சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

14.7.12

சொந்தக்கதையும்,புகைப்படக்கலையும்...

யாரும் தலைப்பு சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.பின்தொடர்பவர்கள் பின்வாங்காதது ஆறுதல் அளிக்கிறது.

இதுவரை வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் கானல் கொடுமையை அனுபவித்து கொண்டிருந்த நான் நேற்றுதான் அதற்கு மேல் தென்னங்கீற்றை வேய்ந்தேன்.நேற்றிரவிலிருந்து  மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. :) இயற்கைக்கும் என்னைக்கண்டால் சிரிப்பாக இருக்கும் போல...

இந்த வாரத்தில் ஒரு பயனுள்ள புகைப்படக்கலை பயிற்சி வகுப்புக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.வெளிப்புற புகைப்படக்கலை (அதாவது அவுட்டோர் போட்டோஃகிராபி.தமிழ்..தமிழ்...)வகுப்பை பிரபல புகைப்பட நிபுணர் திரு.ஜீவா சுப்ரமணியம்  அவர்கள் கற்றுக்கொடுத்தார். எங்களுக்கு தோரணை காட்ட(அதாவது போஸ் கொடுக்க...தமிழாக்க உபயம் கூகிள் ட்ரான்ஸ்லேட்)பிரபல மாடல் ரீத்தி மங்கள் வந்திருந்தார். சிறப்பாகவும், சிரிப்பாகவும் (மாடலை பார்த்து அல்ல) அமைந்தது வகுப்பு. அங்கு நான் எடுத்த புகைப்படங்களை இங்கு சென்று பார்த்து மகிழுங்கள். அப்படியே அந்த பேஜை லைக்குங்கள் (ஹி..ஹி...ஒரு வௌம்பரம்)

                                 

                                   

அரசியல்,அனுபவம்,ஆதரவு இவைகளை தவிர்த்து குடியரசுத்தலைவர் பதவிக்கென்று ஒரு முகம் தேவைப்படுகிறது.(நீ அதுக்கு சரிப்பட மாட்ட..வடிவேல் சோக்கு ஞாபகத்துக்கு வருது.) அந்த முகம் திரு.சங்மா அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.நம்மூர் படங்கள்ல வர்ற வட்டிக்கடை சேட்டு மாதிரியே இருக்காரு. அதிசயம் நடக்குமா..?! நீங்க என்ன நினைக்கறீங்க..?!


இந்த பதிவ எழுதிட்டு இருக்கும்போது வந்த குறுஞ்செய்தி.லேப்டாப் விலையில்லாம (அ) இலவசமா (ரெண்டும் ஒண்ணுதான்.ஆனா,அவங்க மாத்தி சொல்வாங்க....)தர்ற அரசாங்கம் உயிர் காக்கும் ஹெல்மேட்டை ஏன் ஃப்ரீயா தரக்கூடாது..?! நியாயமான கேள்விக்கு பதில் சொல்லுங்க...
பேஸ்புக்ல இந்த படத்த பாத்ததிலிருந்து வாந்தி வாந்தியா வருது. நம்மூரு கறிக்கடைகள்ல ஞாயிற்றுக்கிழமை ஆட்ட தொங்க விடற மாதிரி சைனாவுல நாய்களை தொங்க விட்ருக்காங்க...பாம்பையே திங்கறவங்களுக்கு இது எம்மாத்திரம்..?! ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு டேஸ்ட்...உவ்வே...  :)
Post Comment

6 comments:

 1. I am following....
  Velangathavan...
  :)
  :)
  :)

  ReplyDelete
 2. மனிதனை சாப்பிடாமல் இருந்தால் சரி...
  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 3. நண்பர் கான் பதிவின் மூலம் உங்கள் தளத்தினை பார்த்தேன்,
  ஜாலியாக இருக்கிறது உங்கள் பதிவுகள், தொடர்ந்து வருகிறேன்.
  நன்றி
  ஸ்டுடியோ புதிதாக ஆரம்பித்து உள்ளேன்,
  இனி புகைப்படக்கலை பயிற்சி வகுப்புகள் இருந்தால் தகவல் கூறவும்,
  வர முயற்சி செய்கிறேன்.
  நன்றி தேவா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா...ஸ்டுடியோ வளர வாழ்த்துகள்.ஸ்டுடியோ மற்றும் தொடர்பு விபரங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பவும். salemdeva@gmail.com

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!