சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

6.7.12

வந்துட்டமுல்ல...

அப்பப்ப நம்ம பிளாக்கர் நண்பன் கூகிள் அந்த சேவையை நிறுத்தப்போகிறது. இந்த சேவையை நிறுத்தப்போகிறதுன்னு பதிவெழுதி பீதிய கிளப்பறாரு.... தொடர்ச்சியாக 3,4 மாதங்கள் பிளாக்கரில் பதிவுகள் எழுதாமல் இருந்தால் அவங்க பீஸ் புடுங்கப்படும்ன்னு சொல்லிட்டா இவ்ளோ வருஷம் கஷ்டப்பட்டு(?!) எழுதிய பதிவுகளையும், இஷ்டப்பட்டு சேர்ந்த பின்தொடர்பவர்களையும் இழக்க நேரிடும்ன்றதால நிறையப்பதிவர்கள் கடைபிடிக்கும் ஒரு சிறந்த வழியான கொத்துபுரோட்டா, கூட்டாஞ்சோறு, கலவைசாதம், மினீ மீல்ஸ், சாப்பாட்டுக்கடை, நொறுக்கல், கலக்கல், கலைடாஸ்கோப் மாதிரி நம்ம வலைப்பூவிலும் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.இதைப்பாராட்டியோ,மகிழ்ச்சி தெரிவித்தோ பின்னூட்டம் போடலைன்னா கூட பரவால்ல...இருக்கற நூத்தி சொச்சம் பின்தொடர்பவர்கள் யாராவது விலகி பஞ்சுல தண்ணிய ஊத்திராதீங்க...(எவ்ளோ நாளைக்கி நெஞ்சுல நெருப்ப அள்ளி போட்றாதீங்கன்னு பழைய பழமொழிய சொல்றது...அதான் வித்தியாசமா...ஹி..ஹி...)

இப்ப பதிவுக்கு வருவோம். பத்பநாபசாமி கோயில் 5வது ரகசிய அறைய(அதான் தொறந்துட்டாங்கல்ல...அப்புறம் என்ன ரகசியம்) திறந்துட்டாங்களாம்.அந்த அறையில 10 இலட்சம் கோடி அளவுல தங்கம்,வைரம் எல்லாம் இருக்குதாம்...இனிமே நம்ம மக்கள் அங்க இருக்கற செல்வம் பத்தாதுன்னு இவங்க பங்குக்கு போய் இன்னும் கொட்டப்போறாங்க...மனுசங்கள்ல பணக்காரங்களுக்கு மதிப்பு தர்ற மாதிரி சாமியில் கூட பணக்காரசாமிக்குதான் மவுசு. இனிமே திருப்பதி அளவுக்கு கூட்டம் கூட ஆரம்பிச்சுரும்...இவங்களையெல்லாம் எத்தன பெரியார்....சரி வேணாம் விடுங்க....

அப்புறம் எனக்கு ஒரு டவுட்டுங்க...விஞ்ஞானம் இன்டர்நெட், இமெயில், வீடியோகாலிங்ன்னு எவ்ளோ வளந்துட்டாலும் இன்னும் இந்த மாநில முதல்வர்கள்லாம் ஏன் பிரதமருக்கு கடிதமே எழுதிட்டு இருக்காங்க...?! சரி முன்ன கலைஞர் அய்யாதான் எவ்ளோ படுகொலைகள் நடந்தாலும் உடனே ஆற அமர கண்டனக்கடிதம் எழுதுவாரு...இப்ப புரட்சித்தலைவியாவது அதிரடி பண்ணுவாங்கன்னு பாத்தா எதுக்கெடுத்தாலும் கடிதம் எழுதிகிட்டு....என்னத்த சொல்ல....?!


அப்புறம் பேஸ்புக்ல மேஞ்சிகிட்டு இருந்தப்ப மேல இருக்கற படத்த பாத்து வருத்தமா இருந்தது. இவ்ளோ பெரியவரு இந்த குடிமகன்கள் கால்ல விழுந்து கெஞ்சறத பாத்தா பாவமா இருக்கு...செவிடன் காதில் ஊதிய சங்கு போலன்னு சொல்வாங்களே...அது மாதிரி குடிமகன்கள் அவங்க வீட்ல இருக்கறவங்க எத்தனையோ தடவை கால்ல விழுந்து கெஞ்சி கேட்டும் திருந்தாதவங்க இவரு சொல்லி திருந்துவாங்கன்னு நம்பிக்கை இல்ல...காந்தி பிறந்த ஊரான குஜராத் மாதிரி மதுவிலக்கு கொண்டுவந்தா தமிழ்நாட்டு தாய்மார்கள் பலரோட வயிறும் நிறையும். மனசும் குளிரும். இந்த ஒரு விஷயத்துக்காகவே மோடி பிரதமர் ஆகணும்ன்னு ஆசைப்படறேன்.(உடனே இந்துத்வா முத்திரை குத்திராதீங்க...பொதுவா சொன்னேன்.)சட்டம் ஒழுங்கையும் அரசே கவனிக்கும்.மதுவையும் அரசே விற்கும்.சரியான காமெடிங்க....

சரி இன்னக்கி இது போதும். நம்ம மிக்ஸிங் பதிவுக்கு எதாவது நல்ல டைட்டிலா சொல்லுங்க...சிறப்பு பரிசு காத்திருக்கு. (இந்தியா மறைமுகமா 100ரூ புடிங்கிகிட்டு 10 ரூ பரிசு கொடுத்தா நம்ம மக்கள் சிரிச்சுகிட்டே போட்டில கலந்துக்குவாங்க...சரி கோடி..ச்சீ ரெடியா..?!) :)
Post Comment

3 comments:

 1. //அப்பப்ப நம்ம பிளாக்கர் நண்பன் கூகிள் அந்த சேவையை நிறுத்தப்போகிறது. இந்த சேவையை நிறுத்தப்போகிறதுன்னு பதிவெழுதி பீதிய கிளப்பறாரு..//

  ஹா..ஹா..ஹா.. முதலில் தலைப்பை "சில கூகுள் சேவைகளை.." என்று தான் போட நினைத்தேன். பிறகு மாற்றிவிட்டேன்.

  //ஏன் பிரதமருக்கு கடிதமே எழுதிட்டு இருக்காங்க...?!//

  ஹேக் செய்திடுவாங்களோன்னு பயம் தான்..

  //நம்ம மிக்ஸிங் பதிவுக்கு எதாவது நல்ல டைட்டிலா சொல்லுங்க.//

  மசாலா வடை - எப்படி இருக்கு?

  :D :D :D

  ReplyDelete
  Replies
  1. வாவ்..தலைப்பு அருமை.மைன்ட்ல வச்சிக்கறேன். :)

   Delete

No Bad Words... தேவா பாவம்!!!