சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

13.12.11

"தலை"க்கு மேல வேலை..!!

வேற ஒண்ணும் இல்ல...ஹேர்கட் பண்ணப்போறதுதான் அது.



                                       
சலூன் கடைக்குப் போகாதவங்க ஒண்ணு மொட்டைத்தலையா இருக்கணு ம்.






                                       

இல்லைன்னா சொட்டைத்தலையா இருக்கணும்.




                               
அதுவும் இல்லைன்னா சாமியாருங்களா இருக்கணும்.அதுக்குன்னு நம்ம நித்தி மாதிரி நினைச்சிரக்கூடாது.அவர் ஆங்கிலப்பட ஹீரோக்கள் கணக்கா இருப்பாரு.(செய்ற வேலையும் அப்டியே)




                                              
நான் சொன்னது நம்ம பிரேமானந்தா மாதிரி...இவங்கதான் ஹேர் கட் எல்லாம் பண்றதே இல்ல.




                                                  
இப்ப எதுக்கு இந்த வியாக்யானம்ன்னு நீங்க நெனைப்பீங்க...சலூன் பத்தி பதிவு போடும்போது கொஞ்சம் இன்ட்ரோ கொடுக்கறதுக்காக இந்த ஃபில்(ட்)அப். ஹி.ஹி..ஒரு மாசம் கழிச்சி போடற பதிவு கொஞ்சமாச்சும் நீளமா இருக்கணுமில்ல...

இந்த பெண்கள் அழகு நிலையத்த பாத்திங்கன்னா ஸ்டார் ஹோட்டல் மாதிரியும், ஆண்கள் அழகு(?!)நிலையமெல்லாம் தட்டுவிலாஸ் ஹோட்டல் மாதிரியும்தான் இருக்கும்.








                                         
ஒவ்வொரு சலூன்லயும் அங்கங்க வெட்டி கீழ கிடக்கற @#$% (ஹி..ஹி...என் பிளாக் கொஞ்சம் டீஸன்ட்டானது), டிவி, எப்.எம், தமிழ்நாளிதழ்களில் நெ.1(?!) தினத்தந்தி, 20 வருஷத்துக்கு முன்னாடி ஓனரோட தாத்தா கொடுத்த பூர்வீக சொத்தான கத்தி,கத்திரிக்கோல் இதெல்லாம் நீங்க பாக்கலாம்.இப்ப ஏஸி, மியுசிக் சிஸ்டம் எல்லாம் வச்சு அதுக்கு ஆன செலவையும், கரன்ட் பில்லையும் நம்மகிட்டயே வாங்கறாங்க... :(

ஞாயித்துக்கிழமை அன்னிக்கு இன்று ஹேர் கட்டிங் செய்வதற்கு ஏற்ற நாள்ன்னு காலண்டர்ல போடாததுதான் பாக்கி.அன்னிக்குதான் நிறைய கூட்டம். 2 கட்டிங், 3 சேவிங் பண்றதுக்காக என்னை காக்க வச்ச இடைவெளியில் எனக்கு தோன்றிய சந்தேகங்கள்தான் இவை...

கட்டிங் பண்றதுக்கு முன்னாடி நம்ம மேல போத்தற துணிய என்னிக்காவது துவைச்சிருப்பாங்களா..?!(என்னா கப்புடா சாமி)






மூஞ்சில ஸ்ப்ரே பண்ற தண்ணி நல்ல தண்ணியா..?! போர்ல அடிச்ச தண்ணியா..?!




                                   
பிளேடு புதுசா போடுவாங்களா..?!



                        
கீறல்,தளும்பு,வெட்டுக்காயம் இல்லாம வேலைய முடிப்பாங்களா..?!





தினத்தந்தி பேப்பர என்னிக்காவது முழுசா படிக்க முடியுமா..?!

                                           
கத்திய கழுத்துல வச்சிகிட்டு டிவிய பாத்துகிட்டே வேலை செய்றது, மூஞ்சிய கிட்டக்க வச்சிகிட்டு பல்லு வௌக்காத வாய்ல தொணதொணன்னு அரசியல்சினிமாவைப் பத்தி நம்மகிட்ட விளக்கம்விமர்சனம்,  கேள்வி கேக்கறது.

சேவ் பண்ணி முடிச்ச பிறகு கூலா இருக்க ஒரு கல்ல மூஞ்சில தேக்கறாங்களே... அது தேயவே தேயாதா..?!

கடைசில மஸாஜ் பண்றேன்ற பேர்ல நம்ம தலையில தட்றது மஸாஜா..?! இல்ல நம்மள அடிக்கறதுக்கு சான்ஸா..?!




                                 
இப்டி எல்லாம் இவங்க நம்மள கொடுமைப்படுத்தினாலும் மாசாமாசம் இத செய்லன்னா நம்ம மூஞ்சிய நாமளே பாக்க முடியாது. இவர் ஏன் இந்த விஷயத்த செய்றதே இல்லன்னு என்னிக்காவது யோசிச்சிங்களா..?!




                                  
ஹி...ஹி....தெரிஞ்சா சொல்லுங்க...

படங்கள் உதவி : கூகிளார்













Post Comment

11 comments:

  1. Same Blood..

    http://gokulathilsuriyan.blogspot.com/2010/01/blog-post_28.html

    ReplyDelete
  2. @ வெங்கட்

    தல..ஏற்கனவே இந்த டாபிக்ல எழுதிட்டிங்களா..?!

    ReplyDelete
  3. சலூன் கடை’ல கூட இவ்ளோ யோசிப்பீங்களா????

    ReplyDelete
  4. ///தினத்தந்தி பேப்பர என்னிக்காவது முழுசா படிக்க முடியுமா..?!///

    ஒரு வருசமா அதே பேப்பர்’தானே இருக்கு.. இன்னும்மா படிச்சு முடியல....

    ReplyDelete
  5. // இவர் ஏன் இந்த விஷயத்த செய்றதே இல்லன்னு என்னிக்காவது யோசிச்சிங்களா..?!//
    டப்பு லேது சார்..

    ReplyDelete
  6. தலைக்குமேல வேலை ன்னு கேள்விப்ப்ட்டிருக்கேன்..ஆனா இன்னிக்குத்தான், இப்பதான், இங்கதான்
    தலைக்குமேல வேலைய பாத்தேன்....

    ReplyDelete
  7. ”தலை”யாய கடமையைதான் பதிவா போட்டிருக்கீங்க

    ReplyDelete
  8. மெனக்கெட்டு தாங்கிப் பிடிசிகிட்டு இருக்குற உங்களை ஏற்காடுக்கு அனுப்பணும்!

    ReplyDelete
  9. தலைக்கமேல வேலை ஓகே...தலை(மை) வேலையை விட்டுடீங்களே!!!!.....

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!