சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

24.7.12

வாழ்த்துகள் உயர்திரு.பிரணாப் முகர்ஜி அவர்களே...


நான் முன்பே கணித்தது போல் (இவரு பெரிய காழியூர் நாராயணன் பாரு...கணிக்கிறாராம்) பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்தியத்திருநாட்டின் முதல் குடிமனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.இதுகாறும் பாராளுமன்றத்தில் ஒரு பெரியவர் வயது முதிர்ச்சியின் காரணமாக தூங்குவதை கூட ஜூம் செய்து பெரிது படுத்தி காட்டிய செய்தி நிறுவனங்களுக்கு சவுக்கடியாக அமைந்தது இந்த முடிவு என்றால் அது மிகையில்லை.இனிமேல் மக்கள் நலத்திட்டங்கள்,விவாதங்கள் என்ற பெயரில் வாசிக்கப்படும தூக்கம் வரவழைக்ககூடிய உரைகளைக் கேட்கத் தேவையில்லை.சுதந்திரமாக தூங்கலாம்.வெளிநாடுகளுக்கு ராஜமரியாதையுடன் சென்று வரலாம்.(என்ன இருந்தாலும் நமது முன்னாள் குடியரசுத்தலைவர் போல் வெளிநாட்டுப்பயண சாதனையை இனி எந்த இந்திய குடியரசுத்தலைவராலும் முறியடிக்க முடியாது)மத்திய அரசின் முன்முடிவெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு அவ்வப்போது கையெழுத்திடலாம்.

இங்க இப்டி...ஈரான் நாட்ல ஒரு தலைவர் இருக்காராம்.பிழைக்கத் தெரியாத மனுசனா இருப்பார் போல...



1. அவருடைய மாத வருமானம் 1200 டாலர். இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது.

2. அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில்தான்...

3. இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4. படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல்.
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5. இவரது வங்கி நிலுவை 0

6. இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும். தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்.

7. அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8. பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9. பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படை பட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10. தன் காரியாலயத்திலும், வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைச்சீலைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்.

11. நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம் ..

Post Comment

14.7.12

சொந்தக்கதையும்,புகைப்படக்கலையும்...

யாரும் தலைப்பு சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.பின்தொடர்பவர்கள் பின்வாங்காதது ஆறுதல் அளிக்கிறது.

இதுவரை வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் கானல் கொடுமையை அனுபவித்து கொண்டிருந்த நான் நேற்றுதான் அதற்கு மேல் தென்னங்கீற்றை வேய்ந்தேன்.நேற்றிரவிலிருந்து  மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. :) இயற்கைக்கும் என்னைக்கண்டால் சிரிப்பாக இருக்கும் போல...

இந்த வாரத்தில் ஒரு பயனுள்ள புகைப்படக்கலை பயிற்சி வகுப்புக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.வெளிப்புற புகைப்படக்கலை (அதாவது அவுட்டோர் போட்டோஃகிராபி.தமிழ்..தமிழ்...)வகுப்பை பிரபல புகைப்பட நிபுணர் திரு.ஜீவா சுப்ரமணியம்  அவர்கள் கற்றுக்கொடுத்தார். எங்களுக்கு தோரணை காட்ட(அதாவது போஸ் கொடுக்க...தமிழாக்க உபயம் கூகிள் ட்ரான்ஸ்லேட்)பிரபல மாடல் ரீத்தி மங்கள் வந்திருந்தார். சிறப்பாகவும், சிரிப்பாகவும் (மாடலை பார்த்து அல்ல) அமைந்தது வகுப்பு. அங்கு நான் எடுத்த புகைப்படங்களை இங்கு சென்று பார்த்து மகிழுங்கள். அப்படியே அந்த பேஜை லைக்குங்கள் (ஹி..ஹி...ஒரு வௌம்பரம்)

                                 

                                   

அரசியல்,அனுபவம்,ஆதரவு இவைகளை தவிர்த்து குடியரசுத்தலைவர் பதவிக்கென்று ஒரு முகம் தேவைப்படுகிறது.(நீ அதுக்கு சரிப்பட மாட்ட..வடிவேல் சோக்கு ஞாபகத்துக்கு வருது.) அந்த முகம் திரு.சங்மா அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.நம்மூர் படங்கள்ல வர்ற வட்டிக்கடை சேட்டு மாதிரியே இருக்காரு. அதிசயம் நடக்குமா..?! நீங்க என்ன நினைக்கறீங்க..?!


இந்த பதிவ எழுதிட்டு இருக்கும்போது வந்த குறுஞ்செய்தி.லேப்டாப் விலையில்லாம (அ) இலவசமா (ரெண்டும் ஒண்ணுதான்.ஆனா,அவங்க மாத்தி சொல்வாங்க....)தர்ற அரசாங்கம் உயிர் காக்கும் ஹெல்மேட்டை ஏன் ஃப்ரீயா தரக்கூடாது..?! நியாயமான கேள்விக்கு பதில் சொல்லுங்க...




பேஸ்புக்ல இந்த படத்த பாத்ததிலிருந்து வாந்தி வாந்தியா வருது. நம்மூரு கறிக்கடைகள்ல ஞாயிற்றுக்கிழமை ஆட்ட தொங்க விடற மாதிரி சைனாவுல நாய்களை தொங்க விட்ருக்காங்க...பாம்பையே திங்கறவங்களுக்கு இது எம்மாத்திரம்..?! ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு டேஸ்ட்...உவ்வே...  :)



Post Comment

6.7.12

வந்துட்டமுல்ல...

