ஆனா,நாம அப்டி எல்லாம் இருக்க முடியுமா?
என்னைக்கி பெரியவங்க சொல்றத கேட்ருக்கோம்??
ஏன்? எதற்கு?? எப்படி??? இப்டியெல்லாம் கேக்கணும்ன்னு
திருவள்ளுவர் சொல்லியிருக்காரு!!!
( அவரு எப்ப சொன்னாருன்னு உடனே என்கிட்டயே ஆரம்பிச்சிட கூடாது )
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
(அப்ப பொறுமையா இருக்கறவங்க எல்லாம் அறிவாளிங்களா?)
ஆழம் தெரியாம காலை விடாதே.
(ஆழம்ன்னு தெரிஞ்சா அந்தப்பக்கமே போக மாட்டோம்)
யானை வரும் பின்னே!
மணியோசை வரும் முன்னே!!
( யானைக்கு மணியே கட்டலன்னா என்ன வரும்?? )
புலி பசித்தாலும் புல்லை திங்காது.
( நீங்க எப்ப புலி கூடசேந்து சாப்டிங்க? )
கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை.
(கற்பூரவாசனை கழுதைக்கு ஏன் தெரியணும்??
பேப்பர் வாசனை தெரிஞ்சா போதுமே!!)
ஆத்தில கொட்டினாலும் அளந்து கொட்டணும்.
( கொட்றதுன்னு முடிவாயிடுச்சு.அதை எதுக்கு அளக்கனும்? )
சுத்தம் சோறு போடும்.
( பிரைடு ரைஸ் போடுமா? லெமன் ரைஸ் போடுமா? )
சுவர் இருந்தால்தான் சித்திரம்.
( அப்ப வரையறதுக்கு பிரஸ் வேணாமா? )
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
( அப்ப எதுக்கு டாக்டருங்க? )
கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?
( கோழி எதுக்கு அதோட குஞ்ச மிதிக்கணும்? )
தாயை பழிச்சாலும் தண்ணிய பழிக்க கூடாது.
( அப்ப Aquaguard,Pureit எல்லாம் எதுக்கு விக்கறாங்க?
அப்டியே குடிக்க வேண்டியதுதானே? )
இப்டி நிறைய பழமொழி சொல்வாங்க...இன்னும் தொடரும்...
உங்களுக்கு தெரிஞ்ச பழமொழியையும் எழுதுங்க!!
http://konjamvettipechu.blogspot.com/2010/08/blog-post_17.html
ReplyDelete....:-)
@ chitra
ReplyDeleteநம்மள விட ஏடாகூடமா பேசுறாய்ங்க....
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுவையான பார்வை.
ReplyDelete