ஒரு வழியாய் எதிர்பார்க்கப்பட்டது போல் நடந்து முடிந்தது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மாநாடு.10லட்சம்பேர்,50லட்சம்பேர்,1கோடிபேர் வருவார்கள் என்று கூவிக் கொண்டிருந்தார்கள்.கடைசியில் அவரே எதிர்பார்க்காத கூட்டம் வந்திருக்கும் போலத்தான் தெரிகிறது.
இதுக்கு ரஜினியே பரவாயில்லை என்று அவரின் ரசிகர்களே சொல்லியிருப்பார்கள்.அவராவது,இருந்த இடத்தில் இருந்து கொண்டு வருவேன்,வரலாம், வந்து கொண்டு இருக்கலாம் என்று வானிலை அறிக்கை போல் கூறிக் கொண்டிருப்பார்.
இவர் மாநாடு என்ற பெயரில் அனைத்து ரசிகர்களையும் மதியத்திலிருந்து இரவு வரை வெயிலில் தேவுடு காக்க வைத்துவிட்டு கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்து கொள்கிறேன்.நீங்கள் வீட்டுக்கு ஓழுங்காய் போய்ச் சேருங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.பத்திரிக்கையாளர்கள் வேறு மிகுந்த எதிரி்பார்ப்புடன் அவர் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தனர்.கடைசியில் அவர்களுக்கும் பெருத்த ஏமாற்றமே.
ஆனால் எப்போதும் கலைஞர் ,அம்மா இருவரையும் விமர்சிப்பவர் கடைசிவரை மறந்து கூட ஜெயலலிதாவைப் பற்றி கூறாதது அவர் அ.தி.மு.க- வை நோக்கி நகர்வதையே காட்டுகிறது.சீட்டுக்கணக்கோ,பேரமோ படியவில்லை போல இருக்கிறது.அவர் கட்சியை அடகு வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.விற்றுவிடுவாரா.?! என்று தெரியவில்லை.
இவர்கள் என்னமோ செய்துவிட்டுப் போகட்டும்.காமராஜரையும்,கக்கனையும் போன்ற நல்ல தலைவர்களை இவர்களோடு ஓப்பிடும் போது வருத்தம் அளிக்கிறது.இது போன்று பிரம்மாண்டமான மாநாடுகள் காமராஜர் காலத்தில் நடந்திருக்குமா..? பாதுகாப்புக்காக வரும் காவல்துறை வாகனத்தையே வேண்டாம் என்று கூறுபவர் காமராஜர் என்று படித்திருக்கிறேன்.
கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்து மறைந்த கக்கன் போன்ற தலைவர்களோடு இவர்களை தயவு செய்து ஓப்பிடாமல் இவர்களுடைய தீர்மானங்களை பற்றி மட்டும் பேசினால் நன்று.
1500 கி.மீட்டருக்கு பேனர்கள் வைத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்களாம்.எந்த கட்சியும் இது போன்று சாதனையை நிகழ்த்தியதில்லை.முடிந்தால் இதுபோல் செய்து காட்டுங்கள் என்று மற்ற கட்சியினரை உசுப்பேற்றியிருக்கிறார்.ஏற்கனவே நன்றாக (?!)இருக்கும் ரோடுகளை இன்னும் கொத்த போகிறார்கள்.
இலங்கைத்தமிழர்க்கு நீதியையும்,கச்சத்தீவையும், முல்லைப்பெரியாற்று நீரையும்,காவிரி ஆற்றுத் தண்ணீரையும் வாங்கித்தராமல் ஓயப்போவதில்லை போல இருக்கிறது இந்த உரிமைமீட்பு மாநாடு.
குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று கேப்டன் கட்சியினர் அனைவரும் கலைஞரை ஏசிவிட்டு கேப்டன் அவர்களின் மனைவியையும்,மைத்துனரையும் ,"அண்ணியார்"" இளைஞர்களின் எழுச்சி நாயகன்" என்று கூறியது நகைச்சுவைக்குரியது.
அரசுசார்பில் தரும் பொங்கல்பைகளில் அவரும் அதைக் காப்பி அடிக்கிறார் என்று மிகவும் வருத்தப்பட்டார்
கலைஞரையையும் காவல்துறையையும் காய்ச்சி எடுத்தார்.அவர் படங்களில் வரும் காவல்துறையினரைப் போன்று எதிர்பார்க்கிறார் போல இருக்கிறது.உண்மையிலேயே விருதகிரி படத்தில் வருவதைப் போன்று காவல்துறையினரின் நிலைமை கவலைக்குரியது.ஸ்காட்லாண்ட் யார்டுக்கே நுணுக்கங்கள் கற்றுத்தரும் என் படங்களைப் பார்த்தாவது காவல் துறையினர் மேலும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல் போனாரே..?!
இவ்வளவு கூட்டம் கூடிய மாநாட்டின் செய்திகள் எந்தப்பத்திரிக்கைகளிலும் பெரிய அளவில் வராதது கலைஞர் குடும்பத்தின் பத்திரிக்கை ஆக்ரமிப்பையே காட்டுகிறது.தி.மு.க வின் மாநாடாக இருந்திருந்தால் தினகரனில் பெரிய அளவில் வந்திருக்கும்.இதைப்பற்றி ஒரு சிறுபக்கம் கூட இல்லை.
