சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

30.1.11

தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...

இந்த ரைமிங் எல்லாம் கேக்க நல்லாதான் இருக்கு..!!
ஆனா,நிஜத்தில் நம்ம தமிழக மீனவனோட தலையை
பாத்தாவே சுட்டுர்றானுங்க சிங்கள வெறியனுங்க...

அன்பை மட்டுமே போதிக்கற புத்தர் இவனுங்களுக்கு
இதைதான் சொல்லிக் குடுத்தாரா..?!
இவ்வளவு உயிர்களையும் கொன்னுட்டு புத்த பிட்சுகளிடம்
ஆசிர்வாதம் வேற...நல்லா இருக்குடா உங்கள் போதிசத்துவம்.

இப்படியே பண்ணிட்டு இருங்கடா...நம்ம இந்திய அரசாங்கம் ஏதும் பண்ணலேன்னாலும், இயற்கை என்னும் சக்தியும், இறந்த மீனவர்களின் குடும்பத்தோட சாபமும் உங்கள இன்னொரு
சுனாமியா வந்து காலி பண்ணப் போவுது.

கச்சத்தீவை தாரைவார்த்த இவங்களோட வெளியுறவுக்கொள்கையையும், ராஜதந்திரத்தையும் நினைச்சா பத்திகிட்டு வருது.

நம் அரசியல் கட்சிகளுக்கு வரப்போற தேர்தல் வேலையே நிறைய
இருக்கும் போது இந்த மாதிரி மீனவர்கள் சுடப்படற நிகழ்வுகள் வேற வந்து
தொல்லை பண்ணுது.செத்துப் போனவன் வீட்டுக்குப் போயும் கேவலமா
அரசியல் நடத்துறாங்க...

ஜனநாயகம் ஜனநாயகம்ன்னு கூவறாங்களே தவிர ஜனங்களுக்கு ஒண்ணு நடக்கும் போது அதை எதிர்க்க கூட மாட்றாங்க....ஓட்டு போட்டு எப்படி நாம் தேர்ந்தெடுக்கிறோமோ அதே போல் திரும்பபெறும் உரிமையையும் நமக்கு கொடுத்தாதான் இந்த அரசியல்வியாதிங்களுக்கு பயம் இருக்கும்.

நம்ம முதல்வர் நிறைய கடுதாசி போட்டு கண்டுக்காத பிரதமரு நம்ம  பெட்டிசனையா கண்டுக்க போறாரு...செவிடன் காதில ஊதின சங்கு மாதிரிதான்..இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில நம்ம எதிர்ப்பை  தெரிவிக்கலாம்.

நம்ம கருத்தை மத்திய அரசாங்கத்துக்கு தெரிவிக்க இந்த இணைப்பு






Save TN Fisherman

Post Comment

16 comments:

  1. நானும் அதை தான் சொன்னேன் .என் பதிவை படிக்கவும் .

    ReplyDelete
  2. ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம்

    ReplyDelete
  3. @ kadhar24

    உங்கள் பதிவை பார்த்தேன்.தமிழனாய் பிறந்ததுதான் தப்பு..!!

    ReplyDelete
  4. @ கலாநேசன்

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு..!!நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு..!!

    ReplyDelete
  5. @ சி.பி.செந்தில்குமார்

    உங்கள் கருத்தையும் பதிவாக இடுங்கள் சிபி.

    ReplyDelete
  6. // ஓட்டு போட்டு எப்படி நாம் தேர்ந்தெடுக்கிறோமோ அதே போல் திரும்பபெறும் உரிமையையும் நமக்கு கொடுத்தாதான் இந்த அரசியல்வியாதிங்களுக்கு பயம் இருக்கும். //

    Super Punch..

    irunthaa nallaa thaan irukkum.

    ReplyDelete
  7. நன்றி ! தேவா.....

    இன்றைய சூழ்நிலையில் தமிழன் என்ற உணர்வை வெளிப்படுத்த மிக அவசியமான தேவையான பதிவு இது.

    தமிழனாய் ஒன்று படுவோம் தமிழர்களை காப்போம்.

    அன்புடன்: கான்

    ReplyDelete
  8. உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  9. தயவு செய்து கடிதம் எழுதி நேரத்தை வீணாக்குவதை விட.... அவற்றை அரசியல்வாதிகளின் காதில் சொருகுங்கள்...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. பிரதமரு நம்ம பெட்டிசனையா கண்டுக்க போறாரு...செவிடன் காதில ஊதின சங்கு மாதிரிதான்..இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில நம்ம எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

    எறும்பு ஊற கல்லும் தேயும் இரும்பும் தேயும்,
    சிறுதுளி பெரு வெள்ளம்
    நம்பிக்கைதான் வெற்றி

    January 31, 2011 2:39 PM

    ReplyDelete
  12. நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன் ...
    தொடர்ந்து போராடுவோம்

    ReplyDelete
  13. வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

    ReplyDelete
  14. உங்கள் இடுகைகள் சிலவற்றைப் பற்றி வலைச்சரத்தில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து பார்த்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_22.html

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!