சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

7.4.11

நம்பிக்கைதான் வாழ்க்கை..!!

அன்னா ஹசாரே

வேறு வழி தெரியவில்லை..!!

அன்னியசக்திகளிடமிருந்து நம் நாட்டை காக்க இந்திய ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்டு இப்போது நம் உள்நாட்டு ஊழல்களிலிருந்து நம் நாட்டை காக்க மூன்று நாட்கள் தாண்டி உண்ணாநோன்பு இருந்து வருகிறார்.ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக லோக்பால் என்ற சட்டத்தை அமல் படுத்தக்கோரி இந்த உண்ணாநோன்பை ஆரம்பித்திருக்கிறார்.ஆயுதவழியில் போராடி ஓய்வுபெற்றவரை அஹிம்சை வழியிலும் போராட வைத்துள்ளனர் இந்த ஊழல் பெருச்சாளிகள்.

தயவு செஞ்சு அரசியல் ஆக்கிராதீங்க..!!

இந்த உண்ணாநோன்பையும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்த நினைப்பதை விரும்பாமல் அரசியலுக்கும் வன்முறைக்கும் இங்கு இடமில்லை என்று அவர்களை புறக்கணித்துள்ளார்.ஊழலின் ஊற்றுக் கண்களை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு போராடியிருந்தால் இந்த போராட்டத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.அதை சரியாக தவிர்த்திருக்கிறார் ஹசாரே.

காந்திய வழியை ஜெயிக்க விடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க கூடாது.ஏனெனில்,அவர் தன் முதுமை வயதிலும் என்னை முதல்வராக்குங்கள் என்று கேட்க வில்லை.ஊழலை கட்டுப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று தன் உயிரை பணயம் வைத்திருக்கிறார்.

அரசியல்வாதிகளே,நீங்கள் இதுவரை சம்பாதித்தது போதும்.தயவுசெய்து அந்த சட்டத்தை அமல்படுத்துங்கள்.காந்தியத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை தகர்த்து விடாதீர்கள்.ஜெய்ஹிந்த்..!!

Post Comment

15 comments:

 1. வித்தியாசமான மனிதர் பற்றிய அறிமுகம்..

  ReplyDelete
 2. >"ஆனந்தவிகடன்" புகழ் சேலம் தேவா..ஒரு விளம்பரம்..ஹிஹி

  அய்யய்யோ.. இதைப்பார்த்தா வெங்கட்டும் இதை ஃபாலோ பண்ணுவாரே..

  ReplyDelete
 3. சிறந்த கருத்தடைவு மிக்க பதிவு.. பாராட்டுக்கள்..!!வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. அண்ணா ஹசாரே பற்றி நானும் ஒரு பதிவிட்டு இருக்கின்றேன். லோக்பால் மசோதாவால் ஊழல் முற்றிலும் ஒழிந்துவிடாது, ஆனால் அவற்றை ஒழிக்க இது முதல்படியாக இருக்கும். அதனை நிறைவேற்றினால் அரசியல்வாதிகள் பருப்பு வேகாதே. அப்புறம் எங்கே அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள். நாம் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடினால் தான் கொஞ்சமாவது எதையாவது பிடுங்க முயற்சிக்கலாம்.

  ReplyDelete
 5. நானும் சில செய்திகள் அவரைப் பற்றிப் படித்தேன் .. அருமை அண்ணா :-)

  ReplyDelete
 6. //////
  நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

  விவரம் அறிய..

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

  ReplyDelete
 7. காந்திய வழியை ஜெயிக்க விடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க கூடாது.ஏனெனில்,அவர் தன் முதுமை வயதிலும் என்னை முதல்வராக்குங்கள் என்று கேட்க வில்லை.ஊழலை கட்டுப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்துங்கள் என்று தன் உயிரை பணயம் வைத்திருக்கிறார்.


  .... ROYAL SALUTE!

  ReplyDelete
 8. @ சி.பி.செந்தில்குமார்
  //வித்தியாசமான மனிதர் பற்றிய அறிமுகம்.//

  ஊழலுக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடுவதால் இவர் வித்தியாசமான மனிதர்தான்.நீங்களும் உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்துங்கள் சி.பி.

  ReplyDelete
 9. @ தங்கம் பழனி
  வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..!!

  @ இக்பால் செல்வன்
  நிச்சயமாக...வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..!!

  @செல்வா
  நன்றி தம்பி..!!

  ReplyDelete
 10. நம்ம காங்கிரஸ் இதை நிறைவேற்றும்னு நினைக்கறீங்க........

  ReplyDelete
 11. //ஆயுதவழியில் போராடி ஓய்வுபெற்றவரை அஹிம்சை வழியிலும் போராட வைத்துள்ளனர்
  இந்த ஊழல் பெருச்சாளிகள். // இதை முன்னெடுத்து செல்லவேண்டியது நமது கடமை.

  http://nanbansuresh.blogspot.com/2011/04/blog-post_07.html
  எனது பதிவையும் கொஞ்சம் பாருங்கள்.

  ReplyDelete
 12. நல்ல பதிவு..!!

  // நம்ம காங்கிரஸ் இதை நிறைவேற்றும்னு
  நினைக்கறீங்க........? //

  நம்ம அரசியல்வாதிகள் ( ஊழல்வாதிகள் ) யாரும்
  இதை நிறைவேற்ற மாட்டாங்க..

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!