அப்பப்ப நம்ம பிளாக்கர் நண்பன் கூகிள் அந்த சேவையை நிறுத்தப்போகிறது. இந்த சேவையை நிறுத்தப்போகிறதுன்னு பதிவெழுதி பீதிய கிளப்பறாரு.... தொடர்ச்சியாக 3,4 மாதங்கள் பிளாக்கரில் பதிவுகள் எழுதாமல் இருந்தால் அவங்க பீஸ் புடுங்கப்படும்ன்னு சொல்லிட்டா இவ்ளோ வருஷம் கஷ்டப்பட்டு(?!) எழுதிய பதிவுகளையும், இஷ்டப்பட்டு சேர்ந்த பின்தொடர்பவர்களையும் இழக்க நேரிடும்ன்றதால நிறையப்பதிவர்கள் கடைபிடிக்கும் ஒரு சிறந்த வழியான கொத்துபுரோட்டா, கூட்டாஞ்சோறு, கலவைசாதம், மினீ மீல்ஸ், சாப்பாட்டுக்கடை, நொறுக்கல், கலக்கல், கலைடாஸ்கோப் மாதிரி நம்ம வலைப்பூவிலும் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.இதைப்பாராட்டியோ,மகிழ்ச்சி தெரிவித்தோ பின்னூட்டம் போடலைன்னா கூட பரவால்ல...இருக்கற நூத்தி சொச்சம் பின்தொடர்பவர்கள் யாராவது விலகி பஞ்சுல தண்ணிய ஊத்திராதீங்க...(எவ்ளோ நாளைக்கி நெஞ்சுல நெருப்ப அள்ளி போட்றாதீங்கன்னு பழைய பழமொழிய சொல்றது...அதான் வித்தியாசமா...ஹி..ஹி...)

இப்ப பதிவுக்கு வருவோம். பத்பநாபசாமி கோயில் 5வது ரகசிய அறைய(அதான் தொறந்துட்டாங்கல்ல...அப்புறம் என்ன ரகசியம்) திறந்துட்டாங்களாம்.அந்த அறையில 10 இலட்சம் கோடி அளவுல தங்கம்,வைரம் எல்லாம் இருக்குதாம்...இனிமே நம்ம மக்கள் அங்க இருக்கற செல்வம் பத்தாதுன்னு இவங்க பங்குக்கு போய் இன்னும் கொட்டப்போறாங்க...மனுசங்கள்ல பணக்காரங்களுக்கு மதிப்பு தர்ற மாதிரி சாமியில் கூட பணக்காரசாமிக்குதான் மவுசு. இனிமே திருப்பதி அளவுக்கு கூட்டம் கூட ஆரம்பிச்சுரும்...இவங்களையெல்லாம் எத்தன பெரியார்....சரி வேணாம் விடுங்க....

அப்புறம் எனக்கு ஒரு டவுட்டுங்க...விஞ்ஞானம் இன்டர்நெட், இமெயில், வீடியோகாலிங்ன்னு எவ்ளோ வளந்துட்டாலும் இன்னும் இந்த மாநில முதல்வர்கள்லாம் ஏன் பிரதமருக்கு கடிதமே எழுதிட்டு இருக்காங்க...?! சரி முன்ன கலைஞர் அய்யாதான் எவ்ளோ படுகொலைகள் நடந்தாலும் உடனே ஆற அமர கண்டனக்கடிதம் எழுதுவாரு...இப்ப புரட்சித்தலைவியாவது அதிரடி பண்ணுவாங்கன்னு பாத்தா எதுக்கெடுத்தாலும் கடிதம் எழுதிகிட்டு....என்னத்த சொல்ல....?!


அப்புறம் பேஸ்புக்ல மேஞ்சிகிட்டு இருந்தப்ப மேல இருக்கற படத்த பாத்து வருத்தமா இருந்தது. இவ்ளோ பெரியவரு இந்த குடிமகன்கள் கால்ல விழுந்து கெஞ்சறத பாத்தா பாவமா இருக்கு...செவிடன் காதில் ஊதிய சங்கு போலன்னு சொல்வாங்களே...அது மாதிரி குடிமகன்கள் அவங்க வீட்ல இருக்கறவங்க எத்தனையோ தடவை கால்ல விழுந்து கெஞ்சி கேட்டும் திருந்தாதவங்க இவரு சொல்லி திருந்துவாங்கன்னு நம்பிக்கை இல்ல...காந்தி பிறந்த ஊரான குஜராத் மாதிரி மதுவிலக்கு கொண்டுவந்தா தமிழ்நாட்டு தாய்மார்கள் பலரோட வயிறும் நிறையும். மனசும் குளிரும். இந்த ஒரு விஷயத்துக்காகவே மோடி பிரதமர் ஆகணும்ன்னு ஆசைப்படறேன்.(உடனே இந்துத்வா முத்திரை குத்திராதீங்க...பொதுவா சொன்னேன்.)சட்டம் ஒழுங்கையும் அரசே கவனிக்கும்.மதுவையும் அரசே விற்கும்.சரியான காமெடிங்க....

சரி இன்னக்கி இது போதும். நம்ம மிக்ஸிங் பதிவுக்கு எதாவது நல்ல டைட்டிலா சொல்லுங்க...சிறப்பு பரிசு காத்திருக்கு. (இந்தியா மறைமுகமா 100ரூ புடிங்கிகிட்டு 10 ரூ பரிசு கொடுத்தா நம்ம மக்கள் சிரிச்சுகிட்டே போட்டில கலந்துக்குவாங்க...சரி கோடி..ச்சீ ரெடியா..?!) :)



Post Comment