ஒரு ஆர்வம் இருந்துகிட்டேயிருக்கும்.
தலையில ஒரு நரைமுடி வந்துட்டா ஊர்ல இருக்கிற எல்லாரும்
துக்கவீட்ல விசாரிக்கற மாதிரியே நம்மள விசாரிப்பானுவ!!
நமக்கு இருக்கற கவலையில இந்த கவலை வேறு சேந்திரும்!!
உடனே ஊருல விக்கற எல்லா சாயத்தையும் வாங்கி தலையில
போட்டு அதுக்கப்புறம் ஆகும் பாருங்க நம்ம தலை!!!???
ரொம்ப கண்றாவியா இருக்கும்!!
இந்த சாயத்துக்கு எல்லாம் நடிக்கறாங்க பாருங்க அவங்கள சொல்லனும்!!
அவங்களுக்கு தலையில ஒண்ணுமே இருக்காது (முடிய சொன்னங்க)
ஆனா.சாய விளம்பரத்துல எல்லாம் விக் வச்சு நடிப்பாங்க!!
நம்மாளுகளும் அதை நம்ம்ம்பி வாங்கி யூஸ் பண்ணபிறகு, இந்தவாரபத்திரிக்கைங்க எல்லாமே நியூஸ் இல்லாததுக்கு எதாவது
ஒரு ஆராய்ச்சிய போடுறன்னுட்டு நம்ம தலையில கல்ல போடுவாங்க!!
இந்த சாயம் எல்லாம் உபயோகித்தால் காலப்போக்கில் கேன்சர் வரும்,
அல்சர் வரும்ன்னு சொல்வாங்க பாருங்க!! படிக்கறப்பயே நமக்கு பயம் வரும்,
அப்புறம் அந்த பயத்திலயே BP,Sugar, இன்னும் ஊர்ல இருக்கற
எல்லா வியாதியும் வரிசையா வரும்!!!
உன் கைரேகைய பார்த்து எதிர்காலத்தை நம்பி விடாதே!!
ஏனென்றால் கை இல்லாதவர்க்கும் எதிர்காலம் உண்டு!!
அப்டின்னு நான் சொல்லல!! அப்துல்கலாம் ஐயா சொல்லியிருக்காரு...
அதனால நரைமுடிய நெனச்சி கவலபடறதவிட
முடியே இல்லாதவனபாத்து சந்தோஷப்படுங்க!!!
(மொட்ட தல காரங்களும்,சொட்ட தல காரங்களும்
பின்னூட்டம் போட அனுமதி இல்லை) ஹி...ஹி...ஹி...
இது என்னோட அனுபவம் இல்லன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?
நாங்க எல்லாம் எப்டின்னா
வாழ்க்கையே இது பொய்யடா....
நம்ம தலையில எதுக்கு மைய்யிடா.....ன்னு வாழ்றவங்க!!??
என்ன ஒரு எதுகை மோனையா கவிதை எல்லாம் வருது...
ஒட்டு போடலன்னா இது மாதிரி கவிதையா எழுதித் தள்ளுவன்!!!தெரிஞ்சிக்கோங்க!!!
டை போடுறதுங்கறது
ReplyDeleteபுலி வாலை பிடிச்ச கதை தான்..
விடவும் முடியாது.,
தொடரவும் முடியாது...
Continue பண்ணினா கண்ணுக்கு
கெடுதல் வரும்னு வேற சொல்றாங்க..
தலையும் பஞ்சு மாதிரி வெள்ளையா
போயிடும்...
அனுபவபூர்வமா எழுதியிருக்கீங்க...
ReplyDeleteWelcome to the Blog world!
ReplyDeleteBest wishes!!!
நல்லா காமெடியா எழுதுறீங்க..... தொடர்ந்து அசத்துங்க!
ரொம்ப தேங்ஸ்க்கா!
ReplyDeleteஅன்பின் தேவா
ReplyDeleteதலைக்கு டை போடுவதைப் பற்றிய இடுகை அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா