சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

16.6.11

மிஸ் பண்ணாம மிஸ்டுகால் கொடுங்க..!!


போனைக் கண்டுபிடித்தவனுக்கு மிஸ்டுகாலைப் பற்றி சொல்லிக்கொடுத்த நமக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.வழக்கமா நாம மிஸ்டுகால் கொடுத்தா எதிர்ல இருக்கறவங்ககிட்ட கன்னா பின்னான்னு திட்டு வாங்குவோம்.

ஆனா, இப்ப நாம கொடுக்கப்போற மிஸ்டுகாலால நம்ம சந்ததியினருக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கு என்று நெனைக்கிறேன்.

ஊழலுக்கு எதிரா சட்டம் இயற்ற சொல்லி உண்ணாவிரதம் இருந்த அன்னாஹசாரே,பாபா ராம்தேவைப் பற்றி எல்லாம் படிச்சிருப்பீங்க...நிம்மதியா உண்ணாவிரதம் கூட இருக்க விட மாட்றானுங்க.காந்திய வழியில உண்ணாவிரதம் இருந்தா அவரோட காங்கிரஸ் கட்சிகாரங்களே போலீஸை வச்சி அடிக்கிறாங்க...என்ன கொடுமை இது..?!

இப்ப புதுசா அந்த சட்டத்த தட்டி கழிக்க ஒரு திட்டம் கொண்டு வந்திருக்காங்க.ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நம் நாட்டு கருப்பு பணத்தை மீட்பதற்குண்டான சட்டத்தை இயற்ற மக்களின் ஆதரவை சோதிக்கறாங்களாமாம். 02261550789 இந்த எண்ணுக்கு குறைஞ்சது 25 கோடிபேராவது மிஸ்டுகால் கொடுத்தா சட்டம் இயற்ற அடுத்த முயற்சி எடுப்பாங்களாம்.ஓட்டு போடறதுக்கு லீவு கொடுத்தாலும் இன்னும் 70,80 சதவீதத்தை தொட முடியல...இதுவாச்சும் செஞ்சு பாப்பமே..!! மிஸ்டுகால் கொடுக்கறதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே..!! ஹி.ஹி..

நம்ம இத்தன வருஷம் ஓட்டு போட்டே ஒண்ணும் நடக்கல..இது மட்டும் நடந்திருமான்னு சந்தேகப்படாதீங்க.எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.காசெல்லாம் இல்ல.ப்ரீதான்..செக் பண்ணிட்டேன்.ஹி.ஹி..

Post Comment

15 comments:

  1. நல்ல தகவலுக்கு நன்றி ..
    கொடுத்துருவோம் ....

    ReplyDelete
  2. இந்த செய்தியின் நம்பகத்தன்மையை அறிய முடியுமா? இப்படி ஒரு வாக்கெடுப்பு நடக்க வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  3. நான் மிஸ்டு கால் கொடுத்தேன். "Thanks for registering your support. if you want to volunteer, please log on to www.indiaagainstcorruption.org or send SMS at 09212472681giving your detail" என்று வந்தது. so news is true.

    ReplyDelete
  4. நோ பிராப்ளம். மிஸ்டுகால் கொடுத்தால் போச்சு. நம்மாள தெருவில் இறங்கி போராடத்தான் முடியல. மிஸ்டுகால் கொடுத்தாவது போராட்த்தில் பங்கெடுப்போம். Thank u 4 ur information.

    ReplyDelete
  5. நோ பிராப்ளம். மிஸ்டுகால் கொடுத்தால் போச்சு. நம்மாள தெருவில் இறங்கி போராடத்தான் முடியல. மிஸ்டுகால் கொடுத்தாவது போராட்த்தில் பங்கெடுப்போம். Thank u 4 ur information.

    ReplyDelete
  6. ஐ...... ஃப்ரீயா... நானும் ரெண்டு மிஸ்டு கால் கொடுக்குறேன்.

    ReplyDelete
  7. ஹே... நானும் மிஸ்டு கால் கொடுத்தேன் (அதுல நம்மள யாரும் மிஞ்ச முடியுமா? தமிழனாச்சே)... எனக்கும் மெஸேஜ் வந்தது..

    ReplyDelete
  8. மிஸ்டுகால் கொடுப்பதிலும் ஒரு சந்தோசம் கிடைக்குதுனா ஓகே தான். அப்போ கொடுத்துடுவோம்........ :)

    ReplyDelete
  9. எங்க வூட்ல 4 செல்போன்
    இருக்கே..!

    நாலுல இருந்தும் குடுத்தாச்சு..

    ReplyDelete
  10. நான் இண்டர்நேஷனல் மிஸ்டு கால் கொடுத்துட்டேன்

    ReplyDelete
  11. இதுவரைக்கும் மிஸ்டுகால்ன்னா எனக்கு அலர்ஜி இருந்தாலும் ஒருகால் நடந்துட்டா நல்லதுன்னு ஒருமிஸ்டுகால் கொடுத்தாச்சு

    ReplyDelete
  12. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_22.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  13. நானும் ரெண்டு மிஸ்டு கால் கொடுக்குறேன்.

    ReplyDelete
  14. உங்கள் வலைப்பூ அழகாய் இருக்கிறது

    அன்புடன்
    எஸ். எஸ் ஜெயமோகன்

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!