சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

13.12.11

"தலை"க்கு மேல வேலை..!!

வேற ஒண்ணும் இல்ல...ஹேர்கட் பண்ணப்போறதுதான் அது.



                                       
சலூன் கடைக்குப் போகாதவங்க ஒண்ணு மொட்டைத்தலையா இருக்கணு ம்.






                                       

இல்லைன்னா சொட்டைத்தலையா இருக்கணும்.




                               
அதுவும் இல்லைன்னா சாமியாருங்களா இருக்கணும்.அதுக்குன்னு நம்ம நித்தி மாதிரி நினைச்சிரக்கூடாது.அவர் ஆங்கிலப்பட ஹீரோக்கள் கணக்கா இருப்பாரு.(செய்ற வேலையும் அப்டியே)




                                              
நான் சொன்னது நம்ம பிரேமானந்தா மாதிரி...இவங்கதான் ஹேர் கட் எல்லாம் பண்றதே இல்ல.




                                                  
இப்ப எதுக்கு இந்த வியாக்யானம்ன்னு நீங்க நெனைப்பீங்க...சலூன் பத்தி பதிவு போடும்போது கொஞ்சம் இன்ட்ரோ கொடுக்கறதுக்காக இந்த ஃபில்(ட்)அப். ஹி.ஹி..ஒரு மாசம் கழிச்சி போடற பதிவு கொஞ்சமாச்சும் நீளமா இருக்கணுமில்ல...

இந்த பெண்கள் அழகு நிலையத்த பாத்திங்கன்னா ஸ்டார் ஹோட்டல் மாதிரியும், ஆண்கள் அழகு(?!)நிலையமெல்லாம் தட்டுவிலாஸ் ஹோட்டல் மாதிரியும்தான் இருக்கும்.








                                         
ஒவ்வொரு சலூன்லயும் அங்கங்க வெட்டி கீழ கிடக்கற @#$% (ஹி..ஹி...என் பிளாக் கொஞ்சம் டீஸன்ட்டானது), டிவி, எப்.எம், தமிழ்நாளிதழ்களில் நெ.1(?!) தினத்தந்தி, 20 வருஷத்துக்கு முன்னாடி ஓனரோட தாத்தா கொடுத்த பூர்வீக சொத்தான கத்தி,கத்திரிக்கோல் இதெல்லாம் நீங்க பாக்கலாம்.இப்ப ஏஸி, மியுசிக் சிஸ்டம் எல்லாம் வச்சு அதுக்கு ஆன செலவையும், கரன்ட் பில்லையும் நம்மகிட்டயே வாங்கறாங்க... :(

ஞாயித்துக்கிழமை அன்னிக்கு இன்று ஹேர் கட்டிங் செய்வதற்கு ஏற்ற நாள்ன்னு காலண்டர்ல போடாததுதான் பாக்கி.அன்னிக்குதான் நிறைய கூட்டம். 2 கட்டிங், 3 சேவிங் பண்றதுக்காக என்னை காக்க வச்ச இடைவெளியில் எனக்கு தோன்றிய சந்தேகங்கள்தான் இவை...

கட்டிங் பண்றதுக்கு முன்னாடி நம்ம மேல போத்தற துணிய என்னிக்காவது துவைச்சிருப்பாங்களா..?!(என்னா கப்புடா சாமி)






மூஞ்சில ஸ்ப்ரே பண்ற தண்ணி நல்ல தண்ணியா..?! போர்ல அடிச்ச தண்ணியா..?!




                                   
பிளேடு புதுசா போடுவாங்களா..?!



                        
கீறல்,தளும்பு,வெட்டுக்காயம் இல்லாம வேலைய முடிப்பாங்களா..?!





தினத்தந்தி பேப்பர என்னிக்காவது முழுசா படிக்க முடியுமா..?!

                                           
கத்திய கழுத்துல வச்சிகிட்டு டிவிய பாத்துகிட்டே வேலை செய்றது, மூஞ்சிய கிட்டக்க வச்சிகிட்டு பல்லு வௌக்காத வாய்ல தொணதொணன்னு அரசியல்சினிமாவைப் பத்தி நம்மகிட்ட விளக்கம்விமர்சனம்,  கேள்வி கேக்கறது.

சேவ் பண்ணி முடிச்ச பிறகு கூலா இருக்க ஒரு கல்ல மூஞ்சில தேக்கறாங்களே... அது தேயவே தேயாதா..?!

கடைசில மஸாஜ் பண்றேன்ற பேர்ல நம்ம தலையில தட்றது மஸாஜா..?! இல்ல நம்மள அடிக்கறதுக்கு சான்ஸா..?!




                                 
இப்டி எல்லாம் இவங்க நம்மள கொடுமைப்படுத்தினாலும் மாசாமாசம் இத செய்லன்னா நம்ம மூஞ்சிய நாமளே பாக்க முடியாது. இவர் ஏன் இந்த விஷயத்த செய்றதே இல்லன்னு என்னிக்காவது யோசிச்சிங்களா..?!




                                  
ஹி...ஹி....தெரிஞ்சா சொல்லுங்க...

படங்கள் உதவி : கூகிளார்












Post Comment

27.10.11

பட்டாசு பதிவு..!!

ஹி..ஹி...இன்னோரு பிளாக்குக்கு வௌம்பரம். இங்க போய்ப்பாருங்க...

Post Comment

24.10.11

ஹேப்பி தீவாளி..!!

தீபாவளி வரப்போவுது...எல்லாருக்கும் சந்தோஷம் தர்ற பண்டிகை.

இப்ப இருக்கற பசங்க தலையில எண்ணை வைக்கறதே இல்ல...காலையில தூக்கம் கலையறதுக்கு முன்னாடி எழுப்பி விட்டு தலையில சொத்சொத்துன்னு எண்ணைய அடிப்பாங்க பாருங்க...கண்ணெல்லாம் எரியும்.அதுவும் அந்த எண்ணை 5 எண்ணைகள் கலந்ததாம்.ஒரு எண்ணை இல்லைன்னா பசு மாட்டோட கோமியத்தையும் கலந்துப்பாங்க...உவ்வே...ன்னு வருதா..?!மருத்துவ குணம் நிறைந்ததுங்க...


அப்புறம் அந்த தீபாவளிக்குன்னே கண்டுபிடிச்ச இனிப்பு குலோப்ஜாமூன் செய்றதுக்கு நல்ல டேஸ்ட்டா,ஸ்மூத்தா வர்ற கம்பெனியோடது வாங்கணும்ன்னு நினைக்காம யாரு பெரிய பக்கெட்,பேசன் தர்றாங்ன்னு பாத்து வாங்கிட்டு வருவாங்க...ஓடாத கம்பெனிகாரன் இதை ப்ரீயா தந்து வருஷம் ஒருநாள் எல்லா சரக்கையும் ஓட்டிருவான்.கடைசில குலோப்ஜாமூன் உருண்டையா வராது.உதிரியாதான் வரும்.நமக்கு பிச்சுபிச்சு சாப்டறது பிடிக்காது.அப்டியே முழுசா முழுங்குனாதான் பிடிக்கும். இலவசங்கள் தர்றது தமிழ்நாட்டோட பொது மனநிலையாப் போச்சு...முறுக்கு வீட்ல சுடலாமான்னு கேட்டா புரட்சித்தலைவி கூட்டணி கட்சிக்காரங்கள பாக்கற மாதிரியே கேவலமா பாக்குறாங்க.ஸ்வீட் கடைக்காரங்களுக்கு கொண்டாட்டம்தான்.


