சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

27.2.11

முருகா ஏன் இப்டி எங்கள சோதிக்கற..?!

சீடன் படத்த விட்டு வெளிய வந்த மக்கள் இப்டிதான்  பேசிக்கிட்டாங்க... எதுக்கு தனுஷ் இந்த படத்த ஒத்துகிட்டாருன்னு தெரியல...டைரக்டரு சுப்ரமணியசிவா அவருக்கு முருகன் மேல இருக்கற பக்திய காட்றதுக்கு நம்மள காய வச்சிட்டாரு...நமக்காச்சும் 200ரூபாவோட போச்சு..பாவம் தயாரிப்பாளர்.

நேத்து எங்க ஏரியாவில முழு மின்வெட்டு.தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு இருக்கறப்ப பண்ணாத பராமரிப்ப மாசம் ஒருநாள் பண்ணுவாங்கலாம்.குழந்தையையும் தங்கமணியையும் கூப்டுகிட்டு மொழி,அபியும் நானும் படத்தோட இயக்குனர் இயக்கிய பயணம் படத்துக்கு போலாம்ன்னு பயணப்பட்டோம்.சேலத்து டிராபிக் வர வர சென்னை,பெங்களூரு மாதிரி ஆகிட்டிருக்கு.2.30 மணு படத்துக்கு 1.30 மணிக்கே கிளம்பிடணும்.அப்பதான் வெண்திரையிலிருந்து வீக்கோ டர்மரிக் விளம்பரம் ஆரம்பிச்சு முழுசா படத்த பாக்கலாம்.இப்டி பாத்தாதான் திருப்தி.ஒரு சீன் மிஸ் ஆகிட்டாலும் கடுப்பா இருக்கும்.தியேட்டருக்கு போனா மாலை காட்சியும் இரவுக்காட்சியும் மட்டும்தான் பயணம் படம் போடுவாங்களாம்.

வேற ஏதாவது நல்ல படம் ஓடுதான்னு பாத்தா நடுநிசி நாய்கள் படம் போஸ்டர் இருந்துச்சு.இந்த படத்துக்கு போனா நமக்கு இருக்கற கொஞ்சநஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரும்.ஏங்க வரவர உங்க புத்தி இப்டி எல்லாம் போவுது..?ன்னு தங்கமணி அட்வைஸ் பண்ற நினைப்பெல்லாம் வந்துச்சு.இந்தமாதிரி படங்கள அடையாளம் காண உதவுற பதிவுலகத்துக்கு நன்றி.

ஆடுபுலிஆட்டம்,தூங்காநகரம்.சீடன் மட்டும் சாய்ஸா இருந்தது.நான்தான் தனுஷ நம்பி போலாம்ன்னு முடிவு எடுத்தேன்.நம்ப முடிவு எப்ப நம்பள காப்பாத்தியிருக்கு..?போனா முதல் பாட்டு ஓடிட்டிருந்தது.அப்பயே மூடு அப்செட்.வசனமெல்லாம் நல்லாதான் இருந்தது.விவேக் வேற அப்பப்ப வந்து சாமியாருங்கள கலாய்ச்சிட்டு இருந்தாரு.நம்ப மொக்கைய விட பயங்கரமா மொக்கை போடறாரு.முடியல..

இடைவேளை அப்பதான் தனுஷ் வர்றாரு.கதையோட ஒன்லைன் தன்னோட பக்தையின் காதலுக்காக கடவுளே மனிதரூபத்தில் சமையல்காரரா வந்து உதவி செய்றாராம்.பெரியார் கட்சிக்காரங்க ஏன் திட்ட மாட்டாங்க..? இப்டியெல்லாம் படம் எடுத்தா முருகனுக்கே பிடிக்காது.சிவக்குமார் மாதிரி மழுமழுன்னு ஷேவ் பண்ணிய  நடிகர்கள முருனா பாத்துட்டு தனுஷ ட்ரிம் பண்ண தாடியோட முருகனா ஏத்துக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்.

