சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

5.1.11

விலை நில(கல)வரம்..!!

வெங்காயம் விலை வெள்ளியை,சூரியனை தொடுகிறது.
(எவ்ளோ நாளைக்குதான் விண்ணை தொடுகிறதுன்னு சொல்றது)
பூண்டு விலை நம்மை போண்டியாக்குகிறது.
தக்காளி விலை தவிக்க வைக்கிறது.

ஆனாலும்,
இந்தியாவில் எல்லா உணவு வகைகளும் மிகவும் 
விலைகுறைவாக கிடைக்கும் ஒரு இடம் உள்ளது.

விலை நிலவரம் 
டீ - 1.ரூ 
சூப் - 2.50.ரூ
சுண்டல் - 1.50.ரூ
சாப்பாடு - 2.00.ரூ
சப்பாத்தி - 1.00.ரூ
சிக்கன் - 24.50.ரூ
தோசை - 4.00.ரூ
வெஜ்.பிரியாணி - 8.00.ரூ
மீன் - 13.00.ரூ

விலைவாசி நாட்ல எவ்வளவு ஏறினாலும் இங்க
இருக்கற ரேட் மட்டும் ஏறவே ஏறாது..!!

இருங்க..!! இருங்க..!!
எங்க பேக் பண்ண கிளம்பிட்டிங்க..?!
நாமல்லாம் அங்க போகமுடியாது.

ஏன் தெரியுமா..?!

இது எல்லாம் ரொம்ப குறைவா சம்பளம் 
வாங்குற ஏழைங்களுக்கு மட்டும்தான்.
அந்த ஏழைங்களை நாமதான் அனுப்பி வைக்கிறோம்.
அது எந்த இடம் தெரியுமா..?!

 நம்ம பார்லிமென்ட்தான்...

அந்த ஏழைகளின் சம்பளம் மட்டும் (Note this point your honour)
80,000.ரூ
அட... வருஷத்துக்கு இல்லீங்க..!! மாசத்திற்கு..!!
அதுக்கு மேல ஸ்பெக்ட்ரம்,காமன்வெல்த்,கான்ட்ராக்ட் தனி..!!

உடனே போய் ரெண்டு ஜெலுசில் மாத்திர வாங்கி சாப்ட்ருங்க..!!
ஓவர் வயித்தெரிச்சல் உடம்புக்கு ஆகாதுங்க..!!
நாம எப்பயும் போல புள்ளைங்கள படிக்க வைக்கலாம்..!!

இது எனக்கு SMS-ல வந்தது.
அதுல கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்து போட்ருக்கேன்.
ஹி.ஹி..ஹி...

Post Comment

30 comments:

 1. இந்த மேட்டரை ஏற்கனவே ஒருத்தர் பதிவில் போட்டுட்டார்... இருந்தாலும் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணியதற்கும் கலர் கலரா எழுத்துரு போட்டதற்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஓட்டுப்போடும் அனைவரும் அறிய வேண்டிய தகவல்..

  எம்பிக்களின் சலுகைகள் பத்தி எழுதினா பத்து பதிவு எழுதலாம்...

  ReplyDelete
 3. எனக்கும் sms வந்தது இருந்தாலும் உங்க எழுத்து நடை நன்றாக உள்ளது.

  ReplyDelete
 4. இவ்வளவு சம்பளமா கொடுக்குறாங்க........

  இது முதல்லையே தெரிஞ்சிருந்தா நானும் எம்பி ஆக முயற்ச்சி செஞ்சிருப்பேன்... ஹி...ஹி...

  வாழ்த்துக்கள் தேவா..... நல்லா பட்டி பார்த்து இருக்கீங்க........

  ReplyDelete
 5. சமீபத்தில் ஒரு பதிவில் வாசித்தேன்.....

  இப்படி கொடுத்தால், எப்படி அரசாங்கத்துக்கு கட்டுபடியாகும்? அவங்களுக்கும் சேர்த்து நமக்கு பில்லு போடுறாங்கப்பா.....

