சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

19.9.10

எல்லாம் இந்த மார்ட்டின் கூப்பரால வந்தது....

அவருதான் செல்போனோட தந்தையாம்!!!
நிம்மதியா இருக்க முடியுதா இந்த இம்சையால
இது பண்ற இம்சை இருக்கே!!
அய்யய்யய்யய்யய்யய்யய்யோயோயோ!!!
(சொற்குறிப்பு: பாஸ்(எ)பாஸ்கரன் படத்தில சந்தானம் 
சொன்னதை நினைத்துக்கொள்ளவும்)
காலையிலயே ஆரம்பிச்சிரும் இதோட தொல்லை...
அலாரம்ன்னு ஒரு வசதி (!!??) கொடுத்திருக்காங்க!!
தூங்கும் போது இடியே விழுந்தாலும் ஏதோ ஊசிபட்டாசு
வெடிக்கற எபக்ட்ல தூங்கறவங்க நாம!!
இதுல இந்த அலாரம்ல்லாம் ஜூஜூபி!!
5 மணிக்கு அலாரம் வச்சி படுத்தா
கரெக்ட்டா 8 மணிக்கு எந்திருச்சிருவோம்...
நம்மள தவிர வீட்ல இருக்கற எல்லாரும்
இந்த சத்தத்தில எந்திருச்சிருவாங்க!!!
அப்புறம் எல்லாரும் சேந்து நாய் கையில மாட்ன தேங்கா மாதிரி
இவனும் தூங்க மாட்டான்!!மத்தவங்களையும் தூங்க விடமாட்டான்!!அப்டின்னு பாராட்டுவாங்க(??!!)

நம்ம முக்கியமா யார்கிட்டயாவது பேசும்போது மட்டும் டவர் கிடைக்காது,
பேட்டரி இருக்காது,பேலன்ஸ் இருக்காது.
(இந்த பாயிண்ட் மட்டும்தான் உண்மை)
அதே ராங்கால் வந்தா மட்டும் மிஸ் ஆகாம கரெக்ட்டா வேலை செய்யும்.
வண்டில அவசரமா போயிட்டு இருப்போம்.அப்பதான் போன் பண்ணி இன்சூரன்ஸ் கம்பெனிலருந்துபேசுறோம்,லோன் கம்பேனிலருந்து பேசுறோம்ன்னு டார்ச்சர் பண்ணுவாய்ங்க...நம்மளும் கடுப்புல வண்டிய ஓட்டிட்டு போய் அப்புறம் இன்சூரன்ஸ்ஸே எடுக்கமுடியாமபோயிரும்...
ஏன்னா,நம்ம உயிரோட இருந்தாதானே...நம்மதான் செல்போன் பேசிட்டே வண்டிய ஓட்டிட்டு போய் லாரிக்கு அடியில மோட்சம் அடைஞ்சிருப்போமே!!
நம்ம நாட்டு நிதி அமைச்சரு பாராளுமன்றத்துல பேசிட்டுஇருக்கும்போது
கூட இந்த கடன்கொடுக்கற பயலுவ விடலயே!!
அவருக்கே கடன் தரேன்னு சொல்லியிருக்கானுவ!!

நொந்துட்டாரு பாவம்!!என்னா டார்ச்சரு!!


இதெல்லாம் கூட பரவாயில்ல இந்த SMS-ன்னு ஒரு இம்சை இருக்கே!!
அய்யய்யய்யய்யய்யய்யய்யோயோயோ!!!
( மெதுவா நடக்கணும்..ரொம்ப வெயிட் தூக்க கூடாது..
ஜாக்கிரதையா இருக்கோணும்...சரியா சாப்பிடணும்...
இதை படிச்சா உங்களுக்கு என்ன தோணுது? ஏதோ கர்ப்பிணி பொண்ணுக்கு அட்வைஸ் பண்ற மாதிரியே இருக்குமே!! அதான் இல்ல!! )
ஏனென்றால், இது 9-வது மாசமாம்.டேக் கேர்.ஹேப்பி செப்டம்பர்.
அப்டின்னு SMS அனுப்பி நம்மள கொலையா கொல்லுவானுங்க ராஸ்கல்ஸ்!!


கல்யாணத்துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்ன்னு ஒண்ணு வைப்பாங்க...
இரண்டுக்கும் நடுவுல ரொம்ப கேப் விட்டிங்கன்னா அவ்ளோதான்!! ஏன்னா,மாப்பிள்ளைக்கோ,பொண்ணுக்கோ காது கேக்காம போயிடும்.
காதுல புகை வர்றவரைக்கும்,பேட்டரி பொசுங்கற வரைக்கும்
பேசுவாங்க!! பேசுவாங்க!! பேசிட்டே இருப்பாங்க!! ம்ம்ம்..அப்புறம்...வேற...சொல்லுங்க...இந்த வார்த்தைங்களைத்தான்
மூணு மணிநேரம் விடாம பேசுவாங்க...(அப்புறம்தான் போன் ஆப்பாயிடுமே)




இன்னும் இந்தமாதிரியெல்லாம் நம்ம ஊருக்கு வரலியேன்னு
கொஞ்சம் சந்தோஷமா இருக்கு!!ஆனா,கூடிய சீக்கிரம் வந்துரும். 

சரி இருங்க!! ரொம்பநேரமா போனேவரல!!பாத்துட்டு வரேன்!!

Post Comment

7 comments:

  1. அப்புறம் என்ன வெங்காயத்துக்கு எல்லாரும் ரெண்டு செல்லு, மூணு செட்டு வச்சிகிட்டு திரியிறானுங்க..

    ReplyDelete
  2. @yeskha

    எல்லாம் ஒரு விளம்பரம்!! அதுல எதுலயும் பேலன்ஸ்ஸே இருக்காது.

    ReplyDelete
  3. செப்டெம்பர் ஜோக் நன்று. நகைச்சுவையான நடை..

    ReplyDelete
  4. Al ready theevaa use bad words!(ammaa yaarunnu keeddiingka,kaandaayiduveen!)

    ReplyDelete
  5. யோகா சார்.. தெரியாம எழுதிட்டேன்!! சீரியஸா எடுத்துக்காதீங்க!!

    ReplyDelete
  6. அருமையா எழுதுறீங்க ..!
    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. @ கலாநேசன்,drbalas

    நன்றிங்கண்ணே!! அப்பப்ப வந்து இதுமாதிரி ஏதாவது சொல்லுங்கண்ணே!!

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!