பட்டாசு வெடிக்கற ஆர்வம் குழந்தைகளுக்கு குறைஞ்சுட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங்.பாப்பாவுக்கு கம்பிமத்தாப்பு,சங்குசக்கரம்,புஸ்வாணம் எல்லாம் வாங்கியாச்சு...அது என்னங்க MRP 700ரூபாய் போட்ருக்கு.ஆனா,கடையில 195ரூபாய்க்கு தந்தாங்க.அதுலயும் லாபம் இல்லாமலா தருவாங்க..?!உண்மையான ரேட் என்னன்னு தெரியல...மொத்தத்துல காசை கரியாக்குறோம். (வயசாயிடுச்சுன்னா இப்டிலாம் தோணும்)இந்த பட்டாசு வெடிச்சு விழுப்புண்கள் வாங்காதவங்களே இருக்க முடியாது.அதுலயும் போலிகள் இருந்து தொலைக்கும்.ஊசிப்பட்டாசு வெச்சா அது வெடிக்காம சங்குசக்கரம் மாதிரி சுத்தி நம்மள குழப்பும்.ராக்கெட் மேல போய் வெடிக்காம நம்ம வீட்லயோ,அக்கம்பக்கம்  இருக்கற நம்ம எதிரிங்க வீட்லயோ போய் வெடிக்கும்.புஸ்வாணம் வச்சா அது ரொம்ப நேரம் பொங்காது.என்ன ஆச்சுன்னு பக்கத்துல போய்ப்பாத்தா நம்ம மூஞ்சில பொங்கும்.அப்புறம் தீபாவளி இல்ல... தீபா"வலி"தான்... 

டிவியே வீட்ல இல்லைன்னா அந்த தீபாவளி எப்படி இருக்கும்ன்னு நெனச்சி பாருங்க...முன்னல்லாம் புதுப்படம் போட்டா ஆர்வமா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தோம்.இப்ப உலகத்தொலைக்காட்சிகளில முதன்முறையாகன்னு சொன்னாவே அடப்போங்கைய்யா...ன்னு இருக்குது. இந்த படத்த வந்த ஒரு மாசத்துலயே பாத்தாச்சு...(திருட்டு DVD புண்ணியத்துல)ஒரே பேட்டர்ன்தான் பல வருஷமா ஓடிகிட்டு இருக்கு.காலையில் மங்கள இசை,யாராவது சாமியாரோட ஆசி,அப்புறம் புதுப்பாடல்கள்,பட்டிமன்றம்,நடிகர்(அ)நடிகையோட பேட்டி,புதுப்படம், மறுபடியும் பேட்டி,படம்ன்னு ஒரே போர்ர்ர்ர்தான் போங்க...விஜய்டிவி கொஞ்சம் பரவால்ல...இருந்தாலும் அவங்க விளம்பரத்துக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே போடுவாங்க...அதுதான் பிரச்சினை.

ஒகே..நம்ம கதை போதும்.குழந்தைகளை பாதுகாப்பா வச்சிகிட்டு வெடி வெடிங்க...கண்ல பட்ற போவுது.ஹேப்பி தீவாளி...(ஹி..ஹி..இப்டி சொன்னாதான் தமிழன்னு ஒத்துக்குவாங்க)




www.latestgreetingcards.com


Post Comment

25.9.11

சிற்றுலா

நான்கு நாட்கள் மேல் ஊர்சுற்றினால் சுற்றுலா.ஒரேநாள் மட்டும் சுற்றினால் சிற்றுலா..ஹி..ஹி..

சேலத்தில் பொழுதைபோக்குவதற்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த இடமும் இல்லை.மேட்டூர் பக்கத்தில் இருந்தாலும் ஊரில் எந்த ஆறும் ஓடுவதில்லை.எல்லாம் பல கிலோ மீட்டர் தள்ளி ஓடி கடுப்பேற்றுகிறது.இருக்கும் ஒரே ஆறு திருமணிமுத்தாறுதான்.பேருதான் ஆறு.ஆனால்,அதை சாக்கடையாக்கி நாறுகிறது.ஆற்றின் கரையை ஆட்சிமாறி மாறி கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.சரி விடுங்கள்...இந்த பதிவில் எதற்கு அரசியல்..?!

சேலத்தில் இருக்கும் கோவில்கள்,ஏற்காடு,அண்ணாபூங்கா,வருடாவருடம் நடக்கும் அரசுப்பொருட்காட்சி என்று இந்த இடங்களில் கூடும் கூட்டத்தை கண்டால் சேலம் மக்களின் பொழுதுபோக்கு இல்லாத ஏக்கம் தெரியும். :(

பராமரிப்புக்காக மின்தடை ஏற்படுத்தும் நாட்கள் வனபோஜனம்(picnic) (நன்றி:கூகிள் ட்ரான்ஸ்லேட்) செல்வதற்கு ஏற்ற நாள்.:)சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் உடையாப்பட்டியில் கந்தாஸ்ரமம் என்ற கோவில் உள்ளது.பக்திமான்களுக்கு நல்ல இடம்.இயற்கையை ரசிப்பவர்களுக்கு இன்னும் நல்ல இடம்.


மற்ற கோவில்களில் உள்ளது போல் தட்சணை போடாவிட்டால் முகத்தை காட்டும் அர்ச்சகர்கள் இல்லாமல் கனிவான அர்ச்சகர்கள் உள்ளனர்.உண்டியலும் கிடையாது.தியானம் செய்வதற்கு ஏற்ற மிக அமைதியான இடம். 


தெய்வசிற்பங்கள் மிகவும் நுட்பமாக,அழகாக செய்யப்பட்டுள்ளது.கல்லிலே கலை வண்ணத்தை காணலாம்.மிக பிரம்மாண்ட முறையில் சிலைகளை வடித்துள்ளனர்.தியான மண்டபம் தனியாக உள்ளது.அங்கு சித்தர்கள் மற்றும் ஞானிகளுடைய சிலைகளையும் காணலாம்.கோவிலின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.வெளித்தோற்றம் மட்டுமே எடுத்தேன்.



உணவுப்பொருட்கள் கொண்டுசென்றால் முன்னோர்களிடமிருந்து காத்துக்கொள்வது அவரவர் சாமார்த்தியம்.


கோவிலின் முகப்புக்கு இடதுபுறம் சற்று கீழே கன்னிமார் கோவிலும்,ஓடையும் உள்ளது.நகரத்தில் இருப்பவர்களின் சோகமான நீச்சல் தெரியாததை பொருட்படுத்தாமல் குதிப்பதற்கு உயரம் குறைவான ஓர் ஓடை உள்ளது.நாங்கள் சென்றிருந்தபோது பள்ளிக்கல்வி பிடிக்காமல் இயற்கைக்கல்வி கற்க வந்திருந்த சில மாணவர்களை பார்த்தோம்.ஹி..ஹி...(அதாங்க ஸ்கூல் கட் அடிக்கறதுன்னு டீஸன்ட் இல்லாம சொல்வாங்களே..)

