சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

13.4.11

கட"மை"

    கலைஞரோ,அம்மாவோ யாரு ஜெயிச்சாலும் சரி...ஏதோ என்னால முடிஞ்ச உதவியா அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன்.இதுக்காக ரெண்டு கட்சிக்காரங்களும் என்னை ரொம்ப கெஞ்சி கேட்டாங்க.நானும் ஆகட்டும் பாக்கலாம்ன்ணு சொல்லி இன்னிக்கு முதன்முதலா ஓட்டு போட போனேன்.(ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் எனக்கு 18 வயசாச்சு..ஹி.ஹி..ஹி...) 
      
       வாக்கு சாவடில நல்ல கூட்டம்.முதல்ல ஏதாவது பிரச்சினைன்னா ஓட முடியற அளவுக்கு இடம் இருக்குதான்னு பாத்துகிட்டேன்.(ஹி.ஹி.. எல்லாம் ஒரு சேப்டிக்கு)ஒரு மணிநேரம் கஷ்டப்பட்டு வரிசைல நின்னு உள்ள போய் பதிவுலகத்தில கிடைச்ச அறிவால (!?) 49.ஓ போடணும்ன்னு கேட்டா அப்டி யாரும் இங்க போட்டிபோடலயேன்னு சொல்லுவாங்க...எதுக்கு கேட்டுகிட்டு..?!இவங்களுக்கு 49.ஓ பத்தி வௌக்குறதுக்கு பேசாம கண்ண மூடிட்டு பொட்டியில ஏதாவது ஒரு பட்டன அமுக்கிட்டு போயிடலாம்.

    எனக்கு முன்னாடி போன ஆளு ஒரு அப்புராணி பயபுள்ள போல...கைய காட்டுங்கன்னு சொன்னா ஜோசியக்காரங்ககிட்ட காட்ற மாதிரி கைய நீட்னாரு.உங்களுக்கு சனி நீச்சமா இருக்கு.ஓட்டு போட்ட பின்னாடி உச்சத்துக்கு போயிடும்.திருப்பி காட்டுய்யா கையன்னு டென்சனாயிட்டாரு ஆபிசர்.

  தி.மு.க. சார்பா நிக்கறவரோட பேர் ஓட்டுப்பொட்டில ரெண்டாவதா இருந்துச்சு.அவங்க ஆளுங்க படிக்காத பாட்டிங்ககிட்ட ரெண்டாவது பட்டன்ல அமுக்குன்னு அவங்க ரெண்டு விரல காமிச்சிகிட்டு மெதுவா சொன்னது ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்கற மாதிரியே இருந்துச்சு.

    ஓட்டு போட்டவுடன் பொட்டியிலருந்து வந்த சத்தம் அடுத்த அஞ்சு வருத்துக்கு நமக்கு சங்குதான்னு சொல்ற மாதிரியே ஒரு பீலிங்.படிக்காதவங்க ஓட்டு போடறதுக்கு பூத்ல இருக்கறவங்க உதவி பண்ணுவாங்களாம்.கண்டிப்பா தி.மு.கவுக்குதான் போட்ருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    கையில மையோட, வாயெல்லாம் பல்லோட இளிச்சுகிட்டே வெளிய வந்தப்ப யாராவது பத்திரிக்கைகாரங்க போட்டோ புடிச்சா யூரின் போற மாதிரி கைய காட்டி கேவலமா ஒரு சிரிப்பு சிரிக்கலாம்ன்னு பாத்தா யாரையும் காணோம்.

     ஹீம்ம்..எப்படியோ ஒரு 5 வருஷத்துக்கு நம்மள அடமானம் வச்சாச்சு...போய் சன் டிவியோட பிறந்த நாளையும்,கலைஞர் டிவியோட விடுமுறை தினக் கொண்டாட்டத்தையும் பாத்து தொலைக்க வேண்டியதுதான்.

வாழ்க ஜன(பண)நாயகம்..!!

Post Comment

15 comments:

 1. //ஓட்டு போட்டவுடன் பொட்டியிலருந்து வந்த சத்தம் அடுத்த அஞ்சு வருத்துக்கு நமக்கு சங்குதான்னு சொல்ற மாதிரியே ஒரு பீலிங்//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 2. // எப்படியோ ஒரு 5 வருஷத்துக்கு
  நம்மள அடமானம் வச்சாச்சு... //

  அடமானம் எவ்ளோன்னு சொல்லலை..

  500 ரூபாயா.? 1000 ரூபாயா.?

  ReplyDelete
 3. எனக்கு முன்னாடி போன ஆளு ஒரு அப்புராணி பயபுள்ள போல...கைய காட்டுங்கன்னு சொன்னா ஜோசியக்காரங்ககிட்ட காட்ற மாதிரி கைய நீட்னாரு.உங்களுக்கு சனி நீச்சமா இருக்கு.ஓட்டு போட்ட பின்னாடி உச்சத்துக்கு போயிடும்.திருப்பி காட்டுய்யா கையன்னு டென்சனாயிட்டாரு ஆபிசர்.
  .......ha,ha,ha,ha,ha,ha,ha....

