சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

24.7.12

வாழ்த்துகள் உயர்திரு.பிரணாப் முகர்ஜி அவர்களே...


நான் முன்பே கணித்தது போல் (இவரு பெரிய காழியூர் நாராயணன் பாரு...கணிக்கிறாராம்) பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்தியத்திருநாட்டின் முதல் குடிமனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.இதுகாறும் பாராளுமன்றத்தில் ஒரு பெரியவர் வயது முதிர்ச்சியின் காரணமாக தூங்குவதை கூட ஜூம் செய்து பெரிது படுத்தி காட்டிய செய்தி நிறுவனங்களுக்கு சவுக்கடியாக அமைந்தது இந்த முடிவு என்றால் அது மிகையில்லை.இனிமேல் மக்கள் நலத்திட்டங்கள்,விவாதங்கள் என்ற பெயரில் வாசிக்கப்படும தூக்கம் வரவழைக்ககூடிய உரைகளைக் கேட்கத் தேவையில்லை.சுதந்திரமாக தூங்கலாம்.வெளிநாடுகளுக்கு ராஜமரியாதையுடன் சென்று வரலாம்.(என்ன இருந்தாலும் நமது முன்னாள் குடியரசுத்தலைவர் போல் வெளிநாட்டுப்பயண சாதனையை இனி எந்த இந்திய குடியரசுத்தலைவராலும் முறியடிக்க முடியாது)மத்திய அரசின் முன்முடிவெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு அவ்வப்போது கையெழுத்திடலாம்.

இங்க இப்டி...ஈரான் நாட்ல ஒரு தலைவர் இருக்காராம்.பிழைக்கத் தெரியாத மனுசனா இருப்பார் போல...



1. அவருடைய மாத வருமானம் 1200 டாலர். இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது.

2. அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில்தான்...

3. இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4. படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல்.
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5. இவரது வங்கி நிலுவை 0

6. இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும். தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்.

7. அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8. பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9. பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படை பட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10. தன் காரியாலயத்திலும், வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைச்சீலைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்.

11. நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம் ..

Post Comment

2 comments:

  1. நல்ல ஒப்பீடு...
    என்ன செய்வது.... நம்ம நாட்டின் தலையெழுத்து அப்படி...!?!

    ReplyDelete
  2. //.ஈரான் நாட்ல ஒரு தலைவர் இருக்காராம்.பிழைக்கத் தெரியாத மனுசனா இருப்பார் போல.../////

    ஆமாம்யா.... பொழைக்கத் தெரியாத மனுஷன்...

    தம்பிய இந்தியா கூப்டு ப.சி.ட்ட ட்ரைனிங் கொடுக்கணும்....

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!