பெற்றவர்கள் பார்க்காமல் இருந்தால் சரி..!!  :)
குடும்பத்துடன் நன்றாக பொழுது கழிந்தது.தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு(ஆறு,குளம்,கடல்) சென்றால் நம் மனதில் குதூகலம் தோன்றுவதின் உளவியல் காரணம் என்னவென்று தெரியவில்லை.



குடும்பத்துடன் அவ்வப்போது வெளியே செல்வது மனமகிழ்ச்சியையும்,புத்துணர்ச்சியையும் தரவல்லவை.குழந்தைகள் வெளி இடங்களை தொலைக்காட்சிகளை பார்த்து தெரிந்துகொள்வதற்கு பதில் நிஜத்தை பார்த்து அறிந்துகொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.புத்தகங்களில் குரங்கு,ஆடு,மாடு என்பதை காட்டுவதை விட நேரில் அவற்றை காணும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆடா,நானா ஒரு கை பார்த்து விடுவோம் என்று ஆட்டிடம் சண்டை போடும் என் செல்ல மகள்...
மாதாமாதம் இதே போன்று வனபோஜனம் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.சேலத்தின் இதுபோன்ற இடங்களை புகைப்படங்களாக பார்ப்பதற்கு தனி வலைப்பூ ஒன்றை தொடங்கியுள்ளேன்.பார்த்து கருத்து தெரிவித்தால் மகிழ்வேன்.








Post Comment

31.8.11

சிறப்பு(சத்தியமா)ஆன்மிகபதிவு..!!

பிரியாணியும் உண்போம்.கொழுக்கட்டையும் தின்போம். :)
மதநல்லிணக்கம் காண்போம்.  


ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் மார்க்கவழி வாழும் 
நண்பர்களுக்கு வாழ்த்துகள்..!! Eid Mubarak


எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. 

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?

கணேசன்: 

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன்:  

ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.  

சிந்தாமணி: 

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன்: 

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

டுண்டிராஜன்: 

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.

மயூரேசன்: 

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன். 

லம்போதரன்: 

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன். 

கஜானனன்: 

ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.

ஹேரம்பன்:  

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன்: 

பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

ஜேஷ்டராஜன்: 

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

நிஜஸ்திதி: 

உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன்: 

எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.

வரதன்:  

வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன்: 

மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன்: 

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சித்தி - புத்தி பதி: 

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.

பிரும்மணஸ்தபதி:  

இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்: 

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர். 

சர்வ பூஜ்யர்: 

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன்: 

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர். 

Post Comment

15.8.11

எழுத்தாளருடன் நான்...

பதிவுலகிலும்,ட்விட்டரிலும்,இன்னபிற சமூகவலைத்தளங்களிலும் உலகமறிந்த(?!) பிரபலமாக நான் இருப்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விடயம்.(மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா) அதற்குண்டான வழிமுறைகளை எற்கனவே என் வலைப்பூவில் இட்டு அந்தப்பதிவு பிரபலமானதும் உங்களுக்கு தெரிந்ததே....

பதிவுலகமும்,ட்விட்டரும் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது.அந்த நண்பர்கள் வட்டத்தில் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் உள்ளனர் என்பது எனக்கு பெருமையளிக்ககூடிய விஷயம்.அதில் ஒருவரான கிழக்கு பதிப்பகத்தில் பல புத்தகங்களை எழுதியவரும்,புகழ்பெற்ற ட்விட்டருமான திரு.என்.சொக்கன் அவர்களை அறியாதவர்கள் எழுத்துலகில் இருக்க வாய்ப்பில்லை.அவர் இந்த வாரத்தில் சேலம் வந்திருக்கும்போது சேலத்திலிருந்து ட்விட்டும் அன்பர்களை சந்திக்க விருப்பம் கொண்டு ட்விட்டரில் தெரிவித்தவுடனே ஆர்வமாக அதை செயல்படுத்தி அந்த சந்திப்பையே ஒரு மாநாடு போல நடத்த பேராவல் கொண்டேன்.ஆனால்,அவரையும் அவர் சகோதரரையும் தவிர்த்து மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதால் மாநாடு நடத்த முடியவில்லை.அடுத்த தடவை முன்னரே அவர் வருவது தெரிந்தால் அதை மாநாடாக நடத்த உறுதி பூண்டுள்ளேன். :)

எழுத்தாளர் என்றவுடன் தமிழ்சினிமா எனக்களித்த கொடையான கணிப்புத்திறனை வைத்து ஒரு முட்டிக்கால் வரை நீளும் ஜிப்பாவும்,அதற்கு மேட்ச்சாக ஒரு வெள்ளை பேண்ட்டும்,விரலைவிட பெரிதான ஒரு இங்க்பேனாவும்,முக்கியமாக ஒரு ஜோல்னாப்பையும்,தடிமனான கருப்புநிற பிரேம் கொண்ட கண்ணாடியும் போட்டுக்கொண்டு வருவார் என்று நினைத்திருந்தால் என் நினைப்பில் மண். ஃபார்மலாக வந்து தமிழ்சினிமாவின் பார்முலாவை உடைத்துவிட்டார் சொக்கன். ஏனென்றால் அவர் சினிமாவே பார்ப்பதில்லையாம்.  :)

அவருடன் பேசிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் என்ற பந்தா இல்லாமல் நண்பர்களுடன் பழகுவதுபோல்தான் இருந்தது . கூடவந்த நண்பன் கார்த்தி புண்ணியத்தில் Iphone, Apple, Nokia, Microsoft, Bill gates, Android, Oracle, E-book reader, Kindle, Nook, NHM, SLR, Edu-comp, etc., அவருடைய தமிழ்இலக்கியவலைப்பூ என்று இரண்டு மணி நேரத்தில் இவ்வளவையும் அலசினோம்.மற்ற சேலம் நண்பர்கள் தவறவிட்ட அருமையான சந்திப்பு இது. ஞாயிற்றுக்கிழமை அன்று காதலர்கள் மட்டுமே வரும் சேலம் அண்ணாபூங்காவில் எழுத்தின் மீது கொண்ட காதலால் இந்த சந்திப்பு இனிமையாகவும்,பயனுள்ளதாகவும் அமைந்தது.