  ReplyDelete
 4. //எனக்கு முன்னாடி போன ஆளு ஒரு அப்புராணி பயபுள்ள போல...கைய காட்டுங்கன்னு சொன்னா ஜோசியக்காரங்ககிட்ட காட்ற மாதிரி கைய நீட்னாரு.உங்களுக்கு சனி நீச்சமா இருக்கு.ஓட்டு போட்ட பின்னாடி உச்சத்துக்கு போயிடும்.திருப்பி காட்டுய்யா கையன்னு டென்சனாயிட்டாரு ஆபிசர்.//

  like it this lines :))

  ReplyDelete
 5. >>(ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் எனக்கு 18 வயசாச்சு..ஹி.ஹி..ஹி...)

  இந்த நக்கலுக்கு ஒண்ணூம் குறைச்சல் இல்ல..

  ReplyDelete
 6. >>
  தி.மு.க. சார்பா நிக்கறவரோட பேர் ஓட்டுப்பொட்டில ரெண்டாவதா இருந்துச்சு.அவங்க ஆளுங்க படிக்காத பாட்டிங்ககிட்ட ரெண்டாவது பட்டன்ல அமுக்குன்னு அவங்க ரெண்டு விரல காமிச்சிகிட்டு மெதுவா சொன்னது ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்கற மாதிரியே இருந்துச்சு.

  ஹா ஹா இட மாறு தோற்ற பிழை..?

  ReplyDelete
 7. >> கையில மையோட, வாயெல்லாம் பல்லோட இளிச்சுகிட்டே வெளிய வந்தப்ப யாராவது பத்திரிக்கைகாரங்க போட்டோ புடிச்சா யூரின் போற மாதிரி கைய காட்டி கேவலமா ஒரு சிரிப்பு சிரிக்கலாம்ன்னு பாத்தா யாரையும் காணோம்.

  ரொம்பத்தான்

  ReplyDelete
 8. இதெல்லாம் ஓக்கே.. ரமேஷ் வந்தப்ப என்னையும் கூப்பிட்டு இருந்தா நானும் வந்திருப்பேன்.. எனக்கு செம கோபம் உங்க 3 பேர் மேலயும்.. ம் ம் பார்த்துக்கலாம்யா..

  ReplyDelete
 9. @ நாஞ்சில் மனோ
  வாங்க மனோ சார்..!!ழுவாதீங்க வேற என்ன பண்றது..?! :)

  @ வெங்கட்
  தல..500,1000த்துக்கு அடமானம் வைக்கற அளவுக்கு கேவலமா போயிடல...சீமான் ஸ்பெக்ட்ரம் பங்கு தொகை ஒவ்வொருத்தருக்கும் 43,000 வரும்ன்னு சொல்லியிருக்காரு...அதுல ஒரு பைசா குறைஞ்சாலும் வாங்க மாட்டேன் ஆமா... :)

  ReplyDelete
 10. @ சித்ரா
  வாங்க அக்கா..அமெரிக்காவுல எப்படி தேர்தல் நடக்கும்ன்னு ஒரு பதிவு போடுங்க... :)

  @ ப்ரியமுடன் வசந்த்
  வருகைக்கு நன்றி நண்பரே..!!

  ReplyDelete
 11. @ கலாநேசன்
  வாங்கண்ணே..ஓட்டு போட்டிங்களா..?!

  ReplyDelete
 12. @ சி.பி.செந்தில்குமார்
  கோச்சுக்காதீங்க சி.பி... இனிமே பதிவர் சந்திப்புக்கு முன்னாடி தெரியப்படுத்தறேன்.

  ReplyDelete
 13. ஓட்டு போட்டவுடன் பொட்டியிலருந்து வந்த சத்தம் அடுத்த அஞ்சு வருத்துக்கு நமக்கு சங்குதான்னு சொல்ற மாதிரியே ஒரு பீலிங்
  நிஜம்தான்

  ReplyDelete
 14. ரெண்டு கட்சிக்காரங்களும் என்னை ரொம்ப கெஞ்சி டாங்க.நானும் ஆகட்டும் பாக்கலாம்ன்ணு சொல்லி இன்னிக்கு முதன்முதலா ஓட்டு போட போனேன்......

  :) ஆமா......ஆமா......

  வாக்கு சாவடில நல்ல கூட்டம்.முதல்ல ஏதாவது பிரச்சினைன்னா ஓட முடியற அளவுக்கு இடம் இருக்குதான்னு பாத்துகிட்டேன்.

  :( நிச்சயமா எனக்கும் அப்படித்தான் தோனுச்சி... ஹி.ஹி..

  ஓட்டு போட்டவுடன் பொட்டியிலருந்து வந்த த்தம் அடுத்த அஞ்சு வருத்துக்கு நமக்கு சங்குதான்னு சொல்ற மாதிரியே ஒரு பீலிங்.

  :) சூப்பர் பஞ்ச்..... தேவா...

  ஒட்டு மொத்த தமிழர்களின் மனதில் எழுவதை அழகா சொல்லிட்டீங்க......:)

  ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!