எவன் எப்டி போனா எனக்கென்ன..?! இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். ஏன் இவன் பிளாக்குக்கு வந்ததுக்கு நம்மள இப்டி திட்றான்னு தப்பா நெனச்சிக்காதீங்க....ஹி.ஹி..ஹி... இப்படிதான் சுயநலமா மாறிகிட்டு வருது நம்ம உலகம். எத்தனையோ போர்கள்,இயற்கை பேரழிவுகள் வந்து மனுசங்க கஷ்டப்படறாங்க.. ஜப்பான் சுனாமியெல்லாம் பாத்தா ரொம்ப பாவமா இருக்குங்க...அறிவு அதிகமா இருக்கற மக்களான அவங்க அதை எதிர்கொண்ட விதத்தை பாத்தா சிலிர்ப்பா இருக்கு.நம்ம ஊர்ல இந்தமாதிரி ஏதாவது நடந்திருந்து இந்த மாதிரி நிவாரணம் கொடுக்கறதுக்கு ஏதாவது முகாம் போட்டாங்கண்ணா பத்து பேர் செத்து போற அளவுக்கு நெரிசல் உண்டாக்கிருவாங்க...ஆனா,அந்த பயபுள்ளைங்க இவ்ளோ நடந்தும் கட்டுப்பாட்டோட எப்டி இருக்காங்கன்னு தெரியல...இதெல்லாம் ஜீன்லயே வரணும் போலருக்கு.சீக்கிரமா இந்த அழிவிலிருந்து மீண்டு வருவாங்க...

உயர்திரு.டிராபிக் ராமசாமி அவர்களை பத்தி பத்திரிக்கைகள்ல கேள்விப்பட்ருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.பொதுநலம் பொதுநலம்ன்னு இந்த அரசியல்வியாதிங்க கூவறாங்க பாருங்க... அதெல்லாம் டூப்.உண்மையிலயே இவர் செய்றதுதாங்க பொதுநலம்.நம்பல்லாம் ப்ளாக்ல ப்ரொபைலை மறைச்சி அரசியல்வாதிகள கன்னாபின்னான்னு திட்டி எழுதறோம்.ஆனா,இவரு வெளிப்படையா செஞ்ச பொதுநல காரியங்களால் இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடற அளவுக்கு ஆகிப்போச்சு. நம்மல்லாம் டிராபிக்ல மாட்டிக்கிட்டோம்ண்ணா நமக்கு BP எகிர்ற அளவுக்கு மத்தவங்கள திட்டுவோம்.ஆனா இவரு 75 வயசிலயும் சாலையில இறங்கி டிராபிக்க சரிபண்ண ஆரம்பிச்சிடுவாரு.பெயர்க்காரணம் இதுதான்.தனியாளா யாருக்கும் பயப்படமா பல சமூகநல வழக்குகளையும் வக்கீல்களே இல்லாமல் இவரே வாதாடி ஜெயிச்சிருக்காரு.ஏற்கனவே ஏதோ ஒரு தேர்தல்ல வேட்பாளரா நின்னு தோத்துப்போயிட்டாரு.இப்ப பரபரப்பான ஏரியாவான தியாகராயநகரில் சுயேட்சையாக நிக்கறாரு.அவரோட தைரியத்த நினைச்சு பெருமையாவும் ஆச்சர்யமாவும் இருக்கு.எப்படியும் தி.நகர்ல இருக்கற வணிகப்பெருந்தலைகள் இவர ஜெயிக்க விட மாட்டாங்க.சாதாரண பொதுஜனமா இருக்கும்போதே இவரோட குடைச்சல் தாங்கல...இன்னும் MLA ஆயிட்டாருண்ணா சொல்லவே வேண்டாம்.எனக்கு சேலத்திலதான் ஓட்டு.இவருக்காக எப்படியாவது போய் கள்ள ஓட்டாவது போடணும்ன்னு ஆசைப்படறேன்.
தேர்தல் சீஸன் களைகட்டுது.நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு வடிவேல் பண்ற காமெடி சிறப்பா இருக்கு.சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் தேர்தல் சம்பந்தமான (கீழே இருக்கற சுட்டியை கிளிக் பண்ணி) கவிதைய படிச்சி பாருங்க...செம நக்கல் பண்ணியிருப்பாரு அரசியல்வியாதிகளை.
அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்