சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

31.8.11

சிறப்பு(சத்தியமா)ஆன்மிகபதிவு..!!

பிரியாணியும் உண்போம்.கொழுக்கட்டையும் தின்போம். :)
மதநல்லிணக்கம் காண்போம்.  


ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் மார்க்கவழி வாழும் 
நண்பர்களுக்கு வாழ்த்துகள்..!! Eid Mubarak


எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. 

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?

கணேசன்: 

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன்:  

ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.  

சிந்தாமணி: 

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன்: 

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

டுண்டிராஜன்: 

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.

மயூரேசன்: 

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன். 

லம்போதரன்: 

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன். 

கஜானனன்: 

ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.

ஹேரம்பன்:  

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன்: 

பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

ஜேஷ்டராஜன்: 

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

நிஜஸ்திதி: 

உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன்: 

எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.

வரதன்:  

வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன்: 

மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன்: 

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சித்தி - புத்தி பதி: 

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.

பிரும்மணஸ்தபதி:  

இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்: 

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர். 

சர்வ பூஜ்யர்: 

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன்: 

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர். 

Post Comment

12 comments:

  1. எதுக்கு சத்தியம்ன்னு போட்ருக்கேன்னா நம்ம பிளாக்குல காமெடி மட்டும்தான் வரும்ன்னு நினைக்கற வாசகர்களுக்கு(?!)ஆன்மிகபதிவும் வரும்ன்னு காட்டத்தான்...இது ஒரு பல்சுவை தளம். :)
    அப்பதான் குமுதம்,விகடன் மாதிரி ஆக முடியும். :))

    ReplyDelete
  2. ஈத் முபாரக்

    மற்றும்

    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பிரியாணியும் உண்போம்.கொழுக்கட்டையும் தின்போம். :)
    மதநல்லிணக்கம் காண்போம்.

    தொடக்கமே அசத்தல் ,பதிவும் அருமை

    ReplyDelete
  4. யார் பிள்ளை யார் பிள்ளை என்று சொன்னபோது பிள்ளையார் என்ற பெயர் வந்ததிங்கு

    ReplyDelete
  5. ஒரே நேரத்தில் ரெண்டு மாங்காய் போன்று..
    பிள்ளையார் சதுர்த்தி,
    ரம்ஸான் இவை இரண்டையும் சுமந்து வரும் அருமையான பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  6. பிள்ளையார் பெயருக்கு கொடுத்த அர்த்தங்கள் அருமை..குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது அர்த்தம் தெரிந்து சூட்ட உதவும்.

    ReplyDelete
  7. //சிறப்பு(சத்தியமா)ஆன்மிகபதிவு..!!
    You are receiving this email because you subscribed to the தேவாவின் தேடுதல்... via Google Friend Connect .
    If you no longer wish to receive this newsletter, you may unsubscribe
    To view this e-mail as a web page, click here.//

    ஐயா சாமி..இதுல லின்க் எதுவுமே வரலை..வெறுமனே டைட்டில் தான் வருது..தேவான்னு பேர் பார்த்ததும் குத்துமதிப்பா நீங்க தான்னு வந்தேன்..என்ன பிரச்சினைன்னு பாருங்க.

    ReplyDelete
  8. ஈத் பெரு நாள் வாழ்த்துக்கள், மற்றும்
    வினாயகர் சதுர்த்திவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வருகை புரிந்த அனைவர்க்கும் அல்லாவின் அருளும்,விநாயகரின் அருளும் கிடைக்கட்டும். :)

    ReplyDelete
  10. நல்ல பதிவு..சேலத்துகாரர் என்றதும் உடனே உங்கள் பதிவை படித்தேன்..நன்றாக இருந்தது..(ஏன்னா நானும் சேலம் தான்..)

    ReplyDelete
  11. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!