சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

27.7.11

தெய்வத்திருமகள்..!

கண்ணு பட்ருமுல்ல... அதனால கோட்டோவியம்.

போன வருஷம் இதே நாளில் என் மகள் பிறந்தநாள்.கூடவே உங்களுக்கு ஒரு தொல்லையும் பொறந்துச்சு..ஹி.ஹி.. நான் பிளாக் எழுத ஆரம்பிச்சத சொன்னேன்.

எங்கேயோ படித்த ஞாபகம்.ஒரு வரி நாம் எழுதுவதாக இருந்தால் நான்கு வரிகளை படித்திருக்கவேண்டுமாம்.நான் ஃபாலோ பண்றவங்க லிஸ்ட்ட பாத்தீங்கன்னா தெரியும் நான் ஏன் அதிகம் எழுதறதில்லைன்னு..அவ்ளோ பேரையும் படிச்சிட்டே இருந்தா எங்க எழுதறது..?! இப்டியே போனா நம்ம பிளாக்க கூகிளார் இழுத்து மூடிடுவாருன்னுதான் இந்த பதிவு.ஏன்னா...நம்மளயும் நம்ம்ம்ம்ப்ப்பி ஒரு 73 பேர் பின்தொடர்றத நெனச்சா தெய்வத்திருமகள் படம் பாத்து அழுதத விட அதிகமா அழுகை வருது.

இன்னிக்கு என்னோட தெய்வத்திருமகளோட பர்த்டே...நாட்ல (கேக்) விலைவாசி எவ்ளோ ஏறிப்போச்சு. அம்மா ஆட்சிக்கு வந்தும் இதெல்லாம் கண்டுக்க மாட்றாங்களே...தேன்கூட்ல கைய வச்ச மாதிரி சமச்சீர் கல்வி திட்டத்த அமுல்படுத்தறதுல சொதப்பி பெத்தவங்க வயித்தெரிச்சல வாங்கி கட்டிகிட்டாங்க.யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியல..என் பொண்ணுக்கு ஒரு வயசு இன்னிக்கு.ஸ்கூல் சேத்தறதுக்குள்ள ஒரு நல்ல முடிவா எடுத்துட்டா பரவால்ல...ஹி..ஹி... ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங். வந்ததும் வந்தீங்க.. வாழ்த்திட்டு போங்க... என்ன இல்லீங்க... என் மகளை..!!

Post Comment

10 comments:

 1. குட்டிப்பாப்பாவுக்கு எனது வாழ்த்துகள் நண்பரே! :-)

  ReplyDelete
 2. இருவருக்குமே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. Many more returns of the day .......
  நல்லா படித்து பெரிய DRஆக வரணும்.............

  ReplyDelete
 4. ஹேப்பி பர்த்டே டூ பாப்பா..!

  :)

  ReplyDelete
 5. செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. உங்களின் இனிய செல்லத்துக்கு எனது அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களின் உண்மையான ஃப்லோவர் உங்கள் அன்பு மகள்தான். அவள்தான் உங்களின் இறுதிநாளுக்கு அப்புறமும் உங்கள் எண்ணங்களை தொடர்ந்து வருபவள். அதனால் இந்த ப்ளாக்கை பற்றி கவலைப்படாமல் உங்களின் அன்பு செல்வத்தை கவனியுங்கள். அதனுடன் நீங்கள் செலவழிக்கும் ஓவ்வோரு நிமிடமும் மிக இனிமையானதாக மட்டுமல்லாமல் மறக்க முடியாத இனிமை நினைவுகளாக இருக்கும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. உங்கள் குழந்தைக்கும் உங்க தளத்திற்கும் வாழ்த்துக்கள் :-)

  //நாட்ல (கேக்) விலைவாசி எவ்ளோ ஏறிப்போச்சு. அம்மா ஆட்சிக்கு வந்தும் இதெல்லாம் கண்டுக்க மாட்றாங்களே...//

  அடுத்த முறை இனி அனைத்து பிறந்த நாளுக்கும் அனைவருக்கும் அரசு இலவச கேக் தரணும் அப்போது தான் ஓட்டுப்போடுவோம் என்று கூறி விடுவோம் ;-)

  ReplyDelete
 8. அப்பா மாதிரி இல்லாம... நல்லா அறிவாளியா இருக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. தெய்வ திருமகள் பிறந்த நாள் அதுவுமா தெய்வ மகன் சிவாஜி ரேஞ்சுக்கு உணர்ச்சி வசபடாதீங்க.ஜாலியா கேக் வெட்டுங்க,ஹாப்பியா இருங்க.

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!