சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

14.1.12

நண்பன்-அதிரடி விமர்சனம்

தேவாவின் தேடுதல் வலைப்பூவின் வாசகப்பெருமக்களுக்கும்(?!), ரசிககண்மணிகளுக்கும்(??!!)  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!!

குட் காம்பினேஷன்..!! :)
வருடம் பூராவும் திங்க புடிக்கற பொங்கல், பொங்கல் திருநாள் அன்னிக்கு மட்டும் புடிக்ககாது.ஏன்னா,அன்னிக்கே சாப்பாடே அதுதான்.(கொஞ்சமா தின்னா ஆகும்.) இதுவரை புரிபடாத ரகசியம் கோவில்ல கொடுக்கற பொங்கல் மட்டும் எப்டி அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு..?!

தீபாவளிக்கு ஒருமுறை,பொங்கலுக்கு ஒருமுறை பதிவு போடும்போது கூட என்னை விட்டு விலகாத ஃபாலோயர்ஸ்களை நினைத்தால் ரத்தக்கண்ணீர்.ச்சீ...ஆனந்தக்கண்ணீர் வருகிறது.(ரொம்ப பில்ட்அப் பண்ணி இருக்கறவங்களும் போய்டப்போறாங்கடா டேய்...)

ஜல்லிக்கட்டுக்கு இந்த தடவையும் 76 விதிமுறைகளை போட்டு தமிழர்களின் வீரத்தை உரசி பாக்கறாங்க..(டிவில ஜல்லிக்கட்டு பாக்கறதுக்கே இதுக்கு இவ்ளோ வீரமா..?!)
கொம்ப பாருங்க...குத்துனா டைரக்டா சொர்க்கம்தான்.  
7ம்அறிவு படத்துல சூர்யா க்ளைமாக்ஸ்ல அட்வைஸ் பண்றப்போ போகி பண்டிகையே நம்ம பழங்காலத்து பொக்கிஷங்களான ஓலைச்சுவடிகளை அழிக்கறதுக்கு வெள்ளைக்காரன் கண்டுபுடிச்சதுன்னு சொல்வாரே அதப்பத்தி என்ன நினைக்கறீங்க..?!(அப்பா..உருப்படியா ஒரு சந்தேகம் கேட்டாச்சு)


சட்டைய கழட்டுனா லைட்டா நான் கூட இப்டிதான் இருப்பேன். :)
சரி..4 பாரா தாண்டியும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லன்னு யோசிக்கிறிங்களா..?! (உன் பிளாக்ல அதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா..?!) இப்டி ஹாட்டாபிக் தலைப்பு வச்சாதான் உள்ள வருவீங்க அதுக்குதான்...கோச்சுக்காதிங்க... :) நண்பன் படம் நல்லா இருக்காம்ல...எல்லா விமர்சனங்களும் அததான் சொல்லுது. ஷங்கர் படம்ன்னா சும்மாவா..?! நான் எப்பயும் புதுப்படம் வந்தா தியேட்டரை விட்டு தூக்கறதுக்கு முதல் நாள்தான் பாப்பேன். முதல்நாள் போனா படம் பாக்கவே விட மாட்டானுங்க ரசிகர்கள். dts எபக்ட்ல விசில் அடிச்சே கொல்லுவானுங்க. So, நான் விமர்சனம் எழுதறதுக்குள்ள உலகத்தொலைக்காட்சியிலேயே போட்ருவாங்க... ALL IS LOL.  :)


Post Comment

7 comments:

 1. // இப்டி ஹாட்டாபிக் தலைப்பு வச்சாதான்
  உள்ள வருவீங்க அதுக்குதான்...
  கோச்சுக்காதிங்க... :) //

  சே., சே... நல்லவேளை நீங்களும்
  நண்பன் விமர்சனம் எழுதிடுவீங்களோன்னு
  பயந்துட்டே வந்தேன்.. என் வயித்துல
  பாலை வார்த்தீங்க..!!!

  ReplyDelete
  Replies
  1. தளபதி படத்த பத்தி எழுதலாம்ன்னு நினைச்சேன். :)

   Delete
 2. Arumai....
  Super.....
  Nalla vimarsanam....

  Naan ungalai
  pathi neengale
  sonna
  vimarsanathai
  sonnen.....

  ReplyDelete
 3. நண்பன் பட விமர்சனம் மிக அருமை!
  இன்று என் வலையில் நேத்து இருந்ததுதாங்க இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. அண்ணனுக்கு செம குசும்பு..!! :)

   Delete
 4. //ன்னிக்குட்டி ராம்சாமி said...
  நண்பன் பட விமர்சனம் மிக அருமை!
  இன்று என் வலையில் நேத்து இருந்ததுதாங்க இருக்கு!//

  :-)

  ReplyDelete
 5. விமர்சனம் நல்லா இருக்கு,
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தேவா சார்

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!