சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

12.11.12

ஹேப்பி தீவாளி..!!


போன வருஷம் போட்ட பதிவா இருந்தாலும் இந்த தீபாவளிக்கும் அப்படியே மேட்ச் ஆகுது.படிக்காத புது வாசகர்களுக்காகவும்,பழைய வாசகர்கள் மறுபடியும் ரீகால் பண்றதுக்காகவும் மறுபடியும் மீள் பதிவு  :)   (புதுசா எழுத சோம்பேறித்தனப்பட்டு சப்பைகட்டு கட்டுது பாரு...) பதிவு Open ஆனதும் ஒரு Music வரும் பயந்துராதீங்க...கீழ இருக்கற Flash File-ல Mute பண்ணிருங்க...  :)

தீபாவளி வரப்போவுது...எல்லாருக்கும் சந்தோஷம் தர்ற பண்டிகை.

இப்ப இருக்கற பசங்க தலையில எண்ணை வைக்கறதே இல்ல...காலையில தூக்கம் கலையறதுக்கு முன்னாடி எழுப்பி விட்டு தலையில சொத்சொத்துன்னு எண்ணைய அடிப்பாங்க பாருங்க...கண்ணெல்லாம் எரியும்.அதுவும் அந்த எண்ணை 5 எண்ணைகள் கலந்ததாம்.ஒரு எண்ணை இல்லைன்னா பசு மாட்டோட கோமியத்தையும் கலந்துப்பாங்க...உவ்வே...ன்னு வருதா..?!மருத்துவ குணம் நிறைந்ததுங்க...


அப்புறம் அந்த தீபாவளிக்குன்னே கண்டுபிடிச்ச இனிப்பு குலோப்ஜாமூன் செய்றதுக்கு நல்ல டேஸ்ட்டா,ஸ்மூத்தா வர்ற கம்பெனியோடது வாங்கணும்ன்னு நினைக்காம யாரு பெரிய பக்கெட்,பேசன் தர்றாங்ன்னு பாத்து வாங்கிட்டு வருவாங்க...ஓடாத கம்பெனிகாரன் இதை ப்ரீயா தந்து வருஷம் ஒருநாள் எல்லா சரக்கையும் ஓட்டிருவான்.கடைசில குலோப்ஜாமூன் உருண்டையா வராது.உதிரியாதான் வரும்.நமக்கு பிச்சுபிச்சு சாப்டறது பிடிக்காது.அப்டியே முழுசா முழுங்குனாதான் பிடிக்கும். இலவசங்கள் தர்றது தமிழ்நாட்டோட பொது மனநிலையாப் போச்சு...முறுக்கு வீட்ல சுடலாமான்னு கேட்டா புரட்சித்தலைவி கூட்டணி கட்சிக்காரங்கள பாக்கற மாதிரியே கேவலமா பாக்குறாங்க.ஸ்வீட் கடைக்காரங்களுக்கு கொண்டாட்டம்தான்.


பட்டாசு வெடிக்கற ஆர்வம் குழந்தைகளுக்கு குறைஞ்சுட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங்.பாப்பாவுக்கு கம்பிமத்தாப்பு,சங்குசக்கரம்,புஸ்வாணம் எல்லாம் வாங்கியாச்சு...அது என்னங்க MRP 700ரூபாய் போட்ருக்கு.ஆனா,கடையில 195ரூபாய்க்கு தந்தாங்க.அதுலயும் லாபம் இல்லாமலா தருவாங்க..?!உண்மையான ரேட் என்னன்னு தெரியல...மொத்தத்துல காசை கரியாக்குறோம். (வயசாயிடுச்சுன்னா இப்டிலாம் தோணும்)இந்த பட்டாசு வெடிச்சு விழுப்புண்கள் வாங்காதவங்களே இருக்க முடியாது.அதுலயும் போலிகள் இருந்து தொலைக்கும்.ஊசிப்பட்டாசு வெச்சா அது வெடிக்காம சங்குசக்கரம் மாதிரி சுத்தி நம்மள குழப்பும்.ராக்கெட் மேல போய் வெடிக்காம நம்ம வீட்லயோ,அக்கம்பக்கம்  இருக்கற நம்ம எதிரிங்க வீட்லயோ போய் வெடிக்கும்.புஸ்வாணம் வச்சா அது ரொம்ப நேரம் பொங்காது.என்ன ஆச்சுன்னு பக்கத்துல போய்ப்பாத்தா நம்ம மூஞ்சில பொங்கும்.அப்புறம் தீபாவளி இல்ல... தீபா"வலி"தான்... 

டிவியே வீட்ல இல்லைன்னா அந்த தீபாவளி எப்படி இருக்கும்ன்னு நெனச்சி பாருங்க...முன்னல்லாம் புதுப்படம் போட்டா ஆர்வமா வாய பொளந்து பாத்துகிட்டு இருந்தோம்.இப்ப உலகத்தொலைக்காட்சிகளில முதன்முறையாகன்னு சொன்னாவே அடப்போங்கைய்யா...ன்னு இருக்குது. இந்த படத்த வந்த ஒரு மாசத்துலயே பாத்தாச்சு...(திருட்டு DVD புண்ணியத்துல)ஒரே பேட்டர்ன்தான் பல வருஷமா ஓடிகிட்டு இருக்கு.காலையில் மங்கள இசை,யாராவது சாமியாரோட ஆசி,அப்புறம் புதுப்பாடல்கள்,பட்டிமன்றம்,நடிகர்(அ)நடிகையோட பேட்டி,புதுப்படம், மறுபடியும் பேட்டி,படம்ன்னு ஒரே போர்ர்ர்ர்தான் போங்க...விஜய்டிவி கொஞ்சம் பரவால்ல...இருந்தாலும் அவங்க விளம்பரத்துக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே போடுவாங்க...அதுதான் பிரச்சினை.

ஒகே..நம்ம கதை போதும்.குழந்தைகளை பாதுகாப்பா வச்சிகிட்டு வெடி வெடிங்க...கண்ல பட்ற போவுது.ஹேப்பி தீவாளி...(ஹி..ஹி..இப்டி சொன்னாதான் தமிழன்னு ஒத்துக்குவாங்க)

பட்டாசு படங்கள் பற்றிய பதிவுக்கு இங்கு செல்லவும். Take Diversion. அய்யா ஜாலி..ஒரே க்ளிக்குல இரண்டு பதிவுக்கு ஹிட்ஸ்.  :) அப்டியே கீழ இருக்கற Flash File-ஐயும் Play பண்ணிப்பாருங்க....

Post Comment

7 comments:

 1. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 2. போன வருஷம் எல்லாருக்கும் சொன்னதையே இந்த வருஷமும் சொல்றேன். உங்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
 4. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!