சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

6.9.12

என்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்..?!

காலம் காலமாக பகுத்தறிவு இல்லாமல் வாழும் மக்களுக்காக பயங்கர அறிவுடன் எழுதும் என்னைப் போன்ற இணைய எழுத்தாளர்களை எப்படி மதிக்க வேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று கூட இந்த மக்களுக்கு தெரிய வில்லையே..?! இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல..?! இதையே நான் ஆப்கானிஸ்தானில்  ஆரம்பித்து ஜிம்பாப்வே வரை உள்ள 196 வெளிநாடுகளில் (அவ்ளோ நாடுகள்தான் இருக்காம்.நெட்ல பாத்துட்டேன்) எழுதியிருந்தால் கிடைக்கும் மரியாதை அளப்பற்கரியது. 

கோடிக்கணக்கான பேர் படிக்கும்,தமிழர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும், என்றும் இளமையான, இளைஞர்களுக்கும்,பெரியவர்களுக்கும் பிடித்த ஆயிரம் வார இதழ்கள் வந்தாலும் மக்கள் மனதில் என்றும் நெ.1 வார இதழான ஆனந்த விகடனுக்கு(அப்பா..செமையா பாராட்டியாச்சு...இன்னும் ஒரு வாரத்துக்கு என் பகுதியை தூக்க மாட்டாங்க) தெரிந்தது இந்த மக்களுக்கு தெரியவில்லையே... என் செய்வேன்..?!

இந்நேரம் ஒரு ஆயிரம் பேராவது நேரிலோ,போனிலோ,மின்னஞ்சல் வழியாகவோ வாழ்த்தியிருக்க வேண்டாமா..?! நூறு பேராவது நேரில் வந்து சால்வை போர்த்தியிருக்க வேண்டாமா..?! அல்லது பார்சலாவது அனுப்பியிருக்க வேண்டாமா..?! குறைந்தது 10 பாராட்டு கூட்டங்களுக்காவது அழைப்பு வந்திருக்க வேண்டாமா..?! பொற்கழுகு (ஹி..ஹி...பொற்கிழி(ளி) சின்னதா இருக்கும்)  பரிசளித்திருக்க வேண்டாமா..?!

ஒருவன் தன் புகழை தானாகவே எவ்வளவு நாளைக்குதான் கூவிக் கொண்டிருப்பது..?! "தானே கூவிய தானைத்தலைவன்" என்ற பட்டம் வரலாற்றில் இடம் பிடித்து விட்டால் என் செய்வது..?!என்னமோ பொங்கல்..ச்சீ... போங்கள்.

இவ்வளவு கூவிய பிறகும் எதற்கு கூவுகிறான் என்று கேட்டு வயிற்றெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டாம். (சொன்னாதாண்டா தெரியும்.மேட்டருக்கு வா...) இந்த வார விகடன் இணையத்தளத்தில் என் விகடன் பகுதியில் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவனான என்னையும் மதித்து வலையோசை பகுதியில் கௌரவித்துள்ளார்கள். இப்பவாவது போய்ப் பாத்துட்டு ஒரு அற்புத எழுத்தாளர் வெளிநாட்டுக்கு போய்டாம ஏதாவது ஒண்ணு  உடனடியா செய்ங்க....அப்புறம் உங்களுக்குதான் நஷ்டம்.  :)

Post Comment

15 comments:

  1. // இப்பவாவது போய்ப் பாத்துட்டு ஒரு அற்புத எழுத்தாளர் வெளிநாட்டுக்கு போய்டாம ஏதாவது ஒண்ணு உடனடியா செய்ங்க....அப்புறம் உங்களுக்குதான் நஷ்டம். :) //

    பதிவுல இப்படி எழுதிட்டு... கமெண்ட் பாக்ஸ் மேல
    இப்படியும் எழுதி..

    // No Bad Words... தேவா பாவம்!!! //

    எங்க கைகளை கட்டி போட்டா.. நாங்க என்ன தான்
    பண்றது..?!

    ReplyDelete
    Replies
    1. முன்ஜாக்கிரதை முத்தண்ணா...
      நன்றி தல.நீங்களில்லாமல் இந்தப் பெருமை இல்லை.

      Delete
  2. சாரு நிவேதிதாவை அதிகம் வாசிக்கிறீங்க போல இருக்குது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஸ்பானிய மொழி எழுத்தாளர் கப்ஸாக்ஸி கட்டுரைகளை படித்ததில்லை போலும்... ;)

      Delete
  3. vazhthtukkgal...deva...
    melum melum en
    advice padi nadakkavum,...!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஓகேண்ணா... அண்ணன் சொன்னா சரிதான்..!! :)

      Delete
  4. வாழ்த்துக்கள் சார் ரொம்ப வித்தியாசமா சொல்லியிருக்கிறீங்க..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிட்டுக்குருவி..!!

      Delete
  5. ஆவியில் இடம்பெற்ற அண்ணலைக் கூவிக் கூவிக் குதூகலமாய் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சேட்டையின் வாழ்த்தை பெற என்ன தவம் செய்தனை..!! :)

      Delete
  6. ஆயிரம் வாழ்த்துக்கள் நண்பா! விரைவில் உங்கள் தளம் டைம்ஸ் போன்ற சிற்றிதழ்களிலும் வெளிவர வாழ்த்துக்கள்!

    :) :) :)

    ReplyDelete
    Replies
    1. சாரி! அது "நண்பரே!" என்று இருக்க வேண்டும்.

      :D :D :D

      Delete
    2. இப்படி அல்வா இருக்க வேண்டும் வாழ்த்து..!!

      Delete
    3. சாரி... அது அல்லவா என்று இருக்க வேண்டும். ;)

      Delete
  7. ஆயிரம் வாழ்த்துகள் பிரபல பதிவரே :)

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!