சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

27.8.12

ஆண்ட்ராய்டும்,பதிவர் திருவிழாவும்..

சாதாரண வசதிகள் கொண்ட மொபைலைக் கண்டாலே ஐய்ய்..போனுன்னு சிட்டிகாரங்க சிறுத்தைய பாக்கறமாதிரி பாப்பேன். (ஹி..ஹி...ஒரு சேஞ்சுக்கு....எவ்ளோ நாளைக்கு பட்டிக்காட்டான் முட்டாயின்னு சொல்றது)இதுல ஐ-போன் எல்லாம் நான் இதுவரைக்கும் பாத்தது கூட இல்லைன்றதுதான் நெசம். 

முந்தாநாள் என் பிறந்தநாள்.(ஹி..ஹி...மறந்து போனவங்க இதுக்கு மேலயும் கிப்டோ, கேக்கோ அனுப்பினாலும் பெருந்தன்மையா ஏத்துக்கற மனசு என்னுது) எங்க டாடி எனக்கு சர்ப்ரைஸா 8400 ஓவா போட்டு  சேம்சங் கேலக்ஸி ஒய் டூயல் சிம் வசதி கொண்ட, இரண்டு பெட்ரூம் வசதி கொண்ட ச்சே.. ஒரு ஃப்ளோவுல வந்திருச்சு.. ஒரு மொபைல் வாங்கித் தந்தாரு...அதுல இருக்கற ஆன்ட்ராய்ட் வசதிய மூணுநாளா நோண்டி நோண்டி வியக்கேன். இந்த கூகிள்காரனுக்குதான் என்னா மூளை.எதிர்காலத்துல இணையமே மொபைல்லதான்றத மனசுல வச்சி செமையா ரெடி பண்ணிருக்காங்க...அதுலயும் லட்சக்கணக்கான அந்த பயன்பாடுகளை (APPS) பாக்கும் போது உண்மையிலேயே பிரம்மிப்பா இருக்கு.நம்ம பிரபல தொழில்நுட்ப பதிவர்கள்  பிளாக்கர் நண்பன், பிரபு கிருஷ்ணாவின் கற்போம்,சசிகுமாரின்  வந்தேமாதரம் தளங்களுக்கு போய் ஆண்ட்ராய்டு பதிவுகளா படிச்சிட்டு இருக்கேன்.நீங்களும் இதுவரைக்கும் வாங்கலைன்னா ட்ரை பண்ணுங்க...

நேற்று நடந்த பதிவர் சந்திப்புக்கு வேலையின் நிமித்தம் போகமுடியாம நானே நொந்து போயிருக்கேன். போயிட்டு வந்த பதிவர்கள் போடற பதிவுகள பாக்கும் போது தீயற வாடை வருது. (ஸ்டமக் பர்னிங்) இதுநாள் வரைக்கும் யூத்துன்னு நெனச்சி படிச்சிட்டு இருந்த அண்ணன்..தப்புதப்பு...பெரியவர் சேட்டைக்காரன் அவர்களும் கலந்துகிட்டத படிச்சபோது நொந்துட்டேன். அவரோட சந்திப்ப மிஸ் பண்ணிட்டமேன்னு...போட்டோவ பாத்தவுடனே படையப்பா வசனத்த நெனச்சுகிட்டேன். :) 

வயதில்தான் பெரியவர்.எழுத்தில் என்றும் யூத்  சேட்டைக்காரன் என்னும்
திரு.ராஜாராமன் அவர்களின் புகைப்படம்


மொத்தத்துல ஹிட்ஸ் வாங்கற பதிவர்களோட விழா ஹிட் ஆனதுல மகிழ்ச்சி.

Post Comment

16 comments:

 1. // பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் பிளாக்கர் நண்பன், பிரபு கிருஷ்ணாவின் கற்போம்,சசிகுமாரின் வந்தேமாதரம் தளங்களுக்கு //

  அவ்வ்வ் ஆனந்த கண்ணீர் அண்ணே. :-)))))

  சேட்டைக்காரன் வலைப்பூவில் அவரை பார்த்தேன். செம சேட்டையான ஆள் தான் :-)))

  ReplyDelete
  Replies
  1. இது என் கடமை தம்பி.கண்ணீரை துடைச்சிக்கோங்க... :)

   Delete
 2. // பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் பிளாக்கர் நண்பன், பிரபு கிருஷ்ணாவின் கற்போம்,சசிகுமாரின் வந்தேமாதரம் தளங்களுக்கு //

  உண்மையிலேயே இவங்க பிரபல பதிவர்கள்தான்..!

  ReplyDelete
 3. ஆன்ட்ராய்ட் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்! அப்ளிகேசன்கள் இலவசம் தானே என்று எல்லாத்தையும் பயன்படுத்த வேண்டாம்.

  சேட்டைக்காரரின் படத்தை பார்த்த போது நம்பவே முடியவில்லை.

  :) :) :)

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவுல இதையும் சொல்லிருக்கீங்க..நோட் பண்ணிக்கறேன்.

   Delete
  2. அவ்வ்வ்வ்வ்... இதை ஏற்கனவே சொல்லிட்டேனே...

   http://www.bloggernanban.com/2012/04/android-safety_17.html

   Delete
 4. இவரா அவர் ! சேட்டைக்காரன் !!!

  ReplyDelete
 5. எப்படியோ சந்திப்புக்கு வராமலே ஒரு போஸ்ட் போட்டு விட்டீர்

  ReplyDelete
 6. என் போட்டோவைப் போட்டு எழுதியதற்கு மிக்க நன்றி! :-)

  ஐயா சாமி! என் பெயரு ராஜாராமன் இல்லை! நாஞ்சில் வேணு! முழுப்பெயர் வேணுகோபாலன்! :-)

  ReplyDelete
 7. மேலே கருத்து கூறுவதிலும் ரசிக்க வைக்கும் சேட்டை தான்...

  ReplyDelete
 8. @ சேட்டைக்காரன்

  ஒரு ஃபுளோல தப்பா பேர சொல்லிட்டாரு. விட்டிருங்க சகோ. உங்க போட்டோவ வச்சே ஒரு பதிவதேத்திட்டாரே ..... சேலத்துக்காரரு கில்லாடிதான்!!

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!