சந்திப்பின்போது எடுத்த பிரத்யேக படங்கள் உலக வலைப்பூ வரலாற்றில் முதல்முறையாக உங்கள் சேலம்தேவாவின் வலைப்பூவில் மட்டுமே காணக்கிடைக்கும்.(வேற யாரும் கேமரா எடுத்துட்டு வராதது நல்லதாப்போச்சு)

எஸ்.சொக்கன்,என்.சொக்கன்,ஸ்ரீனிவாசன்,கார்த்திக்

இதில் வலப்புறம் கடைசியில் நான்


















அண்ணாபூங்கா முன்பு

சேலத்துக்கு வரும் எழுத்தாளர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே தெரியப்படுத்தினால் இதுபோன்ற சந்திப்புகளை மாநாடாக நடத்த ஏதுவாக இருக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  :)

Post Comment

10.8.11

ஆடித்திருவிழா

திருவிழாக்கள் பண்டையகாலத்திலிருந்து எல்லா மதத்தினராலும் விதம்விதமாக கொண்டாடப்படுகிறது.திரு என்ற அடைமொழி சேர்த்து விழாக்களுக்கும் மரியாதை கொடுப்பது நமது பண்பாடாக விளங்குகிறது.எதையும் கொண்டாட்டத்துடன் அணுகும் முறை இந்தியர்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.எப்போதும் பாடுபடும் பாட்டாளிகளுக்காக ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக தெய்வ நம்பிக்கையையும் சேர்த்து திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர்.சொந்தங்கள் சேர்வதற்கும்,மனமகிழ்ச்சிக்காகவும்,விழாக்கள் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வருமானத்திற்காகவும் திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர் முன்னோர்கள்.திருவிழாக்கள் நடக்கும் ஊர்களின் பண்பாடு,கலாச்சார குறியீடுகளை அறிந்து கொள்ள திருவிழா ஒரு வழியாக இருந்தது.ஸ்ஸ்ஸ்ப்பா...தூக்கம் வருதில்ல..

ஹி.ஹி..தவறி வேற எதாவது வலைப்பூவுக்கு வந்துட்டமோன்னு பயப்படாதீங்க...ஸ்கூல் படிக்கும்போது எதைப்பத்தியாவது கட்டுரை எழுதச்சொன்னா இப்டி பக்கம்பக்கமா அடிச்சி வுடுவேன்.இது ஒரு சாம்பிள்தான்...வேற ஒண்ணுமில்லீங்க.சேலத்துல ஆடித்திருவிழா நடக்குது.பதிவுலக நண்பர்களை சேலம் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறேன்.

கோட்டை மாரியம்மன் கோவில் கோபுரம்

பதினெட்டுபட்டிக்கும்(?!) தலைமை மாரியம்மன் கோட்டை மாரியம்மன் கோவில்ல ஆரம்பிச்சி ஊர்ல எந்த பக்கம் திரும்பினாலும் கோவில்களா இருக்கும்.அதுல எல்லாக் கோவில்லயும் ஆடி மாசம் பண்டிகையா இருக்கும்.அரசுப்பொருட்காட்சி வேற போட்ருக்காங்க.சேலமே ஜெகஜோதியா இருக்கும்.ஒரு வாரத்துக்கு சேலம் ரத்தபூமியா மாறிடும்.முதல்வர் அம்மா இலவசமா கொடுக்கறதுக்கு வெளி மாநிலங்கள்ல ஆடு,மாடு வாங்கறதுக்கு காரணமே சேலம் மக்கள்தான்.ஏன்னா அப்டி தின்னுவோம்.ஹி..ஹி...

சக்திஅழைக்கறதுன்ற பேர்ல ஒருத்தருக்கு காளியாத்தா மூஞ்சி கொண்ட மாஸ்க் எல்லாம் வச்சு எட்டு கை வச்சி அழைச்சுட்டு வருவாங்க.பம்பை மேளத்தோட அவரு ஆடி வரும்போது ஆல் லேடிஸ் சாமி வந்து ஆடுவாங்க.ஒரே பக்திப்பரவசமா இருக்கும்.தலைவர் கவுண்டமணி பூமிதிச்ச கதை உங்களுக்கு தெரியும்.அதுமாதிரி இங்க எல்லாக்கோயில்லயும் மிதிப்பாங்க.அந்தப்பக்கமே போக மாட்டேன்.எவனாவது நம்மள மிதிக்கச்சொல்லிட்டா..?!பூச்சட்டின்னு சொல்லிட்டு நெருப்புசட்டிய தூக்கிட்டு தலையில வச்சிகிட்டு ஆடுவாங்க.உள்ள சுட்டாலும் வெளிய காமிக்காம செமயா டான்ஸ் ஆடுவாங்க.எனக்கு தெரிஞ்சு ஒருத்தருக்கு தலையெல்லாம் வெந்திருக்கு.ஆர்வக்கோளாறுல தலையில சேப்டி பிரிகேசன்ஸ் எல்லாம் பண்ணாம ஆடிட்டாரு.ஹி..ஹி...

அலகு குத்தறதுன்ற பேர்ல நல்ல கூரான வேலை வாய்ல இந்தப்பக்கம் குத்தி அந்தப்பக்கம் இழுத்து அந்த வலியிலயும் டான்ஸ் ஆடிகிட்டு வருவாங்க.ஆட்டோ,ஆம்னிவேன்,ஆட்டுக்கல் இந்தமாதிரி இழுக்க முடிஞ்ச பொருட்களை கயித்துல கட்டி கொக்கி போட்டு முதுகில குத்தி இழுத்துட்டு வருவாங்க...வேண்டுதலாமாம்.புல்டோசர்,லாரி மாதரி பெரிய பொருள்லாம் இழுக்க மாட்டாங்க.ஹி..ஹி...முதுகு கிழிஞ்சிருமுல்ல.வித்தியாசமா வேண்டுதல் நிறைவேத்தறதுல சேலம் வழி எப்பவும் தனிதான்.

வியாழக்கிழமை குகைப்பகுதியில்(சேலத்துல ஒரு ஏரியா) வண்டிவேடிக்கை நடக்கும்.ஒரே வேடிக்கையா இருக்கும்.புராண காட்சிகள்,சாமி வேஷம் எல்லாம் போட்டுகிட்டு பெரிய வண்டிங்க வரும்.சாமிங்க எல்லாம் நமக்கு ஹாய்...சொல்லிட்டு வரும்.டே..பீமா..நல்லா தெம்பா உக்காந்து வாடா...சிவனுக்கு சீக்கு வந்தமாதிரி வர்றான் பாரு...அனுமார் வேஷத்துக்கு அவனுக்கு மேக்கப்பே தேவையில்ல.ஏற்கனவே அந்த மாதிரிதான் இருக்கான்.ராமர் வேஷம் போட்டுகிட்டு எல்லாப்பொண்ணுங்களுக்கும் டாட்டா காட்டிகிட்டு வர்றான் பாரு...இந்தமாதிரி வேஷம் போட்டுகிட்டு வர்றவங்கள செமயா கலாய்ப்பாணுங்க.குசும்பு புடிச்ச (சேலம்) பயலுவ.

இதெல்லாம் பாக்கும்போது பெரியார் அப்பப்ப மைண்ட்ல வந்துட்டு போவாரு.இந்த செலவுகளை ஏதாவது இல்லாத குழந்தைகளுக்கோ,முடியாதவங்களுக்கோ உதவி பண்ணலாம்ன்னு நெனைக்கத்தோணும்.பண்ண மாட்டாங்க...சாமிக்கு கூட அதுதான் பிடிக்கும். பக்தி எனக்கும் இருக்கு. நம்மை மீறிய ஒரு சக்தி நம்மள இயக்குதுன்ற நம்பிக்கை மட்டுமே.மத்ததெல்லாம் மற்றவங்க விருப்பத்துக்காகத்தான் பண்ணிகிட்டு இருக்கோம்.ஆத்திகர்களுக்கு பக்தியாகவும்,நாத்திகர்களுக்கு கேலியாகவும் தோன்றும்.ம்ம்ம்...வளரும் சூழ்நிலைதான் தீர்மானிக்குது.

