எங்கயும் இந்த டேஸ்ட் வரமாட்டேங்குது .ஹி.ஹி..ஹி...

கோவிலுக்கு போனா அமைதி தானா வரணும்.
ஆனா,இப்பல்லாம் அங்க நடக்கறத பாத்தா கோபம்தான் வருது..!!
போன வாரம் வேண்டுதலுக்காக ஒரு கோவிலுக்கு போயிருந்தோம். உண்மையிலேயே மனசு ரொம்ப அமைதியா இருந்துச்சு.நகரத்தோட(நரகத்தோட..) பாதிப்புகள் இன்னும் அங்க வரல ஒரு அழகிய கிராமம். ஒரு அழகிய கோவில்.படங்கள் கீழே...


கரூர்ல இருந்து ஒரு 15 KM தள்ளி வெஞ்சமாங்கூடலூர்
(வெண்சாமரக்கூடலூர்)என்கிற ஊர்ல இருக்கு இந்த கோவில்.


Post Comment

12 comments:

 1. கோவில் அமைப்பே அமைதியா இருக்கரமாதிரி இருக்கு தேவா...

  ReplyDelete
 2. // இவ்ளோ சொல்றாங்களே என்னையே தினமும் கும்புட்டுக்கம்மான்னு சொன்னா கேக்க மாட்டாங்க எங்க வீட்டு தங்கமணி..!! //

  அவ்வ்வ்வ்... முடியல...

  ReplyDelete
 3. உங்கள அவங்க கும்பிடலைன்னாலும் நல்லா அர்ச்சனை பன்னுவாங்களே...

  ReplyDelete
 4. என்ன திடீர்னு பக்தி முத்திப்போச்சு...

  (ஒரு வெங்காய பக்தியும் கிடையாது. புள்ளைய தூக்கிட்டு வேண்டுதலுக்காக கோயிலுக்கு போயிருப்பே... ரைட்டா? போன இடத்துல நாலு போட்டோவ எடுத்துட்டு வந்து போட்டுட்டு ஒரு பதிவு தேத்திற்றது)

  ReplyDelete
 5. நானே கஷ்டப்பட்டு ஒரு பதிவ தேத்துனா இவன் உண்மைய போட்டு உடைக்கிறானே..!! இவன என்ன பண்ணலாம்..?!

  ReplyDelete
 6. @ அருண்குமார்

  ஆம்.தியானம் செய்வதற்கு ஏற்ற இடம்..!!
  வருகைக்கு நன்றி..!!

  ReplyDelete
 7. @ ம.தி.சுதா

  வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரரே..!! :-)

  ReplyDelete
 8. @ philosophy prabhakaran

  உங்களுக்கும் ஒருநாள் கல்யாணம் ஆகுமில்ல..!! கூப்பிடுங்க வந்து சந்தோஷப்படறோம்..!! ஹி.ஹி..ஹி...

  ReplyDelete
 9. @ பிரியமுடன் ரமேஷ்

  அனுபவம் பேசுகிறது..!!ஹி.ஹி..ஹி...

  ReplyDelete
 10. @ சி.பி.செந்தில்குமார்

  நான் உங்க விமர்சனங்களுக்கு ரசிகன்..!! வருகைக்கு நன்றி சி.பி..!!

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!