இந்தமுறை பொங்கல் விடுமுறை நீண்ண்ண்ண்ட நாட்கள் இருந்ததுபோல் ஒரு உணர்வு.பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சியை விட்டால் வேறு போக்கிடம் இல்லாமல் போய்விட்டது.
காணும் பொங்கல் அன்று பெரியவர்கள், நண்பர்களை கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளாமல் தொலைக்காட்சியை கண்டு கொண்டு இருக்கிறோம்.
புதிதாக வந்த திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கலாம் என்றால் திரையரங்கத்தினர் ஒரு வாரத்திற்குள் போட்ட பணத்தை எடுக்கும் பொருட்டு விலையை அவர்கள் விருப்பத்திற்கு உயர்த்தி விடுவார்கள்..அதுவும் ரசிகர்கள் இடும் கூச்சலில் படம் பார்த்த திருப்தியே வராது.
இந்தமுறை பலவருடங்கள் கழித்து சர்க்கஸ் சென்றோம். சர்க்கஸின் கூரையில் உள்ள கிழிசல்களே அவர்களின் வறுமை நிலையை உணர்த்துகிறது. குழந்தைப்பருவத்திற்கு திரும்பிவிட்டாற்போன்று ஒரு உணர்வு. ஆனால், விலங்குகள் நலவாரியத்தின் புண்ணியத்தால் நான் சென்றபோது சர்க்கஸில் இருந்த விலங்குகள் இப்போது 10 சதவீதம் கூட இல்லை. 1 யானை,2 குதிரை,2 ஒட்டகம்,3 நாய்கள் இவை மட்டுமே காண முடிந்தது. இவைகளை விலங்குகள் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்களா தெரியவில்லை.அவைகளும் பார்க்க பரிதாபமான நிலையில்தான் இருந்தது.
பிழைப்புக்காக மனிதர்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தரத்தில் செய்யும் சாகச விளையாட்டுகளை காணும்போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. குள்ள மனிதர்களை பார்க்கும்போது அபூர்வசகோதரர்கள் கமல்தான் நினைவுக்கு வந்தார்.பரிகசிக்கும் இளைஞர்களை பொருட்படுத்தாமல் நிறைவாக சிரித்தமுகத்துடனும், குறைவான ஆடைகளுடனும் வந்த பெண்களின் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
நீண்ட கத்தியை இருதயம் வரை சொருகுவது,கத்திப்படுக்கையின் மேல் படுப்பது.சைக்கிள் சாகசங்கள்,மரணகூண்டில்(அப்படிதான் அறிவித்தார்கள்) மோட்டார் சைக்கிள் சாகசம்,ஒரு சாகசக்காரர் 1 லிட்டர் தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் அதை வாய்வழியே அதை சிறிது சிறிதாக வெளியேற்றுகிறார்.இருவேறு வண்ணங்கள் கொண்ட தண்ணீரை குடித்து அதை தனித்தனியாக வெளியேற்றியது வியப்பூட்டுவதாக இருந்தது. (இந்தப்பயிற்சி யோகக்கலையின் மூலம் சாத்தியம் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் பகிரவும்)இப்படி இரண்டரை மணி நேரக்காட்சியை ஓட்டுவதற்கு பாடுபடுகிறார்கள்.
குழந்தைப்பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுறுத்துகிறது.என் மகளை யானை வரும் என்று சொல்லியே தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டேன்.உங்கள் ஊரில் சர்க்கஸ் நடைபெற்றால் நம்முடைய குழந்தைகளுக்காகவும்,சர்க்கஸில் உள்ள கலைஞர்களுக்காகவும் ஒருமுறை சென்று வாருங்கள். மகளுக்கு மகிழ்ச்சியுமாய்,மனதுக்கு நெகிழ்ச்சியுமாய் நேற்றைய பொழுது கழிந்தது.
குறிப்பு: பதிவில் இருக்கும் படங்கள் கூகிளின் வழியே எடுத்தது.சர்க்கஸ் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லையாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteAda.....!!!!!
ReplyDeleteபாஸ்..எதுக்கு இந்த ஆச்சர்யம்..?! :)
Deleteஎல்லோரும் சினிமாவிற்கு குடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சமேனும் இவர்கள் போன்ற கலைஞர்களுக்கும் குடுத்தால் நல்லதுதான்..
ReplyDeleteபுரிதலுக்கும்,வருகைக்கும் நன்றி நண்பரே..!!
DeleteINDHA KATURAIYA PADHIKUM PODHA CIRCUS IRUKIRA MADHIRI YELADHA PATHU IRUKU NALA MURYACHI SIR
ReplyDeleteஉடனே போய்ப்பாருங்க சசி..!! :)
Deleteகடந்த முறை நான் போயிருந்தேன்..
ReplyDeleteசர்க்கஸில் இப்போதெல்லாம் மிருகங்கள்
இல்லை.. ஆண்களும், பெண்களும்
மாறி மாறி ஜிம்னாஸ்டிக் வேலைகளை
செய்து காட்டுவது அலுப்பூட்டுவதாக தான்
இருக்கிறது..
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது தேவா.
இந்த நவீன யுகத்தில் சர்க்கஸ் தாக்கு பிடிப்பது
கஷ்டம்..
அழிந்து கொண்டிருக்கும் கலை இது.
ReplyDeleteகலைஞர்கள் நன்றாக இருந்தால்தான் கலை நன்றாக இருக்கும்.
DeleteNaan, enadhu manaivi, enadhu kulandhai madhal naaley sendru paarthu vandhom.....
ReplyDeleteமகிழ்ச்சி நண்பரே..!!
Deleteசர்க்கஸுக்கு போனால் மனதில் ஒரு இனம் புரியா வலி எனக்கு இருக்கும். அதனால் நான் போறதேயில்லை
ReplyDeleteஅந்த இளம்பெண்களின் கண்களில் தெரிந்த சோகம் பரிதாபமானது தோழி...
Deleteஅருமையான பதிவு... சர்க்கஸ்....சரிவிலிருந்து மீளூமா
ReplyDeleteமீள்வதற்குதான் போராடுகிறார்கள் நண்பரே...
ReplyDeleteசர்கஸ்.. ஒரு அருமையாக கலை.. மற்றும் மொழுதுபோக்கு அம்சம்.
ReplyDeleteஅதனை நாம் ஒக்குவிக்க வேண்டும்.
இந்தச் சினிமாவும், தொ(ல்)ல்லைக் காட்சியும் அதனை அழித்து வருகிறதோ.
சர்கஸ் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இதோ.. இங்கே..
வணக்கம் சகோ ! இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகையை அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்
ReplyDeleteநன்றி
சம்பத்குமார்
மனம் கவர்ந்த பதிவுகள்
குழந்தை பருவத்தில் பார்த்த அதிகமான விலங்குகள் தற்போது இல்லையென்பது மனக்குறை தான். அப்போது ஏற்பட்ட உற்சாகம் தற்போது குழந்தைகளுக்கு வருமா? என்பது சந்தேகமே!
ReplyDeleteதங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html
சில மாதங்களுக்கு முன்பு நான் குடியிருக்கும் ஊரில் சர்க்கஸ் ஒன்று போட்டார்கள் (கண்ணன் கலைக்குழுவினர்)..
ReplyDeleteஅவர்கள் விலங்குகள் எதையும் பயன்படுத்தவில்லை.
அனைத்துமே உயிரைப் பயணம் வைக்கும் சாகசங்கள் தான்!!
மொத்தம் பத்து பேர் மட்டுமே இருந்த அரங்கிற்காக இருபது பேர் சாகசம் செய்தனர்..
பாவம்!