நல்லா பளிச்சுன்னு இருந்துச்சு ஒளிப்பதிவு.இந்த மாதிரி படத்துக்கு ஒளிப்பதிவாளர் என்னதான் விழுந்து விழுந்து வேலை செஞ்சாலும் பாவம் அது வெளிய தெரியப்போறதில்ல...நல்ல கதைய வேகமான திரைக்கதையா மாத்தி வித்தியாசமான சீன்கள் அதிகம் வச்சு இசை ஒளிப்பதிவு எல்லாம் சேந்தாதான் இப்பல்லாம் ஹிட் அடிக்க முடியும்.ஒண்ணு முழுக்க பக்தி படமா எடுக்கணும்.இல்ல காதல் படமா எடுக்கணும்.ரெண்டும் கலந்து எடுத்தா இப்டி பப்படமாதான் போகும்.படத்தோட வசனங்கள விட தியேட்டர்ல வர்ற வசனங்கள் நல்லா காமெடியா இருந்துச்சு.(அட்ராசக்க சிபி அளவுக்கு வசனமெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல...)அடுத்த வாரம் சன் டிவியில இந்த படத்த போட்ருவாங்கடா...அப்டின்னு பின்னாடி யாரோ சொன்னப்ப குலுங்கி குலுங்கி சிரிச்சேன்.5 பாட்டு வச்சே ஆகணும்ன்னு ஏதாவது கட்டாயம் இருக்கா என்ன..?தேவையில்லாத இடத்துல பாடல்கள் வச்சு தியேட்டர்ல பாதிப்பேர் ஓடிப்போயிட்டாங்க...கடைசி பாட்டு வர்றப்ப தியேட்டர் முழுவதும் ஒரே அழுகைதான்.முருகா ஏண்டா இப்டி எங்கள சோதிக்கற..?

டிஸ்கி to சிபி செந்தில்குமார்  ஐய்யய்யோ... சினிமா விமர்சனத்துக்கு போட்டியா... என்று பயப்பட வேண்டாம்.ஹி.ஹி..ஹி. சும்மா டமாசு.
6  மாசத்துக்கு ஒரு தடவைதான் சினிமாவுக்கு போவேன்.மாசத்துக்கு ஒரு தடவைதான் பதிவு போடுவேன்.

இந்த படம் படப்பிடிப்பு நடந்த பழனியில் கூட 10 நாள் ஓடறது டவுட்டுதான்.                                                         


Post Comment

22 comments:

  1. அரோகரா...அரோகரா...

    ReplyDelete
  2. அப்பாடா... தப்பிச்சிது 10 வெள்ளி.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நன்றி..!! காப்பாத்திட்டீங்க நண்பா.!
    எங்க ஊர்ல இந்த படம் தான்
    இப்ப ஓடுது..!

    ReplyDelete
  4. @ கலாநேசன் , MANO நாஞ்சில் மனோ

    இந்த வசனங்களையும் தியேட்டர்ல சொன்னாங்கண்ணே..!! :)

    ReplyDelete
  5. @ சி.கருணாகரசு , வெங்கட்

    ஏதோ நம்மளால முடிஞ்சது..!! :)

    ReplyDelete
  6. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் #தமிழேண்டா...

    ReplyDelete
  7. >>வெங்கட் said...

    நன்றி..!! காப்பாத்திட்டீங்க நண்பா.!
    எங்க ஊர்ல இந்த படம் தான்
    இப்ப ஓடுது..!


    ஒரு மானஸ்தர் என் கிட்டே நான் சினிமா பதிவுகள் படிக்கமாட்டேன், சினிமா விமர்சனம் யார் போட்டாலும் கமெண்ட் போட மாட்டேன்.. அது என் கொள்கை. லட்சியம் அப்படின்னு சொன்னதா ஞாபகம்..

    ReplyDelete
  8. சரீ சரி.. புரியுது.. ஊர்க்காரரு.. பாசம் ம்..ம்

    ReplyDelete
  9. >>>இந்த படம் படப்பிடிப்பு நடந்த பழனியில் கூட 10 நாள் ஓடறது டவுட்டுதான்.