இதுபோன்ற காட்சிகள்,கலாய்ப்புகளை நேரில் காண வருக.. வருக.. வருக... என அன்போடு அழைப்பது உங்கள் சேலம் தேவா..தேவா..தேவா..ஹி..ஹி... எக்கோ எபக்ட்டோட படிங்க(இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல)

Post Comment

31.7.11

சென்னையில் நான்...

இருங்க.. இருங்க... அவசரப்படாதீங்க. உடனே என்னை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் சென்னை வாசகர்கள்(?!) எனக்கு மெயிலவோ,போன் பண்ணவோ ஆரம்பிச்சிராதீங்க.சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்துட்டு ஊர் திரும்பிட்டேன்.எனக்கு எங்க தலைவர் வெங்கட் மாதிரி பப்ளிகுட்டி பிடிக்காது.


சென்னை நந்தம்பாக்கம் டிரேட்சென்டரில் பைசெல் நிறுவனத்தாரால் வருடாவருடம் நடத்தப்படும் அகில உலக புகைப்படகண்காட்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைக்காவிட்டாலும் நானாகவே போய்டுவேன்.ஹி..ஹி...நாளைக்கு ஒரு நாள்தான்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கும். நேரமிருந்தா போய் பாருங்க வாசகர்களே..!!சினிமாவுக்கு பயன்படுத்தப்படும் கேமராக்கள்,உபகரணங்களை நேரில் பார்க்கலாம்.

சேலத்துலருந்து சென்னைக்கு ஓட்டிகிட்டு இருந்த ப்ளைட் வேற கேன்சல் பண்ணிட்டாங்க...ஆன்லைன்ல ரயில் டிக்கெட் புக் பண்றதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் படிக்கணும் போல...அதனால பஸ்ல வரவேண்டியதா போச்சு.

    ஊராங்க அது.  எங்க பாத்தாலும் ஒரே மக்கள்கூட்டம்.அதுக்கு மேல ஆட்டோ கூட்டம்.கண்ண கட்டி கண்மாய்ல தள்ளிவிட்டமாதிரி இருந்துச்சு.அங்க வண்டி ஓட்டணும்ன்னா தியானவகுப்புக்கெல்லாம் போயிருக்கணும்.இல்லைன்னா டென்சன்ல BP எகிறிடும்.சேலத்துலதான் ஆட்டோ அதிகம்ன்னு நெனச்சா சென்னையில...அடேங்கப்பா...மெட்ரோ ரயிலுக்காக அங்கங்க டிராபிக் திருப்பிவிட்ருக்காங்களாம்.ஆட்டோக்காரர் வேஸ்ட் திட்டம்ன்னு திட்னாரு.என்ன கடுப்போ..?!

அடுத்த தடவை வந்தா மேப்போடதான் வரணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.திருப்பதி போய் லட்டு வாங்காம வரக்கூடாதோ அது மாதிரி சென்னைக்கு போய்ட்டு தி.நகர் போகாம வரக்கூடாது.ஹி.ஹி.. என்னா கூட்டம்.அங்காடித்தெரு படம் எந்த கடையில எடுத்துருப்பாங்கன்னு தெரியல.கடையில வேல பாக்கற யார பாத்தாலும் அந்த படம் ஞாபகத்துக்கு வந்து இம்சை பண்ணிச்சு.

அடுத்த தடவை சென்னை வரும்போது கண்டிப்பா உங்களுக்காக நேரம் ஒதுக்கி அனைவரையும் சந்திப்பேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொல்கிறேன்.ச்சீ..கொள்கிறேன்.

சென்னை வாசகர்கள் சென்னையை சுற்றிப்பார்ப்பதற்கு உதவி செய்யும் இணையதளத்தை பின்னூட்டத்தில் பகிர்ந்தால் மற்ற ஊர் வாசகர்கள் பயனடைவார்கள்.ஹி..ஹி... நானும்தான்.

Post Comment

27.7.11

தெய்வத்திருமகள்..!

கண்ணு பட்ருமுல்ல... அதனால கோட்டோவியம்.

போன வருஷம் இதே நாளில் என் மகள் பிறந்தநாள்.கூடவே உங்களுக்கு ஒரு தொல்லையும் பொறந்துச்சு..ஹி.ஹி.. நான் பிளாக் எழுத ஆரம்பிச்சத சொன்னேன்.

எங்கேயோ படித்த ஞாபகம்.ஒரு வரி நாம் எழுதுவதாக இருந்தால் நான்கு வரிகளை படித்திருக்கவேண்டுமாம்.நான் ஃபாலோ பண்றவங்க லிஸ்ட்ட பாத்தீங்கன்னா தெரியும் நான் ஏன் அதிகம் எழுதறதில்லைன்னு..அவ்ளோ பேரையும் படிச்சிட்டே இருந்தா எங்க எழுதறது..?! இப்டியே போனா நம்ம பிளாக்க கூகிளார் இழுத்து மூடிடுவாருன்னுதான் இந்த பதிவு.ஏன்னா...நம்மளயும் நம்ம்ம்ம்ப்ப்பி ஒரு 73 பேர் பின்தொடர்றத நெனச்சா தெய்வத்திருமகள் படம் பாத்து அழுதத விட அதிகமா அழுகை வருது.

இன்னிக்கு என்னோட தெய்வத்திருமகளோட பர்த்டே...நாட்ல (கேக்) விலைவாசி எவ்ளோ ஏறிப்போச்சு. அம்மா ஆட்சிக்கு வந்தும் இதெல்லாம் கண்டுக்க மாட்றாங்களே...தேன்கூட்ல கைய வச்ச மாதிரி சமச்சீர் கல்வி திட்டத்த அமுல்படுத்தறதுல சொதப்பி பெத்தவங்க வயித்தெரிச்சல வாங்கி கட்டிகிட்டாங்க.யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியல..என் பொண்ணுக்கு ஒரு வயசு இன்னிக்கு.ஸ்கூல் சேத்தறதுக்குள்ள ஒரு நல்ல முடிவா எடுத்துட்டா பரவால்ல...ஹி..ஹி... ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங். வந்ததும் வந்தீங்க.. வாழ்த்திட்டு போங்க... என்ன இல்லீங்க... என் மகளை..!!

Post Comment

16.6.11

மிஸ் பண்ணாம மிஸ்டுகால் கொடுங்க..!!


போனைக் கண்டுபிடித்தவனுக்கு மிஸ்டுகாலைப் பற்றி சொல்லிக்கொடுத்த நமக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.வழக்கமா நாம மிஸ்டுகால் கொடுத்தா எதிர்ல இருக்கறவங்ககிட்ட கன்னா பின்னான்னு திட்டு வாங்குவோம்.

