புது வருஷம் வரப்போவுது..!!
என் மகள் பிறந்த வருடமா இருக்கறதால 2010 வருடம்
எனக்கு ரொம்ப ஸ்பெஷல். கூகிளாரோட புண்ணியத்துல
என்னோட பிளாக்க ஆரம்பிச்சி உங்களயெல்லாம்
இம்சை பண்றதுலயும் இந்த வருடம் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.
எனக்கு ஒரு டவுட்டுங்க..?! தமிழ்நாட்ல இருக்கற மாதிரி எல்லா நாட்லயும் ஆங்கில வருடப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்புன்னு (கூடுதலா தெலுங்கு வருடப்பிறப்பு வேற ) தனித்தனியா இருக்குமா..?!

ஒரு சில விஷயத்த தவறாம செய்யணும்ன்னு தீர்மானம் போடுவேன்.
ஆனா பாருங்க, முத நாளே அத செய்ய முடியாது.
1.காலையில் 5 மணிக்கு எழுந்து சூரியோதயத்தை பார்க்க வேண்டும்.
இந்த டிவி காரனுங்களாலதான் என்னோட தீர்மானம் எல்லாம் சொதப்பிடுது.புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு போடற நிகழ்ச்சிகள்
எல்லாம் பாத்துட்டு படுத்தா சூரியன்தான் என்னை வந்து பாக்கணும்.
கெரகம் காலையில 8 மணி ஆயிருக்கும்.இந்த செல்போன் அலாரத்துக்கு மட்டும் வாய் இருந்திச்சின்னா நாம வெட்கப்படற அளவுக்கு திட்டும்.ரொம்ப பொறுப்பா அலாரம் வச்சிட்டு காலையில் அது அடிக்கும்போது ஆப் பண்ணிட்டு கீழே போட்டு அதுக்கு மேலேயே படுத்தா அதுக்கு கோபம் வராது..?!


2.ஒரு மணிநேரம் வாக்கிங் போக வேண்டும்.
"10 கிலோ லட்சியம் 2 கிலோ நிச்சயம்"
ஏதோ அண்ணாவோட அறிக்கைன்னு நினைக்காதீங்க..!!
இப்படிதான் வருஷாவருஷம் புது வருஷத்துல உடம்ப
குறைக்கிறேன்னுட்டு சபதம் எடுப்பேன்..!!
சிங்கிள்பேக்கா இருக்கற வயித்த சிக்ஸ்பேக்கா
மாத்தலாம்ன்னு பத்து வருஷமா தீர்மானம் போடறேன்..!!
வீட்ல வடிச்சி கொட்ற சாதத்துல என் சபதம் சப்தம் இல்லாம போயிரும்.
அரசியல்வாதிங்க வாக்குறுதி மாதிரி
இது வரைக்கும் நிறைவேறினதே இல்ல..!!
3.கோபம் கொள்ளக்கூடாது.
முத நாளே போட்ட தீர்மானத்தில இருந்து காலையில எந்திரிக்கறதும்,
வாக்கிங் போறதும் நிறைவேத்த முடியலயேன்னு கோபம்கோபமா வரும்..!!
டென்சன் ஆகி சொறிநாய் கடிச்ச வெறிநாய் மாதிரி ஆகி பாக்கறவங்கள எல்லாம் கடிச்சி வைக்க வேண்டியதுதான்..!!
4.திட்டமிட்ட நேரத்தில் செய்ய வேண்டும்.
திட்டு வாங்கியே பழக்கப்பட்ட எனக்கு
எங்க போய் திட்டமிட்ட நேரத்தில் செய்றது..?!
எல்லாம் லேட்தான்..!! இனிமே பிளான் பண்ணி பண்ணனும்..!!

நிறைய பேரு புது வருஷத்துல இருந்து தண்ணி அடிக்ககூடாதுன்னு முடிவெடுத்து முத நாளே ஒரு வாரத்துக்கு சேத்து அடிச்சி
ரெண்டு நாளைக்கி மட்டையாயிருவாங்க..!!
நீங்களும் இதுமாதிரி ஏதாவது தீர்மானம் போட்டு இருப்பீங்க..!!
அதை பின்னூட்டத்தில எழுதினிங்கன்னா அதையும்
என் லிஸ்ட்ல சேத்துக்குவேன்..!! ஹி.ஹி..ஹி...
கோபத்துல இவன் பிளாக்குக்கு இனிமே வரக்கூடாதுன்னு
தீர்மானம் போட்றாதீங்க..!!
பதிவுலக நண்பர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும்
உளம்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!
என்றும் அன்புடன்....