சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

31.7.11

சென்னையில் நான்...

இருங்க.. இருங்க... அவசரப்படாதீங்க. உடனே என்னை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் சென்னை வாசகர்கள்(?!) எனக்கு மெயிலவோ,போன் பண்ணவோ ஆரம்பிச்சிராதீங்க.சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்துட்டு ஊர் திரும்பிட்டேன்.எனக்கு எங்க தலைவர் வெங்கட் மாதிரி பப்ளிகுட்டி பிடிக்காது.


சென்னை நந்தம்பாக்கம் டிரேட்சென்டரில் பைசெல் நிறுவனத்தாரால் வருடாவருடம் நடத்தப்படும் அகில உலக புகைப்படகண்காட்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைக்காவிட்டாலும் நானாகவே போய்டுவேன்.ஹி..ஹி...நாளைக்கு ஒரு நாள்தான்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கும். நேரமிருந்தா போய் பாருங்க வாசகர்களே..!!சினிமாவுக்கு பயன்படுத்தப்படும் கேமராக்கள்,உபகரணங்களை நேரில் பார்க்கலாம்.

சேலத்துலருந்து சென்னைக்கு ஓட்டிகிட்டு இருந்த ப்ளைட் வேற கேன்சல் பண்ணிட்டாங்க...ஆன்லைன்ல ரயில் டிக்கெட் புக் பண்றதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் படிக்கணும் போல...அதனால பஸ்ல வரவேண்டியதா போச்சு.

    ஊராங்க அது.  எங்க பாத்தாலும் ஒரே மக்கள்கூட்டம்.அதுக்கு மேல ஆட்டோ கூட்டம்.கண்ண கட்டி கண்மாய்ல தள்ளிவிட்டமாதிரி இருந்துச்சு.அங்க வண்டி ஓட்டணும்ன்னா தியானவகுப்புக்கெல்லாம் போயிருக்கணும்.இல்லைன்னா டென்சன்ல BP எகிறிடும்.சேலத்துலதான் ஆட்டோ அதிகம்ன்னு நெனச்சா சென்னையில...அடேங்கப்பா...மெட்ரோ ரயிலுக்காக அங்கங்க டிராபிக் திருப்பிவிட்ருக்காங்களாம்.ஆட்டோக்காரர் வேஸ்ட் திட்டம்ன்னு திட்னாரு.என்ன கடுப்போ..?!

அடுத்த தடவை வந்தா மேப்போடதான் வரணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.திருப்பதி போய் லட்டு வாங்காம வரக்கூடாதோ அது மாதிரி சென்னைக்கு போய்ட்டு தி.நகர் போகாம வரக்கூடாது.ஹி.ஹி.. என்னா கூட்டம்.அங்காடித்தெரு படம் எந்த கடையில எடுத்துருப்பாங்கன்னு தெரியல.கடையில வேல பாக்கற யார பாத்தாலும் அந்த படம் ஞாபகத்துக்கு வந்து இம்சை பண்ணிச்சு.

அடுத்த தடவை சென்னை வரும்போது கண்டிப்பா உங்களுக்காக நேரம் ஒதுக்கி அனைவரையும் சந்திப்பேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொல்கிறேன்.ச்சீ..கொள்கிறேன்.

சென்னை வாசகர்கள் சென்னையை சுற்றிப்பார்ப்பதற்கு உதவி செய்யும் இணையதளத்தை பின்னூட்டத்தில் பகிர்ந்தால் மற்ற ஊர் வாசகர்கள் பயனடைவார்கள்.ஹி..ஹி... நானும்தான்.

Post Comment

6 comments:

 1. // ஊராங்க அது. எங்க பாத்தாலும் ஒரே மக்கள்கூட்டம்.அதுக்கு மேல ஆட்டோ கூட்டம்.கண்ண கட்டி கண்மாய்ல தள்ளிவிட்டமாதிரி இருந்துச்சு.அங்க வண்டி ஓட்டணும்ன்னா தியானவகுப்புக்கெல்லாம் போயிருக்கணும்.இல்லைன்னா டென்சன்ல BP எகிறிடும்//

  உங்களுக்கும் அப்படித்தான் தோணுதா? எனக்கு மட்டுமோன்னு நினைச்சேன்.

  நான் எங்கே போகணும் என்றாலும் சென்னையில் ஆட்டோ பிடித்துத்தான் போவேன். இந்த பஸ் எலெக்ட்ரிக் டிரெயின் இதெல்லாம் எனக்கு சரிப்பட்டே வராது.

  ஆட்டோவிலே ஏறி உட்கார்ந்தா சும்மா சர்ருபுர்ருன்னு ஓட்டுவாங்க பாருங்க. நான் கண்னை மூடிக்கிட்டு கடவுளை வேண்டிக்க ஆரம்பிச்சுடுவேன்.

  முட்டாம மோதாம கொண்டுபோய் சேர்க்கப்படுவோமா என்ற பயம் வந்துடும்.

  போன வேலை முடிஞ்சு எப்போ எக்மோருக்கு ஆட்டோவில் வந்து இறங்குவோம், எப்போ ரயில் ஏறுவோம், எப்போ நம்ம ஊர் திருச்சிவரும்னு ஏக்கமே வந்துடும்.

  தலைநகர் அல்லவா அதனால் நமக்கெல்லாம் சற்று தலை சுத்தத்தான் வைக்கும்.

  சென்னை ஆசாமிகள் இதிலெல்லாம் (இடுக்கண் வருங்கால் நகுக போல)நல்லாப் பழகிப்போய் இருப்பார்கள்.

  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. // சென்னையில் நான்... //

  நீங்க சென்னை வரக்கூடாதுன்னு சொல்லி தான் ஸ்டாலின் நடுரோட்ல
  உக்காந்து போராட்டம் பண்ணினாரா.?

  ReplyDelete
 4. // சென்னைக்கு போய்ட்டு தி.நகர் போகாம வரக்கூடாது. //

  நான் சென்னையில 11 வருஷம் முன்னாடி ப்ராஜெக்ட்காக 6 மாசம் இருந்தேன்.. எங்க கம்பியூட்டர் சென்டர் தி.நகர்ல தான் இருந்தது.. தினமும் தி. நகர்ல தான் சுத்திட்டு இருப்போம்.. பசுமையான நினைவுகள் அது..

  ஆனா இந்த தடவை சென்னை போனப்ப.. நான் பாத்த தி. நகர் தலைகீழா மாறியிருந்தது.. வெறுத்து போச்சு..

  ReplyDelete
 5. நல்ல அனுபவம்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. நல்ல பதிவு நகைச்சுவையோடு...👍👌☺💐👌👌

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!