ஆனா, இப்ப நாம கொடுக்கப்போற மிஸ்டுகாலால நம்ம சந்ததியினருக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கு என்று நெனைக்கிறேன்.

ஊழலுக்கு எதிரா சட்டம் இயற்ற சொல்லி உண்ணாவிரதம் இருந்த அன்னாஹசாரே,பாபா ராம்தேவைப் பற்றி எல்லாம் படிச்சிருப்பீங்க...நிம்மதியா உண்ணாவிரதம் கூட இருக்க விட மாட்றானுங்க.காந்திய வழியில உண்ணாவிரதம் இருந்தா அவரோட காங்கிரஸ் கட்சிகாரங்களே போலீஸை வச்சி அடிக்கிறாங்க...என்ன கொடுமை இது..?!

இப்ப புதுசா அந்த சட்டத்த தட்டி கழிக்க ஒரு திட்டம் கொண்டு வந்திருக்காங்க.ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நம் நாட்டு கருப்பு பணத்தை மீட்பதற்குண்டான சட்டத்தை இயற்ற மக்களின் ஆதரவை சோதிக்கறாங்களாமாம். 02261550789 இந்த எண்ணுக்கு குறைஞ்சது 25 கோடிபேராவது மிஸ்டுகால் கொடுத்தா சட்டம் இயற்ற அடுத்த முயற்சி எடுப்பாங்களாம்.ஓட்டு போடறதுக்கு லீவு கொடுத்தாலும் இன்னும் 70,80 சதவீதத்தை தொட முடியல...இதுவாச்சும் செஞ்சு பாப்பமே..!! மிஸ்டுகால் கொடுக்கறதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே..!! ஹி.ஹி..

நம்ம இத்தன வருஷம் ஓட்டு போட்டே ஒண்ணும் நடக்கல..இது மட்டும் நடந்திருமான்னு சந்தேகப்படாதீங்க.எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.காசெல்லாம் இல்ல.ப்ரீதான்..செக் பண்ணிட்டேன்.ஹி.ஹி..

Post Comment

30.5.11

அரசியல்வாதிகளுக்கும்,மந்திரிகளுக்கும் எச்சரிக்கை..!!

கீழ எழுதியிருக்கறத படிக்காம எதுவும் தப்பா முடிவு பண்ணி லாரி, ஆட்டோ, இத்யாதி.. இத்யாதி.. எதுவும் அனுப்பிச்சிராதீங்க...நான் பச்சப்பயபுள்ள...

ஒரு மாஜி மந்திரியின் பகல்

எத்தனை நேரம்தான் விட்டம் பார்ப்பேன்.
விடிந்துவிட்டதென்று வெளிச்சம் சொல்கிறது.
ஆனால்,என்னை மட்டும் இரவு விட்டுவிட்டு விடிகிறது.
மீண்டும் புரண்டு படுக்கிறேன்.
நன்றி..படுக்கையே நன்றி.
என்னை நிராகரியாதிருப்பது நீ மட்டும்தான்.

கடிகாரம் பார்க்கிறேன்.
அதுவும் நின்று போய்எனது 
நிகழ்காலம் காட்டுகிறது.
மணி ஒன்பது...
பழைய கணக்கில் இது
பார்வையாளர் நேரம்.
இப்போது...
பால்காரன்,பத்திரிகை பையன் தவிர
புதிதென யாரும் உள்ளே வருவதில்லை.

பத்திரிகை பார்க்கிறேன்.
ஒரு பத்திரிகையிலும் உயிர் இல்லை.
காரணம்... என் பெயர் இல்லை.
எந்த அணியில் இருக்கிறேன்..?!
எனக்கே தெரியவில்லை.
இனிமேல்,கட்சிக்கு
பன்றி சின்னம்தான் கேட்க வேண்டும்.
அதுதானே பலகுட்டி போடுகிறது.

அந்த வேலைக்காரன் 
என் தேநீர்க்கோப்பையை
சட்டென்று வைக்கும் 
சப்தம் சரியில்லையே..!!
அது,என் மீது அவன் நிறைவேற்றும்
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் நகலா..?!

என் மனைவி கூட கட்சிகாரி ஆகிவிட்டாள்.
என்னை அவள் பார்ப்பது
எப்போதோ ஒருமுறைதான்.

நேற்றுவரை குதிரை மேல் சவாரி.
இன்று...நத்தைக்கூட்டின் மேல் அம்பாரி.
ச்சே..நாக்கு துருப்பிடித்து விட்டது.
சாயங்காலமானால் கச்சேரிக் காய்ச்சல்.
அடிக்கடி தோள்களில் அரிப்பு.
டாக்டரை பார்த்தேன்.
ஒரே மருந்தை மும்முறை எழுதினார்.
மாலை.. மாலை.. மாலை.

போனவாரம் ரகசியமாய் ஒரு
இலக்கியக்கூட்டம் போயிருந்தேன்.
என் பினாமிகளைப் போலவே
எவனும் வரவில்லை.
வாசலில் வைத்த கற்கண்டை
மொய்க்க கூட ஈ இல்லை.
பிறகு பத்துபேர் வந்ததில் அவை நிறைந்தது.
யோசித்தேன்...
பணக்காரன் பின்னால் பத்து பேர்
பைத்தியக்காரன் பின்னால் பத்து பேர்
இனிமேல் நான்...
பணக்காரனா..?!
பைத்தியக்காரனா..?!

ஐப்பசி வானமாய் எப்போதும் முணுமுணுக்கும்
என் வீட்டு தொலைபேசி
இப்போது..வைகாசி வானமாய் மௌனித்து விட்டது.
நானே அழைக்கிறேன்.
இப்போதுதான் இந்தியாவில்
எப்போதும் குளிக்கிறார்கள்.
காது பிளக்கும்
தனிமையின் இரைச்சலில்
கண்மூடி சிந்திக்கிறேன்.

என்னை நேசிக்க ஊருக்கு உத்தரவிட்டேன்.
நான் யாரை நேசித்தேன்..?!
சுற்றி சுவர் எழுப்பி
சுற்றி சுவர் எழுப்பி
நானும் சுவரானேன்.

முடிவுக்கு வந்துவிட்டேன்
எதிர்கால திட்டம்
இன்னொரு முறை மந்திரியாவதல்ல...
இனியேனும் மனிதனாவது.

வைரமுத்துவின் இந்த வைர வரிகள் அனைத்து கட்சி பாகுபாடில்லாம எல்லா அரசியல்வியாதிகளுக்கும் பொருந்தும்.
மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு சொல்வாங்க...புரிஞ்சிகிட்டா சரி.

சிறப்பு பரிசு
இந்த பதிவைப்பற்றி பின்னூட்டம் இடுபவர்களுக்கு வைரமுத்து அவர்களின் குரலில் A.R.ரஹ்மான் இசையில் வந்த தேன் வந்து பாயுது ஆடியோ வடிவிலான கவிதை தொகுப்பின் இணைப்பு வழங்கப்படும்.                     முன்னால் வருபவர்களுக்கே முன்னுரிமை..!!ஹி.ஹி..