    14 நாட்கள் ஓடிடும். மொட்டை அடிச்சுக்குவீங்களா?

    ReplyDelete
  10. @ சி.பி.செந்தில்குமார்

    //யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் #தமிழேண்டா..//
    உங்க விமர்சனத்தை கொஞ்சம் லேட்டா படிச்சிட்டேன் பாஸ்..!!

    //ஒரு மானஸ்தர் என் கிட்டே நான் சினிமா பதிவுகள் படிக்கமாட்டேன், சினிமா விமர்சனம் யார் போட்டாலும் கமெண்ட் போட மாட்டேன்.. அது என் கொள்கை. லட்சியம் அப்படின்னு சொன்னதா ஞாபகம்..//

    டைட்டில பாத்து வந்துட்டாரு.. விட்ருங்க பாஸ்... (வர்ற ஒருத்தர் ரெண்டு பேரையும் இவரு இப்டி பேசி துரத்தி விட்ருவாரு போலருக்கே...)

    //சரீ சரி.. புரியுது.. ஊர்க்காரரு.. பாசம் ம்..ம்//

    ஆமாமா.. நாங்கெல்லாம் பாசத்துல பரசுராமர் மாதிரி... (பா, ப சூப்பர்ரா... தேவா... கலக்குடா..)

    //14 நாட்கள் ஓடிடும். மொட்டை அடிச்சுக்குவீங்களா?//

    முருகனுக்காக அடிச்சாலும் ஒரு புண்ணியம்.இந்த மொக்கை படத்துக்காக எல்லாம் மொட்டை அடிக்க மாட்டேன். :)

    வருகைக்கும்,வாழ்த்துக்கும்(?!) நன்றி. :)

    ReplyDelete
  11. என் பிரண்டுக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஏன்னா எந்த ஒரு விசில் சத்தம் கைதட்டலும் இல்லாததால தியேட்டர்ல நிம்மதியா தூங்கினான். ஹிஹி

    ReplyDelete
  12. //முருகனுக்காக அடிச்சாலும் ஒரு புண்ணியம்.இந்த மொக்கை படத்துக்காக எல்லாம் மொட்டை அடிக்க மாட்டேன். :)//

    சரிங்க நண்பரே அப்பன் முருகனுக்காவாது பார்க்கலாமா?? வேண்டாமா?..

    :)

    ReplyDelete
  13. வேலைக்கு ஆவாதுன்னு சொல்றீங்க!:-)

    ReplyDelete
  14. பாவம் தயாரிப்பாளர்....

    வேற என்னத்த சொல்றது?

    ReplyDelete
  15. ஐய்யா நானும் என் பணமும் தப்பித்தோம்

    ReplyDelete
  16. சேலத்துல நீங்க எந்த ஏரியா பாஸ்...நானும் சேலம் தான்...ஆனா இப்போ இருக்கிறது அமெரிக்காவுல...விக்கோ விளம்பரமுன்னு நீங்க சொல்றத பார்த்தா மல்டிப்ளெக்ஸ் ல படம் பார்த்து இருக்கீங்கன்னு தெரியுது...

    ReplyDelete
  17. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    ஐ..இது நல்ல ஐடியாவா இருக்கே.. :)

    ReplyDelete
  18. @ மாணவன்

    உண்மைத்தமிழனுக்கு உறவுக்காரர் போல இருக்கு..ஹி.ஹி...

    ReplyDelete
  19. @ எஸ்.கே
    நமக்கு ஆகாது பாஸ்... :)

    @ பன்னிக்குட்டி ராம்சாமி
    உங்க ஸ்டைல்ல டைரடக்கர திட்டுங்க பாஸ்... :)

    @ raghavan salem
    நண்பேண்டா... :)

    @ thameem
    நெறய பேர காப்பாத்தியிருக்கோம் போலருக்கு...:)

    ReplyDelete
  20. @ டக்கால்டி

    தரணி போற்றும் தாதகாப்பட்டி பாஸ்..நீங்க எந்த ஏரியா..?!வீக்கோ டர்மரிக் விளம்பரம் சேலத்துல மட்டும்தானா..?! :)

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!