சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

25.2.12

நானும் விகடனும்

இல்லல்ல...அது சரியா வராது.விகடனும் நானும்-ன்னுதான் சொல்லணும். அவங்கதான் சீனியர். இப்டியே போனா சீக்கிரமா அந்த பகுதிய என்னையும் எழுதச்சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.(எதுக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கறான்)

உலகப்பத்திரிக்கை வரலாற்றில் இரண்டாவது முறையாக விகடன் பெருமைப்பட்டுவிட்டது. (எப்படி..?) சமூகவலைத்தளங்களில் வரும் ஈர்க்கக்கூடிய கருத்துகளை ஆனந்தவிகடன் வலைபாயுதே என்ற தொடராக வெளியிட்டு வருவது உங்களுக்கு தெரிந்ததே...

ஒரு சமூக வலைத் தளங்களை கூட விடாமல் பங்களித்து சேவை செய்து வரும் (வெட்டிவேலை செய்யும்ன்னு சொல்றா டேய்) சேலம்தேவா அவர்களையும் (நான்தான்.. நான்தான்..) நீங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள். இல்லைன்னாலும் இப்ப தெரிஞ்சிக்கோங்க...

அத்திப்பூ பூப்பது போல் நான் சில தத்துவ முத்துகளை அவ்வப்போது உதிர்ப்பதுண்டு. போனவருடவாக்கில் முதல்முறையாக என் ட்விட் ஒன்று விகடனில் வந்து அதை நீங்கள் விழாவாக கொண்டாட நினைத்து அதை நான் வேண்டாமென்று மறுத்தது நினைவிருக்கிறதா..?! (இல்லை.அதுக்கு என்ன இப்ப..?) சரி..அதை விடுங்கள்.

இந்த வருடமும் விகடனுக்கு தோன்றியுள்ளது நாம் இந்த மேதையை (நான்தான்..நான்தான்) கவுரவித்து ஒரு வருடமாகி விட்டதே என்று இந்த வார இதழில் வலைபாயுதேவில் என்னுடைய அனுபவத்தில் விளைந்த ஒரு நல்முத்தை ஏற்றியுள்ளார்கள். படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விகடன் புத்தகத்தை வாங்கி படித்துக்கொள்ளுங்கள். (ஹி..ஹி...விகடன் விற்பனைக்கு ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு உதவி) (டேய்..இதெல்லாம் ரொம்ப ஓவர்.உன் ட்விட்ட போய் போட்டாங்க பாரு...அவங்களுக்கு இதுவும் வேணும்.இன்னமும் வேணும்)


இந்த ட்விட் என் சிந்தனையில் தோன்றிய விதத்தை தெரிந்து கொள்ள என் வாசகர்களாகிய நீங்கள் ஆவலாயிருப்பீர்கள். (நாங்க எப்படா சொன்னோம்..?!) உங்கள் விருப்பத்திற்கிணங்க அந்தப்பதிவு அடுத்த வாரத்திற்குள் உங்கள் பார்வைக்கு பதிவாக வரும். (ஹி..ஹி...டிரைலர்)

ஸ்வீட்(நீங்களே காசு கொடுத்து வாங்கி) எடுங்க...கொண்டாடுங்க... ஹி..ஹி...
Post Comment

10 comments:

 1. பார்த்தவுடனே நினைத்தேன். வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வாழ்த்துகள் அண்ணா.

  ReplyDelete
 3. விகடனில் தங்கள் ட்வீட்டை வாசித்தேன் தேவா. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் . வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 5. அலம்பல் தாங்க முடியலைடா சாமி.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!