ஹீம்ம்...பிளாக்குக்கு எப்படியெல்லாம் வர வைக்க வேண்டி இருக்கு..!!

Post Comment

14.4.11

வாழ்த்து சொன்னது ஒரு குத்தமா..?!

சித்திரை திருநாள் அன்னிக்கு பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வாழ்த்து சொல்றாங்களே...நண்பர்கள் பலர் பேஸ்புக்கிலும்,பஸ்ஸிலும்,ட்விட்டரிலும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லியிருக்காங்களேன்னு நாமளும் சொல்லி வைப்போம்ன்னுட்டு தெரியாம நானும் எல்லாத்திலயும் தீயா வேலை செஞ்சு வாழ்த்து சொன்னேன்.

அதுக்கு பஸ்ஸில்(Google Buzz) அம்ஜத்கான் என்கிற நண்பர் ஒரு சின்ன(?!)விளக்கம் கொடுத்திருக்காரு பாருங்க...அழுதுட்டேன்.இனிமே எதைப்பத்தியும் முழுசா தெரியாம யாருக்கும் வாழ்த்து சொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.அவ்வ்வ்வ்வ்.....

விளக்கம் கீழே.


சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் 

பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா?
வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் 
பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் 
தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள 
விழைகின்றோம்.
இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் 
எடுத்துக் கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம்
இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று 
அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
இந்த 
முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ம் 
ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் 
கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று 
கூறுவோரும் உண்டு
பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், 
ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை 
நிறுத்தப்பட்டுள்ளது
ந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் 
நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், 
கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது 
இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடை 
முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை
காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற 
அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் 
மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற 
நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
“ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை ‘நீர் அறுபதினாயிரம் 
கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா?’ 
என்று கேட்டார். அதற்குக் கண்ணன், ‘நான் இல்லாத பெண்ணை வரிக்க’
என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று 
பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், 
நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை 
நோக்கி ‘நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்’ 
என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே 
செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் 
கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ முதல் அட்சய’
இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்.”
மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய 
வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது 
என்று கூறியுள்ளார்

தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் 
வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் 
பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஆரியர் ஊடுருவலுக்கு 
முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் 
என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் 
நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து 
உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் 
அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என 
அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச்
சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் 
‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் 
என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 
மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் 
பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து 
வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் 
வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த 
ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு 
பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை 
இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான 
விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை 
கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, 
தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் 
மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், 
மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு 
வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே 
தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இன்றும் கூட ஆரியர்களின் சித்திரை 
வருடப்பிறப்பு, பண்டிகை, தன் இனத்துப் பண்டிகைகளாக 
எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான் தமிழன்.

“தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.”

பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் 
திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி 
என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- 
போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். 
புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் 
புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் 
நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி 
அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே 
செய்கின்றார்கள்.

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. 
முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் 
பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் 
கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் 
புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் 
தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் 
சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. 


தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு. -பாவேந்தர்


இலக்கியங்களில் தமிழ் திங்கள்கள்

தேவாரம்

சிகரத்துஇடை இளவெண்பிறை வைத்தான் இடம், தெரியில்---
முகரத்துஇடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம்,
தகரத்துஇடை தாழைத்திரள் ஞாழல்-திரள், நீழல்,
மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

ஆரிய முட்டாள்களின் ஆண்டு முறையை(சித்திரை) பின்பற்றும் முட்டாள் கூட்டம் கூறும் காரனப்படி பார்த்தாலும் யாரும் ஒரு துவக்கத்தை உச்சியில்துவக்குவதில்லை. 
ஒரு நாள் பொழுது துவங்கும் பொழுது ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுதுதுவக்குவதில்லை. மாறாக ஒரு நாள் நள்ளிரவில் துவங்கி சிறிது சிறிதாக விடியத்துவங்கி அரை நாள் முடியும் பொழுது ஞாயிறு உச்சிக்கு வருகின்றது. மீதும் ஞாயிறு சிறிது சிறிதாக மறையத் துவங்கி நள்ளிரவில் அந்த நாள் முடிவடைகின்றது. அது போலவே ஆண்டும் ஞாயிறு உச்சியில் இருக்கும் பொழுது துவங்குவதில்லை. உலகில் எந்த இனமும் கொடும் கோடை காலத்தில் தங்கள் ஆண்டினை துவங்குவதில்லை.

உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள்வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். ‘மழை, வெயில்,குளிர், பனி, தென்றல்,வாடை’ இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன்ஆண்டு என்று அழைத்தான். என திரு. வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர்என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்கநூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும். ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப்பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும்,தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள்ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வானியலாளர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச்சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் "அறிவர்கள்" குறித்துத்தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.

"வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.

1
நாழிகை
-
24 நிமிடங்கள்
60
நாழிகை
-
1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440
நிமிடங்கள்
-
24 மணித்தியாலங்கள்
24
மணித்தியாலங்கள்
-
1 நாள்

இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்களை இவ்வாறு கணக்கிட்டத் தமிழன்;

காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

1.
இளவேனில்
-
தை - மாசி மாதங்கள்
2.
முதுவேனில்
-
பங்குனி - சித்திரை மாதங்கள்
3.
கார்
-
வைகாசி – ஆனி மாதங்கள்
4.
கூதிர்
-
ஆடி - ஆவணி மாதங்கள்
5.
முன்பனி
-
புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6.
பின்பனி
கார்த்திகை - மார்கழி மாதங்கள்

பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாககாலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ்போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறுபருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தைஇளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கானபுத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே கொண்டாடப்பட வேண்டும்.
தை மாதச் சிறப்பு

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும்காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டைஇளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர். தத்தமது புதுப் பணிகளையும்,நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள்எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக கால காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந் தொட்டு இருந்து வருகின்றது.

இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டுஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச் சார்பற்று அனைத்து தமிழரதும் திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வின் முடிவாகியுள்ளது.

இனி தமிழ் மாதங்களின் இல்லை, இல்லை - தமிழ்த் திங்கள்களின் பெயர்களைப் பார்ப்போமா?தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 திங்கள்களுக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள் உண்டு.

அவை எவை என அறிவீர்களோ? மிக மிக முற்காலத்திலேயே தமிழன் வகுத்துத் தந்த கால அட்டவணை (calendrier / calendar) வான வெளியில் ஞாயிறு வலம் வருதலை அடிப்படையாகக் கொண்டது. இந்த வான மண்டலத்தைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து 'ஒவ்வொரு பகுதிக்கும் ஒ வ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குப் புலனாகும் விண்மீன்களைக் கற்பனைக் கோடுகளால் இணைத்துப் பெறும் உருவங்களின் அடிப்படையில் பெயர்கள் இடப்பெற்றுள்ளன.