  ReplyDelete
 6. //பூண்டு விலை நம்மை போண்டியாக்குகிறது.
  தக்காளி விலை தவிக்க வைக்கிறது//

  "விளை நில"த்தை எல்லாம்
  "நிலம் விலைக்கு"னு மாத்துனோமே

  ReplyDelete
 7. @ Philosophy Prabhakaran

  டேங்ஸ்..!!ஹி.ஹி..ஹி...

  ReplyDelete
 8. @ சங்கவி

  நீங்க எழுதுங்கண்ணே..!!

  ReplyDelete
 9. @ சசிகுமார்

  நன்றி சசி..!! உங்கள் தொழில்நுட்ப பதிவுகள் மிகவும் பயனுள்ளது.

  ReplyDelete
 10. @ கான்

  விடுங்க சார்..!! 2016-ல ஆயிரலாம்..!! ஹி.ஹி..ஹி..!!

  ReplyDelete
 11. சம்பளம் 80000 ரூ ஆனா கிம்பளம்...அதாங்க் ராசா வாங்கினது..........

  ReplyDelete
 12. கட்டுபடியாகும். எம்.பி-ங்க முதல்ல பார்லிமெண்ட்க்கு வரணும்.அவங்கதான் ஸ்கூல் பசங்க பரீட்சைக்கு வரப் பயப்படற மாதிரி வந்தா நம்மகிட்ட கேள்வி ஏதாவது கேட்ருவாங்களோன்னு வரவே மாட்றாங்களே..!!

  உங்க ஊர்ல எம்பிங்க எப்படின்னு ஒரு பதிவு போடுங்க சித்ராக்கா..!!

  ReplyDelete
 13. @ வார்த்தை

  சூப்பர் கமெண்ட்..!! அடிக்கடி வாங்க..!!

  ReplyDelete
 14. @ அருண் பிரசாத்

  80000.ரூ வச்சி பார்லிமெண்ட்ல சாப்பிட மட்டும்தான் முடியும். புள்ள குட்டிங்கள எப்படி காப்பாத்தறது...?!அதுக்குதான் அந்த கிம்பளம்..!! :-))

  ReplyDelete
 15. இது எனக்கு SMS வந்தது..

  இருந்தாலும் அதை அப்படியே
  போடாம நீங்க எழுதி இருக்கிற
  பதிவு ரொம்ப நல்லா இருக்கு..

  :-)

  ReplyDelete
 16. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 17. Nice Message - Good work - Keep it up

  ReplyDelete
 18. இன்னும் பத்து வருஷம் ஆனாலும் இந்த விலைகள் மாறாது.

  ReplyDelete
 19. @ தமிழ் உலகம்

  இணைச்சிருவோம்..!! :-)

  ReplyDelete
 20. @ வெங்கட்

  நன்றி தல..!!

  ReplyDelete
 21. @ சி.பி.செந்தில்குமார்

  Thanks for your Valuable Comments. :-)

  ReplyDelete
 22. @ கலாநேசன்

  கரெக்ட்ண்ணே..!!ஆனா,நமக்கு மட்டும் விலைவாசி ஏறிகிட்டே இருக்கும்..!!

  ReplyDelete
 23. aduththa அடுத்த பதிவு போட்டா சொல்லி அனுப்புங்க

  ReplyDelete
 24. @ சி.பி.செந்தில்குமார்

  OK பாஸ்..!! :-))

  ReplyDelete
 25. பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் எல்லோரும் மக்களுக்கு சேவை செய்யவே பிறந்தவர்கள். அவர்களிடம் இருக்கும் கொஞ்ச பணத்தை வைத்து வயிறார சாப்பிடுவதற்கே இந்த ஏற்பாடு :))

  ReplyDelete
 26. ரொம்ம கலவரமாத்தான் இருக்கு....

  ReplyDelete
 27. ரொம்ப கலவரமாத்தான் இருக்கு!

  ReplyDelete
 28. மங்களம் மெஸ் ஞாபகம் இருக்காடா? பில்லு ஞாபகம் இருக்குதா?

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!