இன்னும் தேர்தல் வருவதற்குள் இது போன்று மாநாடுகளையும்,வாக்குறுதிகளையும்,கட்சி மாறுதலையும்,அரசியல் தந்திரங்களையும் பார்க்கத்தானே போகிறோம்..!!
என்னவோ போங்க... இந்த மாநாடு விவகாரம் எல்லாம், என்னைக்கும் புரிஞ்சது இல்லை.
ReplyDelete@ Chitra
ReplyDeleteபுரியாத வரைக்கும் நல்லதுதான் விட்ருங்க அக்கா..!!
தேர்தல் வருவதற்குள் இது போன்று மாநாடுகளையும்,வாக்குறுதிகளையும்,கட்சி மாறுதலையும்,தந்திரங்களையும் பார்க்கத்தானே போகிறோம்..
ReplyDelete///இவ்வளவு கூட்டம் கூடிய மாநாட்டின் செய்திகள் எந்தப்பத்திரிக்கைகளிலும் பெரிய அளவில் வராதது கலைஞர் குடும்பத்தின் பத்திரிக்கை ஆக்ரமிப்பையே காட்டுகிறது.தி.மு.க வின் மாநாடாக இருந்திருந்தால் தினகரனில் பெரிய அளவில் வந்திருக்கும்.இதைப்பற்றி ஒரு சிறுபக்கம் கூட இல்லை//
ReplyDeleteகேப்டன் டிவி பார்க்க வில்லையா , அங்கு 24மணி நேரமும் மாநாடுதான்
Is he drunk in the meeting.. i can sense he is not steady ! do you agree ?
ReplyDeleteஇவரு சும்மா தி மு க வின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க தி மு க வே காசு கொடுத்து செய்த செட் அப்! இவர நம்பி போறவங்க ரொம்ப பாவம்!
ReplyDeleteஎதிர்கட்சியினரை தனிப்பட்ட விதத்தில் தாக்கியது கொஞ்சம் கேவலம். (கேப்டனின் கேள்வி, ஸ்டாலின் மனைவி பெயர் ஏன் துர்கா :)
ReplyDeleteகுடும்ப அரசியல் குடும்ப அரசியல்ன்னுகிட்டு இவர் ஏன் அவர் மச்சினன், வீட்டம்மாவோட போகிறார் ?
பழக்க தோஷத்துல காலை சுழட்டி சுழட்டி மேடையில இருக்கவங்களை பறக்கவிட்டுட போறார் ?
இதுக்கு ரஜினியே பரவாயில்லை என்று அவரின் ரசிகர்களே சொல்லியிருப்பார்கள்.அவராவது,இருந்த இடத்தில் இருந்து கொண்டு வருவேன்,வரலாம், வந்து கொண்டு இருக்கலாம் என்று வானிலை அறிக்கை போல் கூறிக் கொண்டிருப்பார்...........///////////
ReplyDeleteவெளங்கிருச்சி............
தம்பீபீ........... டீ இன்னும் வரல........
ReplyDelete@ நண்டு @நொரண்டு -ஈரோடு
ReplyDeleteபாத்துரலாம் நண்டு சார்..!!வருகைக்கு நன்றி..!!
@ Anonymous
ReplyDeleteகேப்டன் டிவியிலேயே ஆங்காங்கு மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கவிடாமல் கேபிள் ஒயர்களை விஷமிகள் துண்டிக்கிறார்கள் என்று செய்தியும் வந்தது.அதையும் பார்த்தேன்.
@ Anonymous
ReplyDeleteஇங்க நிறையபேர் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.நாம் கேட்டாலோ,அதைப்பற்றி எழுதினாலோ நீயா வந்து ஊற்றிக் கொடுத்தாய்..? என்று காமராஜர் ஆட்சியை(?!) தரப்போகும் கேப்டன் அவர்கள் கேள்வி கேட்பார் என்று அதைக் குறிப்பிடவில்லை.
@ bandhu
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..!! என்ற தானைத்தலைவர்(எனக்கு)கவுண்டமணியின் வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.ஹி.ஹி..ஹி..
@ செந்தழல் ரவி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!
@ அஞ்சா சிங்கம்
ReplyDeleteஅய்யா..!! என்ன சொல்றீங்களா..? இல்ல... கேப்டன் கட்சிய சொல்றீங்களா..?
@ karthikeyan
ReplyDeleteபால் காஞ்சிட்டிருக்கு..!! வெயிட் பண்ணுங்க..!!ஹி.ஹி..ஹி... :-))
@ தேவா.,
ReplyDelete// இங்க நிறையபேர் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். //
எங்க ஊர்லயும் அப்படி தான் பேசிக்கறாங்க..
ஒருவேளை மீடிங் போட்டு இருந்த
பேரும் கெட்டு போச்சோ..?!!
அட ஆமாம்பா...மாநாடு முடிந்த அடுத்த நாள் காலை ஊருக்கு வந்தேன். பைபாஸில் இருந்து பனைமரத்துப் பட்டி பிரிவுரோடு வரை குவிந்திருந்த குப்பைகளே கூட்டத்தின் அளவைச் சொன்னது. ஆனா பாரதியார் படத்தில் விஜயகாந்த் முகமெல்லாம் ரொம்ப ஓவர்.
ReplyDelete