இப்படிப் பெயர் கொடுத்தவர்கள் கிரேக்க வானியலார் என்பர். அவர்கள் பயன்படுத்திய சொல் என்ன தெரியுமா? 'horos'. இன்று ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் பல சொற்களுக்கு, 'horoscope, horodateur, hour, heure, year...' இச்சொல்லே வேர்ச் சொல். இந்த 'horos'என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'boundary, limit, border' என்று பொருள். (காண்க : On line etymology dictionary & The American Heritage dictionary). இந்தச் சொல்லுக்கு மூல வேர்ச்சொல் தேடப் போனால் நம் தமிழுக்குத்தான் வர வேண்டும். பக்கம், விளிம்பு எனப் பொருள்படும் ஓரம் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் ஓரை. (காண்க : தமிழ்மொழி அகராதி - நா. கதிரைவேற்பிள்ளளை)

இந்த ஓரை என்ற சொல்லின் கிரேக்க வடிவம்தான் 'horos'. வானப் பகுதிகள் பன்னிரண்டிலும் ஞாயிறு தங்கிச் செல்லும் பக்கத்தைத் தமிழர்கள் ஓரை என்று அழைத்தார்கள். இதற்கு வடமொழியில் 'இராசி ' என்று பெயர். கிரேக்கத்துக்கு ஏற்றுமதி ஆனது ஓரை என்ற தமிழ்ச் சொல் மட்டும் அல்ல, அஃது உணர்த்தும் பொருளும் தமிழர்களின் வானியல் அறிவும்தான். ஆக, தமிழர்கள் கண்ட 12 ஓரைகளைத்தான் கிரேக்கர்களும் கண்டனர். இவற்றின் பிரஞ்சு, ஆங்கில, கிரேக்க, தமிழ்ப் பெயர்களையும் அவற்றுக்கு உரிய (தற்காலத்தில் உலகம் நெடுக வழங்கும்) குறியீடுகளையும் எதிர் வரும்பட்டியலில் காண்க.

ஞாயிறு எந்த ஓரையில் தங்குகிறதோ, அந்த ஓரையின் பெயரையே அந்தத் திங்களுக்கு (மாதத்தக்கு)ப் பெயராய் இட்டனர் தமிழர். கிரேக்கர்களும் உரோமர்களும் இம்முறையைப் பின் பற்றவில்லை. எனவே, தமிழர்களாகிய நாம் நம் திங்கள்களுக்கு (மாதத்துக்கு)ச் சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள தனித் தமிழ்ப் பெயர்களைப் பயன்படுத்துதல் வேண்டும். முதலில் கடினமாகத் தோன்றினாலும் பழகியபின் இவை எளிமையாகிவிடும்.

வார நாள்கள் ஏழினுக்கும் கோள்களின் பெயர்களை இட்டனர் தமிழர். இம்முறையைக் கிரேக்கர்கள் பின்பற்றவில்லை, உரோமர்களோ மிகப் பிற்காலத்தில் தான் இம்முறையைக் கடைப்பிடித்தனர்.

கிழமை என்ற சொல்லுக்கு 'உரிமை' என்று பொருள். எனவே, ஞாயிற்றுக்கு உரிய நாள் என்ற பொருளில் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். புதன், சனி என்பன தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆகவே, அவற்றுக்கு ஈடான அறிவன், காரி என்ற தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் நன்று.ஆக, தமிழர்களின் புத்தாண்டு அதாவது வள்ளுவர் ஆண்டு சித்திரைத் திங்களில் தொடங்கவில்லை மாறாகச் சுறவம் முதல்நாள் (சனவரி 14)தொடங்குகிறது என்பதை நினைவில் கொண்டு நம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை.9:24 am
amzath khan - பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்,

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய
இவ்விருபதும் அதம வருடங்களாம்.

தமிழ் வருடம் என்று நீங்கள் நினைக்கும் இதில் ஏதாவது ஒரு தமிழ் சொல்லை காண்பியுங்கள்!நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்.
9:27 am
amzath khan - தோழர்களே!
தயவு செய்து ஆரிய புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று சொல்லி தமிழை அசிங்கபடுத்தாதீர்கள்.
9:56 am
Jeyakumar Srinivasan - 01. அம்ஜத் கான் - நல்ல தமிழ்ப்பெயர். நீங்க சொன்னா சரியா இருக்கும். ஆனாலும் எங்கயோ இடிக்குது.

02. தமிழர்கள் ரம்ஜான் கொண்டாடலாமா?

03. தமிழ்ப்புத்தாண்டை சித்திரையிலிருந்து தைக்கு மாத்திட்டா உங்க பிரச்சினை சரியாய்டுமா?

தெரியாமத்தான் கேக்கறேன்னு சொல்லுங்க.
10:13 am
Haran Prasanna - ஆரியர்கள்னா யார்? பிராமணர்களா? அல்லது ஹிந்துக்களா? தமிழறிஞர் தெளிவுபடுத்தவேண்டும். ஆரியப் படையெடுப்புக் குறித்த ஆதாரங்களை இன்னும் முன்வைக்கவேண்டும். தமிழ்ப்புத்தாண்டு புறக்கணிப்பு என்பது தமிழர்களுக்கு ஆதரவாகவா அல்லது ஆரிய பிராமண அல்லது ஆரிய ஹிந்துக்களுக்கு எதிராகவா என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும். மேலும், எதைப் புத்தாண்டாகத் தமிழர்கள் (இதில் ஹிந்துக்கள், பிராமணர்கள் அடங்குவார்களா என்பது துணைக்கேள்வி) கொண்டாடவேண்டும் என்று சொல்லவேண்டும். அப்போது என்ன என்ன பெயர்கள் தமிழ்ப் புத்தாண்டுகளுக்குத் தரப்படுகின்றன, அவற்றின் மூல ஆதாரம் என்ன, அவை எல்லாமே தமிழ்ப்பெயர்கள்தானா என்பது குறித்த ஆதாரமெல்லாம் தரவேண்டும். தமிழறிஞர் நிச்சயம் நம்மைக் கடைத்தேற்றுவார்.10:20 am
amzath khan - நல்ல கேள்வி !
எனது நிஜ பெயர் சொக்கலிங்கம்.சொக்கலிங்கத்தின் தமிழ் அர்த்தம் அழகிய ஆண்குறி.பண்டைய தமிழர்களிடத்தில் சாதி இல்லையே!நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆரியர் புகுத்தியதுதானே சாதிமுறை.ரம்ஜான் மட்டுமில்லை.பொங்கல் ஒன்றை தவிர மற்ற எதுவும் தமிழ் இனத்தின் திருநாட்கள் அல்ல.
10:20 am
amzath khan - வாங்க ஹரன் நலமா?
உங்களுடைய எல்லாகேள்விகளுக்கும் “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற புத்தகத்தில் நீங்கள் கேட்கும் அனைத்து ஆதாரங்களுடன் மிக விளக்கமாக சொல்லபட்டிருக்கிறது.தயவு செய்து அவசியம் வாங்கி படிக்கவும்.
10:29 am
puthumalar raja - ஆரிய புத்தாண்டை ஆரிய னா என்ன நண்பா?10:31 am
amzath khan - சம்ஸ்கிருத மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆரியர்கள்.


மேலும் இதைப்பற்றி படிக்க விரும்புவர்கள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.


  

Post Comment